Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று - நூல் வெளியீடு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2015 | , , ,

الحمد لله رب العألمين ، و الصلاة و السلام على سيد المرسلين و على آله و أصحابه أجمعين  

வாழ்க்கை  என்பது  வாய்கெடச்  சிரிப்பதும்,
சீழ்க்கை  யடித்துச்  சிரிப்பை  மூட்டலும்,
சிறப்பாம்  வாழ்வைச்  சிரிப்பாய்  ஆக்கிப்
பொறுப்பாய்  வாழாப்  பொய்மை  மக்களின்
கானல்  வாழ்வைக்  கடைப்பிடித்  தொழுகல்
ஈனம்  அன்றோ!  இதுதான்  வாழ்வா?

மாறாய் –
உளத்திலும்  சொல்லிலும்  உண்மையைத்  தேக்கி,
அளப்பரும்  அருளால்  ஆண்டவன்  தந்த
நல்ல  வாய்ப்பாம்  நகைச்சுவை  தன்னை
மெல்ல  எடுத்து  மிகையிலா  விதத்தில்
சொல்லிடா  திருப்பதும்،  சோகம்  ததும்ப
மல்லிட்  டிருப்பதும்  வாழ்க்கையா?  சொல்வீர்?


உண்மையில் –
நகைச்சுவை  யென்று  நமக்கெலா  முண்டு!
பகைச்சுவை  யன்றது;  பண்பு  நபியார்
பயனுறு  வாழ்வில்  பளிச்சிடச்  செய்த
நயனுடை  நாயன்  நல்கிய  வரமது!

இதனையே  தம்பி  இக்பால்  தொகுத்துப்
பதவுரை  செய்தனன்  பயனுற  நமக்கே!
மகிழ்ச்சிக்  குரியவிம்  மாபெரும்  மன்றின்
நிகழ்ச்சியில்  மூவர்  நெருங்கியுள்  ளார்கள்.
வழங்கும்  பொறுப்பில்  நானுளேன்  அதனால்
முழங்குவோம்  ‘பிஸ்மி’யை  முகமனின்  முன்னே!

வாழ்த்தி வெளிட்டு வழங்குபவர்,

அதிரை அஹ்மத்

சில புகைப்படங்கள் இதோ.. விபரம் விரைவில்








7 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt congratulations to the author of the book brother Mr. Iqbal Saleh, Adirai Nirubar Publications, and Mr. Adirai Ahmad.

Its great pleasure and proud for Adirai people that we are capable to publish intellectual properties like thoughtful books which would benefit whole world Tamil community.

Thanks for AN for book publishing event pictures.

Jazakkallah Khair

B. Ahamed Ameen from Dubai

sheikdawoodmohamedfarook said...

நல்லோர்கள் கூடிவாழ்த்தஇருமனம்சேரும்திருமணம்சிறப்புடன்நடந்தது .புதுமணதம்பதியர்களுக்குநல்வாழ்த்துக்கள்.

Ibrahim said...
This comment has been removed by a blog administrator.
Ibrahim said...
This comment has been removed by a blog administrator.
Ibrahim said...

மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் விருதுகள் வழங்கும் விழாவை நடத்திய அதிரை நியூஸ் நிர்வாகிகளே இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்

Aboobakkar, Can. said...

//மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் விருதுகள் வழங்கும் விழாவை நடத்திய அதிரை நியூஸ் நிர்வாகிகளே இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்//

I don't know what's going on in between the egoism of Bro. Ibrahim and Adirai News media..???

Ibrahim said...

நான் முதலில் அதிரை நியூஸ் தளத்தில் இதுதொடர்பாக கருத்து சொன்னேன் ஆனால் அவர்கள் எனது கருத்துக்களை நீக்கி தங்களை ஒரு புகழ் விரும்பிகளாக காட்டிகொள்கின்றனர் நீங்கள் அவர்களிடம் மகரிப் தொழுகைக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை என கேட்டு பாருங்கள் அப்புறம் தெரியும் அவர்களின் மறுமுகம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு