Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அகிலத்தை அடிமையாக்கும் அமெரிக்காவே! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2013 | , , , , , ,

சிரியாவின் மீது போரால்
……சிறியோரை அழிக்கப் போறாய்
புரியாதோ உன்றன் கோபம்
……பெட்ரோலே உன்றன் தாகம்
விரிவாகச் சொல்லா ஐநா
……வீணாகப் பேசும் பொய்நா
தெரியாதோ உன்றன் சூழ்ச்சி
….....தெளிவற்றோர் காண்பர் வீழ்ச்சி

அடாவடியின் தலைமை நீயே
……அகிலத்தை அழிக்கும் தீயே
விடாப்பிடியின் போக்கால் போரும்
……விதைப்பதனால் அழியும் பாரும்
கடாஃபியையும் கொன்று விட்டாய்
……கண்ணுக்குள் சிரியா தொட்டாய்
சுடாதவுன்றன் மனத்தின் சாட்சி
……சுடுகின்ற குண்டின் காட்சி

காசுகளைப் பண்ண வேண்டி
……கண்டங்கள் எல்லாம் தாண்டி
வீசுகின்ற கணைகள் ஏவ
……வித்திட்ட இஸ்ரேல் கூவ
கூசுகின்ற பொய்நா கூட்டம்
……கூடுவதே போரின் நாட்டம்
மாசுகளே பரவும் பாரில்
……மாபாத கமானப் போரில்

அசாதவனும் கோர மன்னன்
……அழித்துவந்தான் ஆங்கே இன்னும்
ஃபசாதவனும் கெமிக்கல் கொண்டே
……பச்சிளம்பா லகரைக் கொன்றான்!
விசாரணையில் தீர்ப்பும் எட்டும்
……வீணானப் போரை விட்டால்
அசத்தியத்தின் நிலையில் தானோ
……அகிலத்தை மிரட்டல் ஏனோ?

“கவியன்பன்” கலாம்

19 Responses So Far:

sabeer.abushahruk said...

நீண்ட இடைவெளிக்குப் பின்
மீண்ட புலவரே வருக வருக!

சிரிய தேசத்தின்
பெரிய சோதனைக் காலத்தை
உரிய நேரத்தில் உலகுக்குத்
தெரியப் படுத்துகிறது கவிதை

அநீதிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கிறது கவியன்பனின் இந்த ஆக்கம்.

வாழ்த்துகள், கவித்தீபம்.

sabeer.abushahruk said...

புரியாதோ உன்றன் கோபம்
……பெட்ரோலே உன்றன் தாகம்


உண்மை உண்மை.

crown said...

சிரியாவின் மீது போரால்
……சிறியோரை அழிக்கப் போறாய்
------------------------------------
அஸ்ஸலாமுஅலிக்கும். ''வார்''த்த,வார்த்த கோபத்தில் கோர்த்த அக்னிபூ!

crown said...

சீறிவரும் (boom)''பாம்''பால் சிதறும் சிரியா!மாறிவருமா?சீரியவழியில்?தேறிவருமா?சரியா 'வருமா,ர''ஸியா''(சியா)ஈரான் தலையீட்டாள்???காயம் ஆறிவிடுமா அமெரிக்கா போரில்லாமல்?????

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

போருக்கெதிராய் அம்பாய் பாயும்
வீறுகொண்ட உன்னத நற்கவி.

Unknown said...

அமெரிக்காவின் அடாவடித்தனத்தின் மீது கோபம் கொப்பளிக்கும் கவிதை.
எண்ணெய் என்ற தாகத்தை தீர்க்கத்தான் இந்த போர் என்ற உண்மை தெளிவு.

அடாவடியின் தலைமை நீயே
……அகிலத்தை அழிக்கும் தீயே

உண்மையை ஓங்கி உரத்துச்சொல்லும் அன்பு நண்பர் கலாமின் கவிதையில்
அமெரிக்க அடாவடித்தனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்குக் தெரிகின்றது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


போர் மூலம் வரும் பல வேதனைகளை
தன் உள்ளக்குமுறலில் வடித்திருக்கும்
அழகிய கவியன்பன் அவர்களின் அழகிய கவிதை.

