Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைச் சகோதரர் ஐ.ஏ.எஸ். ஆகிறார் (இன்ஷா அல்லாஹ்) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , , , , ,

அதிரை மக்களின் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்ற நீண்டதொரு திட்டத்தை மையமாக கொண்டு அதிரைநிருபர் வலைத்தளம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது அடுத்தடுத்த வருடங்களில் சகோதர அமைப்புகள் அதனை முன்னெடுத்துச் சென்றனர்.

நமது கனவு நனவாகும் தருணம் கைகூடி இருக்கிறது இந்தச் சிறப்பினை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) !

சென்னை மவுன்ட்ரோட்டில் அமைந்திருக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நமது சமுதாய மக்களுக்கென்று அரசு உயர் பதவிகளுக்கான பயிற்சியை 2012ம் வருடம் முதலே அளித்து வருவதை நாம் நன்கறிவோம்.

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான அதிரை சகோதரர் J.முஹம்மது மீராஷாஹிப் (தகப்பனார் பெயர் : M.ஜமால் முஹம்மது) அழகிய கடன் ஐ.ஏ.எஸ் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் UPSC மற்றும் TNPSC Group-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்த வருடம் 2014 நமதூர் சகோதரர் I.A.S.ஆக இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் !

The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece

NDTV ஆங்கில செய்தி தொலைகாட்சி காணொளி : http://www.ndtv.com/video/player/news/a-mosque-in-chennai-which-helps-muslim-men-fulfill-the-ias-dream/291261

வாழ்த்தி வரவேற்போம் ! மேலும் வெற்றிகள் தொடரவும், நம் சமுதாய நலனுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சேவைகள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்
பரிந்துரை : குதுபுதீன் அஹ்மது ஜலீல் (குதுப்)

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

YES ! We need your HELP !

Insha Allaah... !

சகோதரா !

காணொளிப் பேட்டியில் சொன்னது போன்று நிலைத்திருக்கவும், நேர்மையுடன் தனது கடமைய இந்திய திருநாட்டிற்கு அளிக்கவும்...

எங்கள் துஆ என்றும் உன் நினைவுகளோடு சுழன்று கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ் !

வெற்றிகான வாழ்த்துகிறோம் ! ஆவலுடன் காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹதுலில்லாஹ் வாழ்த்துக்கள்!

J.மீராசாகிப் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவின் No 1 IAS ஆக விரைந்து செயல்பட அல்லாஹ் உங்களை நாடிடுவானாக!

zubair said...

அதிரையின் முதல் IAS பட்டதாரி J.மீராசாகிப் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் துஆ என்றும் உன் நினைவுகளோடு சுழன்று கொண்டிருக்கும் இன்ஷா அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

எங்கள் குடும்ப நண்பரும் , எனது பாசத்துக்குறிய அண்ணன் ஜமால் அவர்களின் மகன் I.A.S Officer ஆக பணியாற்றப்போவது கண்டு மிக்க சந்தோசம். அவர் I.A.S யில் சேர்ந்த போது பார்த்து பேசினேன்[சென்னையில்]
இறைவன் கருணையால் இந்த சந்தோச செய்திகேட்டு நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

Ebrahim Ansari said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எவ்வளவோ காலத்துக்கு முன்பே இப்படிப் பட்ட செய்திகள் நம்மை எட்டி இருக்க வேண்டும். இறைவனின் நாட்டம் அப்படி இல்லாமல் இருந்து இப்போது வழி காட்டி இருக்கிறான். கல்லூரி இல்லாத முத்துப் பேட்டையில் கூட ஏ. கே. எல் மன்சூர் அவர்கள் ஐ. ஏ. எஸ் ஆகிவிட்டார்கள். நம்து ஊரில் இப்போதுதான் இயன்று இருக்கிறது. சூட்டோடு சூடாக இரு ஐ பி எஸ் மற்றும் ஐ எப் எஸ் ஆகிய பொறுப்புக்கும் சிலரை கொண்டு வர வேண்டும்.

வருடத்துக்கு ஒருவரை ஊரார் சேந்து உருவாக்க முடியாதா?

sabeer.abushahruk said...

அல்ஹதுலில்லாஹ் வாழ்த்துக்கள்!

J.மீராசாகிப் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தியாவின் No 1 IAS ஆக விரைந்து செயல்பட அல்லாஹ் உங்களை நாடிடுவானாக!

Unknown said...

