Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேரமில்லை! நேரமிருக்கிறது! - 7

அதிரைநிருபர் | January 15, 2014 | , , , , ,

நேரமில்லை!

தொழ நேரமில்லை!
ஓத நேரமில்லை!
பசியாற நேரமில்லை!
படிக்க நேரமில்லை!
தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்
பறந்து கொண்டு இருக்கிறேன்!
பணம் உண்டு பையில்
மதிய உணவு இல்லை கடையில்
நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!
பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!
பழகியவனை பார்க்க நேரமில்லை!
மனைவியிடம் பேச நேரமில்லை!
மக்களிடம் பேச நேரமில்லை!
பள்ளி விட்டு வரும் பிள்ளையை
பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!
தந்தையை கவனிக்க நேரமில்லை!
உற்றாரை கவனிக்க நேரமில்லை!
ஏழை வரி கொடுத்து
ஈட்டிய செல்வத்தை
தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!
உயிர் பிரிய நேரமிருக்கிறது!
மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது
நான் தனி வீடாவேன்
புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்
நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்
தீயவர்களுக்கு நோவினை தருவேன்!
நன்மை தீமை பிரித்தறிந்து
மண்ணறையில் கேள்விக்கும்
மண்ணறையின் வேதனைக்கும்
நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!
மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்
மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!
மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!
மகனை கண்டு தந்தை ஓடுவான்!
மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!
கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!
நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!
எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!
மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்
மனைவியிடம் கணவன்
உனக்கு வாரி வழங்கினேன்
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
மனைவி ஒத்துக்கொள்வாள்
நீங்கள் சிறந்த கணவர்தான்
எனக்கும் நன்மைதான் வேண்டும்
பாசமிகு கணவனை பிரிந்து
வெருண்டு ஓடுவாள்
ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்
பெற்றெடுத்த மக்களே!
நான் சிறந்த தந்தையல்லவா!
துன்பம் தொடாமல் அனைத்து
வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!
உன் நன்மையிலிருந்து
எனக்கு கொஞ்சம் கொடு
பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!
நீங்கள் சிறந்த தந்தைதான்
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!
தந்தையிடம் இருந்து
வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!
காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதிலும்
அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக
அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ
மறுமை பயம்
மனதில் இல்லை!
சகோதரச் சண்டை,
உடன்பிறந்தார் சண்டை
குலச்சண்டை,
தெருச்சண்டை,
சம்பந்தி சண்டை,
குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின்
இடத்தை அபகரித்த சண்டை
படிப்பில், அறிவில், ஆற்றலில்,
பணத்தில், அழகில், குலத்தில்
பெருமை, ஆணவம் மேலோங்க
பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு
நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்
கேள்விக்குறியாகும் நாள்!
உங்கள் செல்வமும்
பலன் தர முடியாத நாள்!
எந்த பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!
இம்மை, மறுமையின் அதிபதி
வல்ல அல்லாஹ்!
நீதி வழங்கும் நாள் -அந்த
மறுமைக்கு நேரமிருக்கிறது!

 
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை
அதிகமாகத்(செல்வத்தை)
தேடுவது உங்கள்
கவனத்தைத்
திருப்பி விட்டது.
பின்னர் அந்நாளில்
அருட்கொடை பற்றி
விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:102:1,2, 8)

அலாவுதீன் S
இது ஓர் மீள்பதிவு

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - 26 தொடர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

7 Responses So Far:

adiraimansoor said...

மறுமையின் சிந்தனைத்தூண்டலை மிக அழகாகக வடித்திருக்கின்றீர்
சகோதரர் அலாவுதீன்
கம்பியூட்டர் மூலமும்
ஸ்மார் போன்கள் மூலமும்
தகவல் பரிமாற்ற யுத்தம் நடக்கும் இந்த கால கட்டத்தில் நல்லதை தேட நேரமிருக்கின்றது
தேடியதையும் நமக்கு கிடைத்ததையும்
நாளுபேருக்கு அல்ல
40 ஆயிரம் பேருக்கும் அல்ல
4 லட்சம் பேருக்கு
ஒரே நேரத்தில்
நல்லதை சொல்ல
வழியும் இருக்குது
நேரமும் இருக்கு
நகர்வது கெடிகாரத்தின்
முட்கள் மட்டுமல்ல நமது
நமக்கு இறைவனால் அருளப்பட்ட
பொன்னான நாட்களும் சேர்ந்துதான்
நகர்கின்றன
நகரும் முல்லை நாம் திரும்ப நகர்த்தி வைத்துவிடலாம்
நம்மை விட்டு பிரிந்த ஒரு
செக்கண்டைகூட நம்மலால்
திரும்ப பெறமுடியாது
ஆனபடியால்
நண்மைகள் செய்ய
நேரமிருக்கின்றது நேரமிருக்கின்றது
அலாவுதீன் ஏற்றிவைத்த
அற்புத விளக்குகளின் பயணை
அடைய நமக்கு நிறையவே
நேரம் இருக்கின்றது

نتائج الاعداية بسوريا said...

நேரமில்லை - யா அல்லாஹ் இதற்க்கு நேரத்தைக்கொடு
நேரமிருக்கின்றது - யா அல்லாஹ் இதை உன்னை மறக்கடிக்கும் நேரமாக
ஆக்கிவிடாதே

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் அலாவுதீனுடைய அருமருந்து, கட்டுரை எனும் மாத்திரை வடிவில் வந்து கொண்டு இருந்தது.

இப்போது கவிதை எனும் ஊசி வடிவில் வந்து செலுத்தப் பட்டிருக்கிறது. அதனால் உடனே மனக் குளத்தைக் கலக்கி சிந்தனை மீன்களைப் பிடிக்க வைத்து இருக்கிறது. அச்சமூட்டும் எச்சரிக்கைகள். அல்லாஹ் அனைவரையும் காப்பானாக!

சகோதரர் அலாவுதீன் அவர்களின் இந்தப் பதிவை முன்னர் நான் படிக்கவில்லை. அ.நி - க்குள் நான் அடியெடுத்து வைக்கும் முன்பு வந்த பதிவாக இருக்கும். மீள் பதிவுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே!

சற்று முன்பு தம்பி L.M.S. அபூபக்கர் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்தார்கள். தற்சமயம் அவர் ஏற்றுள்ள பனியின் காரணமாக இணையத்தில் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று வருந்திவிட்டு என்னிடம் ஒரு அமானிதம் தந்துள்ளார்.

அவர் தந்த அமானிதம் உங்கள் அனைவருக்குமான ஸலாம்.

அதிரை நிருபரின் நெறியாளர் , பதிவர்கள் மற்றும் நேயர்கள் அனைவருக்கும் அவருடைய அன்பான ஸலாம். அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுமாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல தொகுப்பு

கடமையை செய்ய நேரத்தை கட்டாயமாக்க இறையச்சத்துடன் மனதையும் ,
நேரமிருக்கு என நினைக்கும் வீணாணதை வெறுக்க மன வலிமையையும் பெறுவோமாக!

sabeer.abushahruk said...

மீள்பதிய தகுதிவாய்ந்த அச்சமூட்டலும் எச்சரிக்கையும்.

வ அலைக்க(எல் எம் எஸ்) அலைக்குமுஸ்ஸலாம் ஈனா ஆனா காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவர் தந்த அமானிதம் உங்கள் அனைவருக்குமான ஸலாம்.//

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

லெ.மு.செ. (அ) மனதெல்லாம் இங்கே தான் என்பதை அடிக்கடி உங்கள் வாயிலாக அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி காக்கா !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு