Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓரளவுக்கு அப்டேட்டடா இரிக்கச்சொல்றாப்ளெ...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2012 | , , , , ,


நான் பணிபுரியும் நிறுவனத்தில் கிட்டத்தட்ட சுமார் ஐந்தாண்டு காலம் திட்டமிடல் துறையின் நேரடி பார்வையில் நல்ல அனுபவ தேர்ச்சியுடன் அளவாயர் (Quantity Surveyor  பணியில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டையைச் சார்ந்த என் நம்பிக்கைக்குரிய நண்பர் யாகூப் இப்படி என்னிடம் அடிக்கடி வருத்தப்படுவதுண்டு. அந்த வருத்தத்தை இங்கு பகிர்வதால் அதை படிக்கும் அயல்நாடு/உள்நாட்டு வேலை தேடி செல்ல இருக்கும் நம் இளைஞர்களுக்கு கொஞ்சம் பயனளிக்கும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்கிறேன். 

'என்னா பாய்? நம்ம ஆளுங்க புதுசு, புதுசா லேப்டாப் வாங்குறாங்க, ஃவெய்ஃபை ங்கிறான், வாய்ப்புங்கிறான், வெஸ்ட்டா ங்கிறான், விண்டோஸ் என்கிறார்கள், மொபைல் ஃபோன் புது, புது வெர்சனில் வாங்குகிறார்கள், அண்ட்ராய்ட் என்கிறார்கள், டச் ஸ்கிரீன் என்கிறார்கள், புலூடூத் என்கிறார்கள், வூவூ என்கிறார்கள், ஜி டாக் என்கிறார்கள், ட்விட்டர் என்கிறார்கள், ஸ்கைப்பி என்கிறார்கள், ஃபேஸ் புக்கில் தினுசு,தினுசா ஃபோட்டோக்களை தினம், தினம் அப்டேட் செய்கிறார்கள் இப்படி நவீன யுகத்தில் நித்தம், நித்தம் வருவதை புத்தம், புதியதாக இருக்கும் பொழுதே காசு இருந்தாலும், இல்லா விட்டாலும் கடன் வாங்கியேனும் வாங்கி தன் ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.'

ஆனால் இண்டர்வுயூவில் நம்ம ஆளுகள் என்று எண்ணி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இல்லாம எப்படியாவது நாமாகவோ அல்லது நாலு பேரிடம் கெஞ்சி ரெக்குவஸ்ட் பண்ணி பல சிரமங்களுக்கிடையே வேலையில் சேர்த்து விட்டு புதிய வேலை துவங்கியதும் கம்ப்யூட்டரில் ஒரு  எக்ஸல் ஃபைல் ஒப்பன் செய்து ஒரு சிம்ப்ல் ஃபார்முலா போடச்சொன்னால் கூட 'பேக்கபேக்கண்டு' முழிக்கிறார்கள். இருக்கையில் இருந்து கொண்டு நெளிகிறார்கள். எங்கோ பறந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் ஒரு பணியில் சேருவதற்கு முன் அது பற்றிய குறைந்தளவு அனுபவமும், தயாரிப்பும் செய்து கொள்ளக்கூடாதா?

குறைந்தளவு தேவைப்படும் பணியறிவு கூட இல்லாமல் மேலே கணிப்பொறி சம்மந்தமாகவும், கைபேசி சம்மந்தமாகவும் ஆயிரத்தெட்டு விசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதனால் என்ன பயன்? என்று தான் கண்ட சில சங்கடங்களை என்னுடன் இப்படி வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். இயன்றால் ஒரு கட்டுரையாகவே இதை எழுதிப்போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

நல்ல சம்பளத்தில் மற்றும் இன்ன பிற வசதிவாய்ப்புகளில் குறியாக இருக்கும் நாம் இவை எல்லாவற்றையும் எளிதில் ஏற்படுத்தி தரும் வேலை சம்மந்தமாக மட்டும் ஏன் விழிப்புணர்வு இல்லாமல் மட்டும் இன்னும் இருக்கிறோம்?

நிறுவனத்திற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும். அதுக்கப்புறம் சமாளித்துக் கொள்ளலாம் / பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பது ஒரு காலத்தில் உகந்ததாக இருந்திருக்கும். இப்பொழுது அது முற்றிலும் தவறானது. (காக்கா பாத்துக்கிடுவாஹ, மச்சான் பாத்துக்கிடுவான், மாமா பாத்துக்கிடுவாஹ, ஃப்ரண்டு பாத்துக்கிடுவான், அவன் பாத்துக்கிடுவான், இவன் பாத்துக்கிடுவான் என்று நம்பிக்கொண்டு பிறகு அவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்)

ஒரு காலத்தில் நம்மவர்கள் பாஸ்ப்போர்ட்டின் ஒரு காப்பியை வெளிநாட்டில் இருக்கும் சொந்தக்காரர்களிடம் கொடுத்து விட்டு செக்கடி மோட்டிலோ அல்லது வெட்டிக் குளக்கரையிலோ உட்கார்ந்து அவர்களுக்கும் விசா ரெடியாகி இன்று அவர்களில் பலர் வாழ்வின் உச்சத்தில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அக்கால நடைமுறை பழக்க,வழக்கம் இந்த காலத்துக்கு சரிப்பட்டு வராது, சுறுசுறுப்பா, சூட்டிக்கையா, அப்டேட்டடா இன்றைய இளைஞர்கள் இருக்கனும்ண்டு சொல்றாப்லெ.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

17 Responses So Far:

Yasir said...

//சுறுசுறுப்பா, சூட்டிக்கையா, அப்டேட்டடா இன்றைய இளைஞர்கள் இருக்கனும்ண்டு சொல்றாப்லெ..// இதனை யாசிரு வழிமொழியிறாப்ல.....நல்ல உரப்பான மிளகாயை எரிவு அதிகமா தெரியிற இடத்துல வச்சு தேய்ச்சாப்புல நச்சுண்டு சொல்லி இருக்கிறீங்க சகோ.நெய்னா
நண்பர் யாகூப்-க்கு ஒரு சலாம் சொல்லிடுங்க

Ebrahim Ansari said...

நல்லதையும் உள்ளதையும் நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

நச்னு சொன்னிய,
பச்னு பத்திக்கிச்சு
புள்ளைங்க நம்மப் பேச்சைக் கேப்பாங்களா? அவுக இஸ்டத்துக்கு நடப்பாக!

sabeer.abushahruk said...

நல்லதையே சொன்னார் தங்கள் நண்பர்; நன்மையையே வென்றீர் அதைப் பகிர்ந்து.

அப்டேட்டடாக இருப்பது ஒன்றே வாழ்க்கையை அவுட்டேட்டடாக ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.

இது, தேடும் வேலைக்கும் பொருந்தும்; ஓடும் வேளைக்கும் பொருந்தும்.

அவனவன் சொய்ங் சொய்ங் என்று போய்க்கொண்டிருக்கும்போது நாம மட்டும் ஹை ஹை ந்தா ப்ர்ர் ஹை என்று இருந்தால் வாழ்க்கை கட்டவண்டி மட்டுமல்ல நொட்ட வண்டியாப் படுத்துடும்.

வாழ்த்துகள் தம்பி நெய்னா.

Irfan s/o (Japan) Sheikh Abdul Cader said...

M.S.M. Naina Mohamed, appreciate your expression about the our brothers who are desperate in seeking jobs in overseas countries. As you have well expressed now-a-days our boys migrating to abroad with raw hands and they never intend to improve their knowledge and or common sense while they have numerous chances to learn in India itself. It is no wonder to say that most of our brothers degrees ends up with their marriage invitation. After their marriage they are not at all even activating their academical knowledge while they go for jobs desperately.

Irfan s/o (Japan) Sheikh Abdul Cader said...

M.S.M. Naina Mohamed, appreciate your expression about the our brothers who are desperate in seeking jobs in overseas countries. As you have well expressed now-a-days our boys migrating to abroad with raw hands and they never intend to improve their knowledge and or common sense while they have numerous chances to learn in India itself. It is no wonder to say that most of our brothers degrees ends up with their marriage invitation. After their marriage they are not at all even activating their academical knowledge while they go for jobs desperately.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): நாமலும் சொல்லிகிட்டேதான் இருக்கோம்... ஒருசிலரைத் தவிர, இன்னும் upgrade செய்வதற்கான ஆயத்த முயற்சிகள் கூட எடுக்காமல் இருந்து கொண்டு சேர்த்து உட்டாங்க இன்னும் அப்படியேதான் இருக்கேன்னு புலம்புவதை என்ன செய்யலாம் !?

Shameed said...

எல்லோரும் நடக்குறப்ப நாம ஓட முயற்சி பண்ணனும்
எல்லோரும் ஓட முயற்சி செய்றப்ப நாம பறக்க முயற்சி பண்ணனும்
இதைத்தான் நம்ம MSM டிய்டைலா சொல்றாப்லெ

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவரு சொல்றாப்ளெ, இதுக்கும் தயாராயிருக்கனுங்குரதும் சரிதான்.

ZAKIR HUSSAIN said...

TO Bro MSM Naina Mohamed,

" ஏதாவது வேலை கொடுங்கள்" என்ற வார்த்தையை கேட்டால் 'பாவம் ரொம்ப கஷ்டப்படுகிறவர்" என்று நினைத்தால் " எதுவுமே எனக்கு தெரியாது" என்று கடைசியில் ஆகிவிடுகிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நைனா நல்ல அப்பு அப்பிருக்கீங்க நம்ம மூஞ்சுல இனியாவது தூக்கம் கலையனும். பார்க்கலாம்.

Ebrahim Ansari said...

நான் எழுதி முன்னர் அ. நி யில் வெளியிடப்பட்ட அர்ப்பணிப்பும் அங்கீகாரமும் - அனுபவம் பேசுகிறது என்ற தலைப்பிட்ட பதிவில் இருந்து

"தான் ஈடுபட்டு இருக்கும் வேலை சமபந்தப்பட்ட கல்வித்தகுதிகளை வேலை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT என்று கூறலாம்.

ஒரு மரம வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10 மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் போனான். தனது பிரச்னையை சொன்னான். தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை என்றான். முதலாளி சிரித்துக்கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கிபார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது. மரம்வெட்டியிடம் இவ்வாறுகூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிக மரம வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20 மரம வெட்ட முடிந்தது.
மரவெட்டிக்கு சொல்லப்பட்டது பணியில் உள்ள எல்லோருக்கும் பொருந்தும் . கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக்கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக்கொள்ளவேண்டும். அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள்."

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்லதையும் உள்ளதையும் நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

அப்துல்மாலிக் said...

காலம் எழுந்து நில் என்று சொல்லும்போது,
உட்கார்ந்திருந்தால்,
பின்னர் படுக்க வேண்டியதாகி விடும்...

-- இது இங்கே செம்மையா ஒத்துப்போகும்னு நினைக்கிறேன்
என்னா நெய்னா நா சொல்றது...

Unknown said...

//குறைந்தளவு தேவைப்படும் பணியறிவு கூட இல்லாமல் மேலே கணிப்பொறி சம்மந்தமாகவும், கைபேசி சம்மந்தமாகவும் ஆயிரத்தெட்டு விசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதனால் என்ன பயன்?//

Its compulsion of the time.

//நல்ல சம்பளத்தில் மற்றும் இன்ன பிற வசதிவாய்ப்புகளில் குறியாக இருக்கும் நாம் இவை எல்லாவற்றையும் எளிதில் ஏற்படுத்தி தரும் வேலை சம்மந்தமாக மட்டும் ஏன் விழிப்புணர்வு இல்லாமல் மட்டும் இன்னும் இருக்கிறோம்?//

Because of laziness in the mind.

So, we can conclude that people are in general doing things(improvements) out of compulsion otherwise just want being lazy.

My previous room mate commented (funny) that lets tell our company to bring our monthly salary to our room, without going to work.

All of our people are capable. We need more different kind of motivational thoughts(in the form of articles) to improve their(our) self esteems.

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

Dear MSM,

While you are giving this (X)mark for "later" in the above diagram, it is known that "laziness" is the main barrier for our success.So, we have to "install" right now the knowledge into our brain so as to obtain perfect gain at all.

I asked a boy in our hometown, "Why don't you go to type-writing institute for learning how to type letters?". He replied that he didn't like to learn type-writing course, instead he would type by watching the monitor while typing and he might correct if any mistakes would be found. This is called "laziness". I told him that he wouldn't get speed in typing while his manager would be giving an urgent task to do then. He didn't listen my advice. I assure that he will face problem while attending an interview.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு