Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விமான பயணமும் விபரீதமும் :: குறுந்தொடர்- 1 35

அதிரைநிருபர் பதிப்பகம் | December 26, 2012 | , , ,


சிறுவயதில் ஊருக்கு மேலே எப்போதாவது வானத்தில் பறக்கும் விமானத்தை ஆசை ஆசையாய் அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்படும் சின்ன புள்ளையளுவளா இருந்த நாம் இன்றைக்கு பல விமானங்களில் பயணம் செய்து அதில் பல பயண கட்டுரையையும் அதிரை நிருபரில் எழுதி நம் பயண அனுபவங்களை பகிர்ந்து வருகின்றோம். ஆனால், அந்த விமான பயணங்களின் பரவச சுதியில் பல விபரிதங்கள் இருப்பதை நாம் அறிந்ததில்லை. இங்கே அதைப்பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம்.


காற்றின் செயல்பாடு விமானம் பறக்க எப்படி உதவும் என்பதை முதலில் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் ஓடுதளத்தில் ஓடும்போதுகாற்று விமானத்தின் இறக்கையின் மீது மோத வேண்டும், அப்படி மோதும் போதுஇறக்கையின் மேல், கீழ் என இரண்டாக காற்று கிழித்துக் கொண்டு பிரியும், (நம்ம MSM-நெய்னா சொன்ன காற்றுபிரிவு அல்ல) இறக்கை வடிவமைப்பின் காரணமாக மேல் செல்லும் காற்று வேகமாக செல்லும். எனவே, அழுத்தம் குறையும் கீழ் செல்லும் காற்று மெதுவாக செல்லும் அதன் அழுத்தம் அதிகம் இருக்கும். இதுவே மேல் நோக்கி விமானத்தை கிளப்புகிறது.

மிதப்பு விசை (தூக்கி) எனப்படும். மேலும் இரண்டாக பிரியும் காற்று இறக்கையின் பின்புறம் மீண்டும் சேரவேண்டும் அப்போது தான் மேல் நோக்கி மிதக்கும் விசையின் மையம் (மையப்புள்ளி பற்றி லியாகத் அலிசார் படித்து தந்தது நினைவுக்கு வருதா?) இறக்கையில் இருக்கும், விமானம் நிலையாகபறக்க இது உதவும்.

விமானவிபத்துகள் எப்படி நடக்கின்றன.

விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறுகளால்

பறவைகளினால் ஏற்படும் விபத்து

விமான ஓட்டியின் கவனக்குறைவால் (விமானிகள் தூங்கி விடுவதும் ஒரு காரணம்)

வானிலை மாற்றம்மற்றும் மேகமூட்டம் ஆகியகாரணங்களால்.

மேலே சொல்லியவற்றில்முதல் மூன்று காரணங்களை கவனமான பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும், ஆனால் நான்காவது காரணத்தைத் த்விர்ப்பது மிககடினம். நான்காவது காரணத்தால் உண்டாகும் விபத்தினையும் குறைந்த பட்சமாக குறைக்கலாம். ஆனால் எரிபொருள் செலவு விமான நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரும் லாபத்தை எதிர் பார்த்தே விமான நிறுவனங்கள் பயணிகளின் உயிரை பணயம் வைக்கின்றன அது எப்படி என விபரமாய் மேலே நடக்கும் விசயங்களை கிழே பார்ப்போம்

நமது வளிமண்டலம் பல அடுக்குகளால் ஆனது முதல் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர், அடுத்து ட்ராபோ ஸ்பியர், மீசோ ஸ்பியர், அயனோ ஸ்பியர் என உச்ச அடுக்காக கொண்டது. (அடுக்குகளின் பெயர் வாயில் நுழைவதே கஷ்டமா இருக்கே விமானம் எப்படித்தான் அதுக்குள்ளே நுழைந்து போகுதோ) மேகமூட்டம், மழை, மேலும் பிற வானிலை மாற்றங்கள்துடிப்பாக நிகழும் அடுக்கு ஸ்ட்ராட்டோ ஸ்பியர்.இங்கு தான் காற்றின் அடர்த்தி, வேகம் எல்லாம் அதிகம். இந்த அடுக்கில் பறப்பது பழைய ராஜாமடம் ரோட்டில் பயணம் செய்வதற்கு சமம் காரணம்அத்தனை கரடு முரடான சாலையில் பயணம் செய்வது போன்றது .மேலும் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

இதற்கு அடுத்த அடுக்கான டிராபோஸ்பியரில் மேகம், மழை எல்லாம் இருக்காது ஆனால் அவ்வப்போது மின்னல் வெட்டும், பனி பொழிவும் இருக்கும், மேலும் குறைவான அடர்த்தியில் காற்று இருக்கும். இதனால் விமானத்தின் எடைத்தூக்கும் திறன் பாதிக்கப்படும். ஆனால்அடர்த்தி குறைவானக்காற்றில் பறந்தால் குறைவாக எரிப்பொருள் செலவாகும். காரணம் காற்றினால் உருவாகும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் . எதிர்க்காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் தள்ளு காற்றில் சைக்கிள் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போல் அதாவது தள்ளு காற்றில் விமானத்தை ஓட்டினால் எரிபொருள் பெருமளவு மிச்சப்படும்

மேலும் ஒரு வானியல் சிக்கலும் அங்கேஇருக்கு அதுதான் பலவிமான விபத்திற்கு பெரும்பாலும் வழிவகுப்பது.. அப்படிப் பறப்பது கரணம்தப்பினால் மரணம் போன்றது ஆனாலும் சிக்கனமாக பறக்க வேண்டும் என்று திட்டமிடும் விமான நிறுவனங்கள் ஆபத்தினை தெரிந்தே டிராபோஸ்பியர் அடுக்கில் விமானங்களை இயக்குகின்றன.

அப்படி என்னதான் அபாயம் அங்கு இருக்கு என்று பார்ப்போம்

டிராபோஸ்பியரில் 35,000அடி உயரத்திலேயே பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது. இங்கு என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பதினைப் பார்ப்போம். சிறியதும் பெரியதுமான ஏர்ப்பாக்கெட்ஸ் எனப்படும் திடீர் காற்று அழுத்தம் குறைவான வெற்றிடங்கள் அங்கு வானில் இருக்கும், இதன் வழியாகபறக்கும் போது நம்ம ஊர் ஆட்டோ குலுங்குவது போல விமானங்கள் குலுங்கும். அதற்கு காரணம் விமானம் காற்றை இழுத்து பின்பக்கம் தள்ளி விட்டு விமானம் முன்பக்கம் போவதால் காற்று இல்லாத வெற்றிடங்களில் காற்று இல்லாமல் விமானம் காற்றின் பிடிமானம்இழந்து திடீர் திடீர் என்று கிழே இறங்கும் அப்போது எஞ்சின் அணைந்து போகவும் வாய்ப்புண்டு, அப்படி ஆகாமல் இருக்க பைலட் மிக திறமையாக செயல்பட்டு எஞ்சின் வேகத்தினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்துவார்.

அப்படியே அணைந்தாலும் உடனே எஞ்சினை மறுமடியும் ஸ்டார்ட் செய்து (அப்படி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் அதுதான் அன்றைய தலைப்பு செய்தியாக்கி) விடுவார் . இதற்காகவே விமான எஞ்சின்கள் பல முறை சோதிக்கபட்டு. எவ்வளவு வேகமாக மீண்டும் எஞ்சின் இயக்கத்திற்கு வரும் என்றெல்லாம் தரச்சோதனைகள் செய்து நிருபித்தால் மட்டுமே அந்த மாடல் எஞ்சினுக்கு அனுமதியே கிடைக்கும்.

ஆழ் கடலில் நீரோட்டங்கள் காணப்படுவது போல வானிலும் காற்றுஒடைகள் காணப்படும் (காற்றின் ஓடையை பார்க்க முடிமா அந்த ஓடையில் குளிக்க முடிமாஎன்று ஊர்பெரளி எல்லாம் செய்ய கூடாது) மற்றும், திசைப் பண்புகள் (காற்றின் திசைகள் ) கொண்டவை, எனவே காற்று ஓடையின் திசையில் பறந்தால் வேகமாகவும், குறைவான எரிபொருளிலும் பறக்கலாம். இதற்காகவே டிராபோஸ்பியரில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ள பகுதியில் ஸ்ட்ராடோஸ்பியர்காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து செங்குத்தாக டிராபோஸ் வரைக்கும் சென்று நிற்கும் , அப்படிப்பட்ட காற்று அலையை விமானம் கடக்கும் போது அதன் வானியக்கவியல் பாதிக்கப்படும். அது எப்படி என்றால், விமானம் பயணிக்கும் திசைக்கு எதிரில் இருந்து வரும் காற்றானது இறக்கையின் மீதுஇரண்டாக பிரியும் அப்படி பிரியும் காற்றானது மீண்டும் இறக்கையின் பின்ப்பகுதியில் இணையவேண்டும் ,அப்போதுதான் காற்றில் விமானம் மிதக்கும்.என்பதனை ஏற்கனவே பார்த்தோம்.

