Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர் தினம் - தமிழில் ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2014 | , , ,

அதிரைநிருபர் வலைத்தளம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம்...

கடந்த 05-09-2014 அன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அன்று வெள்ளிக் கிழமை என்பதால் அதிராம்பட்டினத்தின் கா. மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை . ஆகவே ஆசிரியர் தினத்தை, பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழாவுடன் இணைத்து 07- 09- 2014 ஆம் தேதி ஞாயிறு அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இவ்விரு நிகழ்வுகளையும் பள்ளியின் நிர்வாகத்துடன் இணைந்து சென்ற ஆண்டைப் போலவே அதிரைநிருபர் வலைதளம் சிறப்புடன் நடத்தியது.

அன்று மாலை நான்கு மணிக்கு இந்த உற்சாகத்திற்கும் ஆசிரியர்களின் தியாகத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் மாணவமணிகளை ஒப்படைக்கபட்டு ஒழுங்காக அணிவகுத்து அமரவைக்கபட்டனர். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த கட்டுப்பாடு கட்டியம் கூறியது.

விழாவிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. ஏ. மகபூப் அலி தலைமை வகித்தார். கா. மு. கல்லூரியின் முதல்வர் ஜலால் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அறிவிக்க பட்டிருந்தாலும் முக்கிய அரசுத் தொடர்பான பணியின் நிமித்தம் அவர் வெளியூர் சென்று விட்டதால் கலந்து கொள்ள இயலவில்லை. வாழ்த்துரை வழங்க அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரியும் அவருடன் பள்ளியின் முன்னாள் மாணவரும் பயில்கின்ற காலத்தில் பள்ளியின் சார்பாக பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த நாவலர் நூர் முகமது அவர்களும் கலந்து கொள்ள, சிறப்பு சொற்பொழிவாற்ற பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச் செல்வன் அவர்களும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை பள்ளியின் தலைமை தமிழாசிரியர் முனைவர் அஜிமுதீன் அவர்களும், நன்றியுரையை தமிழ்த்துறையில் பணியாற்றும் உமர் பாரூக் அவர்களும் ஆற்றும் பொறுப்பை ஏற்று இருந்தனர்.

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் தனது இரத்தினச் சுருக்கமான வாழ்த்துரையில் பள்ளிக்கு முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடனும் அதிரைநிருபர் வலைதளத்தின் ஒத்துழைப்புடனும் ஒரு கலையரங்கம் கட்டித்தர முயற்சிகள் நடப்பதாக பலத்த கரகோஷங்களுக்கு இடையே அறிவித்தார். அத்துடன் அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான S.K.M. ஹாஜா முகைதீன் சார், வாவன்னா (A. அப்துல் காதர்) சார், அலியார் சார், ஹனிபா சார், சண்முகம் சார், ராமச்சந்திரன் சார், ஷாகுல் ஹமீது சார், ரோசம்மா டீச்சர், ராஜேந்திரன் சார், சீனிவாசன் சார், ஹாஜி முகமது சார், ஆகியோரை கவுரவித்தார்கள். முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்கும்போது அந்தப் பள்ளி வளாகத்தில் வங்கக் கடலின் அலைகளையும் அடக்கும் வண்ணம் எழுந்த கரவொலிகள் காதைப் பிளந்தன. உணர்ச்சிகள் அலை மோதின; கண்கள் பனித்தன. வாவன்னா சார் அவர்கள் வரும்போது அவர்களை ஹாஜி முகமது சார் கைப் பிடித்து அழைத்து வந்தது பலரை உணர்ச்சி வசப்பட வைத்தது.

இதை தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கல்வியாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் 11/11 என்பது ஒவ்வொரு ஆண்டின் அரசு அறிவித்த 'கல்வி தினம்' என்றும் அந்த நாள் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் என்றும் கூறி அந்த நாளையும் ஆண்டுதோறும் கல்வி விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டுமென்றும் கூறினார். நாவலரின் நாவன்மையை அனைவரும் அமைதியுடன் ரசித்தனர். 

சிறப்புரை ஆற்றிய தாமரைச்செல்வன் அவர்கள் கொளுத்திப் போட்ட சிரிப்பு வெடிகள் மாணவர்களை மிகவும் உறசாகப்படுத்தியதுடன் சிரிக்க வைத்த அளவுக்கு சிந்திக்கவும் வைத்தது. அவர் பேசிய அரைமணி நேரமும் சிரிப்பொலி மட்டும் அடங்கவே இல்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை அவர் முத்தாய்ப்பாக வைத்து தனது சொற்பொழிவை நிறைவு செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. 

பள்ளியின் வளாகத்தில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்திட பள்ளியின் முன்னாள் மாணவரும் எவர்கோல்டு வணிக வளாகத்தின் ஊரிமையாளருமான செல்வம் அவர்கள் வழங்கிய ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுக நகர செயலாளர் இராம்.குணசேகரன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம் ஆகியோர் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களிடம் ஒப்படைத்தனர். 

பள்ளியின் சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் உடற் பயிற்சி ஆசிரியர் ஆகிய அனைவரும் மேடைக்கு அழைத்துப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். 

இதைத் தொடர்ந்து அதிரைநிருபர் வலைத்தளம் சார்பில் இந்த நிகழ்வுகளின் நினைவுப் பரிசாக தயாரிக்கப்பட்ட தரமான ஒரு பயணப் பையும் அதனுள் அதிரைநிருபர் வலைதளத்தின் மிக மூத்த பங்களிப்பாளர், அதிரை அறிஞர், பன்னூலாசிரியர், அதிரை அஹமது அவர்களால் மொழியாக்கம் செய்து வெளிவந்த “அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்“ என்ற அற்புதமான நூலும் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அஹ்மது அபூசாஹ்ருக் அவர்களால் ‘ஆசிரியர் தினத்துக்காக; எழுதப்பட்ட இரண்டு கவிதைகளின் அச்சுப் பிரதிகளும் வைக்கப்பட்டு அந்த நினைவுப் பரிசு, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நினைவுப் பரிசை பள்ளியின் முன்னாள் மாணவர் தலைவரும் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகருமான பேராசரியர் A.S. அப்துல் காதர் M. A. அவர்களை வழங்கும்படி இப்ராஹீம் அன்சாரி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டு அவற்றை அவர் இன்முகத்துடனும் அன்புடனும் வழங்கினார்.

மாணவர்களுக்கு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக PARLE – G பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பெரியவர் எஸ். முகமது பாரூக், அதிரை அஹமது, அண்ணா சிங்காரவேல் , ஜெமீல் எம் சாலிகு, அதிரை அன்வர், எல்.எம்.எஸ். அபூபக்கர் ஆகியோருடன் அதிரையின் சக இணைய தளங்களின் சகோதரர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும், அதிரையின் அனைத்து முஹல்லாக்களிலிருந்து பல பிரமுகர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அதிரை இணைய தளங்களின் பங்களிப்பாளர்களும், அதிரைநிருபருக்காக சகோதரர் மீடியா மேஜிக் நிஜாம் அவர்கள் தங்கள் குழுவினருடன் வந்திருந்து காணொளியாகப் பதிவு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் தனது நன்றியினை பகர்கிறது.

மொத்தத்தில் அன்று மாலை மகிழ்ச்சிக் கடல் பொங்கி வழிந்ததா என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நிறைவேறின. அனைவரின் முகங்களிலும் மகிழ்வையே காண நேர்ந்தது இந்த நிகழ்வுகளின் வெற்றியே !

இந்த சிறப்பான நிகழ்வுகளின் காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

32 Responses So Far:

Ebrahim Ansari said...

அதிரை நிருபர் வலைத்தளத்தில் விடப்பட்ட அழைப்பை ஏற்று அதிரை நியூஸ் மற்றும் அதிரை பிறை வலை தளங்களின் நிருபர்கள் நிகழ்ச்சிகளை படம் பிடித்தார்கள். மற்றும் முன்னாள் , இந்நாள் ஆசிரியர்கள் ஆகியோருடன் பேட்டிகள் கண்டார்கள்.
சில வலைத்தளங்கள் கலந்து கொள்ளவில்லை.

அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒரு சிறு தொகை செலவிட்டு இவ்வளவு பேரை மகிழ்வில் ஆழ்த்த முடியுமென்பது சிறப்புக்குரியது. தம்பி சபீர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிரை நிருபர் சார்பாக வழங்கப்பட்ட பை தினமும் நமது பள்ளி ஆசிரியர்களின் கரங்களில் பயன்படத்தக்க வகையில் தவழும்.

sheikdawoodmohamedfarook said...

கோவிதாமரைசெல்வனின்நகைச்சுவைகலந்தபேச்சில்நல்லகருத்துக்கள் கலந்துஇருந்தது.வழக்கமானபாட்டி,காக்காநரிகதையைசொல்லி''வடையை இழந்தது யார்?' 'என்றுகேட்டார் .மாணவர்கள் எல்லோருமே ''காக்கா!'' என்றார்கள்.[ இன்னும்நம் எல்லோருமேவடையேஇழந்த காக்கா மீதே பரிதாபபட்டுக்கொண்டிருக்கிறோம்] ''இல்லை!பாட்டி!''என்றார்.இன்றும்கூடநாம்பழையமுறையிலேயே போதிக்கப்படுகிறோம்.சிலவற்றைமாற்றியோசிக்கஆரம்பித்தால் முன்னேற்றம்கூப்பிடுதூரத்தில்.அ.நி.க்குபாராட்டும்நன்றியும்.

sheikdawoodmohamedfarook said...

அடுத்தஆண்டுக்குள்கலையரங்குஅமைத்தகையோடுஊருக்குமத்தியில்ஒருபொதுநூலகமும்அமையமுயற்சிக்க அ.நி.யைகேட்டுக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிகழ்ச்சிக்கு வித்திட்டு வளர்த்து நடத்திக் காட்டிய இபுறாகீம் அன்சாரி காக்கா அவர்களுக்கும் அ.நிக்கும் நன்றியும் துஆவும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

ZAKIR HUSSAIN said...

ALL THE BEST TO ALL BLOGGERS IN ADIRAI

نتائج الاعداية بسوريا said...

ஊரில் இல்லாமல் போய்விட்டேனே !

அபு ஆசிப்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நானும் நம் பள்ளியில் படித்த பழைய மாணவன் என்பதில் பெருமிதம் அடைவதுடன் பழையதை அசை போடும் பழக்கம் குறைந்து வரும் இவ்வேளையில் அதை நினைத்தாலே சில வேளை ஆனந்தக்கண்ணீரும், சில வேளை வேதனை நீரும் வந்து விடுகிறது.

sheikdawoodmohamedfarook said...

செலவைபார்க்காமல்ஆட்டோவிளம்பரம்செய்திருந்தால்பாசமும் நன்றியும்கொண்டபழையமாணவர்களில்பலர்வந்துகலந்திருக்ககூடும். முதுமையில்கடந்துபோனஇளமைநினைவுகள்சுகம்!

Ebrahim Ansari said...

தம்பி மு.செ.மு. நெய்னா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

நிகழ்ச்சி முடிந்து நானும் ஹாஜி முகமது சாரும் ஒரு காரில் ( ஓசிக் கார்) முத்துப் பேட்டை வரை பயணித்தோம்.

அவருடன் பேசிக் கொண்டு வரும்போது நீங்கள் அடிக்கடி அவரை ப் பற்றி தளத்தில் எழுதுவது பற்றிக் குறிப்பிட்டேன். மிகவும் மகிழ்ந்தார்.

ஒய்வு பெற்ற பிறகு ஒரு கல்வி இயல் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றுவதாகக் கூறினார்.

Ebrahim Ansari said...

//செலவைபார்க்காமல்ஆட்டோவிளம்பரம்செய்திருந்தால்பாசமும் நன்றியும்கொண்டபழையமாணவர்களில்பலர்வந்துகலந்திருக்ககூடும். //

இந்த யோசனையை நிகழ்ச்சிக்கு முன் தாங்கள் சொல்லிருந்தால் செய்திருக்கலாமே. ( ஆட்டோ செலவு உங்களுடையது ) .

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt congratulations for all the teachers on the occasion of Teacher's Day.

Celebration of the teacher's day is great honor for the teachers.

As an old student of the school I used to visit there and had interaction with few of my beloved teachers and had an opportunity to talk with +2 students on 18th Aug 2014. Entering the school was felt like entering my home. It was such a sentimental feeling. And had few minutes interaction with our KM college computer science faculties and students was memorable too on that day.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

sheikdawoodmohamedfarook said...

//இந்தயோசனையைமுன்பேசொல்லிஇருந்தால்செய்திருக்கலாம்[ஆடோ செலவுஉங்களுடையது]அதுதெரிந்துதான்நிகழ்ச்சிமுடிந்தபின்னர்'யோசனை'சொன்னேன்.

sheikdawoodmohamedfarook said...

//ஆட்டோசெலவுஉங்களுடையது//மைத்துனர் இப்ராஹீம் அன்சாரி சொன்னது. இதற்க்குநானொருகதைசொல்லவா?ஒருஊரில்ஒருபெரியமுதலாளி இருந்தார்.அவருக்குஒருகணக்கப்பிள்ளைஇருந்தார்.இவர்கணக்குவேலை மட்டும்பார்க்காமல்நல்லஆலோசனைகளையும்சொல்லிவந்தார்.கணக்கு பிள்ளைஆலோசனையால்சின்னமுதலாளியாகஇருந்தவர்பெரியமுதலாளியானார்.கணக்குபிள்ளையின்வொவ்வொருஆலோசனையிலும்இலட்சம் லட்சமாய்சம்பாதித்தமுதலாளிகணக்குபிள்ளைக்குஒருபைஸாகூட''இந்தாண்டு''கொடுக்கலே!''நல்லகணக்கப்பிள்ளையாநீ''என்றவெத்துபாராட்டுமட்டுமேஅவருக்குபரிசு.கணக்கப்பிள்ளைஒருஅப்பாவி.தலைலேஅடிச்சுகையிலேகொடுத்தாவாயிலேபோட்டுகிடுவாரு[தொடரும்]

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா / ஈனா ஆனா காக்கா,

விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஞாபகத்திற்கு வந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீங்கள் ரெண்டுபேரும் இப்பவே இப்டீன்னா அப்போ எப்டியோ!

மாஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

ஒருநாளுகணக்கப்பிள்ளையும்முதலாளியும்வயலுபக்கம்போயிட்டுவரும் வழியில் ஒருபெரிய பாறாங்கல்லை பார்த்த கணக்கப்பிள்ளை முதலாளியிடம் சொன்னார் ''முதலாளி!முதலாளி! இந்தப்பாறாங்கல் சாதார்னகல்அல்ல!இதில்துணிதுவைத்தால்சீக்கிரம்அழுக்குபோகும். துணிநீண்டஉழைக்கும்''என்றார்.அதைக்கேட்டமுதலாளி''அப்படியா?அதை அப்படியேதூக்கிவீட்டிகொண்டுவந்துவைத்துவிடு''என்றார்.'விதியோ'' யென்றுஅதைதூக்கமுடியாமல்தூக்கிசுமந்த புத்திசாளி கணக்கப்பிள்ளைக்கு இப்போதான்புத்திவந்தது. அன்றுமுதல்கணக்கப்பிள்ளைவாய்திறக்கவில்லை.கணக்குதிறந்ததோடுசரி..கணக்குபிள்ளைவாய்மூடினார்.சிலமாதங்களில்முதலாளிகடைமூடி பின்கண்ணும்மூடினார்.வெள்ளைகாரனாகஇருந்தால்கணக்குபிள்ளைக்கு லாபத்தில் பங்குகொடுப்பான். போனஸ் கொடுப்பான். மௌனம்சிலநேரங்களில்சிறந்தமொழி!

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…


//நிகழ்ச்சி முடிந்து நானும் ஹாஜி முகமது சாரும் ஒரு காரில் ( ஓசிக் கார்) முத்துப் பேட்டை வரை பயணித்தோம். //



ஓசிக் கார் இது எந்த கம்பெனி தயாரிப்பு புது பெயர இருக்கே

Ebrahim Ansari said...

//ஓசிக் கார் இது எந்த கம்பெனி தயாரிப்பு புது பெயர இருக்கே//

இப்படி என்னை வாப்பாவும் மகனும் போட்டுத் தாக்குரியலே. ஓசிக் கார் என்றால் Outsiders Car. சரியா தம்பி சபீர்?

sabeer.abushahruk said...

//இப்படி என்னை வாப்பாவும் மகனும் போட்டுத் தாக்குரியலே. ஓசிக் கார் என்றால் Outsiders Car. சரியா தம்பி சபீர்?//

காக்கா,

நீங்க பெருச பாத்துக்குங்க.

இவுரு என்னா பெரிய வென்ட்ரா? நான் போதும்.

ஹமீது,

ஓசி கார்னா:

எத்தனை சிலிண்டர்னாலும்
எண்ணெய் நாம ஊத்த வாணாம்
பத்து கிலோமீட்டர் போகக்கூட
பாக்கெட்ல காசு வாணாம்

பிரதமர் போற காரும்
ஆளுனர் வார காரும்
அமைச்சர்கள் தொங்கத் தொங்க
அம்மா பிரச்சாரக் காரும்

அல்லாமே
ஓஸி கம்பெனியோட
ஒரிஜினல் கார்தாம்பி

இதில்
காக்கா போன
Original Car ஐத்தான்
ஓஸி கார் என்று
ஒய்யாரமா சொன்னாக

ஏன்னா,
அது
அன்பிற்கும் பண்பிற்கும்
சூம்பிக் கிடக்கும்
சமுதாய உணர்வுகளைச்
சுண்டி எழுப்பும்
காக்காவின் எழுத்துக்கும் வாய்த்த
Outstanding Car is
OC CAR!


crown said...

Outstanding Car!!!!!!!!!!!!!!!!!
-----------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்! கவி காக்கா!அமைச்சர்கள் வெளிய நிற்றபடி பயணிக்கும் கார்தான் இதுவா?

crown said...

எத்தனை சிலிண்டர்னாலும்
எண்ணெய் நாம ஊத்த வாணாம்
பத்து கிலோமீட்டர் போகக்கூட
பாக்கெட்ல காசு வாணாம்
---------------------------------------------------------------
அட!அட காருக்கும் கவிதை பவனி! நில்(வெளியே!)கவனி,செல் என்பதுப்போல் நில் ,கவனி,கவிதை சொல் என்று உங்க எழுத்து out standing போங்க!

crown said...

மாணவர்களுக்கு அதிரைநிருபர் வலைதளத்தின் சார்பாக PARLE – G பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
------------------------------------------------------------------
எலே!பார்ல பிஸ்கெட்டெல்லாம் கொடுக்குறாங்க! நம்ம படிக்கும் போது நமக்கு ஏதும் தராம அல்வா கொடுத்துட்டாங்க டோய்!

crown said...

கவிஞரே சுகமா?எதாவது சொல்லிட்டு போங்க!

அப்துல்மாலிக் said...

அழகான ஒரு இலக்க்யமன்றத்தை நடத்திமுடித்த அ.நி. க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

இந்த தலைமுறைகளுக்கு books reading லே ஆர்வத்தை அதிகபடுத்தும் பொருட்டு சகோ சேக்தாவூது சொன்னதுபோல் ஊரின் மத்தியில் பொதுநூலகம் அமைத்(ந்)திட ஏற்பாடு செய்யவும்

sabeer.abushahruk said...

சுகம்தான் கிரவுன்,

officeல் இருப்பதால் தொடர்ச்சியாக உரையாட முடிவதில்லை.

நீங்களும் குடும்பத்தோடு நலமாக இருக்க என் துஆ.

outstandingஐ out என்றும் standing என்றும் பிரித்து அமைச்சர்களை வெளியே நிற்க விட்டதை ரசித்தேன்.

sheikdawoodmohamedfarook said...

//outstanding car is OCcar// அதுலேயும்முத்துப்பேட்டைவரையிலும்நிக்கவச்சுதான்கூட்டிகினு போனாங்களா?பாவம்!கனத்ததொப்பைஉடம்பாச்சே!எப்புடிதாங்குனுச்சு? மீசைக்காரன்தைலம்அனுப்பிவைய்க்கவா?

Ebrahim Ansari said...

எங்கள் தம்பி சபீர் தங்கக் கம்பி
தட்டினால் தங்கம்
வெட்டினால் வெள்ளி
கொட்டினால் குற்றால அருவி - கவிதைக்
குற்றால அருவி
கேட்டதைக் கொடுப்பதில் பெருமை இல்லை
கேட்டதும் கொடுக்கிறாரே! - கவிதையை
கேட்டதும் கொடுக்கிறாரே.
ஓசிக் கார் பற்றியும் கூட
உடனடிக் கவிதை !

கட்டுரையாளரையும்
கவிதை எழுதவைத்த கவிதை.

sabeer.abushahruk said...

காக்கா,

உங்களுக்குள் உறங்கிக் கிடந்த கவிதைச் சிங்கம் அப்போதைக்கப்போது உங்கள் கட்டுரைகளில் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும்; இப்ப ரொம்ப உசுப்பி விட்டேனோ? சிங்கம் சிலிர்தெழுந்து சங்கத் தமிழ் கவிதை வாசிக்கிறதே.!!!!!

(அபு இபு, ஒரு கவிதை கேட்டு காக்காவுக்கு கொக்கி போடவும்)

அதெல்லாம் இருக்கட்டும் காக்கா,

எங்கே விளக்கம் கேட்ட சின்னவரைக் காணோம்?

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

ஆரணியும் காஞ்சிபுரமும் பக்கத்து ஊர்கள்தான்.

ஆனால் காஞ்சிபுரம் பட்டு பட்டு நூலால் நெய்தது.

ஆரணிப் பட்டு, பட்டு நூல் போன்ற நூலால் நெய்தது. நான் ஆரணி. நீங்கள் காஞ்சி.

விளக்கம் கேட்ட சின்னவர் , அவர் சவூதியில் விட்டுவிட்டு வந்த ஒருமாதமாக ஓடாத காரை ஒழுங்கு படுத்திக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

Ebrahim Ansari said...

பெரியவர் அவர்களுக்கு,

முத்துப் பேட்டை வரை காரை நிக்க வச்சால் முத்துப் பேட்டை வந்து சேர முடியாது.

Shameed said...

abeer.abushahruk சொன்னது…

//Outstanding Car is
OC CAR!//

out வெளியோ standing நிற்கும் காரெல்லாம் oc காரா? (மொழி பெயர்ப்பு எப்படி !!)

Shameed said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.