Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேகம் ஹஜரத் மஹல் 25

அதிரைநிருபர் பதிப்பகம் | January 04, 2014 | , ,

தொடர் : பனிரெண்டு

ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப்   பட்டியலை வரிசைப் படுத்தும்போது வழக்கமாக ஜான்சி ராணி, வீரமங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை என்கிற சில குறிப்பிட்ட பெயர்களைத்தான் படித்திருக்கிறோம் கேட்டு இருக்கிறோம் . பல இஸ்லாமியப் பெண்டிர்களின் பெயர்கள் மறைக்கப் பட்டு இருக்கின்றன. அவர்களுள் முக்கியமானவர் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.  

ஆண்களை தைரிய புருஷர்கள் என்று வர்ணிக்கும் வரலாறுகளுக்கும் சமூகத்துக்கும் மத்தியில்  மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி அடக்கு முறைக்குப் பணியாமல் ஆசை வார்த்தைகளுக்கு உடன்படாமல் வாழ்ந்து காட்டினார் என்றால்  அவர்  பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகும். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் புல்லரிக்க வைப்பதுடன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தப் பெண்மணியை நினைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் தலை  நிமிரவும் செய்கிறது. (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு பற்றிப் பார்க்கலாம். 

இதற்கு முன் நாம் எழுதிய அத்தியாயத்தில் 1857 - இல் , இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றில் வர்ணிக்கப் படும் சிப்பாய்ப் புரட்சி பற்றியும் , அந்தப் புரட்சியில்  மொகலாயப் பேரரசின் இறுதி மாமன்னர் பகதூர்ஷா  ஜஃபர் அவர்களின் கீழ் இணைந்த ஒட்டுமொத்த இந்தியாவின் சிற்றரசர்கள் பற்றி நாம் கண்டோம். 1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு  எதிராக இப்படி  ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து நவாபுக்கு  இரண்டாம் மனைவியாக அரண்மனைக்குள் புகுந்த பேகம், குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்க்கப் பெற்று ,  நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாமர்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள். 

கணவன் சிறையில் – ஏகாதிபத்திய சக்திகள் சுற்றிலும் சூழ்ந்து நின்ற வேளையில் ஆங்கில ஆட்சியின் தலைமையை எதிர்த்து துணிச்சலுடன் பேகம் ஹஜரத் மஹல்  ஒரு பிரகடனத்தை விடுத்தார். அந்தப் பிரகடனத்தின் வாசகங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற ஒரு முஸ்லிம் பெண்மணியின் வீரத்தைக்  குறிப்பிடுகிறது. 

"To  eat  pigs and drink wine, to bite greased cartridges and to mix pig's fat with sweetmeats, to destroy Hindu;s temples  and masjids of   Muslims  ,  on pretense of making roads, to build churches, to send clergymen into the streets to preach the Christian religion, to institute English schools, and pay people a monthly stipend for learning the English sciences, while the places of worship of Hindus and Muslims are to this day entirely neglected; with all this, how can people believe that religion will not be interfered with?" என்றார். 

ஒரு மாபெரும் ஆதிக்க சக்தியாக விரிவடைந்து கொண்டிருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களைக் கொண்ட பிரகடனத்தை ஒரு சிறு குறு  நிலத்தை ஆண்ட பேகம் ஹஜரத் மஹல் வெளிப்படையாக விடுத்தார்  என்றால் அவரது தைரியத்தைப் புகழ வார்த்தைகளே இல்லை.  அதனால்தான் Qurratulain Hyder என்கிற வரலாற்று ஆசிரியர் பேகத்தை  இவ்விதம் புகழ்கிறார். 

“Begum Hazrat Mahal of Oudh was the last of the breed of able queens and generals. The queen led her kingdom's army into battle during the revolt of 1857. Even after she was defeated she defied Queen Victoria's famous Proclamation and issued a counter Proclamation”

மேலும் இளவரசர் அஞ்சும் குதர் என்பவர் ”  பேகம் ஹஜரத் மஹல் ஒளத் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அரச வம்சத்தின்  முகங்களில் வழிந்த  கோழைத்தனத்தை துடைத்து எறிந்தவர் “ என்று கூறுகிறார்.   

“She wiped out the blot of cowardice from the face of the ruling family of Avadh.” -Prince Anjum Quder

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோவில் இருந்த  பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும் ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் கூட, பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையானவர்கள், ஒளத் பகுதியைச் சார்ந்த முஸ்லிம்களாவர். 

1858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்களின்  தலைகளைக் கொய்து அவற்றை தட்டில் வைத்து பக்தூர்ஷாவுக்கு சிறையில் வைத்துக் கொடுத்த கொடியவனான மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். 

ஆயினும் , ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் சென்று தலைமறைவானார். (R.C. AgarWal, Constitution Develapment of India and National Movement).

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சை உருக்கும் தியாகத்தின் சான்றுகளாகும். 

நேபாளத்துக்குள் தலை மறைவான பேகம் அந்நாட்டின் அன்றைய அரசர் ராணாவின் பிரதம மந்திரி ஜாங்க்க பகதூர் இடம் புகலிடம் கோரினார். ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கு பயந்து அவருக்குப் புகலிடம் கூடத் தரப்படவில்லை. நாடு நகரங்கள் மற்றும் நவநிதியும் இழந்து நின்ற அரசிக்கு இறுதியில் நேபாளத்தில் புகலிடம் தரப் பட்டது.  

இவர் தப்பிப் போகும்போது கொண்டு சென்ற செல்வம் யாவும் அவரைப் போல நாடு துறந்து பேகத்துடன் கூட வந்த அகதிகளின் செலவுக்கே ஆகிப் போனது. இதனால் வறுமை வாட்ட ஆரம்பித்தது.  அன்றிலிருந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு 1874–ல் காத்மாண்டுவில் வறுமையிலேயே  உழன்று தனது வாழ்வை நீத்தார். எப்படிப்பட்ட வறுமை என்றால் அவரது மையத்தை அடக்கம் செய்யும் செலவுக்குக் கூட பணம் எதுவும் அவரிடம் மிச்சம் இருக்கவில்லை. 

ஒரு சிற்றரசின் மகாராணி இப்படி சீரழியும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது இந்த நாட்டுக்காக அவர் செய்த அளவிட முடியாத தியாகத்தின் அடிப்படையிலானது. முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களால் மூன்று முறை சமாதானக் கொடி பிடிக்கப் பட்டு இருந்ததை ஏற்று அவர்களை எதிர்த்து ஓங்கிய வாளைக் கீழே போட்டிருந்தால் மீண்டும் அதே சாம்ராஜ்யத்தின் அரசியாகவே அவர் இருந்து இருப்பார். இப்படி நாட்டை   விட்டு  நாடோடியாக நாதியற்று மரணம் அடைந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. 

பேகம் ஹஜரத் மஹலின் வரலாறு இப்படிப் பட்ட புகழ்மொழிகளால்தான் வரையப்பட்டுள்ளது.  

A girl from a poor family, she rose to the height of a Queen and still higher to a place in history where here selfless devotion to the cause of freedom , her feminine  courage , her patriotism , her example of national pride shall ever remain resplendent with a hundred in aspiring themes. Her memory too is entitled to the respect of the brave and the true hearted of all nations.“ Ifthikar- un- Nisha “ was really the “ Pride of All Woman” 

தாய்நாட்டுக்கான சுதந்திரத்துக்காகப் போராடி அந்நிய மண்ணில் உயிர் துறந்த பேகம் ஹஜரத் மஹலுக்கு லக்னோவின் விக்டோரியா பூங்காவில் 1962   ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சலவைக்  கற்களால் ஆன நினைவுச்சின்னம் ஒன்று  நிறுவப்பட்டது.  இந்தப் பூங்கா இன்று பேகம் ஹஜரத் மஹல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.  இதே நினைவுச் சின்னத்தில் ஒளத் இராஜவம்சத்தின் பாரம்பரிய கலாச்சார பிரதிபலிப்புகளை உள்ளடக்கிய பகுதியும் அழகுபடுத்தப் பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. பேகத்துடைய நினைவுச்சின்னம் அமைந்துள்ள இந்தப்  பூங்காவில்  மதச்  சார்பின்றி ராம்லீலா மற்றும் தசராப் பண்டிகைகள் இன்றும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. 

இன்ஷா அல்லாஹ் இன்னொரு வரலாற்றுடன் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

ஒரு அரசாங்கத்தையே இழந்து வறுமையில் இறந்த பெண்மனியின் வாழ்க்கை மனக்கஷ்டத்தையே தருகிறது. எப்படி இந்த சரித்திரத்தை எழுதியவர்களால் இப்படி இவ்வளவு பெரிய சரித்திரத்தை இத்தனை வருடம் மறைத்து வைக்க முடிகிறது.

adiraimansoor said...

காக்கா
ஹஜ்ரத் மஹலின் தியாக வாழ்க்கை வரலாறுகளை படிக்கும்ப்போது ஈராக் மன்னர் சதாம் ஹுசைனின் வீரமும் எனக்கு ஞாபகத்தில் வந்தது தனது நாட்டு மக்களுக்காக இருதிவரையும் போராடி தன் மன்னிலே சில எட்டப்பர்களின் சதியில் மாட்டி உயிர் நீத்த அந்த மாவீரனையும் நம் உயிர் உள்ளவரை மறக்க முடியாது அது போன்றுதான் ஹஜ்ரத் மஹலின் வீரமும் என்பது தாங்கள் குறும்படமாக ஹஜ்ரத் மஹலின் மறைக்கப்பட்ட தியாகத்தை எங்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதற்கு நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன்

Unknown said...

//இவ்வளவு பெரிய சரித்திரத்தை இத்தனை வருடம் மறைத்து வைக்க முடிகிறது. //

இதை மட்டுமா மறைத்தார்கள் சண்டாளர்கள்..? இன்னும் எத்தனையோ மண்ணில் புதைக்கப்பட்ட வரலாறுகள்..

ஆனால் அவையெல்லாம் அழியாது.. இதுபோன்ற பதிவுகள் மூலம் மீழ் எழுப்பப்படும்.. நினைவுறுத்தப்படும்..

இப்ராஹீம் அன்சாரி காக்கா இதுபோன்ற தொடர்களை தொடரா வேண்டும்.. அதற்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும்,, நோயற்ற வாழ்வையும் தரவேண்டும்.. என்பது என் துஆ..

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
பேகம் ஹஜரத் மஹலின் வீரம் பாராட்டப்பட வேண்டியது. ஜான்ஸி ராணியை கொண்டாடும் கூட்டங்கள், முஸ்லிம் என்ற காரணத்தால் இவரின் வீரத்தையும், தியாகத்தையும் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் நயவஞ்சகர்கள்.

அந்நிய நாட்டின் (அமெரிக்காவின்) குடியுரிமை பெற்ற பெண்ணின் பெயரால் சாதனை விருது கொடுக்கும் கயவர்கள் நிறைந்த நாடு.

தன் சுயநலத்திற்காக பேட்டை எடுத்துக் கொண்டு ஓடியவனுக்கு பட்டம் பதவி கொடுத்து அழகு பார்க்கும் கல் நெஞ்சம் காவிகள் நிறைந்த நாடு.

முஸ்லிம் என்ற காரணத்தால் முஸ்லிம்களின் தியாகங்கள், வீரங்கள் மறைத்தே வைக்கபட்டிருக்கிறது.

உண்மை ஒரு போதும் உறங்காது. இந்தியா முழுவதும் காவி இருள் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்திய அரசியல் கட்சிகள் அனைத்திலும் காவிகள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

வல்ல அல்லாஹ்வின் பிடி காவிகளின் மீது இறுகுவதற்கும், காவிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படவும் அனைவரும் துஆச் செய்யவும்.

வீரப் பெண்ணின் வரலாறை தந்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரரே!.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த அத்தியாயத்தைப் பற்றி பிறகு கருத்துப் பதிகிறேன். ஆனால், இந்தத் தொடரின்மூலம் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு வரும் வரலாற்று உண்மைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருவதை முதலில் சொல்லியாக வேண்டும்.

இந்தத் தொடர் எடுத்துத் தரும் வரலாற்று உண்மைகள் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் பிரசித்தி பெற முடியாமல் மதச் சாயம் பூசப்பட்டு மறைக்கப்பட்ட சதியை அம்பலப்படுத்துகிறது; முறியடிக்கிறது.

பள்ளிப் பருவத்தில் பாடமாகச் சொல்லித்தரப்பட்டிருந்தால் நாலையும் இரண்டையும் போல நாமெல்லாம் இவற்றையும் கற்றிருப்போம்; சொற்பொழிவுகளிலும் மேடைப் பேச்சுகளிலும் மேற்கோள் காட்டியிருப்போம்.

இனியேனும் நாம் அவ்வாறு செய்ய வேண்டும். எல்லா மேடைகளிலும் ஏடுகளிலும் எடுத்தாள வேண்டும். நண்பர்களிடையே உரையாடுகையில் நினைவுகூர வேண்டும். அப்போதுதான் இங்கு வெளுக்கும் மதச் சாயம் மீண்டும் படியாதிருக்கும்.

எழுத்துச் சேவையால் எங்கள் இதயம் கவர்ந்து வரும் ஈனா ஆனா காக்காஅவர்களுக்கு நன்றியும் து ஆவும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

பேகம் ஹஜரத் மஹலின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறதுதான். எனினும், வியப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், இந்தத்தொடரின் மூலம் காக்கா அவர்கள் அறியத்தந்துவரும் இஸ்லாமிய வீரர்களோடு வாழ்ந்துவந்த இந்தச் சகோதரிக்கும் வீரம் விளையத்தான் செய்யும்.

நிகழ்வுகளைச் சுவைபடச் சொல்லி வருவதால் எனக்குப் பொன்னியின் செல்வன் வாசித்த உணர்வு ஏற்படுகிறது.

வாய்பாடு வாசித்தவர்களையும் வரலாறு வாசிக்க வைக்கும் விந்தையைப் புகழாமல் இருக்க முடியவில்லை.

கிரவுன்,

மொழியை மந்திரித்து பதிகிறார்களோ ஈனா ஆனா காக்கா! இப்படி ஈர்க்கிறதே!

sabeer.abushahruk said...

// முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களால் மூன்று முறை சமாதானக் கொடி பிடிக்கப் பட்டு இருந்ததை ஏற்று அவர்களை எதிர்த்து ஓங்கிய வாளைக் கீழே போட்டிருந்தால் மீண்டும் அதே சாம்ராஜ்யத்தின் அரசியாகவே அவர் இருந்து இருப்பார். இப்படி நாட்டை விட்டு நாடோடியாக நாதியற்று மரணம் அடைந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. //

நச்!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர்! வ அலைக்குமுஸ் ஸலாம் .

எங்கே உங்கள் நெற்றியை காட்டுங்கள் " இச்"

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் எஸ். அலாவுதீன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் ஸலாம்.

இந்திய மண்ணின் மீது முஸ்லிம்களுக்கு எவ்வித பாத்தியதையும் இல்லை என்று மேடைக்கு மேடை முழங்கும் காவிகளின் முகத்திரையைக் கிழிக்கவே இந்தத் தொடர்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

Shameed said...

நிகழ் காலத்தில் நடந்தவைகளையோ முன்னுக்குப்பின் முரணாகவும் உண்மையை மறைத்தும் ஒருசாராரை மற்றவர்கள் மீது தூண்டிவிடும் கேடு கெட்ட நோக்கத்தில் எழுதும் இந்தக்கால ஊர்காரர்களின் மத்தியில் நீங்கள் அந்தக்காலத்தில் நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி தொகுத்து வழங்குவது பெருமையாக உள்ளது

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
Anonymous said...

நெற்றியில் உங்கள் ‘இச்’

காக்கா,

இதென்ன
அறிவிக்கப் படாமல்
யாவருக்கும் விநியோகிக்கப் படாமல்
விலையேதும் கொடுத்து வாங்கப்படாமல்
போட்டியின்றி ஒரு லாட்டரி?
அதிலிருந்து
பட்டென்று ஒரு
பம்பர் பரிசு!!!

உச்சி குளிர்ந்ததையா
உவகை மிளிர்ந்ததயா
உங்கள் அன்பில் இன்று
உள்ளம் நெகிழ்ந்ததையா!

இனி
இந்த வரிசையில்
யாராருக்கெல்லாம் யோகமோ?

Sabeer Ahmed

Ebrahim Ansari said...

நச் என்றதற்கு இச் என்றேன் என எண்ண வேண்டாம்.

அன்று ஒரு நாள் உங்களின் கவிக் கரங்களில் கொடுத்துவிட்டேன். அந்த முத்த வடுக்களை இன்னொரு முத்தமிட்டு அழிக்க விரும்பவில்லை. அதனால் அன்புடன் நெற்றி முகர்ந்தேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்படியாக ஜான்சி ராணியை மட்டும் அறியச் செய்து விட்டு ஹஜ்ரத் மஹல் ராணியை மறக்கடிக்க செய்த காவிகளின் சாயம் போக்கி இந்த ராணியை எஙளுக்கு அறியத்தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

// அந்த முத்த வடுக்களை//

வடுக்களா? அவற்றை நான் முத்திரைகள் என்றல்லவா சேமித்து வருகிறேன்!

(எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, நாம் மதிக்கும் மனிதரிடமிருந்து இத்தகைய அங்கீகாரம் கிடைக்கும்போது! சகோதரர்களே காழ்ப்புணர்வு களைந்து பரஸ்பரம் அன்பு செலுத்தி பாருங்கள் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் இனிமையாகவே இருக்கும்)

crown said...


வாய்பாடு வாசித்தவர்களையும் வரலாறு வாசிக்க வைக்கும் விந்தையைப் புகழாமல் இருக்க முடியவில்லை.

கிரவுன்,

மொழியை மந்திரித்து பதிகிறார்களோ ஈனா ஆனா காக்கா! இப்படி ஈர்க்கிறதே!
-----------------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும் .கவியரசே! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!ஆனால் இ.அ.காக்கா பல் மொழி வேந்தர். நமக்கு கிடைத்த மேதை! தலையில் போதை ஏற்றாத மேதைகளில் ஒருவர்.அதே அடக்கம்!அவர்களிடம் அந்தனை நல்லவையும் அடக்கம்!பாசபினைப்பில் நம்மை பினைத்திருப்பவர். நான் கொடுத்து வைத்தவர்கள்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

நாம் கொடுத்துவைத்தவர்கள்-

crown said...

// அந்த முத்த வடுக்களை//

வடுக்களா? அவற்றை நான் முத்திரைகள் என்றல்லவா சேமித்து வருகிறேன்!

(எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, நாம் மதிக்கும் மனிதரிடமிருந்து இத்தகைய அங்கீகாரம் கிடைக்கும்போது! சகோதரர்களே காழ்ப்புணர்வு களைந்து பரஸ்பரம் அன்பு செலுத்தி பாருங்கள் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் இனிமையாகவே இருக்கும்)
=====================================
சரியா சொன்னீங்க கவியரசே!அவை முத்திரைதான் பதிக்கப்படுவதால். எனக்கெல்லாம் கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?. அந்த அதரம் தரும் முத்தம்!முதல் தரம்!தாரம் தருவதை விட கொஞ்சம் மேலோங்கியது! இந்த முத்தத்தில் படிப்பு வாடை அதிகம்!கொடுத்து வைத்தவர் நீங்கள்.

crown said...

வேகம்,விவேகம்,மறக்கவோனா தியாகம்!இதுதான் சகோதரி பேகம்!ஆனாலும் அந்த வீரமங்கையின் இறுதி நாட்கள் சோகம் நிறைந்து இருந்தாலும் வெற்றித்தாகம் நிறைந்தது.அதனால்தான் மஹலின் புகழ் இன்றும் ஓங்கியிருக்கிறது.அல்லாஹ் அந்த வீர சகோதரிக்கு சுவனம் தருவானாக ஆமீன்.
காக்கா தொல்பொருள் ஆராய்சியாளர்கள் தோல்வியடையும் படி, மறைக்கபட்ட உண்மையை தோண்டி எடுத்துள்ளீர்கள். தோடரட்டும் உங்கள் சேவை!அது நம் சமூதாயத்துக்கு தேவை!

Ebrahim Ansari said...

கருத்திட்ட அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

தம்பி சபீர் மற்றும் கிரவுன் , உங்களின் அன்புக்கு அருகதையான நிலை தந்த இறைவனுக்கு நன்றி.

தம்பி அபூபக்கர் ! மறப்போம் ! இணைவோம். நடந்தது நேற்று! இன்று இணக்கமுடன் இணையுங்கள் மீண்டும். நாளை நல்லதே நடக்கும். இஷா அல்லாஹ்.

Aboobakkar, Can. said...

மதிப்பிற்குரிய இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு ....நான் வெளிப்படையாகவும் இயல்பான ஊர் கிண்டலோடும் பேசக்கூடியவன் இதுவே என்னுடைய கருத்துக்களாகவும் சில சமயம் வெளிப்படுகின்றது இதை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றேன் . மற்றபடி எனது மனதில் ஒன்றும் கிடையாது.உங்களை போன்றோர் எழுத்துபனியில் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகளை நான் அறியாதவன் அல்ல.அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரியட்டும்...ஆமீன் .

Yasir said...

இப்படியாக ஜான்சி ராணியை மட்டும் அறியச் செய்து விட்டு ஹஜ்ரத் மஹல் ராணியை மறக்கடிக்க செய்த காவிகளின் சாயம் போக்கி இந்த ராணியை எஙளுக்கு அறியத்தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி அபூபக்கர் அவர்களுக்கு, புரிதலுக்கு நன்றி.

கருப்பு ஆடுகள், குழப்பவாதிகள் , பச்சை பெல்ட் போன்ற சில வார்த்தைகளை நீங்கள் எழுதியதே மற்றவர்களும் கூடுதல் குறைவாக எழுத வழி வகுத்துவிட்டது. இனி எவரும் கடும் வார்த்தைகளை பிரயோகிக்காமல் இறைவன் காப்பானாக!
பொதுப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் தேவை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.