லண்டன் பனிவிழும் மலர்வனம் அதிரைநிருபர் வாசர்களுக்கு நினைவிருக்கலாம், அடுத்த பனிப்பொழிவு சீஸனுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், லண்டன் நகர வீதிகளில் மஞ்சள் போர்த்திய மரங்களை காணும்போதெல்லாம் மனம் மகிழ்வை தருகிறது. இதமான இலைகள் விரிந்து கிடப்பதை பார்க்கும்போது வண்ணச்சாயம் பூசிய இலை மேடை போல காட்சி தரும் சாலையோர காட்சிகளை உங்களனைவரின் பார்வைக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைகிறேன்.
M.H.ஜஹபர் சாதிக்
22 Responses So Far:
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் அள்ளும்
மஞ்சள் மலர்கள்
பச்சை பசுமையெனில்
மஞ்சள் மகிமை
எம் ஹெச் ஜே,
இவை
பிறப்பிலேயே இத்தனை அழகா
வளர வளர
வர்ணமயமாயினவா?
மஞ்சள் நடை மேடைகளுக்கு நடுவே... அகல இரயில் பாதை ! அதுவும் அவங்க போட்ட பாதை !
கீறல் இல்லாத நேர்கோடு ! அருமை !
நெஞ்சை அள்ளும் மரங்களே
நீண்ட தெருவில் போர்த்திய
மஞ்சள் வண்ணப் போர்வையாய்
மலர்கள்; இலைகள் மாறின!
வீதி இன்னும் உறங்கவே
வெளிச்சம் உதிக்கும் வரையிலே
மீதிப் பொழுதைக் கழிக்கவே
மிதிக்க வேண்டாம் மலர்களை!
பழுத்த இலைகள் அன்பினில்
பண்பு நிறைந்த நட்பினில்
பழுத்த மனிதர் போலவே
பயன்கள் தருதல் காணலாம்!
முதலில் ரசித்த மூவருக்கும் என் இனிய முகமன் உண்டாவதாக!
கவிஞர்கள் மன்னிக்கவும்.
இப்படங்களில் அணுகளவும் மலர்களே கிடையாது.
அத்தனை மஞ்சள் வண்ணங்களும் இலைகள் மட்டுமே!
குளிரின் பிடியில் தாங்கமுடியாமல் பச்சை பழுத்து மஞ்சளாகி அவை அனைத்தும் கொட்டிவிடும்.
பின் வெறும் மரங்களாகி கோடை துவக்கத்தில் வெறும் மலராய் காட்சி தந்து, பின் மீண்டும் பசுமையாய் இலைகளாகும்.
பிரிட்டிஷ்காரர்கள் பழமையை பாதுகாப்பவர்கள் என்பதின் அடையாளமாய் அந்த ரயில்வே ஸ்டேசன். பச்சை / மஞ்சள் மரங்களின் இத்தனை அணிவகுப்பும் எம் ஹெச் ஜே ..போட்டோகிராபி போட்டிக்கு தயாராவதை காண்பிக்கிறது.
இந்துக்களின் ஒரு பழக்கமுன்டு அதாவது ஒருவரை வறவேற்க்க தாம்புலத்தட்டில் மஞ்ஞல் தண்ணீரை வைத்து வரவேற்ப்பார்கள் அது போல் பனிகாலம் வருவதை வரவேற்க்கிறதோ லன்டன் மா நகரம்
இலையுதிர் காலம் இது.... பனி விழும் நேரம் இது...
ஓ!
தலைகள் முதிர்ந்தால்
வெளுப்பதுபோல்
இலைகள் பழுத்து
உதிர்ந்தனவோ
லண்டன் இலயுதிர்காலம்
என்றன் பார்வைக்கு
மலருதிர்கோலமாய்...
காட்சி மயக்கம்!
இக்காலகட்டத்தில்
லண்டன்வாசிகளின்
கண்களில்
கருவிழி தவிர்த்த
பகுத்தியிலெல்லாம்
கலர் விழிகள்தானோ?
கவனம்,
ஒரு சில கிளகள்
உடையுறிப்பதைப்போல
இலையுதிர்க்கின்றன...
நிர்வாண மரங்கள்
தணிக்கை செய்யப்படும்!
வாவ்...இந்த மாதிரி சூழ்நிலையில் வாழ்வதே ஒரு விதமான மனமகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்....எம்.ஹச்.ஜேவின் கேமரா கம்பீரத்தில் இலைகளின் அணிவகுப்பு....சிம்பிளி சூப்பர்
அருமையான ஒரு பதிவு அங்கு இருப்பதை போல் ஒரு நினைவு .....
மஞ்சள் படங்கள் அற்ப்புதம்
நம்ம தமிழ் நாட்டில்மட்டும் மச்சளும் பச்சையும் மாறி மாறி வருதே (ஆட்சி)அது மட்டும் ஏன்
ரயில்வே ஸ்டேஷன் நம்ம ஊர் சாடை தெரிகின்றது ஆனா சுத்தபத்தமா இருக்கு
/நம்ம தமிழ் நாட்டில் மட்டும் மஞ்சளும் பச்சையும் மாறி மாறி வருதே (ஆட்சி)அது மட்டும் ஏன்//
கருணாநிதியும் ஜெயலலிதாவும் பண்ணுர நாடகம் மட்டுமல்ல. அவங்க ரெண்டு பேரும் பண்ணுர ரகசிய (உடன்பாடோ!) சதி! அதற்கு தமிழக மக்களே பலி கடா!
//ரயில்வே ஸ்டேஷன் நம்ம ஊர் சாடை தெரிகின்றது ஆனா சுத்தபத்தமா இருக்கு//
ரொம்ப பிசியான இடத்தை காட்டினால் நம்மூரு நினைப்பு வராது. இப்படியாவது காட்டி நம்ம மக்களை உசுப்பேத்தலாம்னு தான்!
மலரை இலையாக்கி
மஞ்சளை நரையாக்கி
வெற்று மரத்தை நிர்வாணப்படுத்தி
வெண் விழிகளை வண்ணப்படுத்தி
கவிப்படுத்திய சபீர் காக்காவின்
கவியும் வண்ணமயம்.
மேலும் ரசித்து கருத்திட்ட
ஹமீதாக்கா, சகோ. கமாலுதீன், நண்பர் யாசிர், சகோ சபி அகமது, ஜாஹிர் காக்கா, கலரை கவிப்படுத்திய கலாம் காக்கா, நெ.த.காக்கா, சபீர் மச்சான், சபீர் காக்கா இன்னும் கண்ணால் ரசித்திடும் யாவருக்கும் நன்றி & அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் MHJ,
அனைத்து புகைப்படங்களும் அருமை.
இன்னும் கலைஞர் இந்த புகைப்படங்களை பார்க்கவில்லை. பார்த்த லண்டன் வந்திடுவாறு.
படங்கள் அனைத்தும் அருமை!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
அனைத்து புகைப்படங்களும் அருமை.
அஸ்ஸலாமு அலைக்கும். பஞ்சோந்தி நிறம் மாறும், இங்கே பச்சையே நிறமாறும் கோலம்!மஞ்சள் ,இளம் சிவப்பு.இளம்பச்சை,வெளிர் நிறதளிர் இப்படி களிப்பூட்டும் காட்சியை புகைப்படத்தில் பதிந்த இளம் கவிஞர் கேமிரா கவிஞராகவும் காட்சி அளிக்கிறார்.வாழ்த்துக்கள்.
மஞ்சள் விரித்த மா மரங்கள்
மங்கள கரமாய் தோற்றங்கள்
மரகத பச்சை காணலயே
லண்டன் கல்சர் காண்கிறதே
(மஞ்சள் பத்திரிக்கை)
மகரந்த சேர்க்கை எப்போது
கனிகளை பார்க்கணும் அப்போது
அஸ்ஸலாமு அலைக்கும்
மேலும் கருத்திட்ட சகோ, தாஜுதீன், க்ரவ்ன், அபூசுலைமான், சலீம், மஞ்சளுக்கு மங்களம் சேர்த்த சபீர் மச்சான் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
Maasa allah.. mr jafer bhai. U took these are picture very beautiful
Post a Comment