Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போலிகள் ஜாக்கிரதை .!? 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2015 | ,

ஒருகாலத்தில் வெளுத்ததெல்லாம் பாலாகவும் போலிஎன்றால் என்னவென்று அதன் பொருள் கூட சரியாகத் தெரியாமாலும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அளவுக்கு உணவு, உடை, மனம், எண்ணம், பேச்சு, நட்பு, உறவு,என அனைத்தும் போலி இல்லாமல் எல்லாமே சுத்தமாக இருந்தது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் வெகுளித்தனமாக பிறரை ஏமாற்றத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.


ஆனால் இன்றைய நிலையோ எதையும் நம்பமுடியாத காலமாக மாறிவிட்டது. காரணம் போலி என்பது இப்படித்தான் இருக்கும் இதுதான் போலி என்று இனம்கண்டுபிடிக்கமுடியாமல் எல்லாவற்றிலும் கலந்து யூகிக்க முடியாத அளவுக்கு நம்மை சூழ்ந்து பலதரப்பாக அசலைப் போல் வேடமிட்டு வலம் வந்து கொண்டிருக்கிறது.

போலிகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டுபோக பொதுமக்களும் ஒரு முக்கிய காரணமாக உள்ளனர். விஞ்ஞானமும் நவீனங்களும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு போகவே மக்களும் தனது தேவைகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.. அதாவது தேவைகளை மிஞ்சி மனிதன் தேட ஆரம்பித்து விட்டதால் தான் போலிகள் தாராளமாக புழங்கத் தொடங்கி விட்டன.

பழங்காலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் ஒரு ஆடையானாலும் அலங்காரப் பொருளானாலும் வீட்டு உபயோகப் பொருளானாலும் பயணிக்கும் வாகனமானாலும் நீண்ட நாள் வரை பாவித்து இன்றுவரை சிலபேர் நினைவுச் சின்னமாக கூட வைத்து அந்தப் பொருட்களை பாதுகாத்து வருகிறார்கள். அன்றைய காலத்தில் அனைத்தும் தரத்துடன் இருந்தது. பொருளில் மட்டுமல்லாது போலித்தனம் இல்லாத உழைப்பும் சேர்ந்து இருந்தது.

ஆனால் இன்றைய நிலையோ போலிகள் கணக்கில்லாமல் புழங்க ஆரம்பித்துவிட்டன. போலிகளை விற்பனை செய்பவர்களும்கூட போலித்தனமாக பகட்டுப் பேச்சும் உத்திரவாதமும் அளித்து அசலானது என நம்பவைத்து போலிகளையே அதிகமாகப் புகழ்ந்து தான் திறமைசாலியென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு இதையெல்லாம் யோசிக்கவோ மேற்கொண்டு கவனிக்கவோ அவகாசமும் இல்லை. அப்படியே யோசித்தாலும் அதை பெரிதுபடுத்துவதில்லை. இதுவே போலிகளை வளர்க்க சாதகமாகவும் காரணமாகவும் இருக்கிறது.

எல்லாவற்றையும் ஆக்கிரமித்த போலிகள் இயற்கைத் தாவரத்தையும் விட்டுவைக்கவில்லை. போலிக் காய்கறிகளும் தயாரிக்கத் தொடங்கி புழக்கத்தில் வந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அன்றாடம் உணவாகப் பயன்படுத்தும் அரிசிகூட போலியாகத் தயாரிக்கப்படுவதே உச்சகட்ட அதிர்ச்சிதரும் வேதனையாக உள்ளது.

அதுமட்டுமல்ல அனைத்திலும் போலிகள் புகுந்துவிட்ட இந்தக்காலத்தில் உண்மையென நினைத்த உறவையும்,நட்பையும் கூட விட்டுவைக்கவில்லை. அதுவும் போலித்தனமானதாகவும் சுயநலமிக்கதாகவும் தேவைக்கு பயன்படுத்தும் உறவுகளாகவும் நட்புக்களாகவும் பாசம் காட்டுவதெல்லாம் பாசாங்கமாகவும் அன்பு செலுத்துவதெல்லாம் அவரவர் தேவைக்காகவும் என அனைத்தும் அதிகபட்சம் போலியாகவே உருவெடுத்துக் கொண்டிருப்பது இன்னும் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.

எத்தனையோ விசயங்களுக்காக குரல்கொடுக்கும் பொதுஜனங்கள் இந்தப் போலிகளை ஒழிக்கவோ எதிர்க்கவோ யாரும் குரல் கொடுத்தமாதிரி தெரியவில்லை. குரல் கொடுக்காத காரணம்தான் ஏனோ ??? அப்படியானால் அனைத்திலும் போலித்தனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்டார்களோ என்னவோ எல்லாம் புரியாத புதிராகத்தான் உள்ளது.!

இருப்பினும் நாம் போலிகளை இனம்கண்டு விழிப்புணர்வுடன் விலகி இருப்பதுடன் நாமும் நம் நடைமுறை வாழ்க்கையையும் செயல்பாடுகளையும், வியாபாரத்திலும், பணிசெய்வதிலும்,  பிறரிடத்தில் அன்பு செலுத்துவதிலும், ஆதரிப்பதிலும் போலித்தனம் இல்லாது அசலாக இருந்து சமுதாய மக்கள் போற்றும் நல்ல மனிதர்களாக வாழ வகை செய்து கொள்வோமாக !

அதிரை மெய்சா

7 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

தஞ்சாவூர் திருவையாறுப் பக்கம் போலி என்று சிற்றுண்டி அயிட்டம் இருக்கிறது. சுவையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட குடும்பங்கள் அதை தயார் செய்து விற்பார்கள். விடிகாலையில் சுறுசுறுப்பாக இயங்கும் தஞ்சாவூர் காமராஜ் காய்கறி மார்கெட்டில் அந்தக் குடும்பத்தினர் வந்து கடைக்குக் கடை விற்பார்கள்.

இப்போது அதில் கூட போலி வந்துவிட்டதாம்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக போலியாக மருந்துகளை விற்றார்கள் என்று ஒரு குறிப்பிட்ட நிருவனந்த்தின் மீது வழக்குப் பதிவு - கைது எல்லாம் நடந்தன. இப்போது இது பற்றி பேச்சு மூச்சையே காணோம்.

போலிகளை ஒரிஜினல் போல உருவாக்குவதற்காகவே பம்பாயில் உல்லாஸ் நகர் என்ற பகுதியில் தொழிற்சாலைகள் இயங்குவதாக கூறுவார்கள். மேட் இன் ஜப்பான் என்று முத்திரை குத்தி வரும் பல பொருள்கள் உண்மையில் மேட் இன் உல்லாஸ் நகர் தான்.

விருதுநகரில் பச்சை பயறு, உளுந்து போல கல்லால் வடிவமைத்து ஒரிஜி னளுடன் கலக்கும் தொழிற்சாலை இருப்பதாக கண்டுபிடித்தார்கள்.

போலிகள் இப்போது பரவலாகிவிட்டது.

இதை கவனப்படுத்திய தம்பி மெய்ஷாவுக்கு பாராட்டுக்கள்.

sabeer.abushahruk said...

போலிகளைப் பற்றிய ஒரிஜினல் அலர்ட் தந்த மெய்சாவுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

கீப் இட் அப் தோழா!

ZAKIR HUSSAIN said...

போலி அசலை விட அழகாய் இருக்கிறது. -- வைரமுத்து.

sheikdawoodmohamedfarook said...

இதுவரைஅரிசிபிளாஸ்டிக்பையில்மூட்டைகட்டிவந்தது. இனிமே பிளாஸ்டிக்கே அரிசியாவரும். சீனாவில் பிளாஸ்டிக் அரிசி செய்கிறார்கள்

அதிரை.மெய்சா said...

நாமும் போலியாக இல்லாமல் போலிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிந்த இப்ராஹிம் அன்சாரி காக்கா ,சேக்தாவூது முகம்மது பாரூக் காக்கா, நண்பர்கள் சபீர் ,ஜாகிர் அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இப்படி போலிகளின் போஸாக்கான வளர்சியை "உண்மை"யான அக்கறையுடன் அசல் ஆக்கம் தந்ததுக்கு முதலில் நன்றி!இப்படி சமுதாயத்தில் படந்துவிட்ட போலியெனும் இளம்பிள்ளை வாதம் முற்றிலும் நீக்க போலியே இல்லாத போலியோ சொட்டு மருந்து காண்பது அவசியம்!.இல்லையென்றால் இந்த இளம்பிள்ளை வாதம் சமுதாயத்தையும் செம்மையாக நட போடமுடியாத படி முடக்கிவிடும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.