நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான்.
ஆரம்பமே ஷைத்தான் தூண்டுதல் மேலோங்கவே, நெருங்க வேண்டாம் என்று படைத்தவனால் எச்சரித்து தடுக்கப்பட்ட மரத்தினை நெருங்கி, அதன் கனிகளைப் புசிக்க வேண்டாம் என்று விலக்கப்பட்டதை சுவைத்து சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட முதல் மனிதரே ஷைத்தானின் தூண்டுதலாலேயே இவ்வுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இப்படி முதல் மனிதரையே ஷைத்தான் வெற்றி கொண்டு இவ்வுலகில் அந்த தூண்டுதல் ஒரு புறமும், இறைவனின் எச்சரிக்கை சைத்தானைப் பற்றி மறுபுறமுமாக அல்லாஹ் இவ்வுலகில் ஆதம் (அலை) , அவரின் துணையாக ஹவ்வா (அலை) இருவரையும், ஷைத்தான், மலாயிக்கத் என்னும் இரு தூண்டுதல்களோடு மனதை படைத்து, இச்சோதனையில் இறைவனின் எச்சரிக்கையில் வெற்றி பெறுதல் மூலமே ஈடேற்றம் அடைய முடியும் என்ற நற்போதனைகளையும் வழங்கி இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றான்
அந்த ஷைத்தானியத்தின் ஊசலாட்டம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்கொள்ளும், அதிலிருந்து மனிதன் கரை சேருவது, அதை எப்படி கையாளுவது, அதனை எப்படி வெற்றி கொண்டு இறை பொருத்தத்தை பெறுவது என்பதின் நோக்கமே இந்த பதிவு.
ஈமானில் ஊசலாட்டம்
ஒவ்வரு மனிதனும் பலகீனமானவனாகவே படைக்கப் பட்டிருக்கின்றான். ஆசாபாசங்கள், தேவைகள், பசி, தூக்கம், மறதி, இச்சை மற்றும் உலகாதாய விஷயங்களில் அவன் மிகவும் அவசரக்காரனாகவும், ஆத்திரக்காரனாகவுமே இருக்கின்றான். இவைகள் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பாவத்தை ஏற்படுத்தி விடப் போவதில்லை.
ஆனால் அடிப்படை வேரான ஈமானை பாதிக்கக் கூடியவைகளில் எந்த ஒரு விஷயமும் தலைப்பட்டால், அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பேர்ப்பட்ட விஷயம், ஷைத்தானின் இந்த ஊசலாட்டத்தில் நாம் சலனப்படுகையில் நடைபெற வாய்ப்புண்டு. (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேணும்).
இப்படி சலனப் படுகையில் மார்க்கம் நம்மை எப்படி வழி நடத்தி செல்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவு நம்மை முன்னெடுத்துச் செல்கின்றது.
இந்த ஊசலாட்டம், நம்மை மட்டுமல்ல யார் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்களோ, யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டானோ அந்த சஹாபாப் பெருமக்களுக்கே இது ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விஷயத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது,
ஷைத்தான் நம்மை நல்ல எண்ணங்களை நம் மனதினில் தூவி எண்ணவிட்டு அதன் இறுதியில், நம் ஆழ்நம்பிக்கைகளின் அடிப்படையை தகர்த்தெறியும் செயலில் ஈடுபடுவான். அந்த நிலையில் நாம் நம்மை உஷார் நிலையில் வைத்து ஈமானை பாதுகாக்க வேண்டும்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், யாரசூலுல்லாஹ், எங்களுக்கு சில கெட்ட எண்ணங்கள் (ஈமானின் வேரை அசைத்துப் பார்கக்கூடிய அளவுக்கு) மனதில் தோன்றுகின்றது. ஆனால் அதை வெளியில் சொன்னால் படு பயங்கரமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அதை வெளியில் சொல்வதற்கு பதிலாக வானத்திலிருந்து கீழே குதித்து விடுவது மேல் என்றும் தோன்றுகின்றது என்று சொன்னவுடன்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், என்று மூன்று முறை முழங்கிவிட்டு, இதுதான் உண்மையான ஈமான். ஏனனில், மனதில் தோன்றுவது ஷைத்தான், அதை வாயால் மொழிந்தாலோ, பிறரிடம் சொன்னாலோ அல்லது, செயலில் காட்டினாலே ஒழிய அல்லாஹ்விடத்தில் இதற்கு எந்த வித கேள்வியும் இல்லை. ஏனெனில் , நீ இதை சொல்லாமல் இருப்பதே அல்லாஹ்வை பயந்துதான். இதுதான் உண்மையான் ஈமான். இங்கே ஷைத்தானின் ஊசலாட்டம் (உள் எண்ணம்) எந்தப்பயனையும் தராததால், உள்ளத்தில் எண்ணினாலும் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.
மனதினில் அந்த (வஸ்வாஸ்) ஊசலாட்டம் வரும்போது நாம் அல்லாஹ்வை நினைத்து பயப்படுகின்றோம் அல்லவா ? அங்கேதான் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள்.
மேலும் ஊசலாட்டம் மனதில் தோன்றும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் " அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தான் நிர்ரஜீம் ( யா அல்லாஹ் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!) என்று வேண்டும்பொழுது நம் ஈமான் கூடிக் கொண்டே போகின்றது.
எங்கெல்லாம் நம் எண்ணம் பலகீனப்படுகின்றதோ, அங்கு கண்டிப்பாக ஷைத்தானின் எண்ணங்கள் மேலோங்கும். நம்முடைய பலகீனம் பார்த்து ஷைத்தான் நம்மை நெருங்குவான், எப்படியும் நம்மை அவன் வழிக்கு சொல் வடிவம், அல்லது செயல் வடிவம் கொடுக்க வைத்து நம்மை தடம் புரள வைக்க தக்க தருணம் பார்த்திருப்பான். அந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமுகமாக " இறைவா என்னை ஷைத்தானின் தீங்கிலிருந்து காப்பாற்று" என்று வேண்டுகின்றோம்.
அல்லாஹ்வையன்றி வேறில்லை
ஒரு முறை இரு சஹாபிகளுக்கு இடையே ஒரு விஷயத்தில் நடந்த விவாதத்தில், இருவரும் ஆக்ரோஷமாக ஒரு முடிவின்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில், ரசூல் (ஸல்) மற்றொரு சஹாபியிடம் சொன்னார்கள் : இவர்கள் இருவரிடத்திலும் இப்பொழுது ஒற்றுமை ஏற்பட ஒரு விஷயம் என்னிடம் இருக்கின்றது. இவர்கள் இருவரும் அதைச் சொன்னால் உடன் அங்கு ஒற்றுமை நிலவும். அதுதான் " அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்" (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன்) என்று சொல்ல சொன்னார்கள்"
அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஒரு நன்மையான காரியத்தை செய்யவோ அல்லது எந்த ஒரு தீமையிலிருந்து விலகவோ நமக்கு சக்தி இல்லை என்பதையும் புரிந்து கொள்ளனும்.
ஒரு போரில் ஒரு சஹாபி அல்லாஹ்வுக்காக மிகக்கடுமையாக போரிட்டு பல காபிர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போரில் வெற்றியும் கிட்டியது. மிகப்பெரும் அந்தஸ்தை அடைய வேண்டிய இந்த சஹாபி, அப்போரில் இவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக தன்னால் அந்த வருத்தத்தை தாங்க இயலாமல் தன்னைத்தானே ஈட்டியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார் அந்த போர்க்களத்திலே. அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள் , " இவர் ஒரு நரகவாதி”. அவருக்காக மய்யித்து தொழுகை நிறைவேற்ற ரசூல் (ஸல்) மறுத்து விட்டார்கள்.
நாம் நினைக்கும்போதெல்லாம் ஒரு நன்மையான காரியத்தை செய்து முடிக்கவோ, அல்லது தீமையைக் கண்டு விலகி நிற்கவோ முடியாது. இரண்டிலுமே அல்லாஹ்வின் நாட்டம் அங்கே ஆஜராகியே ஆகவேணும். நன்மையின் பக்கம் விரைந்து செல்வதும் , தீமையைக்கண்டு விலகி நிற்பதும் அவனைக் கொண்டே நடக்கின்றது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வேணும்.
நம் பலகீனம் ஷைத்தானின் பலம்
எந்த சூழ்நிலையிலும் நம் பலகீனம் நம்மை ஷைத்தானியத்துக்கு கட்டுப்பட வைத்து விடக்கூடாது. நன்மையான காரியங்களில் நம் கவனம் இருக்கும்போது அங்கே ஷைத்தான் ஆஜராகுவான் என்பது நபி (ஸல்) அவர்கள் வாக்கு. அங்குதான் உலக விஷயங்கள் நம் சிந்தனையில் உலவவிடுவான் ஷைத்தான்.
சாதாரணமாக கடையில் வியாபாரம் பண்ணும்போதோ, அல்லது வேறு உலக விஷயங்களில் ஈடுபடும்போதோ, ஷைத்தானியத்தின் ஊசலாட்டாம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இரண்டு ரக்காத் தொழுகைக்காக நிருக்கும் போதோ அல்லது அல்-குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பிக்கும் போதோ அங்கே பெரும்பாலும் ஷைத்தான் நம்மை கெடுக்க ஆஜராவான்.
இங்குதான். அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான் என்று பொருள் கொள்ள வேணும். ஏனனில் அவன் சொன்னதுதான் ஷைத்தானின் ஊசலாட்டம் என்பது. இது இல்லையெனில் ஸ்திரமான ஈமானுக்கு வேலையே இல்லை. இந்த ஊசலாட்டத்தில் இருந்து மீண்டு வரத்தான் நமக்கு சோதனை ஆரம்ப மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. இது இறுதி முடிவு நாள் வரை தொடரும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வொரு மனிதனிடத்திலும் அல்லாஹ் ஷைத்தானின் ஆதிக்கத்தையும், மலாயிக்கத்துனுடைய ஆதிக்கத்தையும் படைத்திருக்கின்றான். ஷைத்தானின் ஆதிக்கம் மனிதனை உண்மையை பொய்ப்படுத்தவும், தீமையான விஷயங்களில் ஆர்வமூட்டவும் வழிநடத்திச் செல்லும்.
இந்த இடத்தில் "யா அல்லாஹ் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்"என்று சொல்லி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் வறுமை ஏற்படும்போதும் ஷைத்தான் நம்மை ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பான். இந்த இடத்தில் மிக கவனமாக செயல்பட்டு அவன் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்து இதே பாதுகாவல் தேடவேண்டும்.
மலாயிக்கத்தின் தூண்டுதலோ நம்மை நன்மையின் பக்கம் வழிநடத்தும். இப்படி மலாயிக்கத்தின் தூண்டுதல் நம்மை நெருங்கி நல்ல ஒரு காரியத்தை செய்ய நாடும்போது, முதன் முதலாக நாம் அல்லாஹ்வை புகழ்ந்து , போற்றவேணும். அப்பொழுதுதான், தீமையான காரியத்தின் வழி நடத்தலில் நமக்கு நாட்டம் அற்றுப்போய், நல்லதை செய்ய மனம் நாடுவதோடு, நின்றுவிடாமல், நல்லதை நடத்தியும் காட்டும். ஆதலால் ஷைத்தான் இந்த இடத்தில் நம்மிடம் தோற்று ஓடும் நிலைமையை அது ஏற்படுத்தும்..
உறங்கும் நேரம்
உறங்கும் நேரம் ஷைத்தான் கனவிலும் கெட்ட விஷயங்களையோ, அல்லது நம்முடைய ஈமானை பாதிக்கக்கூடிய விஷயங்களையோ கனவுகளாக விதைத்தால் அதிலிருந்து விடுபட்டு விழித்து விட்டால், இடது பக்கமாக திரும்பி மூன்று முறை துப்பிவிட்டு அப்பொழுதும் “இறைவனிடமே இதே பாதுகாப்பை தேடவேண்டும்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
மேலும் ஷைத்தானே அல்லாஹ்விடத்தில் சொல்லிவிட்டு வரும்போது, யா அல்லாஹ் நான் மனித இனத்தை என் வழியில் கொண்டு வந்து அனைவரையும் வழிகெடுப்பேன். ஆனால் யார் உன் கவசம் என்னும் ஆயுதத்தை ( அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) கையில் எடுத்து , உன் உள்ளச்சத்தில் உவப்புடன் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்றுதான் உலகத்திற்கே அறிமுகமாகின்றான்
பாதுகாப்பு என்னும் கேடயம்
அல்லாஹ் நம்மிடத்திலே இரு தூண்டுதல்களை ( ஷைத்தான், மலாயிக்கத்) ஏற்படுத்தி, நம் கையிலே பாதுகாப்பு என்னும் கேடயத்தை தந்து , ஷைத்தானிடத்திலே ஊசலாட்டம் செய்யும் நம்மை தாக்கும் ஆயுதத்தைக் கொடுத்து நம்மை அவனிடமிருந்து பாதுகாப்பு பெரும் வழியினையும் நமக்கு சொல்லித்தந்து அல்லாஹ் இப்புவி வாழ்க்கைய உண்மை முமினுக்கு ஒரு சோதனைக் களமாகவே ஆக்கி இருக்கின்றான்.
இங்கு போட்டி அல்லாஹ்வுக்கும் ஷைத்தனுக்குமல்ல. ஷைத்தானுக்கும், மலாயிக்கத்துக்கும் போட்டி. இதில் மனிதன் இடையில் இருக்கும் ஒரு ஜீவன். ஷைத்தானின் ஆதிக்க மேலோங்க வாய்ப்பு கொடுத்தால் அவன் கட்டுப்பாட்டில் நீ. மலாயிக்கத்தின் வாய்ப்பு மேலோங்கும்போது சுவனவாசி நீ.
இதில் எந்தக் கட்டுப்பாட்டில் இயங்க வேணும் என்று அல்லாஹ் தந்த ஆறறிவு, உன்னிடம். இது தீமை, இது நன்மை என்னும் பகுத்தறியும் தகுதி உன்னிடம் இருக்கையில் ஷைத்தானின் கை மேலோங்க இடம் கொடாமல், மலாயிக்கத்தின் நன்மையில் மேலோங்க ஒவ்வரு ஷைத்தானியத்தின் ஊசலாட்டத்திலும் "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தனிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானைவிட்டும் பாது காவல் தேடுகின்றேன் ) என்று முழங்குவோம்.
ஷைத்தானை நம் வாழ்வில் வெகு தூரமாக்குவோம்.
அபு ஆசிப் என்ற அப்துல் காதர்
22 Responses So Far:
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
மாஷா அல்லாஹ்!
பாடகன் நம் மனதில் பதியம் போட்டுவிட்டான்!
(இன்னும் எழுது அப்துல்காதர்)
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
துபை நடைபாதையில் புர்கா அணியாமல் எனக்கு முன்னால் செல்லும்: என்னை நோக்கி வரும் மேநாட்டு பெண்களின் ஆபத்தான உடைகளினின்றும்
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
இசைப்பாடல் என்ற பெயரிலும் நடனம் என்கிற சாக்கிலும் பாலுணர்வைத் தூண்டும் கலை நிகழ்ச்சிகள்(?) மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளிலிருந்தும்
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
நெடுந்தொடர்கள் என்றழைத்து நேரவிரயம் செய்யும் தொலைக்காட்சியிலிருந்தும் அதில் பெண்களுக்குக் கற்றுத்தரும் சதித்திட்டங்கள் தீட்டுவது குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பது ஆண்களுக்குக் கற்றுத்தரும் அடக்கமொடுக்கம் ஆகியவற்றிலிருந்தும்
இன்னும்... எல்லாவித தீங்கிலிருந்தும்
"விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்"
வீரியத்தோடு எழுதிக்கொண்டிருக்கும் காதரிடமிருந்து மேலும் மேலும் ஆக்கங்கள் எதிர்பார்க்கிறேன்.
சபீர்
உண்மையிலேயே
அரபு நாடுகளில் கலாச்சாரக சீரழிவு கொண்ட அரபு நாடுகளில் துபாய், பஹ்ரைன், குவைத் இந்த மூன்றையும் சொல்லலாம். இந்த மூன்றில் நான் நேரடியாக பார்த்தது . துபாய், மற்றும் குவைத் . பஹ்ரைனும் அப்படியே என்று சொல்லக்கேள்வி.
ஆனால் துபாய் படு மோசம். ஏனென்றால். விபாச்சாரிகள் நாடு ரோட்டில் நின்று பகிரங்கமாக அழைக்கும் போக்கு இருப்பதை கண்ணால் பார்த்தேன். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவனுக்கு படுகுழியில் விழ மிக சுலபமான வாய்ப்புகள் அதிகம் உள்ள நாடு.
ஷைத்தானின் ஊசலாட்டம் மேலோங்கி நிற்கும் அரபு நாடுகளில் துபாய். NO.1.
அல்லாஹ் நம் அனைவரையும் ஷைத்தானை எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிகொள்ளும் அந்த கேடயத்தை ( அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) ஒவ்வரு நாளும் பயன்படுத்தும் மனப்பக்குவத்தை தரட்டும்.
நீ தேடும் அனைத்திலிருந்தும் அல்லாஹ்வின் பாதுகாப்பு கிடைக்கட்டும்.
ஆமீன்.
//ஷைத்தானின் ஊசலாட்டம் மேலோங்கி நிற்கும் அரபு நாடுகளில் துபாய். NO.1.//
அமெரிக்காவை விஞ்சி விட்டது அரபுநாடுகளில் அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு! இந்த நெருப்பு வளயத்தில் நம் ஈமானைப் பாதுகாப்பதெப்படி? உண்மையில், அன்பு நண்பர் அப்துல் காதிர் அவர்களின் எழுத்து என்னும் “பயானில்” எழுகின்ற நற்பயன்கள் அதிகமாக உள.கல்வி, கேள்வி ஞானம் என்பதை அல்லாஹ் உங்கட்கு அதிகமாகவே வழங்கி உள்ளான் என்பதற்கான சாட்சி, இந்த ஆக்கத்தின் காட்சி! எளிமையான நடையில், வலிமையான ஒரு விடயத்தை எப்படிப் புரிய வைப்பது என்ற ஓர் அரிய எழுத்துக் கலையையும் கற்றுத் தேர்ந்து விட்டீர்கள்; மாஷா அல்லாஹ்! உங்களை ஊக்கப்படுத்திய உங்களின் தோழர் கவிவேந்தர் அவர்கட்கும், உங்கட்குக் களம் அமைத்துக் கொடுத்த அன்பு நெறியாளர் அவர்கட்கும் மிக்க நன்றி.
தொய்வின்றித் தொடர்ந்து எழுதுங்கள்; எங்களின் மனவயலில் உங்களின் தட்டச்சால் உழுங்கள்; நற்குணங்கள் என்னும் விதைகளை ஆங்குத் தூவுங்கள்;இதன் மூலம் நன்மையை ஏவுங்கள்! இதற்கான நற்கூலியை மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள்.
சைத்தானின் ஊசலாட்டம் - நல்ல ஒரு எச்சரிக்கையுடன் கூடிய நினைவூட்டல்.
அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் நிச்சயமாக சைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாவான் என சொல்லிக்காட்டுகின்றான். சைத்தானின் அடிச்சுவட்டினைப் பின்பற்றாதீர்கள் என்றும் சொல்கின்றான். சொல்வது யார் நம்மைப் படைத்த நமக்கு நலவை நாடக்கூடிய நம் இரட்சகன்.
இதனை நம் இறைத்தூதர் அவர்களும் அவர்களின் வழிவந்த தோழர்களும் அடிபிறழாமல் பின்பற்றியதால் அவர்களுக்குள் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அல்லாஹ்விற்காக சகித்து மறுமையை நினைத்து விட்டுக் கொடுத்தார்கள். சைத்தான் அவர்களை அல்லாஹ் அருளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
ஆனால் இன்று நாமோ அதில் சொல் அளவில் மட்டுமே நிற்பதால் (?) சைத்தானின் சதி வலையில் மாட்டி பிரச்சனைத் தீராமல் திணறிக் கொண்டிருக்கின்றோம்.
" அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்"
சைத்தானை விரட்ட அருமருந்து கிடைக்குது இங்கே!
நல்ல பாடம், பக்குவமாய் சொல்லும் பதிவு.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!
காதர்,
எல்லா நாடுகளிலும் கலாச்சாரச் சீரழிவு மேலோங்கி இருக்கிறது என்பதே உண்மை.
சமீபத்தில் நான் சென்று வந்த கோலாலம்ப்பூரும் கலாச்சாரச் சீரழிவில் துபைதான்.
துபாயில் நான் பார்த்து வியப்பது 'சாதாரண கூலித் தொழில் செய்பவன்கூட இந்நாட்டு பிரஜைகளுக்கு பிரத்யேகமாக பயப்படுவதில்லை. சவுதி?'
சவூதி நம்மைப் பக்குவப்படுத்தியது என்பதும் உண்மைதான். ஐவேளகளும் ஜமா அ த் ஆக தொழுவதற்குச் சிரமமின்றி அலுவல்கள் நிறுத்தப்படும் ஓர் அரிய வாய்ப்பினாலும், சட்டங்களின் பிடிகள் இறுக்கமாய் இருந்ததனாலும், நாம் ஓரளவுக்குப் பக்குவப்பட்டோம்; ஆனால், சவூதியை விட்டு வந்தோம்; சகதியைத் தான் மற்ற இடங்களில் கண்டோம்!
”தொழுகை மானக்கேடானவைகளைத் தடுக்கும்”
“நோன்பு ஒரு கேடயம்”
“ஜகாத் ஒரு பாதுகாப்பு”
இப்படிச் சொல்லிச் செல்லும் இஸ்லாத்தில் நம்மை நாமே காத்துக் கொண்டு “ஷைத்தானைத் தடுக்கும்” தடுப்புகள் பல உள.
//”தொழுகை மானக்கேடானவைகளைத் தடுக்கும்”
“நோன்பு ஒரு கேடயம்”
“ஜகாத் ஒரு பாதுகாப்பு”//
அன்பு நண்பர் அப்துல் கலாம்,
தாங்கள் சொன்ன இவைகள் யாவும் மிகவும் பலம் பொருந்திய கேடயமாகும்.
இவைகள் ஷைத்தானின் ஆயுதத்தின் முன் நம்மை காக்கும் அல்லாஹ் தந்த
கேடயமாகும்.
"ஒரு கையில் இறைவேதம்
மறுகையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்”
அன்பின் நண்பர் அப்துல்காதர் அவர்களின் குரலில் இப்பாடல் என் செவிகளில் ஒலிப்பதை உணர்கிறேன்!
Assalamu Alaikkum
Dear brother Mr. Abu Asif,
Good article on influencing of Saitan in human and protection from Saitan.
//இங்கு போட்டி அல்லாஹ்வுக்கும் ஷைத்தனுக்குமல்ல. ஷைத்தானுக்கும், மலாயிக்கத்துக்கும் போட்டி. இதில் மனிதன் இடையில் இருக்கும் ஒரு ஜீவன். ஷைத்தானின் ஆதிக்க மேலோங்க வாய்ப்பு கொடுத்தால் அவன் கட்டுப்பாட்டில் நீ. மலாயிக்கத்தின் வாய்ப்பு மேலோங்கும்போது சுவனவாசி நீ.//
//ஒவ்வொரு மனிதனிடத்திலும் அல்லாஹ் ஷைத்தானின் ஆதிக்கத்தையும், மலாயிக்கத்துனுடைய ஆதிக்கத்தையும் படைத்திருக்கின்றான். //
//மலாயிக்கத்தின் தூண்டுதலோ நம்மை நன்மையின் பக்கம் வழிநடத்தும். இப்படி மலாயிக்கத்தின் தூண்டுதல் நம்மை நெருங்கி நல்ல ஒரு காரியத்தை செய்ய நாடும்போது//
Actually Angels (Malayikaa) are created by light elements.
Saitan is created by fire elements of Ginn category.
Human is created by clay.
Angels are hundred percent obeying Allah and have no free will for themselves.
Ginn and human are having free will. Hence there are good and bad natured ginn and human. Leader of all ginns is saitan who disobeyed Allah and cursed by Allah, and challenged Allah to inflict and mislead human from Adam to human till end of the world.
So, angels are having no influence over human behaviour and day to day activities of human. But Allah assigned angels for specific tasks to register each and every our activities throughout our lives. And another angel to take out the rooh(soul) at the time of death. So they are neutral.
Doing good deeds by independent human will and slipping to wrong path by influence of saitan are responsibilities of human. Allah judges everything in hearafter and entering Jannah-Paradise or Jahhannam-Hell is based on our deeds out of independent will. Saitan will escape. Human is directly accountable himself to Allah.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
sabeer.abushahruk சொன்னது…
//துபாயில் நான் பார்த்து வியப்பது 'சாதாரண கூலித் தொழில் செய்பவன்கூட இந்நாட்டு பிரஜைகளுக்கு பிரத்யேகமாக பயப்படுவதில்லை. சவுதி?'//
இங்கு எந்த சவூதியும் தப்பே செய்வதில்லை! (அப்படி ஒரு நினைப்பு அவர்களுக்கு )அதனால் இங்கு வெளி நாட்டு பிரஜைகள் சவூதி களுக்கு பயந்துதான் ஆகணும்
//மேலும் சைத்தானே அல்லாஹ்விடத்தில்...// சைத்தானும் ஒரு கண்டிசனுக்கு உட்பட்டுத்தான் மனிதனை கெடுக்கிறான்! ஆனால் மனிதனோ சைத்தானை விரட்டும் அல்லாஹ் கொடுத்த ஆயுதமான ''அவூது பில்லாஹி மினசைத்தான் நிர்ராஜின்'' என்று ஓதி அல்லாஹ் இடத்தில் பாதுகாவல் தேடாமல் செய்தானின் பகட்டில் மயங்கி விடுகிறான். சில நேரங்க்களில் சைத்தானே அவனை நெருங்காத போதும் கூட அதை பாக்குவைச்சு ''வா! வா!' வசந்தமே!'' என்று அழைக்கிறான்!. இப்படி வருந்தி அழைக்கும் போது செய்த்தான் என்னதான் செய்வான்! கூப்பிடுற மரியாதைக்காக போய்தானே ஆகணும்! கடைசியில் பட்டு கெட்ட பின்னே படுக்கையிலே கிடக்கும்போது போறவங்க வர்ரவங்களுட்டை ''என்னக்காக அல்லாஹ் இடத்தில கேளு! அல்லாஹ் இடத்தில கேளு!''' எங்கிறான். பாவம் மனிதன் !''கையில் கிடைத்த வெண்ணையை விட்டுட்டு இன்னொருத்தனிடம் போய்நெய்க்கு கை ஏந்துகிறான்!
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
நாம் தோல்வியடைந்த அத்தனை நிமிடங்களிலும் நம் ஈமான் சோர்வடைந்த நேரம்தான் என்று அப்துல் காதரின் அழகு தமிழ் சொல்கிறது.
அன்பின் தம்பி அப்துல் காதர் அவர்களுக்கு,
நேற்று முதல் பள்ளியில் ஆசிரியர் தின வேளைகளில் இருந்ததால் உங்கள் பள்ளிக்கு வர நான் தாமதம்.
ஒரு புறம வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் - போல நாம் சுற்றிலும் ஷைத்தான்களின் மத்தியில் வாழவேண்டிய நிலை. அல்லாஹ் காப்பானாக்!
பதிவுக்குப் பதிவு ஏறுது மெருகு கூடுது அழகு. தொடருங்கள் உங்கள் எழுத்தின் சாதனைப் பட்டியலை. அன்பான வாழ்த்துக்கள் து ஆக்கள்.
//பதிவுக்குப் பதிவு ஏறுது மெருகு கூடுது அழகு. தொடருங்கள் உங்கள் எழுத்தின் சாதனைப் பட்டியலை. அன்பான வாழ்த்துக்கள் து ஆக்கள்//.
உங்களின் ஊக்கமே என் ஒவ்வரு ஆக்கத்தின் முதல் எழுத்தாக நான் நினைக்கின்றேன்.
உங்களைப்போன்றவர்கள் இருக்கும் வரை இன்ஷா அல்லாஹ் என் ஆக்கம் தொடரும் என்ற நம்பிக்கை உண்டு.
அல்லாஹ் என் ஆக்கத்திற்கான வருங்கால என் ஏக்கத்தை , உங்கள் ஊக்கம் என்னும் ஊன்றுகோலுடன் பயணப்பட வைக்கவேணும் என்று வேண்டுகின்றேன்.
அபு ஆசிப் அப்துல் காதர்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான ஆக்கம் . இது காலத்தின் கட்டாயம் இதுபோல் ஆக்கம் வர வேண்டும்.
பஹ்ரைன் நான் உள்ளே சென்று பார்த்ததில்லை! ஆனால் கேள்விபட்டதும்,பின் அவ்வழி விமான நிலையத்தில் சிறிது நேரம் இருக்க அமைந்த வாய்பில் நான் கண்டதை கவிக்காக்காவிடம் சொல்லி இருக்கிறேன். அதாவது பஹ்ரைனை குட்டி அமெரிக்கா என நினைத்தேன் ஆனால் அமெரிக்கா வந்ததும் அமெரிக்காதான் குட்டி பஹ்ரைன் என்பதை புரிந்து கொண்டேன்.
நல்ல பயான் கேட்ட மன நிறைவு
பிரச்சனைகளையும்..தீர்வுகளையும் அள்ளிக்கொடுத்திருக்கும் பதிவு..அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா
Post a Comment