ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!
இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்
இந்த ஒற்றுமை
நாற்பத்தியோரு ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்
தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்
ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!
அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது
உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது
வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!
அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!
சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு
இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு
எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு
ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்
வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது
படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது
இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்
நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்
நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.
நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!
....ஈஷி பிலாதி... எமராத்தி!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!
இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்
இந்த ஒற்றுமை
நாற்பத்தியோரு ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்
தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்
ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!
அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது
உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது
வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!
அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!
சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு
இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு
எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு
ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்
வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது
படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது
இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்
நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்
நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.
நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!
....ஈஷி பிலாதி... எமராத்தி!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
52 Responses So Far:
இந்த அமீரகக் குழந்தை உங்களின் கைகளில் தவழ்ந்தால் !
அது கவிதைக் குழந்தையே !
ஒரு கான்செப்ட் ஒரே வார்த்தையில் சொன்னது, அதன் பின்னர் பிரளயமாய் கொட்டியது வரிகள்... அதிரையரின் அமீரக கீதம் !
ரியலி சூப்பர் ! காக்கா !
//வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!//
யாரும் மறுக்கத்தான் முடியுமா ?
கேட்டது எப்படியிருக்கனும் என்று எதிர்பார்த்ததை அப்படியே தந்த கவிக் காக்கா ! நீடூழி வாழி !
அருமை ! நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாசம் சீராக்கும் வரிகள் !
வாழ்த்துவோம் !
(வெளிப்)பார்வைக்குள் ஒற்றுமை போற்றும் ! அமீரக மக்களை !
அமீரக கீதம் நம்மாளு கையாலே அருமை!
//நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!//
மிகமிக அவசியம்
அமீரகத்தில் வாழும் அதிரையருக்கும் மென்மேலும் அபிவிருத்தி கிடைத்திட நாடு சிறக்கட்டும்.
இனிய தேசிய தினத்தின் விடுமுறை நாள் நம்மவர்களுக்கும் இனிமை தரட்டும்.
நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.
Well said sabeer Kakka.
The same feel we have
But they kneel to somebody
Instead if they deal with Allah
Will see cool in their hearts
/// தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்///
அருமையான ஆக்கம்,, 41 UAE தேசிய கீதம் அல்ல வருவாய்க்காக வாழ்விழந்த எங்களின் உரிமைகீதம்,,, அமீரகத்தின் ஒலிக்கும் ஒற்றுமையின் கீதம்,,,ஒரே கவிதை மழையாய் இருக்கு,,,, சபீர் காக்காவின் ஆக்கம்
சாதிக்கும் தாக்கம்
,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்
\\சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு\\
விடுப்பில் தாயகம் சென்றால்
கடுப்பில் ஆழ்த்தும் விடயம்
கவிவேந்தரின் கவிதை வரிகளில்
கனிவாய்ச் சொல்லி விட்டார்!
நன்றி கூறும் நற்பண்பை விதைத்த கவிதையை அறபுமொழியில் மொழிபெயர்த்து அனுப்பினால் அமீரகக் கவிஞர்கள் வரிசையில் அதிரைக் கவிஞரும் இடம் பெறலாம், இன்ஷா அல்லாஹ்.
//படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது// உண்மையைச் சொன்னீர் கவி வேந்தரே!
ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!
---------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஆமாம் மில்க்சேக் குடித்து வளர்ந்த குழந்தைஅல்ல! பணமே பானமாய் ஊட்டிவளர்க்கப்பட்ட போஷாக்குக் குழந்தை.இதுக்கே அவங்களுக்கு ஹன்ட்சேக் பண்ணி மெச்சலாம்.
தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்.
---------------------------------------------
சரியா சொன்னிங்க! இது ஒரு புதுரகம் என உலகம் மெச்சும் தனிரகம் இந்த அமீரகம்.
அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது
உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது
வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!
--------------------------------------------------------
எதார்த்தம்!எதார்த்தம்! இந்த அமீரக காந்தம் ! இந்தியரை அதிகம் ஈர்த்தது அவர்கள் புண் வயிற்றில் பால் வார்த்தது, வருமை பினி நீக்கி உயிர்பயிர்வளர உரமாய் நின்றது! நிற்கிறது!
நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்
-------------------------------------------------------
ஆமாம் நம்பிக்கை நட்சத்திரம்!கலங்கரை விலக்கம்!மாற்று தேசத்து உயிர்களையும் நேசித்து கவலை களையும் அன்னை பூமி! மனிதனை பெரிசா மதிக்கும் அன்னை தெரசா!இதுக்கு செல்ல தேவை விசா! மற்றவை மாறிடும் சொகுசா!
துபாய்...எழுபதுகளின் தொடக்கத்தில் போஸ்ட்மேன் சவுரியிடம் கிடைத்த தடித்த கவரில் கிடைத்த சொர்க்கம்.
புரியாத சென்ட் வாசனையில் புரிந்த பணப்புழக்கம். வெளக்காத்தெரு மார்க்கெட்டில் பெண்களுக்கு கிடைத்த படிக்காத பட்டம். மீசை வெளிவராத வயதிலும் "மாப்பிள்ளை" என்று பாஸ் மார்க் போட்ட பேப்பர்.பினாங்குக்கு பிறகு ' அங்கே ரோட்டில் எல்லாம்.....' என்று அளப்பரையை மறுபடியும் ஆரம்பிக்க உதவிய ஊர்.
--------------------
//அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!//
நல்லா எழுதியிருக்கே. இருந்தாலும் இன்னும் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், தீக்குளிப்பதும், முதல் நாள் ஷோவில் இனிப்பும், ரோஜாப்பூவும் வழங்கும் நோய்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு மருந்து அனேகமாக எய்ட்சுக்கும், கேன்சருக்கும் கண்டுபிடித்த பிறகு கண்டு பிடிக்க படலாம்.
நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.
------------------------------------------------------
ஆமின்,ஆமின்,ஆமின்,ஆமின்,....
நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!
....ஈஷி பிலாதி... எமராத்தி!
------------------------------------------------------
ஆமாம் சரியா சொன்னீங்க! மராத்தி பால்தாக்கரே! (பால் ஊத்தியாச்சு)மாதிரி மாற்று தேசத்து, மண் மனிதரகளை தாக்காமல் கைகொடுக்கும் எமராத்திக்கு நம் நன்றியை தூஆ மூலமாவது நிறைவேற்றுவோமாக!
வந்தேமாதரம் என்று சொல்லி
தண்ணீர் தரமாட்டேன் என்கிறான்.
ஜெய்ஹிந்த் என்று சொல்லச்சொல்லி
பிற மாநிலத்தவர்களுக்கல்ல இம்மாநிலம் என்கிறான்.
பாரத் மாதாகீ ஜே என்று சொல்லி
அதன் குழந்தைகளிடம் கையூட்டு வாங்குகிறான்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லி
தனக்கு வேண்டாதவரை வேரறுக்கிறான்.
உடன்பிறப்பே என்று சொல்லி
சுவிஸ் வங்கியை நிரப்புகிறான்.
கடலிலே தூக்கிப்போட்டாலும்
குடும்பம் செழிக்க உழைக்கிறான்.
ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லி
ரத்த ஆறுகளை நித்தமும் ஓட்டுகிறான்.
என் இனம் என்று சினம் கொண்டு
பல சுயநலன்களை சாதிக்கிறான்.
விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் கேட்டால்
அதற்குப்பகரமாக அவர்களின் செந்நீர் கேட்கிறான்.
ஜனநாயக்கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டால்
எம்மீது கேஸ் புக் பண்ணுகிறான்.
அரசின் எவ்வித பதவியும் இதுவரை வகிக்காதவனுக்கு
பயத்தால் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்துகிறான்.
விரைந்த பணக்காரனாகி பகட்டு வாழ்க்கை வாழ
எதையும் செய்ய எளிதில் துணிகிறான்.
குட்டி நாடுகளெல்லாம் வளர்ச்சியில் வானை எட்டிப்பிடித்திருக்க இவன் மட்டும் தரையொடு தரையாக பல குறைகளுடன் கறை படிந்து வாழ்ந்து வருகிறான்.
கவிக்காக்காவின் கவிதையின் தாக்கம் என்னை இப்படியெல்லாம் எழுத வைத்து விட்டது. உங்களுக்கு கவிக்காக்கா பட்டம் மட்டும் போதாது "நடப்புக்கவிக்காக்கா" என்றும் நீங்கள் எல்லோராலும் அழைக்கப்பட வேண்டியவர்கள் தான்.
(நேற்று கலைஞர் தொலைக்காட்சியின் "மக்களின் குரல்" நிகழ்ச்சியில் குவைத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். அதற்கு நிகழ்ச்சியை நடத்துபவர் உங்கள் நாட்டில் மின்சாரம் எப்படி உள்ளது? மின்தடைகள் ஏதேனும் உண்டா? அங்கு எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்? என்றெல்லாம் கேட்டார். இமயமலையின் எவரெஸ்ட் உச்சியில் இருந்து கொண்டு எங்கோ இருக்கும் அரேபிய பாலைவனத்தின் குளிர் பற்றி விசாரிப்பது போல் இருந்தது எனக்கு)
///(நேற்று கலைஞர் தொலைக்காட்சியின் "மக்களின் குரல்" நிகழ்ச்சியில் குவைத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். அதற்கு நிகழ்ச்சியை நடத்துபவர் உங்கள் நாட்டில் மின்சாரம் எப்படி உள்ளது? மின்தடைகள் ஏதேனும் உண்டா? அங்கு எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்? என்றெல்லாம் கேட்டார். இமயமலையின் எவரெஸ்ட் உச்சியில் இருந்து கொண்டு எங்கோ இருக்கும் அரேபிய பாலைவனத்தின் குளிர் பற்றி விசாரிப்பது போல் இருந்தது எனனக்கு) ///
சூப்ப்பர்ர்ர்ர்ர்................. !!! ஹா ஹா ஹா ஹா !
வேனாம் வேனாம்ங்க மின்சாரம் இருக்குன்னு சொன்னாரா இல்லையா ?
--------
MSM(n) : இங்கேயில்லாது அங்கு உண்டு, அங்கே இல்லாதது இங்கு உண்டு !
எல்லாக்கனிம வளங்களையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு நம் நாடு ஒரு முதிர் கன்னி போல் கண்ணீர் வடித்து வருகிறது அன்று முதல் இன்று வரை.
விவசாயத்திற்கு தண்ணீர் தரமாட்டாயா? வைத்துக்கொள். ஆனால் வெள்ளம் வந்து அணை நிரம்பி வழிந்து உன் ஒரு சொட்டு தண்ணீர் கூட எம்மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என தமிழகமும் கொஞ்சம் திமிருடன் கூறித்தான் ஆக வேண்டிய நிலையில் உள்ளது.
எப்படி ஒரு மெளுகுவர்த்தி வெளிச்சத்தை தன் சுற்று வட்டாரத்திற்கு கொடுத்து விட்டு அதன் அடிப்பாகத்தில் இருள் அமர்ந்திருப்பது போல் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தி செய்து வேறு மாநிலங்களுக்கு பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு தன் மாநிலத்தில் இருள் சூழ அமர்ந்துள்ளது.
பவள விழா, முத்து விழா, வைர விழா, சில்வர் விழா, செம்பு விழாக்களில் கலந்து கொள்வது மட்டும் தான் நாட்டின் உயர் பதவியில் வகிப்பவர்களின் வேலையோ? அதிகாரத்தை பயன்படுத்தி நியாயத்துடன் தட்டிக்கேளுங்களய்யா..................
//வாழ்த்துவோம்!
(வெளிப்)பார்வைக்கு ஒற்றுமை போற்றும் அமீரக மக்களை!
அருமை! சுவாசம் சீராக்கும் வரிகள்!//
Simply Superb Sabeer!
//குட்டி நாடுகளெல்லாம் வளர்ச்சியில் வானை எட்டிப்பிடித்திருக்க இவன் மட்டும் தரையொடு தரையாக பல குறைகளுடன் கறை படிந்து வாழ்ந்து வருகிறான்.//
ஆக்கம் கொடுத்தத்
தாக்கம்!
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறியும்
கவிபாடும்!!
அதிரை நிருபரின் அத்தனை வாசகர்களையும் கவிஞர்களாய் மாற்றும் கைவண்ணம்; ஆஸ்தானக் கவிஞரின் கவிதை என்னும் ஓவியத்தினைப் படைக்க உதவும் கரங்களாம் அத்தூரிகையில் ஒளிந்திருப்பது என்ன?
//துபாய்.!!..
எழுபதுகளின் தொடக்கத்தில்
போஸ்ட்மேன் சவுரியிடம் கிடைத்த
தடித்த கவரில் கிடைத்த சொர்க்கம்.
புரியாத சென்ட் வாசனையில்
புரிந்த பணப்புழக்கம்.
வெளக்காத்தெரு மார்க்கெட்டில்
பெண்களுக்கு கிடைத்த
படிக்காத பட்டம்.
மீசை வெளிவராத வயதிலும்
"மாப்பிள்ளை" என்று
பாஸ் மார்க் போட்ட பேப்பர்.
பினாங்குக்கு பிறகு
' அங்கே ரோட்டில் எல்லாம்.....'
என்று அளப்பரையை மறுபடியும்
ஆரம்பிக்க உதவிய ஊர்.!!//
எடக்கு மடக்கா எழுதினாலும்
மடக்கி மடக்கி எழுதிவிட்டால்
நீங்களும் கவிஞரே!
இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு கட்டுரை மட்டும் எழுதலாமா? கவிதையின் தாக்கமும் உண்டென்பதை நிருபிக்கும் நீங்கள் இன்னும் கவிதைகளும் எழுதலாமே?
//அரசின் எவ்வித பதவியும் இதுவரை வகிக்காதவனுக்கு
பயத்தால் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்துகிறான்.//
MSM(n): தனிப்பதிவாக பதிய வேண்டிய ஒன்று !
வெடிச் சத்தத்தில் வெட்டி ராஜ்யம் செய்தவனுக்கு கிடைத்த மரியாதை அது !
வெடிக்கு படி அளந்தவனுக்கு கொடி போர்த்தி கொழுத்தப்பட்டான் !
\\எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு\\
“எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?”
கவியரசரின் வரிகளைப் பொய்யாக்கி விட்டீர்க் கவிவேந்தே!
ஆம், அவர் அரசர் என்றால், நீங்கள் வேந்தரே தான்!!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!///
***************************************************************
மிக மிக அழகான
ஆரோக்கியமான
வளர்ந்த குழந்தை
அமீரகம்!
///இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்///
***************************************************************
மறைந்த ஷேக்குகளின்
நன் முயற்சியில் கிடைத்த வெற்றி!
உலகயே ஆச்சர்யத்தில்
பேச வைத்திருக்கிறது
அமீரகத்தைப் பற்றி!
///இந்த ஒற்றுமை
நாற்பத்தியோரு ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்///
***************************************************************
இந்த ஒற்றுமைக்கு
வித்திட்டவர்களுக்கு
வல்ல அல்லாஹ்
நல்லருள் புரியட்டும்!
///தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்///
***************************************************************
தோல்வி யறியாத
தேசமாகிப் போனதற்கு
வல்ல அல்லாஹ்வின்
கருணைதான் காரணம்!
கவிவேந்தே!
தேடிப் பார்த்தேன்;
நாடிப் பிடித்தேன்
உங்களின் இக்கவிதையில்
கிட்டவில்லை; உங்கட்கும்
எட்டவில்லையா?
ஆம். ஒரு தாயின் பாசத்துடன் நேசக்கரங்களால், எல்லா மத நம்பிக்கையாளர்களையும் அரவணைத்து, அவரவர்க்கு வழிபாட்டுத் தலங்களையும் அமைத்துக் கொடுத்தும், அவரவர் தன் மத போதனைகளைச் செய்து கொள்ளவும் தடையில்லாச் சட்ட அனுமதியும் வழங்கிய அமீரகம் என்பதைச் சுட்டிக் காட்டுங்கள். ஊரில் பிச்சைக்காரர்களாய் இருந்தவர்களெல்லாம், இங்கு வந்து விட்டக் கொழுப்பில் நம்மைப் பார்த்தும் அரபிகளைப் பற்றியும் கேவலமாகப் பேசும் பொழுது, அவர்களிடம் நான் சொல்லும் பதில், “நீங்கள் எல்லாம் ஊரில் பிச்சைக்காரர்களாய்த் திரிந்தீர்கள்; இம்மக்கள் சூது வாது தெரியாதவர்கள்; பரம்பரைப் பரம்பரையாக விருந்தோம்பலில் உலகிற்கு வழிகாட்டுபவர்கள்; மொத்தமாக எல்லாரும் ஓர் இனம் என்னும் மனிதாபிமானம் மிக்கவர்கள்; இவர்களைக் கேலிச் செய்வது உண்ட வீட்டுக்குத் தீங்குச் செய்யும் பாவிகள்” என்பேன்.
இதனை உங்கள் கவிவரிகளில் சுட்டிக் காட்டுக.
///ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!///
***************************************************************
மீன் பிடி தொழில்
செய்து வாழ்ந்தவர்கள்
பல அடுக்கு மாடியின்
வளர்ச்சிக்கு வந்தது
மாய மந்திரமல்ல!
வல்ல அல்லாஹ்!
எண்ணெய் மூலம்
வழங்கிய அருளே!
////அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது////
***************************************************************
அமீரகம்
ஊதாரிக்கும், நல்லவர்களுக்கும்
உலகத்தைக் காட்டியது!
ஊதாரிகள் - நல்லவர்களாக
நல்லவர்கள் - ஊதாரிகளாக
மாறிப் போன நிகழ்வும்
நடந்துள்ளது!
////உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது/////
***************************************************************
உழைப்பை மதித்து
ஊதியம் கொடுத்தது
உண்மைதான்!
ஊர்களில் இருக்கும்
வீடுகளே சாட்சிகளாகும்!
////வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!////
***************************************************************
வறுமையில் உழன்ற
இந்தியக் குடும்பங்களுக்கு
பந்தி வைத்து மனம்
குளிரச் செய்தது
என்பதும் உண்மையே!
///அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!////
***************************************************************
அரசியல் வியாதிகளின் ஆர்ப்பாட்டம்!
சினி கூத்தாடிகளின் பந்தா!
ஆன்மீக போர்வையில் ஏமாற்று பேர்வழிகள!;
ஏமாற்றி பிழைக்கும் வியாபாரம் என்ற
நம் நாட்டு அட்டகாசங்கள்
எதற்கும் அமீரகத்தில் இடம் இல்லை
என்ற நிம்மதியில் உழைத்து
வாழ உகந்த இடம் அமீரகம்தான்!
கவியன்பன்,
எம்மதமும் சம்மதம் என்பது நம்நாட்டின் போலியானக் கோட்பாடு. கோட்பாடும் போலி; நடப்பிலும் நயவஞ்சகம்.
இங்கோ, என் மதம் எனக்கு; உன் மதம் உனக்கு என்னும் சமரசக் கோட்பாடு. நடப்பில் முகமூடியிடாத வெளிப்பாடு.
அபு இபுறாகீம் / இக்பால், இப்ப சொல்லுங்கள். வெளிப்பார்வைக்கு வேசம் போடுவது இந்தியாவா அமீரகமா?
///சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு////
***************************************************************
சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு!
மக்களின் வரிப்பணமெல்லாம்
அரசியல் வியாதிகளின்
சொந்தப் பணமாகிப்போன
அவலம்!
சுகாதாரச் சீரழிவுக்கு
அரசு மருத்துவமனைகளே
காட்சிப் பொருளாக இருக்கிறது!
மருத்துவமனையே சுகாதாரச்
சீரழிவானால் மக்களின்
சுகாதாரம் கேள்விக்குறியே!
மக்களைப் பற்றி கவலைப்படாத
சுயநலமிக்க அதிகார வர்க்கங்கள் -
அரசியல் வியாதிகளின் கைகளில்
இந்திய சுதந்திரம்
தள்ளாடுகிறது!
////இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு////
***************************************************************
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு!
வாங்கிய கையை வெட்டி
அதை தொலைக்காட்சியில்
காண்பித்தால் -
அது சரியான தண்டனை!
கையூட்டு பெற்றவனை
மக்கள் வரிப்பணத்தில்
ஓசி சாப்பாடு போட்டு
சிறையில் அடைப்பதால்
கீழ் மட்டம் முதல்
மேல் மட்டம் வரை
குற்றங்கள் மலிந்து விட்டது!
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
அது உலக வங்கி ரவுடிகளுக்கு
இந்திய அடிமைகள் -அரசியல் வியாதிகள்
எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தால்
வந்த விளைவு!
இருள் சூழ மின் வெட்டு
மக்களுக்குத்தான்!
பன்னாட்டு முதலைகளுக்கும்!
உள் நாட்டு முதலைகளுக்கும்!
கூத்தாடிகளுக்கும் -
அரசியல் வியாதிகளுக்கும்
மின் வெட்டு இல்லை!
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்!
//அபு இபுறாகீம் / இக்பால், இப்ப சொல்லுங்கள். வெளிப்பார்வைக்கு வேசம் போடுவது இந்தியாவா அமீரகமா?//
மேற்சொன்னது ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதனால்...
நீங்கள் சொல்வது சரியே !
கவியன்பன் காக்கா, தனி மின்னஞ்சலில் சுட்டிக் காட்டிய "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் கயவர்களை" நினைத்து வெதும்பும் அமீரக மண்ணின் மைந்தர்களின் குமுறலையும் நானும் கேட்டிருக்கிறேன் அதனாலே அப்படிச் சொன்னேன் !
//இங்கோ, என் மதம் எனக்கு; உன் மதம் உனக்கு என்னும் சமரசக் கோட்பாடு. நடப்பில் முகமூடியிடாத வெளிப்பாடு. //
இதுவேதான் "லகும் தீனுக்கும் வலிய தீன்" என்னும்
இறைக் கோட்பாடு;
மறைக் கூப்பாடு!
///எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு///
***************************************************************
தன்னைப் பற்றி
மற்றும் கவலைப்படாமல்
நாட்டையும், நாட்டு மக்களையும்
ஷேக்குகள் நேசிப்பதால்
மண்ணின் மைந்தர்களுக்கு
நலம் அளிக்கும்
அனைத்து திட்டங்களையும்
தீட்டி செயல்படுத்தி
முடிப்பதால்
எந்த வளமும்
இல்லாமல் இருந்தாலும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு!
///அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்/////
***************************************************************
உண்மை! உண்மை! அழகிய உண்மை!
///நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.///
***************************************************************
வல்ல அல்லாஹ்வின்
கட்டளைகளையும், அச்சத்தையும்
நபிமொழிகளையும் 'இவர்கள்'
மனதில் வைத்து விட்டால்
உலகம் போற்றும்
அமீரகமாகி விடும்!
//நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை!///
....ஈஷி பிலாதி... எமராத்தி!
***************************************************************
இங்கு வந்த இந்தியர்கள் அனைவரும்
நன்றிக்கடனோடு வாழ்த்துவோம்!
வல்ல அல்லாஹ் மென்மேலும்
இவர்களுக்கு செல்வங்களை வழங்குவதோடு
இவர்களின் உள்ளங்களை
மார்க்கத்தை பேணி நடக்கும்
நன்மக்களாக வாழ வழி செய்ய வேண்டும்
என்று பிரார்த்தனை செய்வோம்!
இனி வரும் நம் இளையதலைமுறைகள்
நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்து
நலமுடன் வாழ வேண்டும் என்றும் துஆச் செய்வோம்.
சபீர்: நேரமில்லாமல் இருந்தும் 2 மணி நேரத்திற்கு மேல் - நேரம் ஒதுக்கி பதில் போட உன் கவிதை எளிமையாக இருந்ததும் மேலும் ''நாம் வாழ்ந்து வரும் அமீரகம்'' என்ற காரணமே நீண்ட கருத்திட தூண்டியது என்னை!
வாழ்த்துக்கள்! புதிய கீதம் வடித்ததற்கு!
நானும்
பாரத நாட்டின்
பையன்தான்
தமிழ்நாடு
தாய் மாநிலம் எனில்
அரபுநாடு
அப்பா போல.
வார்த்தெடுத்தது தாய்
வளர்த்தெடுத்தது தந்தை
அகரம் முதல்
அனைத்து அறிவும்
அள்ளித்தந்தது என் நாடு
உணவு முதல்
உடையோடு
உறையுளும்
உவப்போடுத் தந்தது அரபு நாடு
உயிர்தந்தது இந்தியா
உடல் வளர்த்தது அரபு தேசம்
இந்தியாவுக்கே உயிர்மூச்சு
இந்நாட்டுக்கு கடப்பாடு!
எனக்கு வேலைதந்து துவக்கியது சவுதி அரேபியா. இருபது வருடங்கள்! இங்கு இப்போது ஆறு வருடங்களே எனினும் ஒரு வாய்த் தண்ணீருக்கே நன்றி சொல்லக் கற்றுத்தந்த இஸ்லாமியன் ஆதலால்தான் இந்த
அமீரகத்திற்கு நன்றி!
//வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!//
கூட தொந்தியும் வைத்தது
//கூட தொந்தியும் வைத்தது//
ஹமீது,
பந்திவைத்தது மட்டும்தான் அமீரகம்; பந்திக்கு முந்தி, தொந்தி வளர்த்தது இந்தியன்
அமீரக தமிழ் மன்றத்தின்
பார்வைக்கு இக்கவிதை எடுத்து
செல்ல பட்ட வேண்டும்
கவி வேந்தர் சபீர் காக்காவிற்கு
பாராட்டு பட்டயம் அமீரக அரசால்
வழங்கப்பட வேண்டும்
கருத்துக்களைக்கூட ஊன்றி வாசிக்க வைப்பதில் விர்ப்பன்னர்களான அதிரை நிருபரின் பங்களிப்பாளர்களின் இப்பதிவுக்கான் முத்துகள்:
அர அல:
//The same feel we have
But they kneel to somebody
Instead if they deal with Allah
Will see cool in their hearts//
கிரவுன்:
//மாற்று தேசத்து உயிர்களையும் நேசித்து கவலை களையும் அன்னை பூமி! மனிதனை பெரிசா மதிக்கும் அன்னை தெரசா!இதுக்கு செல்ல தேவை விசா! மற்றவை மாறிடும் சொகுசா!//
ஜாகிர்:
// துபை: மீசை வெளிவராத வயதிலும் "மாப்பிள்ளை" என்று பாஸ் மார்க் போட்ட பேப்பர்.//
நெய்னா:
// ஒரு மெளுகுவர்த்தி வெளிச்சத்தை தன் சுற்று வட்டாரத்திற்கு கொடுத்து விட்டு அதன் அடிப்பாகத்தில் இருள் அமர்ந்திருப்பது போல்//
கவியன்பன்:
//ஒரு தாயின் பாசத்துடன் நேசக்கரங்களால், எல்லா மத நம்பிக்கையாளர்களையும் அரவணைத்து, அவரவர்க்கு வழிபாட்டுத் தலங்களையும் அமைத்துக் கொடுத்தும், அவரவர் தன் மத போதனைகளைச் செய்து கொள்ளவும் தடையில்லாச் சட்ட அனுமதியும் வழங்கிய அமீரகம்//
அலாவுதீன்:
/எல்லாத் துறைகளிலும்
கையூட்டு!
வாங்கிய கையை வெட்டி
அதை தொலைக்காட்சியில்
காண்பித்தால் -
அது சரியான தண்டனை!
கையூட்டு பெற்றவனை
மக்கள் வரிப்பணத்தில்
ஓசி சாப்பாடு போட்டு
சிறையில் அடைப்பதால்
கீழ் மட்டம் முதல்
மேல் மட்டம் வரை
குற்றங்கள் மலிந்து விட்டது!//
//இருள் சூழ மின் வெட்டு
மக்களுக்குத்தான்!
பன்னாட்டு முதலைகளுக்கும்!
உள் நாட்டு முதலைகளுக்கும்!
கூத்தாடிகளுக்கும் -
அரசியல் வியாதிகளுக்கும்
மின் வெட்டு இல்லை!
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இந்த அமீரக்த்திற்கான நன்றியுரையைத் தமிழில் தன் தனித்தன்மையோடு அலங்கரித்த கிரவுனுக்கும்;
சற்று மாறுதலாக கவித்தன்மையோடு அனுகிய ஜாகிருக்கும்
நன்றிக்கடனை ஆமோதித்தும் கருத்துக்களுக்கிடையே கவிதைகளைக் கண்டெடுத்தும் அமீரகத்தின் அரசியலில் மதங்களின் நிலைப்பாடு பற்றி விளக்கிச் சொல்லியும் உண்ட சோற்றுக்கு ரெண்டகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியும் தன் சமூக அக்கறையை இங்கும் பரைசாற்றிய மதிப்பிற்குரிய கவியன்பன் அவர்களுக்கும்
நம் நாட்டின் சமூக அவலங்களை இரு வரிக் குறுங்கவிகளாய் பட்டியலிட்டு பெருமூச்சு வரவழைத்த தம்பி நெய்னாவுக்கும்
இந்தக் கவிதையை மட்டுமன்றி கருவையே அக்கு வேறு ஆணிவேறாக விமரிசித்ததோடு நில்லாமல் தன் பாணியில் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் முன் மொழிந்து இந்தப் பதிவிற்கே மெருகேற்றி அர்த்தம் விளங்கவைத்துத் தன் நன்றிக்கடனையும் பதிந்துவைத்த அலாவுதீனுக்கும்
இப்படியொரு பதிவு வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து, திருத்தங்களின்போது அலோசனை வழங்கி உதவிய அபு இபுறாகீமுக்கும்
மேலும் விரும்பி வாசித்த எம் ஹெச் ஜே, அர அல, ஹமீது, இம்ரான் கரீம், இபுறாகீம் அன்சாரி காக்கா, இக்பால் ஸாலிஹ், அதிரை சித்திக் ஆகியோருக்கும் மற்றும் தாமதமாக வந்து வாசிக்க இருக்கும் அமீரக அபிமானி யாசிருக்கும்
வாழ்த்துகளும் துஆவும்.,
அமீரகம்..
அன்பின் அகம்
பண்பின் சுகம்
நட்பிகளில் பேரிடம்
நானிலத்தின் ஓரிடம்
எண்ணெய்ச் சுரங்கம்
என்னை வார்தெடுத்த
எழில்மிகு அரங்கம்
அதிரைப்பட்டினம்
அடியேனின் பாடசாலை
அபுதபிப் பட்டணம்
அடியேனின் தொழிறசாலை
பாலைவனத்தையும்
பசுஞ்சோலையாக்கிய
வேலையாட்களை
வேகமாய் உயர்த்திய
வேகம் குறையாததால்
மோகம் கொண்டு
மொய்க்கின்றோம்!
“யாதும் ஊரே
யாவரும் கேளிர்”
அன்று படித்தோம்
அதிரைப் பள்ளியில்
இன்று உணர்ந்தோம்
இத்தேசப் புள்ளியில்
ஒன்றே இனம்
என்றே மனம்
பாசக் கயிற்றால்
நேசம் கொண்டு
அரவணைக்கும்
அரபி அனைவர்க்கும்
உடன்பிறப்பாய்க்
கடன்பட்டுக் கிடப்பர்!
”உண்ட வீட்டுக்கு
ரெண்டகம் செய்வோரும்”
உண்டிங்கே என்பதுதான்
மண்டைக்குள் வேதனை!
மொழி,மதம் வேறுபாடின்றி
வழிபாட்டுத் தலங்களைக்
கட்டிக்கொள்ள வைத்தவர்களைக்
கட்டிக்கொள்வோம் தேசிய தின
வாழ்த்துரைத்து...
//சற்று மாறுதலாக கவித்தன்மையோடு அனுகிய ஜாகிருக்கும்//
பாஸ்...மெய்யாலுமே நான் வார்த்தைக்கு கீழ் வார்த்தை போட்டுத்தான் எழுதினேன். [ பிறகு எனக்கே சகிக்கவில்லை அதான் எல்லாத்தையும் மொத்தமாக எழுதிவிட்டேன் ]
//பாஸ்...மெய்யாலுமே நான் வார்த்தைக்கு கீழ் வார்த்தை போட்டுத்தான் எழுதினேன். [ பிறகு எனக்கே சகிக்கவில்லை அதான் எல்லாத்தையும் மொத்தமாக எழுதிவிட்டேன் ]\\
மெய்யாலுமே அதான் கவிதை!
Assalamu Alaikkum
Thanks for poetical expression of UAE's Success in 41st National Day celebration. UAE's success like making of a ripened honeycomb and bees, we are one of the bees here.
Almost all of the Dubai living brothers and sisters received SMS greetings message from Shaikh Mohhammed Bin Rashid yesterday evening. I was feeling honoured by the message. (I hope all of other emirates
people also received the message).
His vision is read as "Challenges in the race for Excellence". Shaikh Zayed and Shaikh Rashid, and other good leaders Allah Yarham had good intentions for the people of the country. Its getting realized and people are feeling fortunate to be working and living here. Alhamdulillah.
Our country leaders from Muhalla level to Central Government have to have good intentions and vision, service mindedness and unity. Then its possible to make our place also similar or more than UAE.
Everything based on the quality of intentions in the collective mind.
Wish you all the best.
My favorite lines
//அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது
உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது//
Eventhough Arab countries are squeeze our nerves. Atleast they are providing job to us with trust without degree.. India is one of the country who wastes manpower.
//பாலைவனத்தையும்
பசுஞ்சோலையாக்கிய
வேலையாட்களை
வேகமாய் உயர்த்திய
வேகம் குறையாததால்
மோகம் கொண்டு
மொய்க்கின்றோம்!
யதார்த்தமான எண்ணங்கள் கவியன்பனால் கனமாகின்றன.
thanks for joining the party, bro. Ahmed Ameen.
தம்பி மீராஷா
//India is one of the countries who wastes manpower// exactly. It is not only wasting the manpower, the natural resources as well.
(வாப்புச்சா நினைவுகளிலிருந்து மீண்டாச்சா?)
நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.
அருமையான வரிகள்
யாவரையும் அரவணைத்த
அமீரகத்தை
வாழ்த்துவோம்....
மாஷா அல்லாஹ்...சோறு கொடுத்த இடத்தை செம்மைபடுத்துவது நம் கடமை....கவிக்காக்கா என்னின் அமீரக உணர்வுகளை வார்த்தைகளால் உற்சாகப்படுத்தி கவி மழையாக பொழிந்து இருக்கின்றீர்கள்..வாழ்க அமீரகம் ஓங்குக கவிக்காக்கா புகழ்
மற்ற நாடுகளுக்கு சென்று வந்தால்தான் தெரியும் தெரியும் அமீரகத்தின் அருமை என்னவென்று....தவறுகள் நடக்கவிட்டால் நரகத்திற்க்கு எரிகட்டைகள் ஏது..”இறை பயம் “ ”தனிமனித ஒழுக்கம்” ஒருவனை எங்கு சென்றாலும் வாழவைக்கும் அரசுகள் என்ன சட்டங்கள் இயற்றிலாலும் கூட.....அமீரகம் மறைமுகமாக செய்யும் நன்மைகளை பட்டியலிட்டால் அதுவே ஒரு கின்னஸ் சாதனையாக அமையும்...அல்லாஹ் இம்மக்களுக்கு மேலும் செல்வங்களையும் வளங்களையும் விசாலமாக்கி கொடுத்து கடைசிவரை கண்ணியமாக வாழக்ககூடிய மக்களாக ஆக்கி வைப்பானாக.. மகிழ்ச்சியான ஈத் அல் வத்தனி
Post a Comment