மின்னஞ்சலில் ஜங்க் மெயில் பெட்டியை நிரம்பி வழிய வைப்பதிலாகட்டும், இணையத்தில் எண்ணிலடங்கா பதிவுகளாகட்டும், பத்திரிகைகளில் பரபரப்பை ஏற்படுத்து வதிலாகட்டும், தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் நேர்த்திக் கடன்கள் கழிக்க எடுக்கும் சிரத்தை களாகட்டும். அனைத்திற்குமே... டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப் போவதாக ஆர்ப்பரிக்கும் அதோகதி ரசிகர்களே !
இதற்கென ஏராளமான ஃபார்வேர்டு மெயில்களையும், ஆங்காங்கே கண்ணில் பட்ட கட்டுரைகளையும் அனுப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு உலகம் அழியும் முன்னர் மறவாமல் தெரியப்படுத்துவது என்னவென்றால். நீங்கள் அனுப்பிய / அனுப்ப இருக்கும் அனைத்து கட்டுரைகளையும் ஃபார்வேடு மின்னஞ்சல்களையும் தாங்கள் குறிப்பிட்ட அந்த உலகம் அழிந்த பின்னர் பதிவுக்குள் கொண்டு வரலாமே என்று அகில உலக மாயன் ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்...
அந்த காலெண்டரில் குறிப்பிட்ட நிகழ்வு நடந்ததும் அதனை ஒரு காணொளியாக பதியலாம் என்றும் முடிவாகியிருக்கிறது.... :)
'அடி'க்குறிப்பு : நகைப்புக்கு மட்டுமே அன்றி சீரியஸாவெல்லாம் இல்லேங்க !
அபூஇப்ராஹீம்
10 Responses So Far:
மாயன் பண்ணிய சதியால் ஒரே நாளில் 3 பதிவு!
அப்ப "மஞ்சளும் மங்களமே" பதிவில் பார்க்க முடியாதா?
அழிவு பற்றி மனிதனுக்கு அறிவு கிடைத்து விட்டால் இந்த உலகமே இயங்காது. துபாய் போன்ற வளைகுடா நாட்டிலோ, இங்லாந்து போன்ற மேலை நாட்டிலோ இன்று யாரும் இருக்க மாட்டார்கள்!
உலகம்தான் அழிய போகிறதே என்று
வங்கியில் பெரிய லோனாக போட்டு
ஜாலியா இருக்க முயச்சிக்கலாமே
கையில் உள்ள கடன் அட்டைகளில்
ஆடம்பர பொருள் வாங்கி ஜாலியா
இருக்கலாமே ..வங்கியில் உள்ள
கேசியர் வரும் வாடிக்கையாளருக்கு
தலைச்ச கணக்கில் இலவசமாக
பணத்தை அள்ளி இறைக்கலாமே
மேனேஜர் தட்டி கேட்டால் ஒரு அரை
விடுங்கள் என் என்றால் மாயன்
காலண்டர் படி உலகம் அழிய போகிறது
நடப்பது நடக்கட்டும் என்று தடாலடியாக
இறங்க வேண்டியது தான் ....
குறிப்பாக ஜெயலலிதாவிற்கு மந்திரிகள்
கும்பிட தேவை இல்லை ..ஆசை பட்டால்
போடி ..போ.. என்று சொல்ல வேண்டியது தான்
//அப்ப "மஞ்சளும் மங்களமே" பதிவில் பார்க்க முடியாதா?//
மஞ்சள் மயக்கத்தில் இருந்து விட்டேன், விரைவில்... தலை(ப்பி)யில் கை வைத்த பின்னர்...
\\மஞ்சள் மயக்கத்தில்\\? அல்லது மஞ்சத்தின் மயக்கத்தில்..
காயம் படாமல்
கழிந்தது இன்று
மாயன் ஏமாந்தான்
மனிதர்களை மூடர்களாக்கி
உடைந்தது மூடநம்பிக்கை
உலகம் அழிவென்பது
படைத்தவன் கைவசம்
பாருணர்ந்துப் பார்க்குமா?
குர்-ஆன் ஹதீஸ் வாக்குறுதி
குறைவிலாச் செயலுறுதி
ஒருநாளும் பொய்க்காது
ஒப்புக்கொள் மானிடனே!
இன்னும் முடியல?
ஹி ஹி
//மாயன் ஏமாந்தான்//
மாயனல்ல கவியன்பன், ஏமாந்தது அவனை நம்பியோர்.
நாயனை நம்பியோர் இதே பூமியில் வாழ்க்கையைத் தொடர, மாயனை நம்பியோரின் உலகம் அழிந்துபோனதால் இனி அவர்களுக்கு இரவல் பூமியும் வாடகை வானமும்தான் வாய்க்கும்.
திருந்துங்கடா திருவாலியத்தவன்வலா!
சரியாகச் சொன்னீர்
சபீர் எனும் கவிவேந்தரே!
புரியாமல் புலம்பியோர்
”புதிய பூமியில்”
இரவல் கொடுத்தவன்
இறைவன் ஒருவன்
இரவும் பகலும்
இயக்கும் அருளவன்!
அழிந்து விட்டதாய்
அங்கலாய்த்த மாயானர்
கழிந்தக் குற்றத்தை
கணமேனும் அறிவாரோ?
//நாயனை நம்பியோர் இதே பூமியில் வாழ்க்கையைத் தொடர, மாயனை நம்பியோரின் உலகம் அழிந்துபோனதால் இனி அவர்களுக்கு இரவல் பூமியும் வாடகை வானமும்தான் வாய்க்கும்.//
மிகச்சரியாகச் சொன்னாய்!
காலண்டரின் பெயரே சரி இல்லையோ (மாயன்)
இது மாங்காய் மடையர்களுக்கு தயாரிக்கப்பட காலண்டரா இருக்குமோ!
Post a Comment