எள் முனையளவும் எதற்காகவும் வளைந்துவிடாமல்
நீதிக்கு மட்டுமே செவி சாய்க்கும் ஒரு இந்தியக்குடிமகனாக தங்கள் சேவையில் தாங்கள் என்றும் நிலைத்திருக்க இறைவனை இருகரம் ஏந்தி இறைஞ்சும்

அபு ஆசிப்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்ஹதுலில்லாஹ் வாழ்த்துக்கள்!

தம்பி, J.மீராசாகிப்...

இந்தியாவின் தலைச்சிறந்த IAS ஆக விரைந்து செயல்பட அல்லாஹ் உங்களை நாடிடுவானாக!

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ்! மாஷா அல்லாஹ்!!

Unknown said...

மாஷா அல்லாஹ்
சகோ மீராசாஹிப் அவர்க்ச்ளுக்கு வாழ்த்துக்கள்
அதிரையர்களின் கல்வி உயர்ந்துக்கொண்டே வந்தால் இந்திய ஆட்சி பணிகளில் நாம் கவனம் செலுத்தாது பெரும் மனக்குறையாக இருந்தது ,
அல்லாஹ்வின் நாட்டத்தால் இன்று நமக்கு ஒரு IAS அதிகாரி கிடைக்க இருக்கிறார்,சகோ மீரா சாஹிப் இனி வரும் மாணவ சமுதாயத்திற்கு ஆட்சி பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு முன்னுதாரனமாக இருக்கிறார் வாழ்த்துக்கள்.ஆக்கமும் ஊக்கமும் அளித்த இவரின் பெற்றோர்கள் அழகிய கடன் அறக்கட்டளை பயிற்சியும் முயற்சிக்கு வித்திட்ட அறிஞர் பெருமக்கள் மற்றும் ஏனையோருக்கு நன்றியுடன் வாழ்த்துகிறேன்.
நாம் சமுதாயத்தினர் இனிவரும் காலங்களில்IAS,IFS மற்றும் சட்டம் போன்ற துறைகளில் முன்னேற தொடர்ந்து பணியாற்றிட அதிரை நிருபர் குழுவினரையும் கேட்டுக்கொள்கிறேன்
------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை

adiraimansoor said...

J.மீராசாகிப் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் சமுதாயத்திற்கு அளிக்கும் அருட்கொடைகளில் ஒன்று

மக்கா மஸ்ஜிதின் முயற்சிகள் வீன்போகவில்லை
மேலும் இதுபோன்ற IAS ஆபிசர்கள் நம் சமுதாயத்தில் உருவாக அல்லாஹ் உதவி செய்வானாக மேலும் நமதூர் பிள்ளைகளை இதுபோன்ற வகுப்புகளுக்கு அனுப்பிவைத்து பயன் அடையவும் நம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு எடுத்துக்காட்டாகவே அமையட்டும்

இந்தியாவின் No 1 IAS ஆக விரைந்து செயல்பட அல்லாஹ் உங்களை நாடிடுவானாக!

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt congratulations for brother J. Meera Shahib, a first and foremost IAS officer from our town, Adirampattinam. Its really an inspiration to all of us and gives satisfation that our brothers from our town are achievers and history makers.

InshaAllah from now, many more similar achievements of our brothers would impact and uplift our community to a world known.

May Allah strength our community with unity and prosperity.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Anonymous said...

Assalaamualikkum.

Congratulations Bro.J.Meerasahib !

We the People of Adirampattinam are very proud of your achievement.
.We hope and expect your dedicated and faithful service to the Nation and people.
.Wish you more successful future and progress.
.May Allah the Almighty shower His blessings upon you and your parents! Ameen

S.Mohamed Farook,Adirampattinam

Anonymous said...

I.A.S Means to me as follows .

I for ithu
A for adirai
S for sathanai.

Ithu Adiraiyin Sathanai.

S.Mohamed Farook, Adirampattinam.

Yasir said...

Brother J. Meera Shahib...Happy hear this great news and for sure you will be role-model for the younger Muslim generation , our dreams are coming true...Allah will help you get more and more success in your endeavor

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என் உறவினர் இச்சாதனையை படைக்க இருப்பது கூடுதலான இன்பமாக இருக்கிறது. எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

Adirai pasanga😎 said...

அல்ஹம்துலில்லாஹ் .. மாஷா அல்லாஹ்,, J.முஹம்மது மீராசாஹிப் எங்கள் வீட்டுப்பிள்ளை. மென்மேலும் சிறப்படைந்து நமக்கும் நமது நாட்டிற்கும் நன்மை பல சேர்க்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.