கடந்த 21ம் தேதி நச்சு வாயு மூலம் அப்பாவி குழந்தைகள்,சிறுவர், சிறுமியர், பெரியவர் என எவ்வித பாரபட்சமுமின்றி ஈரானின் பலத்தில் ரஷ்யாவின் ஆதரவில் தான் எதைச்செய்தாலும் உலகம் ஒன்றும் தன்னை செய்து விட முடியாது என நினைத்து 1500க்கும் மேற்பட்ட அப்பாவிகளை ஏதோ விஷக்கிருமிகளை அழித்துக்கொல்வது போல் கொன்றழித்த மனித மிருகம் பஷார் அல் அசத்தின் அடக்குமுறை ஆட்சியை குறைந்த நாட்களில் விரைவில் அப்புறப்படுத்த அமெரிக்கா ஒரு சர்வதேச குற்றவாளியாக இருந்த போதிலும் இந்த ஒரே ஒரு விசயத்தில் மட்டும் அமெரிக்காவின் முடிவுக்கு மனம் ஏனோ நிராயுத பாணிகளாக நிற்கும் அந்த சிரிய பொது ஜன மக்களுக்காக உடன் பட்டு உடனே போரை ஆரம்பித்து அந்த‌க்க‌ய‌வ‌னை, ம‌னித‌ மிருக‌த்தை சுவ‌டே தெரியாம‌ல் அழித்தொழிக்க‌ ம‌ன‌ம் நாடுகிற‌து.

யா ர‌ப்! உன்னுடைய‌ ஏற்பாட்டையும், திட்ட‌ங்க‌ளையும் எவ‌ர் தான் எளிதில் அறிந்து அதில் குறிக்கிட்டு த‌டுத்து நிறுத்த‌ முடியும்?

அகில‌ உல‌க‌ இஸ்லாமிய‌ ச‌மூக‌த்தையும், உல‌மாக்க‌ளையும், ஆலிம்க‌ளையும், ஹாஃபிழ்க‌ளையும், மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளையும், உன்னுடைய‌ இறை இல்ல‌ங்க‌ளையும் காஃபிர்க‌ள், ஷியாக்க‌ள், ஷைத்தான்க‌ளின் அனைத்து சூழ்ச்சிக‌ளிலிருந்தும், ச‌தித்திட்ட‌ங்க‌ளிலிருந்தும், அட‌க்குமுறை, அத்துமீர‌ல்க‌ளிலிருந்தும் காத்த‌ருள்வாய் நாய‌னே!!! எங்க‌ளை பாதுகாத்த‌ருள்வாய் நாய‌னே!!!

Ebrahim Ansari said...

கோபங்கள் பலவகை . அதிலும் கவிஞர்களின் கோபங்கள் அதில் ஒரு வகை. மிகவும் சக்தி வாய்ந்த வகை. கவியன்பன் அவர்களின் கோபம கொப்புளித்து வரும் இந்த கவிதை வார்த்தைகள் பிரச்னையின் வீரியத்தை விளங்க வைக்கின்றன.

Ebrahim Ansari said...

http://t.co/APFjiFu5OC

இந்தியாவின் எதிர்ப்புச் செய்தி.

Unknown said...

அரேபிய தீப கற்பத்தில் வலுவான நாடுகளை பதம்பார்த்துவிட்டு அங்கெ குடும்ப ஆட்சி நடத்தும் அராபிய செய்குகளை தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அமெரிக்க கனவுகள் நினைவாகி வருவது கவலைக்குரிய விஷயம் .....எண்ணெய் வளம் தேட வந்த இந்த எருமை மாடுகளுக்கு ஏக நாயனின் கோபப்பார்வை இறக்கிவிடப்படும் காலம் மிக அருகில் .......அங்கெ பாதிக்க படுவோருக்காக அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் ....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், கலாம் காக்கா, ஜஸக்கல்லாஹ் ஹைரா.....

இது போன்ற சமூக அட்டுழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நியாயமான கவிதை வரிகளை ஆதரிப்பவர்களின் நானும் ஒருவன்.

அசாதும் அமெரிக்காவும் இரு வேறு அரக்கர்கள்..

சிரியா மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால்.... அமெரிக்கா சிரியாவின் இரானுவ நிலைகளை தாக்குதல் நடத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள், அமெரிக்காவை நம்புவதை காட்டிலும் அல்லாஹ்வை நம்பவேண்டும்..

சிரியா மக்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அல்லாஹ்வை நம்பி அவனிடம் மட்டுமே து ஆ செய்வது.

Yasir said...

அமெரிக்காமீது பல விசயங்களில் கோபம் / வெறுப்பு இருந்தாலும்....இப்போதைக்கு இந்த பசார் அரக்கனை அழிக்க அல்லாஹ் அமெரிக்காவை ஏவி உதவ வேண்டும் என்று மனது பிரார்த்திக்கின்றது.....அல்லாஹ் கரீம்....

ZAKIR HUSSAIN said...

"NO TO WAR" என்ற இயக்கத்துக்கு கவியன்பனின் கவிதை தொடக்கம்.

அடாவடியின் தலைமை நீயே
……அகிலத்தை அழிக்கும் தீயே=United States Of Americaவின் தமிழ்மொழிபெயர்ப்பு.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Kaviyanban Abul Kalam,

Excellent poem about the superiority complex of US.
May God Almighty protect the innocent people from evils.

Nothing will last for long.
There will be better time for suffering people inshaAllah.
Lets and them pray and be patient.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

KALAM SHAICK ABDUL KADER said...

ஏற்புரை= நன்றியுரை:



நன்றியென ஒருசொல்லிற் சொல்லி விட்டால்
நானாளும் பாட்டங்கே தோற்றுப் போகும்;
என்றைக்கும் அன்பொன்றே எனக்குத் தேவை;
இனிமைபொங்க அதைத்தந்தீர்; உணர்வு முந்த
என்சிறிய நெஞ்சத்துள் உம்மை யெல்லாம்
இருத்திவைத்தேன்; விடமாட்டேன்; கசிந்த உள்ளம்
நன்றியினைத் தெளிக்கிறது; கொள்வீர்; என்றும்
நண்பனெனை மறவாமல் போற்றல் செய்வீர்;

Anonymous said...

கவியன்பனின் கவிதைகள் கவிதைகளல்ல! நெஞ்சக்கு முறலின் தீப்பந்தம்!.
ஒரு நாள் அது அமெரிக்காவின் அட்டகாசத்தையும் ஆணவத்தையும்
அழித்து அதை சுடுகாடாக்கட்டும்!.ஆமீன்!

எல்லா இஸ்லாமியர்களின் இயக்கங்களும் ஏன் ஒன்று கூடி அமெரிக்காவின் அடாவடிதனத்தை ஒழிக்க அல்லாஹ்வை தொழுது வேண்ட ஏன் ஏற்பாடு செய்யக் கூடாது? விஸ்வரூபத்துக்கு மட்டும்தான் வேகம் விறுவிருப்பா?

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாரூக் காக்கா, என் உள்ளார்ந்த எண்ணத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள். ஆம். என் கவிதையோ, கோபமோ அமெரிக்காவை எட்டாதெனினும், இங்குப் பின்னூட்டமிட்டவர்களும் இன்னும் பலரும் “துஆ” செய்து போர்வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை “விதை”ப்பதே என் கவிதையின் நோக்கமாகும்.

ஏற்புரையை கவிதையில் யாத்து முடிவுரை செய்த பின்னரும், தங்களின் கருத்துரைக்கு உடன் மறுமொழி இடல் என்றன் கடன் என்று கருதினேன், காக்கா!

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்!

இப்னு அப்துல் ரஜாக் said...

//அமெரிக்காமீது பல விசயங்களில் கோபம் / வெறுப்பு இருந்தாலும்....இப்போதைக்கு இந்த பசார் அரக்கனை அழிக்க அல்லாஹ் அமெரிக்காவை ஏவி உதவ வேண்டும் என்று மனது பிரார்த்திக்கின்றது.....அல்லாஹ் கரீம்.... //

இதை நானும் ஆமோதிக்கிறேன்.
I STRONGLY SUPPORT THE UNITED STATES IN THIS MATTER.ஷியா தலைவன் அசாத்தும்,அவன் அளாவியத் கூட்டாளிகளும் அழிய,ஏகன் அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு