Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் ...! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | December 01, 2012 | , ,


பாட்டி சொன்னது.... !

சின்ன வயதில் பாட்டி சொன்ன கதை என்று பள்ளிக்கூட காலங்களில் கேட்டு சிலாகித்தோம் அதில் ஏதோ தந்திரம் இருப்பதை எண்ணி துணுக்குற்றோம், சிரித்தும், மகிழ்ந்தோம்!

அன்றைய கால பாட்டியின் அதே கதையை தனது கொல்லுப் பேரனுக்கு அதாவது இன்றய குழந்தைகளுக்கு சொல்லக் கேட்க அதனை நாமும் கேட்ப்போமே…

‘ஒரு ஊரில் ஒரு நரி இருந்துச்சாம்…’

‘அங்கேயிருந்த ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய திராட்சைப் பழத்தை பார்த்துச்சாம்…’

‘சற்றே உயரமாக இருந்த கிளையில் திராட்சைப் பழங்கள் தொங்கியதாம்!’

‘நரியும் எட்டி எட்டி குதித்ததாம்’

‘அந்த நரிக்கு கண்ணில் பட்ட திராட்சை பழங்கள் எட்டவில்லையாம்’

‘உடனே நரி சொன்னதாம்..’

“சீச்சீ… இந்த பழம் புளிக்கும்” என்றதாம்.

‘இதில் இருந்து என்ன தெரிகிறது?’ என்று பாட்டி கேட்க….

பேரன் சொன்னான்… “பாட்டி நீ பொய் சொல்வதுபோல் எனக்குத் தெரியுதே!!”

பாட்டிக்கோ ஒரே அதிர்ச்சி….

“என்னடா சொல்கிறாய் பேரண்டி!!!!! உன் அப்பனுக்கும் இதே கதையத்தான் சொல்வேன் அவனெல்லாம் சந்தோசமாக சிரிப்பானே… நீ என்னடான்னா நான் பொய் சொல்றேன்னு சொல்கிறாயே!!” என்று செல்லமாய் கோபித்துக் கொண்டாளாம் !

பேரன் சொன்னானாம் “நரி புலால் உண்ணும் பிரானியாச்சே அது முயல், சிறு, சிறு உயிரினங்களை வேட்டையாடும்… அல்லது சிங்கம் போன்ற மிருகங்கள் வேட்டையாடிய செத்த மிருகங்களைத்தான் உண்ணும் என்றுதானே நான் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்… நீ என்னடான்னா திராட்சை பழத்தை தின்ன முயர்ச்சித்ததாய் சொல்கிறாயே கதையச் சொன்னாலும் லாஜிக்கோடு சொல்லனும் பாட்டி!!!???  என்ன புரியுதா?”

பாட்டியோ தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டாள் பேரன் வளர்ந்துட்டான் “சீச்சீ இந்த கதை இனி சரிவராது”

மு.செ.மு.சஃபீர் அஹமது

9 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

To Brother மு.செ.மு.சஃபீர் அஹமது,

Seedless திராட்சை மாதிரி Brainless கதைகள் பாட்டிகளிடம் ஏராளம் உண்டு.

காகம் கற்களை நிரப்பி தண்ணீர்குடித்ததும் [ ஸ்ட்ரா இல்லையா? ] , காகம் வடையை காலில் கிடுக்கிகொள்ளாமல் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதும்.

இன்றைய தேதி வரை நரி உழுந்து வடை / மசால் வடை தின்னுமானு யாரும் கேட்கவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இப்போது உள்ள புழுதியிலும், திருப்பி திருப்பி பயப்படுத்தப்படும் எண்ணையிலும் செய்யப்படும் வடையை நரி சாப்பிட்டால் நிச்சயம் நரியை ஐ.சி.யூ வில்தான் பார்க்கவேண்டும்.

sabeer.abushahruk said...

தெளிவானப் பேரன். பாட்டிக்கே லாஜிக் சொல்லித்தந்த பேரன். பேரன்மூலம் லாஜிக் சொல்லி புதிய கோணத்தில் கதை சொன்ன சஃபீர் பாயிக்கு வாழ்த்துகள்.

மாற்றி யோசித்திருக்கிறீர்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கால மாற்றத்தில் இன்றைய குழந்தைகளின் அறிவின் தாக்கத்தால் பாட்டிகளையே சிந்திக்கச் செய்யும் கதை.

ஆனால் நரியானது இங்கே ஒருவகை ஊசியிலைமரப் பழங்கள் உண்பதை அதிகம் கண்டிருக்கிறேன், அதுபோல புறாக்கள் பொறித்த கோழி, சிப்ஸ், சோறு இதுகளையும் உண்பதை அன்றாடம் காண முடிகிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...



மாற்றி யோசித்திருக்கிறீர்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

திராட்ச்சை தின்னாது நரி என்பதை நான் அறியா 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டதே வெட்க்கம் வெட்கம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

திராட்ச்சைக்கு பதிலாக ஊசி இலை மரப்பழங்களை மாற்றி சொல்லச்சொல்ல நும் நம் பாட்டிகளிடம் ஒரு வேளை லன்டன் பாட்டி நரியும் ஊசி இலை பழங்களும் என்று சொல்வார்களோ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ட்விஸ்ட் ! - நல்ல
டேஸ்ட் ! (நான் சொன்ன நம்பவா போறீங்க!)

ச்சீசீ இந்தப் பழம் புளிக்கும்.... (என்னைத் தெரிந்தவர்களுக்கும் புரியும்)

அதிரை சித்திக் said...

திராச்சைக்கு பதிலாக
தொங்க வைத்து காயவைக்கும்
கருவாடு என்று பாட்டி கதையை
மாத்தி சொல்ல வைக்கணும் ..
சீ சீ இது நாரி போன கருவாடு
என்று நரி என்று திரும்பி சென்றது
என்று மாற்றி எழுத வேண்டியது தான்

Yasir said...

மாற்றி யோசித்திருக்கிறீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு