அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே
எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே
கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே
கோடான கோடி உயிர் வாழ்கிறதே
சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்
சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு
உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ
உருவான இடம் எந்த நீர்நிலையாம்
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே
கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?
அதிரை மெய்சா
16 Responses So Far:
அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே
-------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆரம்பமே உற்சாக அலை இதயகரையை நோக்கி அடிக்கிறது!
எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே
----------------------------------------------------------------------------------------
ஆழம்! அதிகம்!. நீளம் அதிகம்!. நீலமும் அதிகம்!மனதினுள் நீந்திபார்க்கும் வார்தைகள்!இருந்தாலும் ஆழம் சென்றாலும் அறியமுடியா ஆழம் மனது!அது நமது என்றாலும் நமக்கே தெரியாத புதிர் கணக்கு!
கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே
கோடான கோடி உயிர் வாழ்கிறதே
----------------------------------------------------------------------------
படைத்து அதை கடலினுள் அடைத்தவனின் மகிமை! மறுமை நினைவுப்படுத்தும் சான்று! இங்கே உலகமெனும் சிறு கடல் நீந்தி சென்றால் சென்றிடலாம்!பெரும் மகிழ்சி கடலாய் மறு வாழ்கை!
சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு
----------------------------------------------------------------------
நீரின் மேல் எழுத்து அழிந்துவிடும்! இது நீரின் மேல் போட்ட சித்திரம்! சீக்கிரம் அழியாது!பவித்திரம் ,சமுத்திரம் என்று வார்தை "திறம் பளிச்சிடுகிறது!வாழ்துக்கள்.உங்கள் நண்பர் கவியரசு சபீர்காக்காவின் சாயல் தெரிகிறது!இந்த சாயல் அவசியம்தான்.அழியாமல் பார்த்து செய்யுங்கள்! உங்கள் செய்யுள்"கள்!
உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ
உருவான இடம் எந்த நீர்நிலையாம்
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே
கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?
------------------------------------------------------------------------------
நம் மரித்துபோபோனபின் உடல் அரித்து போவதுபோல் இதன் உடலும் உப்பறித்து போகுமோ இகமுடிவில்?கற்பனைக்கு இனிய தீனி! கவிதை கடலாய் உப்பு சீனி!சுவையான கவிபடைதீர் விருந்தாக இருந்தது உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்
---------------------------------------------------------------------
வானவரை ஏவித்தான் அல்லாஹ் சுனாமி படைத்தான்! மீனவர் வாழவே அல்லாஹ் கடலையும் படைத்தான்!அதன் மூலம் மற்ற மனிதருக்கும் உணவினை படைத்தான்!அல்லாஹ் வை நம்பும் படை"தான் கரையேறும் என்னும் அறிவையும் படைத்தான்!.எல்லாம் ஒரு படிப்பினையே!
வானவரை ஏவித்தான் அல்லாஹ் சுனாமி படைத்தான்........
-----------------------------------------------------------------------------
இதில் சில இடத்தில் "த்"விடப்பட்டிருந்ததால் மறுபடியும் பதிந்தேன்!
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. க்ரவுன்
என் கவிதைக்கு வரிக்குவரி விளக்கமளித்து மேலும் இக்கவிதையை உங்கள் வர்ணணையால் அலங்கரித்துள்ளீர்கள்.
மிகச்சிறப்பு. மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.
மனோன்மணியம் கடலை " முந்நீர் மடு " என்று குறிப்பிடுகிறது.
'முந்நீர் மடுவில் காலத்தச்சன் கட்டிடும் மலைக்கு ' என்பது அந்த வரிகள். அதாவது கற்கள் மண்துகள்கள் யாவும் மழையால் ஏற்படும் வாய்க்கால்களின் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டு கடலுக்குள் ஒரு மலை உருவாக்குகிறது அந்த மலையை காலம் என்கிற தச்சன் கட்டுகிறான் என்று பொருள்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் வாணியம்பாடிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் வாராவாரம் ஒரு சிறு தலைப்பைக் கொடுத்து மாணவர்களின் கவிதைச் சிந்தனையை கேட்பார்.
அந்த ஒரு குறிப்பிட்ட வாரத்தில் தரப்பட்ட தலைப்பு
கடலில் அலை ஏற்படுவது ஏன்?
அதற்கு ஒரு மாணவர் எழுதியது இவ்வரிகள் :
======================================
முத்துக்களை மீனினத்தை
முளைத்த பச்சைப் பாசிகளை
அத்து மீறி குடலில் அடைத்தனால்
அஜீரணம் உண்டாகி
அலை வாந்தி எடுக்கிறாய்
=========================
கடலைப் பற்றி ஆழமான கவிதையைப் படைத்த தம்பி மெய்ஷா அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்பிற்குரிய மெய்சா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆழ்ந்து யோசித்திருக்கிறாய்.
அடுத்தது ஆகாயமா?
எ.பி.வ.:
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே
சூப்பர்
வாழ்த்துகள்!
//கற்பனைக்கு இனிய தீனி!
கவிதை கடலாய் உப்பு சீனி! //
க்ரவ்ன்,
ஸ்மாஷிங்!
//முத்துக்களை மீனினத்தை
முளைத்த பச்சைப் பாசிகளை
அத்து மீறி குடலில் அடைத்தனால்
அஜீரணம் உண்டாகி
அலை வாந்தி எடுக்கிறாய்//
லவ்லி!
ஆரம்பத்தில் 6 வரிகளும் அடுத்தடுத்து 4 வரிகளும் போட்ட கவிதை கடல் காற்று வாங்குவது போல் சுகமாக இருந்தது
இப்றாகிம் அன்சாரி காக்கா உங்கள் ரசிப்புத்தன்மை எப்போதுமே அலாதிதான்.
நீங்கள் குறிப்பிட்டு எழுதிய மாணவன் எழுதிய க விதையும் அருமை.
அன்பின் நண்பன் சபீர் நீ ரசித்த வரிகள் நான் எழுதும்போது ஆழ்ந்து யோசிக்கவில்லை அதுவாக எதிகைமோனையில் வந்து அமைந்து விட்டது. சத்தியமாதான்டா சொல்றேன்.
அன்பின் சகோ. சமீத் ஆழ்கடலைப்போல் ஆழமாக கவிதையை நன்றாக உள் வாங்கி வாசித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.
கடல்பற்றியஉங்கள் கவிதைஅளவாகஉப்புபோட்டஉப்புமாவை போல் சுவைக்கிறது!
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பாரூக் காக்கா.
உப்பு உவர்ப்புத் தன்மை உடையதாக இருந்தாலும் அதன் அளவை குறைத்தால் சமையல் ருசிப்பதில்லை. அதாவது உப்பில்லா பண்டம் குப்பையிலே.
Post a Comment