Sunday, January 12, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஸ்லிம்லீக் அகாலமரணம்!. அறிவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது!!. (இன்னாலில்லாஹி.....) 26

அதிரைநிருபர் | March 09, 2011 | , ,


//மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!. இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!.
தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள்.

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள்.

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.

-- அதிரை முஜீப்

26 Responses So Far:

Meerashah Rafia said...

ஹ்ம்ம். அதான் புகைப்படமே சொல்லுதே 'நாங்கள் மஹா இழிச்சவாயிகள்' என்று. இந்த பொரம்போக்குகளின்(இஷ்டத்துக்கு கொடுத்து, இஷ்டத்துக்கு எடுத்துக்கொண்டால் அது பொறம்போக்கு நிலம்தான!?!) போக்குதான் நம் சமுதாயத்தை சென்னை சேரிகளின் ஓட்டுகளைபோல் தேர்தலின்போது மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளவைதது.

MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.//

மிகச் சரியான உணர்வுக் குமுறல் !

காத்திருக்கவும்... 30 வாங்கிய பாமாக நட்டாற்றில் விடுவார்கள் துரோகிகள் தூரோகிளாலே வஞ்சிக்கவும் பழிவாங்கவும் படுவார்கள் ! நாட்கள் வெகுதூரத்தில் இல்லை !

முஸ்மீம் லீக்கிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்னு ! ஆங்காங்கா இறங்கள் கூட்டம் போட வேண்டியதுதான் பாக்கியிருக்கு, ஏன்னா தேர்தல் பிரச்சாரம்னு கூப்பிட்டா வராவா போறாய்ங்க !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கொடை வள்ளல் பழமை வாய்ந்த கட்சியின் தலைவர் பெருந்தகை காதிர் முகைதீன் அவர்கள் பாக்கி கிடைத்த 2 ஐயும் வாரி வழங்கி விட்டு உங்கள் கூட்டணி தலைவருக்கு மேலும் ஒரு பாரட்டு விழா வழங்கலாமே.இது தான் நீங்கள் பெற்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் பெற்ற சீட்டா? 25 ஐ பெற வேண்டிய நீங்கள் 2 ஐ பெற்றுவிட்டு நிச்சயம் திருப்தியாகத்தான் இருப்பீர்கள்.

sabeer.abushahruk said...

சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் தற்போதைய இயக்கங்களின் பெயர்களே பேசப்பட்டதே தவிர முஸ்லிம்லீக் அல்ல.

தேர்தல் நேரங்களில் மட்டுமே வெளிப்படும் இந்த கட்சி இருந்ததைவிட இறந்திருந்ததே அதிகம். இந்த இழிநிலைக்கு முஸ்லிம்லீக் தள்ளப்பட்டதற்கு முஜீப் சொல்வதுபோல் தலைமையே காரணம்.

இவனாயில்லாமலும் இவளாயில்லாமலும் என்ன ஒரு கேவலம் சே!

அபு ஆதில் said...

“கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்து முஸ்லீம்களின் மனதில் உள்ள உண்மையை செல்லிவிட்டீர்கள் சகோதரர் முஜீப். உண்மை என்று என்று தெரிந்தும் வெளியில் சொல்லாத மனசாட்சியுள்ள முஸ்லீம் இனியாவது சிந்திக்க வேண்டும்.

வாங்கிகளில் அடகு வைத்து பணம் கிடைப்பது போல் தான் இதுவும் என்று சொன்னால் தகும்.பணம் வாங்குகிறார்களே இல்லையோ இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கத்தின் இதயத்தில் மட்டும் இடம் கிடைக்கிறது என்ற திருப்தி இவர்களுக்கு காலம் காலமாக.

இவர்கள் இரண்டு சீட்டுக்காக மானத்தை அடகு வைத்துள்ளார்கள், ஒரு சிலரோ கொள்கை வேறுபாடு மட்டும் உள்ள சக முஸ்லீமை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தை அடகு வைக்க முயல்கிறார்கள்.

இன்று வந்த மமகவால் 3 தொகுதிகள் வாங்க முடிந்தது, 50 வருடத்துக்கு மேல் உள்ள இவர்களால் இரண்டு தொகுதிகளே வாங்க முடிந்தது என்றால், இது வேதனையே.

இனியாவது ரோசத்தை காட்டுங்களேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மர்ஹூம் அப்துஸ்ஸமது சாஹிப், மர்ஹூம் அப்துல்லத்தீப் சாஹிப் இவர்கள் இருவரின் நினைவாக இந்த இரண்டு சீட்டுக்கள்.

தலைவர் காதர் மொய்தீன் இறந்த பிறகு 3 வது சீட்டு இவர் நினைவாக தந்தாலும் தருவாங்க நம்மை இதயத்தில் வைத்துள்ளவர்கள்.

முஸ்லீம்களை அவமானப்படுத்தியுள்ள 2சீ ஊழல்.

அதிரைநிருபர் said...

கேவலத்தின் முகவரி மு.லீக்

அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம்; தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது.

2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்.

நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8

முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம்.

தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தான் பிடுங்குவார்களே தவிர வேறு எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பது யாருக்கும் தெரியததல்ல. ஒத்துவராத கட்சிகளையும் இயக்கங்களையும் ஒதுக்குவோம்.

கட்சிகளே, இயக்கங்களே! தெளிவான முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது, மனமிருக்கிறதா உங்களிடம்?

Adirai Ameen

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அம்மணம இருந்த காதர்முகைதீனுக்கு கோமலத்துண்டு கிடைத்தது அதையும் தானம் கொடுத்துட்டார்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணெல்லாம் குடையுதேன்னு கொஞ்சம் கண்பொத்தி அப்படியே இருந்த நாற்காலியிலே தலை சாய்த்து இருந்தேனா அப்போது ஒரு கனவு(ங்க).. முஸ்லீம் லீக் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலேயும் வெற்றி அத்தனை எடுபுடிகளும் காதர்முகைதீனை தேடுறாங்க ! ஆனா எத்தனை இடம்னு முடிவு தெரியாமலே முழிச்சுட்டேன்... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்

ZAKIR HUSSAIN said...

முஸ்லீம் லீக்....அப்டீன்னா என்ன?

காரமா? இனிப்பா?

Mohamed Rafeeq said...

//நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ,//

அதிரை அமின் அவர்களே : இங்குதான் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும் , நேற்று பிறந்த கொ. மு . க விற்கு கொடுக்கப்படும் தொகுதி ஏன் ம ம க விற்கோ அல்லது மற்ற முஸ்லிம் கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த தேர்தலை பொருத்தவரை ஹிந்து , முஸ்லிம் , கிருத்துவன் ,தலித் என்று எந்த திராவிட கட்சியும் பார்க்கவில்லை எவருக்கு கடந்த தேர்தலில் அதிக ஓட்டு கிடைத்ததோ அவர்களுக்குதான் அதிக தொகுதிகள் ஒதுக்க பட்டுள்ளது,

நீங்கள் சொல்லுவதை போல கடந்த தேர்தலில் ம ம க தனித்து போட்டியிட்டது எவ்வளவு ஓட்டு கிடைத்தது என்று சிந்திதிர்களா ? இறைவன் பெயரால் இந்த சமுதயதுக்காக உழைபதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டவர்களுக்கு நாம் கொடுத்த ஓட்டியின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கேவலமான கள் இறக்கும் தொழிலை தடை செய்யகூடாது என்ற கோரிக்கையுடன் வந்த கொ மு க விற்கு அம்மக்கள் அளித்த ஓட்டு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? அந்த ஓட்டு எண்ணிக்கையின் அடிபடையில் கிடைத்த வெற்றிதான் இன்றைக்கு எழு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

எவன் வெற்றி பெற்றாலும் சரி இஸ்லாமிய கட்சியை சார்ந்த ஒரு முஸ்லிம் வெற்றி பெறகூடாது என்று விசம பிரச்சாரம் செய்து வரும் இயக்கத்தினரை இந்த சமுதாயம் அடையலாம் காண வேண்டும்

எந்த கட்சியை சார்ந்த முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் அவரை வெற்றி பெற செய வேண்டும் என்று ஒவொரு முஸ்லிம் இந்த தேர்தலில் உறுதிமொழி எடுக்கவேண்டும்

அன்புச் சகோதரர் முஜிபு அவர்களே
மீண்டும் ஒரு சிந்தனை துண்ட கூடிய அரசியல் பதிவுக்கு நன்றி

//எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள்.குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!//.

இன்ஷா அல்லாஹ் இயக்க வேற்றுமையை மறந்து மேலே சொல்லப்பட்ட காரணத்தால் இஸ்லாமிய கட்சிகளை வளர்த்தெடுப்போம்

பிகு
//அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!//
அரசியலில் இடுபடமட்டோம் என்று சொல்லுகிற இவர்கள் வாயை மூடிக்கிட்டு இருக்கட்டும்

அபூ சுஹைமா said...

மறைந்த முஸ்லிம் லீகின் தலைவர் அப்துஸ் ஸமது அவர்கள் தலைவராக இருந்த போது, திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு திமுக கூட்டணியில் இருந்து விலகினார். திமுக கூட்டணியை விட்டு வெளியேற மனமின்றி மறைந்த அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் புதிய கட்சி உருவானது. நாவலர் யூசுப் சாஹிப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் அப்துஸ் ஸமது அவர்களையே ஆதரிக்க மக்கள் ஆதரித்ததென்னவோ லத்தீஃப் சாஹிபை.

லீக் திமுகவில் இருந்து வெளியேறி காங்கிரசுடன் களம் கண்டபோது நான் சிறுவன். அப்போது நானும் கிறுக்கிய வாசகம் கீழே....

"கோபாலபுரத்தை கிப்லாவாக்கி கருணாநிதியைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட லத்தீபுக்காக உங்கள் வாக்கு?"

பதிலுக்கு அவர்கள்....

"கபிஸ்தலத்தை ........."

கைர்....

முஸ்லிம் லீக் திமுகவுடன் இணைந்திருந்த காலம் வரை நமதூரில் மணிச்சுடர் நாளிதழ் சுமார் 200 வரை விற்பனை ஆகும். திமுகவில் இருந்து பிரிந்த பின்னர் அந்த எண்ணிக்கை 60 என்றானது. இந்தக் கணக்கு சரியா என்பதை அஜ்மீர் ஸ்டோரில் கேட்டுக் கொள்ளலாம்.

திமுகவுடன் இணைந்திருந்தால்தான் முஸ்லிம் லீகையே முஸ்லிம்கள் ஆதரித்தனர். முஸ்லிம்களின் அரசியல் அறிவை உணர்ந்து கொண்ட அப்துஸ் ஸமது அவர்கள், அப்துல் லத்தீஃப் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு கட்சிகளையும் ஒன்றாக இணைத்தார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தனர். இந்திய அரசியல் வரலாற்றில் மிக அபூர்வமான நிகழ்வு அது.

ஆனால் முஸ்லிம் லீகை ஆதரிக்க முஸ்லிம்கள் குறிப்பாக இளைஞர்கள் தயாராக இல்லை. அன்றைய இளைஞர்கள் இன்று நாற்பதைத் தொட்டிருப்பர்.

-----

முஸ்லிம்கள் எந்தவொரு விஷயத்தையும் உணர்ச்சி பூர்வமாகவே அணுகுவார்கள் என்பதையே சகோ. முஜீபின் கட்டுரையும் அக்கட்டுரைக்கு வந்துகள் பின்னூட்டங்களும் தெளிவுபடுத்துகின்றன.

மூன்றில் ஒன்று பறிபோனது இப்போது மட்டும்தானா? இதற்கு முன்னர் நடக்கவில்லையா?

மூன்றில் ஒன்று பறிபோவதற்கு முன், அந்தக் கட்டுரையை எழுதிய சகோதரரும் அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் அளித்துள்ளவர்களும் முஸ்லிம் லீகிற்கும் அதன் தலைவர் காதிர் முகைதீனுக்கும் எந்த அளவில் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்?

சமுதாயத்தின் பிரதிநிதிக் கட்சியாக முஸ்லிம் லீகை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா? ஏற்றுக் கொள்கின்றனர் எனில், பொதுத் தளங்களில் சமுதாயப் பிரதிக்கட்சியான முஸ்லிம் லீகையும் அதன் தலைவர்களையும் ஏளனப்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மை கிடைக்கும்? என்னவெல்லாம் தீமை விளையும்?

இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பொதுத் தளங்களில் நமக்கிடையேயான விமர்சனங்களை வைத்துக்கொள்ளக் கூடாது.

// இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர்.//

முஸ்லிம் லீக் என்ற கட்சியைச் சாராத ஒருவர் இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

திமுகவில் இல்லாத நான் அல்லது குறைந்தபட்சம் திமுகவுக்கு ஆதரவுகூட தெரிவிக்காத நான், இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டியிட முன்வந்துள்ள கருணாநிதியை நோக்கி, திமுக என்ற பெயரை உச்சரிக்க கருணாநிதிக்கு தகுதி இல்லை என்று கூறுவது அறிவார்ந்த சொல்லாக இருக்க முடியாது. இது முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கும் பொருந்தும்.

இவ்வளவு குறைவான தொகுதிகளைப் பெறும் நிலையில் முஸ்லிம் லீக் ஆனதற்கு நாமும் ஒருவகையில் காரணமாகவே இருந்துள்ளோம் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

////இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பொதுத் தளங்களில் நமக்கிடையேயான விமர்சனங்களை வைத்துக்கொள்ளக் கூடாது.

// இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர்.//

முஸ்லிம் லீக் என்ற கட்சியைச் சாராத ஒருவர் இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.
/////

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அப்துல் கரீம்,

நல்லெண்ணத்தில் எழுதியுள்ள கருத்துவரவேற்க தக்கதே, இருந்தாலும் வருடக்கணக்கில் ஒன்றிணைந்திருந்தவர்களுக்கு முதலில் 3சீட்டு கொடுத்து, அதை 2சீட்டாக ஆக்கியது அவமானம் இல்லையா? இந்த அவமானத்துடன் முஸ்லீம்கள் 234 தொகுதிகளுக்கும் உழைத்து இவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டுமா? நாம் அந்த அளவுக்கு சூடு சுரனையற்றவர்களாகவா உள்ளோம் நாம்? இது போன்றவர்கள் அரசியலைவிட்டு போனால் தான் இந்திய இளைய இஸ்லாமிய தலைமுறை அரசியலில் வலுவாக காலுண்ட முடியும்.

சகோதரர் ரபீக் அவர்கள் சொல்லியது போல், நம் பலத்தை இதுவரை காட்ட ஒரு வாய்ப்பை எந்த முஸ்லீம் கட்சிகளும் இதுவரை உருவாக்கவில்லையே. இந்த உணர்வின் அழுத்தமான ஆதங்கமே இந்த கட்டுரையும், பின்னூட்டங்களும். பேராசிரியர் காதர்மொய்தீனாகட்டும், பேராசிரியர் ஜவாஹிருல்லாவாகட்டும், ஒன்றினைய மாட்டார்களா... என்ற ஏக்கத்தில் வந்த உணர்வுகளே.

இது போன்ற மனகுமுறல்களை பூட்டி பூட்டி வைத்திருந்ததால் நீங்கள் சொல்லுவது போல் குறைந்த தொகுதிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதற்கு நாமும் காரணமாகிவிட்டோம்.

எப்போது தமிழக அரசியலில் முஸ்லீம்களின் பலத்தை காட்ட வாய்ப்பை ஏற்படுத்தடுப்போகிறோம்? யாரிடையாவது பதில் இருக்கா?

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. தாஜுத்தீன்

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

சகோதரர்களின் உணர்வை மதிக்கிறேன். எனக்கும் அந்த உணர்வு இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளை உணர்வை மட்டும் கொண்டு தீர்த்துவிட முடியாது. என் வீட்டில் என் சகோதர சகோதரிகளுக்கிடையே நடைபெறும் சன்டையை நாலு பேர் அறியும் வண்ணம் எழுதினால் என் குடும்பத்தின் லட்சணம் நாடறியும். பிறகு என் குடும்பத்தை எவரும் மதிக்க மாட்டார்கள். இந்தக் கோணத்தில் நான் ஏன் சிந்திப்பதில்லை?

முஸ்லிம் லீகின் செயலை நானும் நியாயப் படுத்தவில்லை. ஆனால் யதார்த்தம் என்ன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம் லீகிற்கு நம்முடைய சமுதாயத்தில் எத்தனை சதவீத ஆதரவு இருக்கிறது?

தலைவர்கள் சரியில்லை. அதனால்தான் முஸ்லிம் லீகிற்கு ஆதரவு இல்லை என்று கூற முற்படுவீர்களாயின், முஸ்லிம் லீக் தன்னுடைய ஆதரவு தளத்தை எப்பொழுது முதல் இழக்கத் தொடங்கியது என்பது குறித்து அறிய வேண்டும். அதற்குத்தான் அப்துஸ் ஸமது மற்றும் அப்துல் லத்தீஃப் ஆகியோர் பிரிந்ததை நான் சுட்டியிருந்தேன்.

ஆக, முஸ்லிம் லீகிற்கு ஆதரவளிப்பதை இளைஞர்கள் நிறுத்தினர். அந்த இளைஞர்களில் பலர் இன்று தங்களுடைய 40களில் உள்ளனர். 40களுக்குக் கீழே உள்ளவர்களின் ஆதர்ச இயக்கங்கள் தமுமுக, ததஜ, மமக, எஸ்டிபிஐ போன்றவையே. உங்களுக்கும் எனக்கும் தெரிந்த இந்த உண்மை உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் ஆளுவோர்க்கும் தெரியும்.

முஸ்லிம்களைப் பற்றிய விமர்சனங்கள்:-

ஒருவர் தவறு செய்கிறார் எனில், அந்தத் தவறை அவரிடம் சுட்டிக் காட்ட வேண்டும். தலைவர் தவறு செய்கிறார் எனில் தலைவர் தவறு செய்கிறார் என்தைப் பொதுமக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இது நம்முடைய கடமை. அதே வேளையில் நம்முடைய சுட்டிக்காட்டல் மற்றும் விமர்சனங்கள் மார்க்கம் அனுமதித்துள்ள வகையில்தான் அமைய வேண்டும். விமர்சனங்ளில் வரம்பு மீறல் கூடவே கூடாது.

சகோ. முஜீபின் தளத்தில் உள்ள படத்திற்கு காதிர் முகைதீன் பலமுறை விளக்கங்கள் கூறிய பின்னும் அதனைத் தொடர்ந்து இடம் பெறச் செய்வது எந்த அடிப்படையில் நியாயம் என்றும் எனக்குத் தெரியவில்லை. "சாமியாரைச் சந்தித்துவிட்டு இயலாமையின் காரணமாக கையை ஊன்றி எழும்போது, அதற்காகவென காத்திருந்தது போன்று தினமலர் எடுத்த ஃபோட்டோ அது. மற்றபடி அந்தச் சாமியாரிடம் நான் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவில்லை" என்று காதிர் முகைதீன் கூறிய விளக்கங்கள் பல குழுமங்களிலும் வெளியானது. சம்பந்தப்பட்டவர் இப்படி ஒரு விளக்கத்தை கூறிவிட்ட நிலையில் இப்பிரச்சனையில் இதற்கு மேல் கருத்து கூற அடியார்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறானா என எனக்குத் தெரியவில்லை. அவரது உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ்.