இப்போதோ விமானத்தின் அடியில் இருந்து வேகமாக வரும் செங்குத்தான காற்றோட்டம் ஒரேயடியாக மேல்புறக் காற்றையும் வழித்துக்கொண்டு மேலே சென்று விடும் இதனால் விமானத்தின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி விமானம் கீழே இறங்கும். (அதாவது கிழேவிழும்)

விமானத்தின் எடை அதன் எஞ்சினின் மொத்த திறனுக்குசமமாக இருந்தால் சமாளிப்பது கடினம், எஞ்சின் திறன் அதிகமாக இருந்தால் எஞ்சினை வேகமாக இயக்கி அந்த காற்று அலையினைக்கடக்க வைக்க முடியும்.

விமான எடை, எஞ்சின் திறன் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு 400 டன் விமானம் எனில் அதில் 200 டன் வெற்றுவிமான எடை மற்றும் எரிப்பொருளின் எடை ஆகும், மீதி 200 டன் என்பது பே லோட் எனப்படும் , விமானத்தில் ஏற்றப்படும் சரக்கு/ பயணிகளின் (நம்ம எடை) எடை ஆகும்.

மேலே சொன்னது பேலோட் என்பதினை விளக்கவே ஆனால் நடைமுறையில் 50% பே லோட் எல்லாம் விமானங்கள் தூக்க முடியாது மொத்த எடைத்திறனில் மூன்றில் ஒரு பங்கு எடைத்திறனே இருக்கும். அதாவது 400டன் எஞ்சின் திறன் எனில்சுமார்130 டன் மட்டுமே பேலோட் திறன் ஆக இருக்கும். எனவே முழு எடைத்தூக்கும் திறனுக்கும் எடை சுமந்து விமானம் பறந்தால் மேற்சொன்னது போல்அவசரக்காலங்களில் நிலையாக பறக்க வைக்க முடியாமல் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனாலேயே பயணிகள் கொண்டு செல்லும் எடைக்கு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது. (இப்போ புரியுதா ஏன் ஒரு ஆளுக்கு 40 கிலோக்கு மேல் விடுவதில்லை என்று) இது மட்டும் அல்ல இன்னும் பல ஆபத்துகள் விமான பயணத்தில் உண்டுஅது இனிமேல் தான் பார்க்கனும்.
தொடரும்...
Sஹமீது

35 Responses So Far:

Unknown said...

Very Informative! The speciality of this article comes in a native way of delivering.

If I am not interfere with the context of future episode of this article, (Perhaps, the article will inform about this fact in its future episodes) I want to provide a small Statistics which our people may consider the Air travel is much safer than the road travel. So, we can have a little sigh while on Fly... :)

Your chances of being involved in an aircraft accident are about 1 in 11 million. On the other hand, your chances of being killed in an automobile accident are 1 in 5000. Statistically, you are at far greater risk driving to the airport than getting on an airplane. However, the perception is that you have more control over your fate when you are in your car than as a passenger traveling on an airplane.

The article is helpful understanding in and around the circumstances of Flight Indeed!!! Thank You.

Yasir said...

மாஷா அல்லாஹ் வாயடைத்துப்போகின்றேன் இந்த ஆக்கத்தை படித்தபிறகு...தேடினாலும் முழுவதுமாக கிடைக்காத தகவல்கள்....உண்மையிலயே நல்ல முயற்ச்சி மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சலிப்புதட்டாத எழுத்து நடையில்...வாழ்த்துக்கள் காக்கா..தொடருங்கள்

sabeer.abushahruk said...

ட்டேக் ஆஃப் அமர்க்கலம்! இனி, ஆன் போர்ட் மற்றும் லேன்டிங்கும் தூள் கிளப்பவும்.

Ebrahim Ansari said...

மருமகன் சா. ஹமீது உடைய இந்த அறிவியல் ஆக்கம் தரும் செய்திகள் வியக்க வைக்கின்றன. விமானப் பயணம் செய்யும்போது ஏன் பழைய ராஜாமடம் கப்பி ரோடு வருகிறது என்று இதுவரை புரியாமல் இருந்தது. நிறையப் படிக்கிறாய் என்று உணர்கிறேன். நல் வாழ்த்துக்கள்.

மனம் கவரும் படங்களை மட்டும் போட்டு பெயர் தட்டிக் கொண்டு போவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் நல்ல தகவல்களையும் இப்படிப்பட்ட பதிவுகள் மூலம் தருவது தனிப்பட்ட முறையிலும் மிக்க மகிழ்வாக இருக்கிறது.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ரொம்ப சூப்பரான பயண அனுபவம், ப‌ய‌ண‌ங்க‌ளின் த‌லையாய‌ ப‌ய‌னே ப‌ல‌ ம‌க்க‌ளைப் ப‌டித்த‌றிய‌ முடிவ‌து தான். நெல்லுக்கு இறைத்த‌ நீராய் எங்க‌ளையும் வ‌ந்த‌டைகிற‌து ப‌திவின் மூல‌ம்.
.
First impression is the Best impression என்பதுபோல முதல் பதிவே வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறீர்கள் ஹமீது காக்கா . வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்...!

விமான பயணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதை உங்களின் வர்ணனை மூலம் தெரிவிப்பது புது ரதம்...

ZAKIR HUSSAIN said...

தலைப்பை பார்த்தவுடன் ஏதோ பட்ஜட் ஏர்லைன்ஸ்களின் "பன்னாடை"த்தனங்களை தோலுரிக்கப்போகிறீர்கள் என நினைத்தேன்.

ஆனால் இவ்வளவு டீட்டெய்லாக பிசிக்ஸ் கிளாஸ் நடக்கும் என்று தெரியாமல் போய்விட்டது. ஹோம் வொர்க் இருந்தால் சபீரிடமும், N.A.S அண்ணனிடம் கேட்டு எழுதி சமர்ப்பிக்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். உயர்தரமான விளக்கம்!ரெக்கைகட்டிபறக்குது!அருமையான பாட வகுப்பு!ஆனால் திகில் கொஞ்சம் அதிகம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\அஸ்ஸலாமு அலைக்கும். உயர்தரமான விளக்கம்!ரெக்கைகட்டிபறக்குது!அருமையான பாட வகுப்பு!ஆனால் திகில் கொஞ்சம் அதிகம்.\\

ditto.

லியாகத் அலி சார் நன்றாகவே பாடம் நடத்தியுள்ளார். வாழ்க அவர் புகழ்! வளர்க கா.மு.மே.பள்ளி!

KALAM SHAICK ABDUL KADER said...

ஒரு வினா:

சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்?

Shameed said...

Yasir சொன்னது…

//மாஷா அல்லாஹ் வாயடைத்துப்போகின்றேன்//

நியாயமா பார்த்தா காது தானே அடைக்கணும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
ஒரு வினா:

சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்?//

காக்கா, கிங்க் ஃபிஸ்ஸர் ஏர்லைன் தான் ஆடும்னு கேள்வி பட்டிருக்கேன்... ! :)

மல்லையா இனி லைசன் இல்லையா !?

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…


ஒரு வினா:

//சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்? //

இலகு ரக விமானங்களை காற்று இலகுவாக அங்கும் இங்கும் இழுப்பதால்

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
ஒரு வினா:

//சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்?//


வினா ஒன்னு பதில் ரெண்டு

பெரிய கப்பலில் பயணித்தால் ஆட்டம் அதிகம் இருக்காது அதே நேரம் சிறிய படகில் பயணித்தால் ஆட்டம் அதிகம் இருக்கும் ditto தான் விமானமும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆகாயத்தில் பறக்கும் விமானம் ரிவர்ஸில் வர ரிவர்ஸ் கியர் இருக்கா ?

ஏன்னா நம்ம லக்கேஜ் எல்லாத்தையும் ஏத்திட்டாங்களான்னு ஒரு நட பின்னாடியே வந்து பார்த்து போகலாமேன்னுதான் கேட்டேன்... :)

KALAM SHAICK ABDUL KADER said...

