அல்லாஹ்வின் திருப்பெயரால்…
முந்தைய பதிவில், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் எப்படி அன்பாக நடந்து கொண்டு சந்தோசமாக இருந்தார்களோ அவற்றில் ஒரு சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி படிப்பினைப் பெற்றோம். அதன் தொடர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது.
அல்லாஹ் கூறுகிறான்: “பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.”(அல்குர்ஆன் 36:36)
“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:21)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
பரிசுத்த திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனத்தின் செயல் வடிவமாக நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் அழகான, உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் பலவற்றையும் நாம் காண முடியும். நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரின் கவலைகளைப் புரிந்துகொண்டார்கள். அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் வீடுகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஏராளமான முன்மாதிரிகள் உள்ளன.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்குள் வரும்போது சலாம் சொல்லிவிட்டுத் தான் உள்ளே நுழையும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள். தம் பிள்ளைகள், உறவுகளின் வீட்டிற்குச் சென்றாலும் சரி சலாம் சொல்லும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளார்கள்.
நாம் எத்தனை முறை வெளியில் சென்றுவிட்டு நம் வீட்டிற்கு செல்லுகிறோம், அதில் எத்தனை முறை சலாம் சொல்லிவிட்டு செல்லுகிறோம்? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் சலாம் சொல்லுவது ஒரு கெளரவக் குறவான செயலாக அல்லது வெட்கமான செயலாக அல்லவா நாம் பார்க்கிறோம். நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதை மறந்து விட்டோமே!
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஃபிய்யா(ரலி) அவர்களை யூதனின் மகள் என்று ஹஃப்ஸா(ரலி) கூறினார்கள். இந்தச் செய்தி ஸஃபிய்யா(ரலி) அவர்களுக்கு கிடைத்த பொழுது அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘ஏன் அழுகிறாய்?’ என வினவினார்கள். ‘நான் யூதனின் மகள் என ஹஃப்ஸா கூறிவிட்டார்’ என தெரிவித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ’நீ நபியின் மகள் தான். உனது சிறிய தந்தையும் நபியாக இருக்கிறார். நீ நபியின் மனைவியாக இருக்கிறாய். பிறகு எப்படி ஹஃப்ஸா உன்னிடத்தில் பெருமையடிக்க முடியும்? என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களிடம், ‘ஹஃப்ஸாவே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!’ என எச்சரித்தார்கள்.(நூல்:அபூதாவூத்) என்று நெகிழ்வூட்டும் செய்தி ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உண்மையில் நபி(ஸல்) அவர்கள் ஆளுமை திறன் வகுப்புகளுக்கு செல்லாமலேயே ஒரு பக்குவமுள்ள நல்ல கணவராக இருந்துள்ளார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓரு நல்ல எடுத்துக்காட்டு.
மனைவி நம்மிடம் வந்து என்னைப் பற்றி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இப்படி பேசினார்கள், அப்படி பேசினார்கள் என்று சொன்னால், கணவனிடமிருந்து வரும் பதில் நீ உன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கனும், அதான் வாங்கி கட்டிக்கொள் என்று தான் சொல்லுவோம். ஆனால் என்றைக்காவது அவளுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள் பேசி அவளின் மனதில் உள்ள அந்த குறையை நீக்கும் விதமாக பேசி ஆறுதல் சொல்லி பக்குவமான கணவனாக இருந்திருப்போமா?
ஒரு கணவர் என்ற நிலையில் நபி(ஸல்) அவர்களின் குணநலன்களை ஆயிஷா(ரலி) இவ்வாறு விளக்குகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்” (நூல்:புஹாரி)
ஒரு இறைத்தூதராக இருந்தாலும் நபி(ஸல்) அவர்கள் தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பைத் தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளைச் செய்வார்கள்” (அஹ்மத்). ஒரு அரசாங்கத்தின் ஜனாதிபதி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன் வீட்டில் உள்ள ஆட்டின் பாலைக் கறப்பார்கள் (முஸ்னத் அஹ்மத்) என்ற செய்திகளை ஹதீஸ்களில் வாசிக்கும் போது நபி(ஸல்) அவர்கள் என்னதான் ஆட்சி அதிகாரம் வந்தாலும் தான் ஒரு சராசரி மனிதனாக வாழ்துள்ள தன்னிகரில்லாத் தலைவராக வாழ்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து தம் குடும்பத்தவர்களுக்கு உதவியாக இருந்துள்ளார்கள் என்பது கணவராகவும் தந்தையாகவும் இருந்த அவர்களது சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. அவர்களுக்கு இறைமார்க்கப் பணிகள், மேலும் அலுவல்கள் எத்தனையோ இருந்தும் இதர மனிதர்களைப் போலவே தமது குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவதிலும், உதவுவதிலும் அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
நம்முடைய உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்று பெருமையாகப் பேசுகிறோமே தவிர, நம்முடைய சொந்த வீட்டு வேலைகளை நாமாக முன்வந்து செய்திருக்கிறோமா? நல்ல உடல் பலம் இருந்தும், வசதிவாய்ப்புகள் நிறைந்துள்ளது என்ற ஒரே காரணத்தால், கணவனாக இருக்கும் நாம் நம்முடைய சொந்த வேலைகளையும் மனைவியிடமோ அல்லது வீட்டு வேலைக்காரர்களிடமோ செய்ய சொல்லுகிறோமே இது தான் நமக்கு முன்மாதிரி என்று சொல்லும் நபி(ஸல்) அவர்களைப் போன்று சொந்த வேலைகளை செய்யும் நபராக நாம் இருக்க வேண்டும் என்று சிந்திக்கக் கூடாதா?
நபி(ஸல்) அவர்கள் ஒரே பாத்திரத்திலேயே தமது மனைவியருடன் உணவை சாப்பிட்டுள்ளார்கள். ஒரே பாத்திரத்தில் பானத்தை அருந்தியுள்ளார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.” என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்.)
நம்மில் எத்தனைப் பேர் உங்கள் மனைவியருடன் ஒன்றாக ஒரே தட்டில் வீட்டில் இருந்து அன்றாடம் உணவு அருந்தியிருக்கின்றோம்? வருடத்தில் எத்தனை முறை? மாதத்தில் எத்தனை முறை? வாரத்தில் எத்தனை முறை? ஒரு நாளில் எத்தனை முறை? அல்லது வாழ் நாளில் ஒரு முறையேனும் உங்கள் மனைவியுடன் ஒன்றாக ஒரே தட்டில் உணவு அருந்தியிருக்கிறீர்களா? மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த இந்த அழகிய வழிமுறையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
தமது மனைவியருடனான நேசத்தை அன்பை பாசத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுடன் உலாவினார்கள், மனதார பல சந்தர்பத்தில் புகழ்ந்துள்ளார்கள் என்பதை பின் வரும் சம்பவத்தில் நாம் கணலாம். இரவானால் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டு நடப்பார்கள் நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி தமது மனைவியரை புகழவும் தவறவில்லை. ஆயிஷா(ரலி) அவர்களை ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “ஆயிஷாவுக்கும் இதர பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் சாதாரண உணவும், தரீத் (இறச்சிக் குழம்பில் தோய்க்கப்பட்ட ரொட்டி - இது நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த உணவாகும்) போலாகும்” (புகாரி, முஸ்லிம்)
இன்று நம்முடைய வாழ்வு இப்படியா இருக்கிறது? “என் பொண்டாட்டியா நீ? உன்னக் கட்டிக்கிட்டு நான் படும் அவஸ்தை இருக்கே… உன்னை கல்யாணம் செய்ததுக்கு பதிலா ஒரு மிருகத்தை கல்யாணம் செய்திருக்கலாம்” என்று கணவன் சொல்ல. அதற்கு பதிலாக மனைவி, ஒரே வார்த்தையில் “உங்களை கட்டிக்கிட்டு நான் என்னத்த கண்டேன்” என்று அவள் தன்னுடைய கணினி FOLDERயை ஓபன் பண்ணி கல்யாண நாள் முதல், பிள்ளை பெற்றதிலிருந்து, இன்று வரை உள்ள எல்லா ஓட்டை உடைசல்களை போட்டு உடைத்து நிம்மதியற்ற சூழலை உருவாக்கி வீடே ரணகளமாகிப் போய்கொண்டிருக்கிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் தம் மனைவியின் நற்செயல்களை சொல்லிக்காட்டி புகழ்துள்ளோம்? பிற பெண்களுக்கும் தம் மனைவிக்கும் உள்ள நல்ல குணநலன்களை உயர்த்தி பேசி என்றைக்காவது புகழ்திருப்போமா? நபி(ஸல்) அவர்கள் தன் மனைவியை எப்படி எல்லாம் புகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பற்றி என்றைக்காவது அறிந்து வைத்திருக்கிறோமா?
இவ்வுலக வாழ்விற்கு நமக்கெல்லாம் முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் வாழ்வு எப்படி இருந்துள்ளது ஆனால் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது? என்பதை கொஞ்சம் உரசிப்பார்ப்பதற்காக சில சிந்தனைதூண்டும் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேல் சொன்ன நபி(ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ளது போல் இக்காலத்திலும் இளைஞர்களில் சிலரும், மேலும் வயதான தம்பதிகளில் பலரும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்பதையும் இங்கு மறுக்க இயலாது. அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் புரிவானாக.
நபி(ஸல்) அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
தொடரும்...
M. தாஜுதீன்
இந்த பதிவுக்கான தேடலில் எனக்கு உதவியாக இருந்த http://www.thoothuonline.com/ தளத்திற்கு ஜஸக்கலாஹ் ஹைரா.
11 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாஜுதீன்,
நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுய பரிசோதனை கேள்வியோடு நிறைவு செய்யும் பாணி சிறப்பாக உள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற வழிவகைகளை ஹதீஸ்களிலிருந்தும்; ஆனால் எப்படி வாழ்கிறோம் என்பதை தற்கால உதாரணங்களிலிருந்தும் எடுத்துச் சொல்லி செய்யும் தாவா பணிக்கு அல்லாஹ் நற்கூலி தரட்டும்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
நல் வழிமுறைகளுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
நபி ஸல்லல்ழாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எப்படி தம் மனைவியரோடு நல்ல முறையில் வாழ்ந்து சந்தோசமாக தம் வாழ்வை கழித்தார்களோ அது போல் நாமும் சதோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
என்னை ஈன்றெடுத்த அந்த அற்புதத்தாயை இறைவனடி சேர்த்த பின் அவர்கள் பிரிவால் வாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சகோ. தாஜுத்தீனின் இக்கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. வாழ்வில் பல வேதனைகளும், சோதனைகளும், சவால்களும் எம்மை முக்கோண தாக்குதல் நடத்தி இருந்த போதிலும் இறைவன் நாட்டத்தில் இன்னும் நாம் இஸ்லாத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வே மேலோங்கி உள்ளத்தை அவ்வப்பொழுது ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகின்றது. என் அருமைத்தாயின் பிரிவை தனி ஒரு பதிவாக, கவிதைபோல் கவிக்காக்காவின் உதவியுடன் இங்கு வடித்துத்தந்த அதிரை நிருபருக்கும், அதற்கு தங்களின் இரங்கல் பின்னூட்டங்களிட்ட அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
விவரித்து ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி வேதனையின் வெளிப்பாட்டில் வார்த்தைப்பிரயோகம் துப்பாக்கிப்பிரயோகம் போல் சீறிப்பாய்ந்தாலும் எனக்கு நானே மேற்கொண்டு செய்வதறியாது வாயடைத்து நிற்கின்றேன் அந்த வல்லோனின் அழகிய பொறுமைக்கு ஏங்கியவனாக........
என் தாயின் ரூஹ் பிரியும் நள்ளிரவின் அந்த கடைசி நிமிடம் என்றும் என் நினைவில் நிழலாடிக்கொண்டிக்கொண்டே இருக்கும் என் ரூஹ் பிரியும் வரை.......
அல்லாஹ் அவர்கள் சிறு வயது முதல் சக்கராத் வரை சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் செய்த எல்லாப்பாவங்களையும், குற்றங்குறைகளையும் மன்னித்து பிழைபொறுத்தருள்வானாக....ஆமீன்...அவர்களின் கப்ரை விசாலமாக்கி, பிரகாசமாக்கி, சுவர்க்கத்தின் நறுமணத்தை எந்நேரமும் விசச்செய்வானாக....ஆமீன் யாரப்பல் ஆலமீன்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அல்லாஹ் அவர்கள் சிறு வயது முதல் சக்கராத் வரை சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் செய்த எல்லாப்பாவங்களையும், குற்றங்குறைகளையும் மன்னித்து பிழைபொறுத்தருள்வானாக....ஆமீன்...அவர்களின் கப்ரை விசாலமாக்கி, பிரகாசமாக்கி, சுவர்க்கத்தின் நறுமணத்தை எந்நேரமும் விசச்செய்வானாக....ஆமீன் யாரப்பல் ஆலமீன்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆமீன்,ஆமீன்,ஆமீன்
MSM(n) உங்கள் பிரார்த்தனையில் நாங்களும் பங்கெடுக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
ஆமீன் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தாஜுதீன்,
நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுய பரிசோதனை கேள்வியோடு நிறைவு செய்யும் பாணி சிறப்பாக உள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற வழிவகைகளை ஹதீஸ்களிலிருந்தும்; ஆனால் எப்படி வாழ்கிறோம் என்பதை தற்கால உதாரணங்களிலிருந்தும் எடுத்துச் சொல்லி செய்யும் தாவா பணிக்கு அல்லாஹ் நற்கூலி தரட்டும்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
------------------------------------------------------------
நன்றி: கவிச்சக்கரவர்தி!
தம்பி தாஜுதீன் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
உலக வாழ்வைப் பங்கிட்டுக் கொள்ளும் கணவன் மனைவி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பகுதி இதுவாகும். இந்தப் பகுதியை புரிந்துகொண்டால் வாழ்வு என்றுமே சோலைவ்னமே. இல்லாவிட்டால் ... அல்லாஹ் காப்பானாக்!
தம்பி நெய்னா அவர்களின் துஆக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!
என்னை ப் பொறுத்தவரையில் அவரது பின்னூட்டத்தில் சோகம் தொக்கி நின்றாலும் அவர் மீண்டும் வந்திருக்கிறார் என்று ஒரு சிறு ஆறுதலை உணர்கிறேன்.
//அல்லாஹ் அவர்கள் சிறு வயது முதல் சக்கராத் வரை சொல்லாலும், செயலாலும், எண்ணத்தாலும் செய்த எல்லாப்பாவங்களையும், குற்றங்குறைகளையும் மன்னித்து பிழைபொறுத்தருள்வானாக....ஆமீன்...அவர்களின் கப்ரை விசாலமாக்கி, பிரகாசமாக்கி, சுவர்க்கத்தின் நறுமணத்தை எந்நேரமும் விசச்செய்வானாக....ஆமீன் யாரப்பல் ஆலமீன்....//
ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பதிவை வாசித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும், வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா...
இந்த பதிவை வாசித்து அலைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பிய ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பன் பூவண்ணனுக்கு மிக்க நன்றி.
பிற மத சகோதரர்களையும் இந்த பதிவு கவர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
Post a Comment