தொடர் நிறைவுக்கு எட்டியிருப்பதால் ஒரு சில [Bit news] துண்டு துண்டான செய்திகளையும் கூறி நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
.# கி.மு. 1500-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த எகிப்தியர்கள் ‘இறந்த பின் ‘ஓசிஸ்’ என்ற கடவுள் தாங்களை விசாரிப்பார்’ என்றும் செய்த பாவங்களுக்கு தண்டனை கொடுப்பார்’ என்றும் நம்பினார்கள். ஒருவர் இறந்து விட்டால் அவர் பாவங்களை’ மன்னித்து நல்லிடம் கொடுக்க வேண்டிக் கொள்ளும் ‘கருணை மனு’ ஒன்றையும் சேர்த்து அவரோடு புதைத்து விடுவார்களாம். பைப்ராஸ் இலையில் இந்த மனுவை எழுதுவார்களாம். இதற்கு ‘செத்தவரின் புத்தகம்’’ [The Book of the Dead] என்று பெயராம்.
# Rig-Veda ரிக்வேதம் இதுவும் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முந்திய நூல் 1028-சமஸ்கிருத மொழிப் பாடல்களை கொண்ட இந்துக்களின் வேதநூல். கி.மு1500-ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையே இது கூறுகிறது.
# கி.மு. 850-ஆண்டுகளில் ஊருக்கு ஊர் பாட்டு பாடித் திரிந்த ஒரு நாடோடி குருடன் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹோமர் [Homer] அவர் ஊர் ஊராக அலைந்து திரிந்து பாடிய பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி இரண்டு தொகுதியாக தொகுத்தார்கள். ஒன்று ‘இலியாட் [Illiad] என்றும், இன்னொன்று ஓடிஸி [Odyssey- அல்லது Ulysses] என்ற பெயரிலும் வெளியானது. கிரேக்க நாட்டில் நடந்த திரோஜான் போர் முடிந்து ஹோமர் ஊர் திரும்பும் வழியில் பாடிக் கொண்டே வந்த பாடல்களின் தொகுப்பே இந்த இரண்டு புத்தகங்களும்.
.# நோபல் பரிசு பட்டியலில் புத்தகத்திற்கு பரிசு கொடுப்பது அதற்கு கிடைத்த பெருமை, உலகளாவிய அங்கிகாரம்.
# லண்டன் மாநகரில் சட்டக் கல்லூரியில் படித்த இரண்டு சகோதரர்கள் இறுதி தேர்வில் தோல்வி அடைந்தார்கள். விரக்தி அடைந்த இருவருக்கும் மேலும் படிப்பை தொடர மனமில்லை - பணமில்லை. வேறு ஏதேனும் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. அவர்கள் படித்த சட்ட புத்தகங்களும் இதர பொழுது போக்கு நாவல் மற்றும் பல புத்தகங்களும் வேலை தேட தடையாக நின்றது. இந்த புத்தகங்களை என்ன செய்வது? கேள்வி முளைத்து இங்கே பதில் கிடைப்பது எங்கே? இரு சகோதரர்களும் விடை தேடி மூளையை கசக்கினார்கள். கொஞ்ச நேரத்தில் உதித்தது ஒரு பதில். வந்த பதிலும் கேள்வி வடிவிலேயே வந்தது. ’’நாமே இந்த புத்தகங்களை லண்டன் நடை பாதையில் போட்டு விற்று முடித்தபின் வேறு வேலை தேடினால் என்ன?” இதை கேட்ட மற்றவருக்கும் அது சரி என்றே பட்டது.
அடுத்த நாள் லண்டனில் ஜன நடமாட்டம் நிறைந்த வீதியோரம் கடை விரித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேல் வியாபாரம் சூடுபிடித்து ஓடியது. புத்தகம் வாங்க வந்தவர்களில் பலர் ‘’எங்களிடம் பழைய புத்தகங்கள் நிறைய இருக்கிறது, வாங்கிக் கொள்கிறீர்களா?’’ என்றார்கள். அதையும் வாங்கி போட்டார்கள். வியாபாரம் எக்ஸ்பிரஸ் வேகத்தை நெருங்கியது.
இரு சகோதரர்களும் வேறு வேலை தேடும் எண்ணத்தை ‘கை’ கழுவினார்கள். ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?’ [Opportunity Knocks Only Once – இது [ஆங்கில பழமொழி] கிடைத்த நல்வாய்ப்பை ’கப்’பென்று பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். வியாபாரம் பிய்த்துக் கொண்டு ஓடியது. இடநெருக்கடி வந்தது. அருகிலுள்ள கட்டிடத்துக்கு வியாபாரத்தை இடம் மாற்றினார்கள்.
1903ஆம் ஆண்டு லண்டன் மாநகர் நடைபாதையில் தொடங்கிய பழைய புத்தகக் கடை தன் 110-ம் ஆண்டுபிறந்த நாளை கொண்டாடிவிட்டு 111-ம்ஆண்டில் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோடுகிறது.
1903-ஆண்டு William Foyles-Gill Bert Foyles என்ற இரு சகோதரர்கள் லண்டன் மாநகர் நடை பாதையில் ஆரம்பித்த பழைய புத்தகக் வியாபாரம் இன்று no: 111-119 Charing Cross Road, London. WC.24 முகவரியில் மூன்று அடுக்குமாடி கட்டிடத்தில் வானுயுற ஓங்கி வளம் பெற்று வளர்ந்து நிற்கிறது. அதோடு இன்னும் பல இடங்களிலும் இதன் கிளைகள் வேர் விட்டு வளர்ந்து நிற்கிறது.
இதுவரை எந்த புத்தகக் கடைக்கும் இல்லாத சரித்திர சிறப்பு இந்த கடைக்கு உண்டு. அது என்ன சிறப்பு? இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் போர் விமானங்கள் லண்டன் மாநகர் மீது குண்டுகளை கொட்டிய போது இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் சுருட்டுப் புகையை வெளியே ஊதிக் கொண்டு அமைதியாக சொன்ன வார்த்தை ’’London can take it’’ இந்த வாசகம் என்றும் சாகவரம் பெற்ற ஒரு திருவாசகம்.
தன்னை எதிர் கொள்ளும் பிரச்சனை எதுவானாலும் எதையும் தாங்கும் இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள்l வின்ஸ்டன் சர்ச்சிலின் ’’London can take it” என்கிறார்கள்.
அதே சமயம் Foyel சகோதரர்கள் தங்கள் புத்தக கடை கட்டிடத்தின் மேல்தளத்தில் ஹிட்லர் எழுதிய Mein Camp. [எனது போராட்டம்] என்ற புத்தகங்களை பரப்பி ["Drop your Bombs Here"] உன் குண்டுகளை இங்கே போடு’ என்று எழுதி வைத்தார்கள்.
Foyles புத்தகக் கடையில் ‘’மனசாட்சி மணி ஆர்டர்’ என்று ஒரு பகுதி திறந்தார்கள். இது ஏன்? சில நேரங்களில் சில மனிதர்கள், சபலங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம். அந்த நிலை வரும்போது சில நல்லவர்களும் தீய வழிகளில் செல்லக் கூடும். இந்த சபலம் சிலரைத் திருடவும் தூண்டும். சபலத்திற்கு அடிமையாகி புத்தகங்களை திருடிய சிலருடைய மனசாட்சி சில நேரங்களில் மனதை குத்தலாம். அதை நிவர்த்திக்க திருடிய புத்தகத்தின் விலையை மணி ஆர்டரில் அனுப்பி ‘பாவமன்னிப்பு’ பெறவே ’மனசாட்சி’ மணி ஆர்டர்’ திட்டம். இது நல்ல பலனைக் கொடுத்தது. நிறைய’ மணி’ஆர்டர்கள் வந்து குவிந்தது லண்டானில் Foyels மூன்று மாடிகள் கொண்ட புத்தகக் கடையே முழதும் சுற்றிப் பார்க்க ஆசையா கண்ணா? பனிரெண்டு கிலோ மீட்டர் நடக்க முடியுமா கண்ணா? முடிந்தால் பாத்துட்டு வா கண்ணா!’ கட்டுரை நிறைவு பெறும் தறுவாயில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதையோடு கட்டுரை நிறைவு பெறுகிறது.
‘அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி
குறுகிய செயல்கள் போக்கி
குவளையம் ஓங்கச் செய்யும்
நறுமண இதழ் பெண்ணே
உன் நலம் காணார்
ஞாலம் காணார்’
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எட்டி எட்டி எழுதி இருக்கிறேன். என் முயற்சிக்கு ஊட்டசத்து ஊட்டிய மைத்துனர் இப்ராஹீம் அன்சாரி, அ.நி.நெறியாளர் தம்பி அபூஇப்ராஹீம், தம்பி தாஜுதீன் ஆகியோருக்கும் என் நன்றியையும் சலாத்தையும் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.
அதற்கெல்லாம் மேலாக என் நாட்டத்தை தடை இன்றி நிறைவு செய்து தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றியையும் அவனிடமே என் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்!
மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு சூழலில்....!
S.முஹம்மது ஃபாருக்
12 Responses So Far:
புத்தகக்கண்காட்சி ஆரம்பித்த தாங்கள் இவ்வளவு சீக்கிரம் கண்காட்சியை மூடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும் இதுவரை அறியா அறிய பல தகவல்களை தந்து இத்தொடரை சிறப்பித்த தங்களை மற்றுமொரு சூழலில் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்
அபு ஆசிப்.
Assalamu Alaikkum
Dear Uncle,
The series "ஒரு புத்தகம் பிறக்கிறது" have given us so much juice of knowledge and wisdom buried while we are reading between lines.
Great work. MashaAllah.
May Allah enrich our knowledge.
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
பிறந்த புத்தகம் இன்னும் வளர்ந்திருக்கலாம். சட்டென்று முடித்த மாதிரி இருக்கிறது.
அடுத்த பதிவு எதைப் பற்றியது என்று ஒரு க்ளூ கொடுக்கக் கூடாதா?
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.
அருமையான தொகுப்பை அப்படியே மனதிலே போட்டு புதைத்து வைத்திருக்காமல், எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த தளத்தில் களமிறக்கி, எங்களை உங்கள் கைபிடித்து அழைத்துச் சென்ற விதம் மறக்கவியலாத பயணம் !
செல்லுமிடங்களிலெல்லாம் அதன் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதிலும், நிறுத்தம் வரும் இடங்களில் நிமிர்ந்து உட்காரவைக்கும் நிஜங்களோடு நீராட வைத்தததையும் சொற்களால் சொல்லிவிட்டுச் சொல்லவியலாது !
உங்களின் கருத்தாடல்கள் கடந்த மூன்று வாரங்களில் குறைந்தாலும், ஏற்கனவே நீங்கள் நிறைத்து வைத்திருக்கும் குவியலிள் இருந்து அவ்வப்போது அள்ளிக் கொள்கிறோம்.
ஆரோக்கியம் பேணிக் கொள்ளுங்கள், கால்பிடிப்பவர்கள் மத்தியில் கால்களே பிடித்துக் கொண்டால் தடவித்தான் கொடுக்கனும் என்று எழுத்தாலும் எண்ணங்களாகும் எடுத்து வைத்தீர்கள்...
அடுத்த தொடர் எப்போது என்று காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...
நூலகம் வந்தமர்ந்துப் படித்தோம் நுண்மான் நுழைபுலம் கண்டோம்
ஞாலமும் போற்றுகின்ற மிகைத்த ஞானம் இருப்பதைக் கண்டோம்!
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
அதிரையிலிருந்து லண்டன் புத்தகத் தகவல்கள் அருமை.
இப்படிக்கு,
அடுத்த தொடரை ஆவலுடன் எதிர் கொள்ளும் ரசிகர்களின் வரிசையில் ஒருவன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்களின் சார்பாக.
=================================================
தம்பி சபீர் அவர்கள்
//அடுத்த பதிவு எதைப் பற்றியது என்று ஒரு க்ளூ கொடுக்கக் கூடாதா?//
தம்பி அபூ இப்ராஹீம்
//அடுத்த தொடர் எப்போது என்று காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...//
தம்பி ஜகபர் சாதிக்
//அடுத்த தொடரை ஆவலுடன் எதிர் கொள்ளும் ரசிகர்களின் வரிசையில் ஒருவன்.//
அனைவரின் அன்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. சற்று உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் உங்கள் அனைவரின் து ஆவின் பலத்தோடு நலம் பெற்றதும் மீண்டும் எழுதுவார்கள்.
படித்த பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள்.
வஸ்ஸலாம்.
அன்புமிக்க எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு ....அதற்குள் முடிந்த தொடர் நிறைய விசயங்களை தாங்கி வந்திருக்கிறது.
இருப்பினும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மீண்டும் ஒரு ஆக்கத்தில் சந்திக்களாம்.
//பிறந்த புத்தகம் இன்னும் வளர்ந்து இருக்காலாம்// பிறக்கும் போதே ''சரியான தொட்டிலும் தாலாட்டும் பாலூட்டும் கிடைக்குமா?'' என்ற கேள்வியோடுதான் குழந்தை பிறந்தது.
குழந்தையை கையில் வாங்கிய தம்பி அபூஇப்ராஹிம் அவர்கள் கொடுத்த
முதல் கமெண்ட் ''அதிரை நிருபருக்கு இது முற்றிலும் மாறான புதிய வரவு! நல்லவர வேற்பை பெறும்!'' என்பதாகும்.
S.முஹம்மது.பாரூக்.அதிராம்பட்டினம்
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா
உங்கள் அனைத்து பதிவுகள் கருத்துக்களை உடனே வாசிக்க தவறியதில்லை. நான் ஊரில் இருக்கும் போது நீங்கள் புத்தகங்கள் தொடர்பாக சொன்ன தகவல்கள் இன்னும் நினைவில் உள்ளது. உங்கள் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது. உங்கள் வயதை நாங்கள் அடைந்தால் இது போன்ற ஞாபகசக்தி எங்களுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியே.
பல சிரமத்துக்கு மத்தியில், சிறப்பான தகவல் பொக்கிஸத்தை தந்துள்ளீர்கள்.
இருப்பினும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மீண்டும் ஒரு ஆக்கத்தில் சந்திக்களாம். காக்கா..
ஜஸக்கல்லாஹ் ஹைரா..
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான தொகுப்பை அப்படியே மனதிலே போட்டு புதைத்து வைத்திருக்காமல், எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த தளத்தில் களமிறக்கி, எங்களை உங்கள் கைபிடித்து அழைத்துச் சென்ற விதம் மறக்கவியலாத பயணம் !
செல்லுமிடங்களிலெல்லாம் அதன் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதிலும், நிறுத்தம் வரும் இடங்களில் நிமிர்ந்து உட்காரவைக்கும் நிஜங்களோடு நீராட வைத்தததையும் சொற்களால் சொல்லிவிட்டுச் சொல்லவியலாது !
உங்களின் கருத்தாடல்கள் கடந்த மூன்று வாரங்களில் குறைந்தாலும், ஏற்கனவே நீங்கள் நிறைத்து வைத்திருக்கும் குவியலிள் இருந்து அவ்வப்போது அள்ளிக் கொள்கிறோம்.
ஆரோக்கியம் பேணிக் கொள்ளுங்கள், கால்பிடிப்பவர்கள் மத்தியில் கால்களே பிடித்துக் கொண்டால் தடவித்தான் கொடுக்கனும் என்று எழுத்தாலும் எண்ணங்களாகும் எடுத்து வைத்தீர்கள்...
அடுத்த தொடர் எப்போது என்று காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...
---- நன்றி!(சொல்லக்கூடாது அபு.இபு காக்காவுக்கு)
Post a Comment