மனிதர்களின் தீமைகளுக்காக அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கே உரியது. அடியார்களுக்கு இல்லை.

தமிழ அரசியலில் முஸ்லிம்களின் பலத்தை எவ்வாறு காண்பிப்பது?

தற்போதைய நிலையில் முஸ்லிம் லீக் ஒரு அணியிலும் மமக ஒரு அணியிலும் இடம் பெற்றுவிட்டது. இனி எஞ்சியிருப்பது எஸ்டிபிஐ. தனித்துப் போட்டி என்று இக்கட்சி அறிவித்துள்ளது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இவர்கள் குறிப்பிட்ட சில தொகுதிகள் - 10 என்று கூட இல்லை - 5 தொகுதிகளை மட்டும் மிகக் கவனமாகப் பொறுக்கி எடுத்து, 5 தொகுதிகளிலும் தங்களுடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.

இவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறவே வேண்டாம். பெரிய கட்சிகளின் வெற்றி அல்லது தோல்வியில் பாதிப்பை ஏற்படுத்தினால் போதும். அடுத்த தேர்தலில் நிச்சயமாகப் பெரிய கட்சிகளில் ஒன்று இவர்களை அழைத்து இவர்கள் பாதிப்பை ஏற்படுத்திய தொகுதிகளில் பாதியையேனும் இக்கட்சிக்கு ஒதுக்கித் தருவார்கள்.

அதனை விடுத்து, தேர்தல் நடைபெறுவதற்கு 4,5 மாதங்களுக்கு முன்னரே, நாங்கள் இந்தக் கூட்டணியில் இருக்கிறோம் என்று அறிவிப்பதால் 2 அல்லது 3 தொகுதிகளே கிடைக்கும்.

மிக முக்கியமான டிஸ்கி: நான் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியிலுமோ இயக்கங்களிலுமோ உறுப்பினர் இல்லை. :-)

அதிரை முஜீப் said...

கருத்திட்ட அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி!. உங்களின் கருத்துக்கள்தான் என் அடுத்தத்த கட்டுரையை செம்மையாக்க வழிவகுக்கும்!.

அபூ சுஹைமா சொன்னது…

//இவ்வளவு குறைவான தொகுதிகளைப் பெறும் நிலையில் முஸ்லிம் லீக் ஆனதற்கு நாமும் ஒருவகையில் காரணமாகவே இருந்துள்ளோம் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். //

சில பல கேள்விகளை முன்வைத்த தங்களின் கருத்திலேயே, உங்களின் அணைத்து கேள்விகளுக்கும் முத்தாய்ப்பாய் நீங்களே பதிலும் தந்துவிட்டதால், என் பதிலுக்கு இங்குவேலை இல்லாமல் போய்விட்டது!.

அத்தோடு என் அன்புச்சகோதரர் தாஜுதீன் தந்திருக்கும் விளக்கமும் சந்தேகங்களை தீர்க்கும் என்று நம்புகின்றேன்.

அதிரை முஜீப் said...

முஸ்லிம்கள் தங்களின் பலத்தினை காட்ட இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. மமக,முஸ்லிம்லீக்,தேசியலீக்,எஸ்டிபிஐ,ததஜ, இதஜ மட்டும் ஒன்று கூடி தனியாக இந்த தேர்தலை சந்தித்தார்கலேயானால், குறைந்த பட்சம் பத்து தொகுதிகளில் வெற்றி நிச்சயம். மேலும் இருபது தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்.

ஆனால் நம் இந்த தலைவர்களை ஒன்றிணைக்க அந்த இயக்கங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரும் நம்மால் மட்டுமே அது சாத்தியம். நம் ஆதரவும், பண உதவியும் இவர்களுக்கு குறைந்தால்தான் இவர்கள் சரிப்படுவார்கள். முதலில் தலைவர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முன் நமக்குள்ளே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் முஜிபின் ஆதாங்கம் மிகவும் சரி. ஒருகாலத்தில் தி.மு.க(திருத்தமுடியாத (கருனானிதி)கழுதைக்கு நான் தான் அதிகம் பிரச்சாரம் செய்தவன்.எப்ப விபரம் தெரிய ஆரம்பித்ததோ அப்பவே அந்த பன்னாட நாய புரக்கனித்து என் வாழ்வில் முதன் முதலாய் கோயம்புத்தூர் செயலுக்கு பின் அ.தி.மு.க(அடித்தும் திருந்தாத கழுதை)க்கு ஓட்டு போட்டேன். அ.தி.மு.க மேல் பாசமல்ல கருனானிதியின் துரோகத்திற்கு நம்மாள் முடிந்த சிறு தண்டனை என்னை போல் எத்தனையோ பேர்!!! ஆனாலும் இந்த காதர் மொய்தீன் போன்றவர்கள் . தன்னுடை சொந்த சின்னமான ஏணியை விட்டுவிட்டு ஓட்டு பிச்சைக்காக உதய சூரியன் சின்னத்தில் ஒன்னு,ரெண்டு சீட்டுக்காக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அது இன்னும் தொடர்வது அவமானம். ஏத்திவிட்ட ஏணியை கருனானிதியும் உதைத்து தள்ளிவிட்டான். (ஏணி =படி)ஏன்னிப்படி செய்தாய் என்று கேட்க நாதி இல்லை. இதயத்தில் இடமாம் அது உன் அழுக்கு பிடித்த இதயத்தில் எதற்கு?? ராமா தாசு பாருங்கள் தன் இனத்திற்கு அதிகம் சீட்டு தரும் கட்சியுடன் தான் ஒன்னு சேருவான்.அது அரசியலில் சரியே!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த விளக்கத்திற்கு மேல் இன்னும் வேண்டுமா? சகோதரர்களே!



BISMILLAH IR RAHMAN IR RAHEEM.
ASSALAMU ALAIKUM DEAR IUML PARTY MEMBERS.
I PRAY THIS MAIL FINDS YOU ALL IN THE BEST OF HEALTH,
HAPPINESS,PROSPERITY AND HIGH ISLAMIC SPIRITS,INSHALLAH,
AAMEEN.
IT IS WITH UTMOST PAIN,ANGER AND AGITATION I WRITE THIS MAIL
YOU ALL ARE AWARE ABOUT THE RECENT POLITICAL
DEVELOPMENTS IN TAMILNADU.
AS PER THE DECISION MADE DURING THE GENERAL COUNCIL OF
IUML TAMILNADU HELD ON 24 / 02/ 2011 AT NAGORE THE PARTY
DECIDED TO ACCEPT NOT LESS THAN 3 SEATS FROM ALLAINCE
DMK PARTY AND TO CONTEST IN OUR INDEPENDANT SYMBOL.
AFTER THIS DURING THE TALKS WITH DMK LEADERS IUML
PARTY PRESIDENT PROF K.M.K AND GEN SEC MR.ABUBACKER
ACCEPTED 3 SEATS FROM DMK BUT AGRRED TO CONTEST IN THE
DMK SYMBOL,WHICH WAS AGAINST THE DECISION OF THE PARTY.
MOREOVER THE TALKS WITH CONGRESS DMK ALLAINCE AND THE
CONFUSION THEREAFTER,WE FIND TO OUR UTTER DISMAY AND
HUMILIATION THAT OUR LEADERSHIP HAS GIVEN AWAY 1 SEAT
FROM THE 3 SEATS ALLOTTED TO IT.
THIS UNILATERAL DECISION HAS COME AS A RUDE SHOCK AND
HAS ANGERED THE RANK AND FILE OF IUML PARTY CADRES OF
TAMILNADU.THE VEHEMENT FEELING AMONGST THE PARTY IS:
1.THE IUML LEADERSHIP OF TAMILNADU HAS LOST ALL RESPECT
AND TRUST OF THE PARTY CADRES.
2.THE IUML LEADERSHIP HAS ACTED UNILATERALLY NOT TAKING THE
COMMUNITY OR PARTY'S WELFARE IN CONCERN.
3.THE IUML LEADERSHIP HAS IS NO POLITICAL FORESIGHT OR COURAGE.
THE PARTY WANTS CHANGE IN LEADERSHIP.
THE PARTY WANTS TO CONTEST IN ITS OWN SYMBOL IN NOT LESS
THAN 3 SEATS.
INSHALLAH LET US ALL UNITE TO FIGHT FOR JUSTICE.
LET US UNITE TO REGAIN THE LOST GRACE AND ESTEEM OF OUR PARTY.
LET US RESTORE THE RIGHTS OF OUR UMMAH!
LET US STRIVE FOR OUR HONOURABLE EXISTANCE!
WILL KEEP YOU POSTED,
WASSALAM
YOUR SISTER IN ISLAM
FATHIMA MUZAFFER
STATE ORGANISOR
IUML WOMEN'S WING
TAMILNADU.

குறிப்பு: இந்தக் கடிதம் www.adiraipost.blogspot.com என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

அதிரை அமீன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2999&cat=32

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு) : கண்டேன் காளொளியை, மிகவும் வேதனைக்குரிய சூழல்தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிற்கு ! பெண்களிடம் இருக்கும் திறானி இவரிடம் இல்லாமல் இருந்தது வருந்தத் தக்கது !

crown said...

Assalamualikum.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203315

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்ன(டா)ப்பா கிரவ்ன்(னு) http://crownthasthageer.blogspot.com/2011/02/blog-post_08.html தினமலரை புறக்கனிப்போம்னு சொல்லிட்டு இப்புடி சுட்டியா சுட்டிக் காடுறே, இருப்பினும் நம் விரும்பும் செய்திகள் என்ற கண்ணோட்டம் தவிர்த்து அவர்களின் கண்ணோட்டம் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் ஒரு காட்சித் தொகுப்பே என்று என் விழி கண்ட காட்சிகள் சொலிறது(டா)ப்பா அது !

ஆக ! இவர்கள் (தினமலர்) நம்மைய நாடியா செய்கிறார்கள் ?? இல்லவேயில்லை விஷமிகளின் சூழ்ச்சிக்கு சுழி போட்டிருக்கிறார்கள்.

இதே காணொளியை நமது சகோதர அல்லது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தும் பத்திரிக்கையிலோ தொலைக் காட்ட்சிகளிலோ வந்திருந்தால் நியாயத்தின் நிஜம் உறைக்கும் நம் உறவுகளுக்கு !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

முன்றில் ஒன்றை கழித்தால் அது இரண்டு இல்லையாம். MP அப்துல் ரஹ்மான் புதிய கணக்குப்பாடம் சொல்லித்தருகிறார்,

இன்றை தியாகம் வருங்கால வளமாம்....

சென்று பாருங்கள்...

http://www.indianunionmuslimleague.in/content/politics-three-minus-one-not-equal-two-m-abdul-rahman-mp

Anonymous said...

இதிலென்ன விசேஷம் தி மு க எம் பி வேற எப்படி பேசுவாரு.

எம்ஜிஆர் இருக்கும் போது, தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழக முபாரக் அதான் கோபலபுரத்தார் ஒரு கணக்கு போடுவார். அதத்தான் எம் பி யும் போடுறார்.


--
ஷரஃபுத்தீன் நூஹு

அதிரை தொலைக்காட்சி said...

அதிரையில் நடைப்பெரும் நிகழ்ச்சிகளின் நேரலையை. இந்த நிகழ்ச்சியையும் பாருங்களேன், இவர்களை புரிந்துக்கொள்ளுங்கள்.

http://adiraitv.blogspot.com/2011/02/blog-post.html

Adirai Live

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.