Sunday, January 12, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா? 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2014 | , , ,

தொடர் - 5
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!'

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சவால் என்று ஷிர்க் செய்யத் தூண்டுவது சரிதானா?

மனித இனத்திற்கு முன் மாதிரியான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை அறிந்த நம் சமூகத்தில் உள்ள பலர், தானும் பாவம் செய்து, பிறரையும் செய்து காட்டத் தூண்டும் சமூகமாக மாறிவருகிறது என்பது வருத்தமான செய்தி.

இஸ்லாத்தை உண்மை மார்க்கம் என்று நம்பவைக்க அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் போன்று வேறு யாரும் இவ்வுலகிற்கு வேண்டுமா? நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதிப் பேருரையில் இந்த மார்க்க பரிபூரணமாக்கப்பட்டுள்ளது என்று கூறியவுடன் இஸ்லாம் முழுமைபடுத்தபட்டது. இதில் எந்தவித கூடுதலோ குறைவோ இல்லை என்பதை முஸ்லீம்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளோம். ஆனால், அன்மைக் காலங்களில் தமிழகத்தில் நமது சகோதரர்களில் ஒரு சாரார் இஸ்லாத்தை உண்மைப் படுத்துகிறோம் என்று சொல்லி, சிலரை பாவம் செய்யத் தூண்டுகிறார்கள் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.

நிகழ் காட்டாக, தமிழகத்தின் உள்ள ஒரு இயக்கம் சூனியக்காரர்களுடன் சூனிய ஒப்பந்தம் செய்திருப்பது இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களிடம் மட்டுமல்ல, ஏனைய சமூகத்தின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பாவத்தை செய்யத் தூண்டும் 'சூனியச் சவால்கள்' தற்போதைய காலச் சூழலில் தேவைதானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம் இன்று உலக அளவில் முஸ்லீம்களுக்கு ஏற்படுள்ள சவால்கள் ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவில் பாசிச சக்திகளின் மத்திய ஆட்சியில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் ஏராளம். ஆனால் கேடுகெட்ட சூனியக்காரர்களுடன் சவால்கள் இன்றையச் சூழலில் அவசியமற்றது. இது செய்வது பாவம் என்ற வாதம் வைக்கப்பட்டால், அதற்கான ஆதாரமாக ஒரு சில குர்ஆனில் வசனங்களை (பார்க்க: குர்ஆன் 20:60-70) வைத்து மூஸா நபி சூனியகாரர்களுடன் போட்டி போட்டார்கள் ஆகவே ஒரு நபியின் வழிகாட்டல் உள்ளதால் நாங்களும் அவ்வாறே ஒரு சூனியக்கார்ர்களிடம் சவால் விட்டு போட்டி போடுகிறோம் என்று தங்களின் செயலை நியாப்படுத்துகிறார்கள். 

குர்ஆன் மற்றும் ஷஹீஹான அடிப்படையில் சூனியம் செய்வதும் செய்யத் தூண்டுவதும் பாவம், சூனியம் கற்பதோ கற்பிப்பதோ பாவம், சூனியக்காரனால் தான் நினைத்ததை செய்ய முடியும் என்று நம்புவது மிகப் பெரிய பாவம் ஷிர்க் (இறை மறுப்பு), குஃப்ரு. ஆனால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு, அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் செய்ய இயலாது (பார்க்க குர்ஆன் 2:102).

மேலே குறிப்பிட்ட இரண்டு குர்ஆன் வசன எண்களில் உள்ள குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில் நாம் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவனை சூனியம் செய்து காட்டு என்று சவால் விடுவது சரியா? தவறா? என்பது புரியும்.

வஹியின் அடிப்படையில் மூஸா நபி செய்ததும், போலி பகுத்தறிவின் ஆய்வென்ற பெயரில் தமிழகத்தில் நம் சகோதரர்களில் ஒரு சாரார் செய்துள்ள சூனியச் சவால் ஒப்பந்தம் செய்ததை மேலும் விளங்குவதற்காக இதோ சில ஒப்பீடு.

முதலாவது ஓப்பீடு..!

கெட்டவனான காஃபிரான ஃபிரவ்ன், அல்லாஹ்வின் தூதர் நபி மூஸா அவர்களை நபி இல்லை என்பதற்காக சூனியக்காரர்களை வைத்து முஸா நபிக்கு சவால் விட்டான்.. முதலில் சவால் விட்டது பிர்அவுன், நபி முஸா அவர்கள் அல்ல.

இன்றோ காஃபிரான அகோரி மணிகண்டனிடம்,  தமிழகத்திலுள்ள அந்த இயக்கத் தலைவர் எனக்கு சூனியம் செய்துப் பார் என்று சவால் விட்டிருக்கிறார். அந்த அகோரியை இறைமறுப்பிலிருந்து விலக்கி எடுக்காமல் மேலும் ஷிர்க்கில் நிலைத்திருக்கவும் தொடர்ந்து செய்யத் தூண்டும் ஒப்பந்தம் போட்டுள்ளார். 

இரண்டாவது ஓப்பீடு...!

அல்லாஹ்வின் தூதரான முஸா நபி அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் (வஹியை) கொண்டே அந்த காஃபிர் பிரவ்ன் விட்ட சவாலை ஏற்கிறார்கள், அல்லாஹ்வின் கட்டளையை (வஹியை) கொண்டே தன்னுடைய ஒவ்வொரு அனுகுமுறைகளையும் செய்து காட்டுகிறார்கள்..

அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனிடமும் சூனிய ஒப்பந்தம் செய்துள்ள அந்த இயக்கத்தின் தலைவருக்கு அல்லாஹ்விடம் வஹி வந்து சூனியச் சவால் விடவில்லை, அவரின் சூனிய ஒப்பந்தம் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ்விடம் இருந்து வஹி வரவில்லை. அந்த இயக்கத்தின் தலைவர் நபியோ, மலக்கோ அல்ல.

இந்த இரு ஒப்பீடுகளையும் பார்த்தால் நபி மூஸா ஷிர்க் செய்யத் தூண்டினார் என்றால் அல்லாஹ் ஷிர்க் செய்யத் தூண்டினான் என்று சொல்ல வேண்டும், அல்லது ஷைத்தான் முஸா நபியை ஷிர்க் செய்யத் தூண்டியதாக நீங்கள் சொல்ல வேண்டும். இவ்விரண்டையும் அல்லாஹ்வை நம்பி வஹியின் அடிப்படையில் செயல்படும் நபிமார்களை ஏற்றுள்ள எந்த முஃமீனும் சொல்ல மாட்டார், காரணம் நபி மூஸா அவர்கள் வஹியின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையே எந்த முஃமீனும் நம்புவார்.

சூனிய ஒப்பந்தம் செய்துள்ள இயக்கத்தவர்கள் முழுக்க முழுக்க தங்கள் பகுத்தறிவைக் கொண்டு செய்த சூனிய ஒப்பந்தத்தை தனக்கு சதகமாக்கிக் கொள்வதற்காக, முஸா நபி செய்தது ஷிர்க் இல்லையா? என்ற குதர்க்கமான அறிவுக்கு பொருந்தாத வாதத்தை எடுத்து வைத்து தங்களின் நிலையையை நியாப்படுத்துகிறார்கள். அது தவறு என்பதை அல்லாஹ் இன்றில்லா விட்டாலும், ஒரு நாள் அவர்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வஹியின் அடைப்படையில் நபி மூஸா செய்ததை, தன் போலி பகுத்தறிவின் மூலம் அந்த இயக்கத்தின் தலைவர் செய்வதோடு ஒப்பிடுவது அடிப்படையிலே தவறு என்பது 100 % நிரூபமனமாகிறது. காரணம் அந்த இயக்கத்தின் தலைவர் வஹியின் அடைப்படையில் தன் செயல்களை அல்லாஹ்வின் கட்டுப்பாடுடன் செய்யும் இறைத்தூதர் அல்ல.

நபி மூஸா அவர்கள் செய்தது தவறே அல்ல என்று நிரூபனமாகும் போது, ஷிர்க்கு செய்ய முஸா நபி தூண்டினாலும் அந்த இயக்கத்தின் தலைவர் தூண்டினாலும் அது தவறு தவறுதான் என்று சூனியச் சவால்விட்ட இயக்கத்தவர்களின் ஒப்பீடு அர்த்தமற்றது என்பது நான் மேலே இட்ட ஒப்பீட்டின் மூலம் நிரூபனமாகிறது. 

அகோரி மணிகண்டனையும், அதுல்தீனையும் ஷிர்க்கிலிருந்து விடுவிக்க தூண்டாமல் மாறாக சூனியம் என்ற ஷிர்க் மேலும் செய்யத் தூண்டி அந்த கொடிய பாவத்தை இயக்கத்தின் தலைவரும் சுமந்துள்ளார், அவர்களின் தலைவருடைய செயலை ஆதரிக்கும் சகோதரர்களும் அதற்கு துணை போகிறார்கள். இதனை அவர்கள் அனைவரும் உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் அவர்களுக்கு நாளை மறுமையில் நலன் கிடைக்கும். 

சூனியச் சவால்கள் என்ற இவ்வாறான தவறான அனுமுறைகள் ஒன்றும் இஸ்லாத்திற்கு செய்யும் அர்ப்பனிப்பு அல்ல. மாறாக, இது போன்ற வீண் சவால்களை வைத்து இஸ்லாத்திற்கு நன்மை பயக்கும் என்பதை காட்டி இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் செயலாகவே எடுத்துச் சொல்லும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒப்பீடுகள், தனது பகுத்தறிவை குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரண் இல்லாமல் அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்கும். பகுத்தறிவை குர்ஆன் சுன்னாவுக்கு முரணாக அனுகுபவர்களுக்கு எளிதில் விளங்குவது கடினம் அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் நிச்சயம் விளங்கும். தயவு செய்து பாவம் அது எந்த பாவமாக இருந்தாலும், செய்வதும், செய்யத் தூண்டுவதும் தவறே.

கேவலமானவனும் நாம் அனைவரும் வெறுக்கக்கூடியவனுமான சைத்தானின் தந்திரத்திற்கு துனைப் போகுவிதமாக தன் சிறுநீரையும், தன் உள்ளாடைகளையும், தலை முடிகளையும் கேவலப்பட்டு கொடுத்திருப்பதால், கொடுத்தவர்களை பார்த்து சைத்தான் நிச்சயம் சந்தோசப்படுவான். காரணம் சைத்தான் அல்லாஹ்வை ஏற்றுள்ளவர்கள் கேவலப்படுவதை மிகவும் விரும்புகிறவன் என்பது நான் சொல்லி அந்த சகோதரர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

கால்களை, கைகளை முடக்குவோம், தற்கொலை செய்ய வைப்போம், குருடனாக ஆக்குவோம், பைத்தியம் ஆக்குவோம், இன்னும் என்னவெல்லாமோ..., என்று கூறியுள்ள அகோரி மணிகண்டன் மற்றும் அதுல்தீனுடைய சூனிய ஒப்பந்ததிற்கும் குர்ஆன் சுன்னா பார்வையில் சூனியத்திற்கு தாக்கத்திற்கும் ஒரு துள் அளவும் சம்பந்தமும் இல்லை. இதனை ஒரு பொருட்டாகவே எந்த ஒரு முஃமீனும் எடுக்கக்கூடாது. கேடுகெட்டவர்கள், அயோக்கியர்கள், சைத்தானின் கூட்டாளிகள் செய்யும் சூனியம் அல்லாஹ் நாட்டமிருந்து அது பலித்தாலும் அல்லது அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் பலிக்கவிட்டாலும், 1400 வருடத்திற்கு மேலாக பாதுகாக்கபட்டுள்ள குர்ஆன் வசனங்களிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி சொல்லப்பட்டுள்ளவைகளில் எந்தவித மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதை நினைவூட்டுகிறேன். அல்லாஹ் போதுமானவன்.

மற்றுமொரு முக்கிய தகவலை பதிவு செய்கிறேன். சூனியச் சவால் விட்டுள்ள இயக்கத்தின் தலைவருக்கு கேடுகெட்ட அகோரி மணிகண்டன் மற்றும் கோமாளி திருப்பூர் அதுல்தீன் செய்யும் சூனியம் பதிக்கக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பம். அந்த இயக்கத்தின் தலைவர் குர்ஆன் சுன்னா வழியில் எவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு ஷஹீஹான ஹதீஸ்களை மறுக்க வேண்டியதில்லை என்றிருந்தாரோ அதே கொள்கையோடு திருந்தி வர வேண்டும். மீண்டும் ஏகத்துவ எழுச்சி தமிழ முழுவதும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களின் அர்பணிப்புடன், வீரியத்துடன், இஹ்லாசுடன் செயல்பட வேண்டும் என்பதும் நம் அனைவரின் விருப்பம். இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துனை புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் அனுகுமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவேனும் நாம் அர்ப்பணித்திருக்கிறோமா ? என்ற சுயபரிசோதனை வினாவை நமக்குள் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

11 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear Tajudeen,

The concept of sihr(Soonyam) is clear to muslims through Quran and Hadees. Your concern is valid.

I have been observing few of our revolutionary(?) islamic scholars and their followers in Tamil Nadu for the past 20 years that their understanding about Quran and Hadees, practicing Islam is variating and seeming abnormal,
creating controversies,
conflicts in relationships,
divided themselves into uncountable groups,
separate exclusive masjids for themselves,
differentiating their 'Adhan' by advancing 5-10 minutes,
calling "we and you", making group politics
and yelling-degrading-attacking the dignity each other
and more of the similar behavior we can expect from these guys.

Allah only know their true motives behind their behaviour and activities. There is either reward or curse and punishment of Almighty Allah, awaiting for every intention and act.

I would like to request all brothers and sisters to observe and aware of this trend and safeguard yourself and ask protection from Allah from those misleading evils.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Shameed said...

/அந்த இயக்கத்தின் தலைவர் குர்ஆன் சுன்னா வழியில் எவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு ஷஹீஹான ஹதீஸ்களை மறுக்க வேண்டியதில்லை என்றிருந்தாரோ அதே கொள்கையோடு திருந்தி வர வேண்டும். மீண்டும் ஏகத்துவ எழுச்சி தமிழ முழுவதும் அனைத்து ஏகத்துவ சகோதரர்களின் அர்பணிப்புடன், வீரியத்துடன், இஹ்லாசுடன் செயல்பட வேண்டும் என்பதும் நம் அனைவரின் விருப்பம். இதற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துனை புரிவானாக.//

ஆமின் ஆமின்

Yasir said...

அந்த இயக்கம் ,கூடிய விரைவில் ஒரு மதமாக போய்விடுமோ என்ற அச்சப்பாடு என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது....அந்த இயக்கத்தில் உள்ள என் சில நண்பர்களுடனும் நான் இப்போது பேச்சைக்குறைத்து கொண்ட்டேன்....மருந்தடிக்கப்பட்ட கொசுக்கள்போல....அவர்களின் தலைவர்கள் சொல்வதே சரி என்னும் மாயை (மயக்கம்) என்று விலகுமோ / தேவையற்ற தர்க்கம் தவிர்க்கப்படுமோ ...அன்றுதான் நல்லகாலம்.....அவர்கள் பழையபடி திரும்பவேண்டும் என்பது என் அவா அதற்க்கு என் துவா

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு,

பலருடைய எதிரொலிக்காத குரல்களை எதிரொலித்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

sabeer.abushahruk said...

இதுதான் இனிய மார்க்கம் என்று தமிழ்பேசும் என்னைப் போன்ற முஸ்லிம்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மாமனிதர், அறிவுஜீவி, போதனையாளர், என்றென்றும் என் அன்பிற்கும் நன்றிக்கும் உரிய சகோதரர் அவர்கள், ஏனோ தலைவர், இயக்கம், தொண்டர்கள் என்றானதும் அதிக சற்சைகளில் சிக்கிக் கொள்கிறார்.

அல்லாஹ்தான் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும்.

நல்ல அலர்ட் தாஜுதீன்.

sabeer.abushahruk said...

மேலும்,

அல்லாஹ் நம் சகோதரரை எந்தத் தீங்கும் அண்டாமல் பாதுகாக்க என் துஆ!

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

இது போன்ற பதிவுகள் எழுதவேண்டும். நபி(ஸல்) அவர்கள் எத்தி வைத்த சத்தியம் மக்கள் மத்தியில் எடுத்துரைக்க அனைவரும் முன் வர வேண்டும்.

sheikdawoodmohamedfarook said...

தம்பிதாஜுதீன்!இதுதேர்தல்நேரமல்ல.எல்லாம்ஓய்ந்துகிடக்கும்நேரம். மலிவானதலைவர்களுக்குபேசஒன்றுமில்லை.இப்படியேபோனால்மக்கள் தன்னைமறந்துவிடுவார்கள்.அடுத்ததேர்தலில்தொண்டனைஉசிப்பிவிட்டு காஸுபார்க்கமுடியாதுஎன்பதற்காகசிலControversial அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பைஉண்டுபண்ணும்gimmick work. இதை நாம் பெரிதாக எடுத்துபேசினால்அவர்களுக்கேஆதாயம்.எனவேஇதையெல்லாம் குப்பையில்தூக்கிபோட்டுவிட்டுகண்டும்காணாமலேயேபோவோம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான விளக்கம்.
நன்றி சகோ தாஜுதீன்.

அல்லாஹ் நம் சகோதரர் pj அவர்களுக்கு எந்தத் தீங்கும் அண்டாமல் பாதுகாக்க என் துஆ!

அப்துல்மாலிக் said...

என் காலத்தில் முதன் முதலில் ஹதீஸை எத்திவைத்து ஷிர்க்குகளைவிட்டும் விலக வழிவகை செய்தவர். மேலும் இன்று வரதட்சனை வாங்கமாட்டோம் (?) என்று உறுதிமொழி எடுக்கும் எண்ணத்தையும் சேர்த்தே விதைத்தவர். நல்லதே நடக்கும் என்று நம்புவோம். இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.