சென்ற ஆண்டு உம்ரா செய்ய ஜித்தாவிற்கு “நாஸ்” விமானத்தில் பயணமானேன்; அது சிறிய விமானம்; என் 30 ஆண்டு அயல்நாட்டுப் பயண அனுபவத்தில் அன்றுதான் விமானத்தில் ஏற்பட்டக் குலுக்கலும்;அதனால் பயணிகளிடையே திடுக்கமும் கண்டேன். பொதுவாகச் சிறிய விமானங்களில் இப்படிப்பட்ட குலுக்கல் இருக்கும் என்று சொல்கின்றார்கள்; விஞ்ஞானி காக்காவிடம் வினா எழுப்பினேன். இதேபோல், இம்முறை திருச்சி-கொழும்பு வந்த விமானத்தில் மொத்தப் பயணிகள் எண்ணிக்கைப் பத்து! அவ்விமானமும் குலுங்கிக் கொண்டேயிருந்தது; காரணம்: எடைக் குறைவா?

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
//குலுங்கிக் கொண்டேயிருந்தது//

ஏர்ப்பாக்கெட்ஸ் எனப்படும் திடீர் காற்று அழுத்தம் குறைவான வெற்றிடங்கள் அங்கு வானில் இருக்கும், இதன் வழியாகபறக்கும் போது நம்ம ஊர் ஆட்டோ குலுங்குவது போல விமானங்கள் குலுங்கும். அதற்கு காரணம் விமானம் காற்றை இழுத்து பின்பக்கம் தள்ளி விட்டு விமானம் முன்பக்கம் போவதால் காற்று இல்லாத வெற்றிடங்களில் காற்று இல்லாமல் விமானம் காற்றின் பிடிமானம்இழந்து திடீர் திடீர் என்று கிழே இறங்கும்

KALAM SHAICK ABDUL KADER said...

\\ஏன்னா நம்ம லக்கேஜ் எல்லாத்தையும் ஏத்திட்டாங்களான்னு ஒரு நட பின்னாடியே வந்து பார்த்து போகலாமேன்னுதான் கேட்டேன்... :)//

நகைத்தேன் வயிறு குலுங்க; ஜஸாக்கல்லாஹ் கைரன். இப்படிப்பட்ட “நகைசுவை”களைக் கேட்டு- படித்து வயிறு குலுங்கச் சிரிப்பதும் இருதயம் சீராகச் செயல்பட உதவும் என்று எனக்கு மருத்துவர் இட்டக் கட்டளை; அதனை உங்களின் இவ்வரிகள் மற்றும் கவிவேந்தரின் நேற்றைய “சக்களத்திக் கவிதை?” என்ற வரிகளைப் படித்துப் பெற்றுக் கொண்டேன்.அடிக்கடி இதுபோல் வாய்விட்டுச் சிரித்து என் நோய்விட்டுச் செல்ல அதிரை நிருபரை அணுதினமும் வாசிபதென்பது கடமை ஆகி விட்டது.

KALAM SHAICK ABDUL KADER said...

உடனுக்குடன் மறுமொழி கொடுக்கும் உத்தம உபாத்யாயர் அவர்கள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சாவன்னா காக்கா...

இதுவரை அறிந்திறாத பயனுல்ல தகவல்...

ஜாஹிர் காக்கா அடிக்கடி சொல்லும் வெங்காய லாரியில் (ஏர் இண்டியா விமானத்தில்) சென்ற வாரம் சென்னையிலிருந்து புறப்பட்டு அமீரகம் வந்தடைந்தேன் (போன வாரம் ஏறி இன்னைக்கு தான் அமீரகம் வந்தியாலா என்று யாரோ கேட்டுடாதிய). 3 மணிநேரம் லேட்டு, புது ஃபைட் ஆனா ஏசி இல்லை, கூட வந்தவன் எல்லாம் தண்ணி பார்ட்டிகள்,விமானம் ஆடி தள்ளாடி தான் வந்தது. லேட்டா துபாய் வந்ததால எக்ஸ்ட்ரா 30 நிமிடம் வானத்தில் வட்டமிட துபாய் ஏர்போட் கண்ரொல் ரூம் தண்டனை உத்தரவிட்டதால் ரொம்ப திரில் காக்கா.. நான் பயணிக்கும் முன் உங்க கட்டுரை வந்திருந்தால் கொஞ்சம் பயமில்லாம வந்திருப்பேன்.

crown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
ஒரு வினா:

சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்?//

காக்கா, கிங்க் ஃபிஸ்ஸர் ஏர்லைன் தான் ஆடும்னு கேள்வி பட்டிருக்கேன்... ! :)

மல்லையா இனி லைசன் இல்லையா !?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கிங்பிஸர் தான் தள்ளாடும் என்பது மிகச்சரி! சாராய சாம்ராய் மல்லயா, மல்லாந்து யோசியும்!


தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்போ புரியுதா ஏன் ஒரு ஆளுக்கு 40 கிலோக்கு மேல் விடுவதில்லை என்று//

40 கிலோ 30 கிலோ லக்கேஜ்ஜுக்கு ஓகே.. ஒரு passengerருக்கான சராசரி எடை அளவு எவ்வளவு காக்கா?

crown said...

Shameed சொன்னது…

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
ஒரு வினா:

//சிறிய விமானத்தில் பறக்கும் பொழுது ஆட்டம் அதிகம் ஏன்?//


வினா ஒன்னு பதில் ரெண்டு

பெரிய கப்பலில் பயணித்தால் ஆட்டம் அதிகம் இருக்காது அதே நேரம் சிறிய படகில் பயணித்தால் ஆட்டம் அதிகம் இருக்கும் ditto தான் விமானமும்
---------------------------------------------------------------------
ஆமாம் பெருந்தலைகள் ஆடாது வால்தான் ஆடுது!

crown said...

Shameed சொன்னது…

Yasir சொன்னது…

//மாஷா அல்லாஹ் வாயடைத்துப்போகின்றேன்//

நியாயமா பார்த்தா காது தானே அடைக்கணும்
-----------------------------------------------------------------------இது சரிதான் ஆனால் (சகோ. யாசீர் அல்ல) சில குடிமக்கள் வாயடைத்துக்கொண்டால் நல்லது!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//இப்போ புரியுதா ஏன் ஒரு ஆளுக்கு 40 கிலோக்கு மேல் விடுவதில்லை என்று//

//40 கிலோ 30 கிலோ லக்கேஜ்ஜுக்கு ஓகே.. ஒரு passengerருக்கான சராசரி எடை அளவு எவ்வளவு காக்கா? //

ஆகா அது என்ன நம்ம ஊரு ஜாவியாவா

Shameed said...

crown சொன்னது…


//ஆமாம் பெருந்தலைகள் ஆடாது வால்தான் ஆடுது!//

//சில குடிமக்கள் வாயடைத்துக்கொண்டால் நல்லது!//

வார்த்தை வித்தகரின் வார்த்தைகள் அனைத்தும் அருமை

suvanappiriyan said...

பல புதிய தகவல்கள். அருமையான ஆக்கம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ் பிளைட்டைப் பற்றிய அருமையான விளக்கம்.என்ன கொஞ்சம் பீதிய கிளப்பிட்டிய ,இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பறக்கும்போது பிளைட்டின் ஒவ்வொரு அசைவிலும் உங்க கட்டுரை ஞாபகம்தான் வரும்

Iqbal M. Salih said...

ஒரு திகில் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போல் அல்லவா கட்டுரையாசிரியரின் துவக்கம் இருக்கிறது!

But, thanks for the informations about Aircraft technology!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விமானம் பற்றிய வியத்தகு சொற்பொழிவும், அப்பப்ப சந்தேகங்களுக்கு சூடான விளக்கங்களும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட்.
வாழ்த்துக்கள் காக்கா.

அதிரை சித்திக் said...

ஒரு திகில் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போல் அல்லவா கட்டுரையாசிரியரின் துவக்கம் இருக்கிறது!

sabeer.abushahruk said...

"திகில் திகில்" என்று சொல்றவஹ எல்லாம் ஆர்ட்ஸ் குரூப்போ?

செம இன்ட்ட்ரெஸ்ட்டிங்கா டேக் ஆஃப் ஆகியிருக்கு திகிலாமே.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சுபுஹானல்லாஹ் அல்லஹ்வின் அற்புத படைப்பான மனிதனின் கண்டு பிடிப்பில் விமானம் ஓர் அதிசியம்தான் டெக்னிக்களான விசயத்தை அழகாக எழுதியுள்ளீர்.
அந்த விமானத்தில் வந்த ஓர் மனிதரின் கதையை பயணம் என்ற தலைப்பில் எனது தொடர் கதையும் வர இருக்கிண்றது ஆதரவு தாரீர்

அப்துல்மாலிக் said...

இதைப்பற்றிய தலைப்பை கையிலெடுத்ததுக்கு ஒரு hats off காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு