Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 2 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 19, 2013 | , ,


மாமன்னர் ஒளரங்கசீப்

மொகலாய மன்னர்களில், ஒளரங்கசீப் ஒரு காய்த்த மரம். அதனால்தான் பலரின் கல்லடிக்கு ஆளானார். இவரைப் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்தும் தெரியாதது மாதிரி  உள்நோக்கத்தோடு பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்து இருக்கிறார்கள். இவர்கள் இப்படி எல்லாம் எழுதிவைக்க அடிப்படைக் காரணம் ஒளரங்கசீப் உடைய  அசைக்க முடியாத ஈமானும் இறையச்சமுமே ஆகும். அடிப்படையில் இஸ்லாமிய சித்தாந்தங்களை, தனது  வாழ்வின் உயிர் மூச்சு சித்தாந்தங்களாகக் கடைப் பிடிக்க முயற்சித்தவர் என்பதோடு அவைகளை இயன்றவரை தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமுல படுத்தவும் அவர் விழைந்ததே அவர் மீது அவதூறு சேறு  அள்ளி வீசப்படுவதின் அடிப்படைக் காரணமாகும்.  ஒளரங்கசீப் மிகவும் பொல்லாதவர் என்றும் பலவித வரிகளை பாகுபாடாகப் போட்டு மக்களை வதைத்தவர் என்றும் தனது கொடுமையான குணத்தின் உச்சகட்ட வெளிப்பாடாக தனது தந்தையையே சிறையில் வைத்தவர் என்றெல்லாம் வரலாற்று வரிகள் அவர் மீது வசை பாடுகின்றன. ஆனால் அவரது உண்மையான, நேர்மையான, இறையச்சமுடைய, நேர்மையான  உண்மை முகத்தைப் பாராத பாமர வரலாற்று ஆசிரியர்களே  இப்படியெல்லாம் எழுதினர். 

ஒளரங்கசீப் மிகச் சிறுவயதில் இருந்தே தந்தை ஷாஜஹானுடன் பிணக்கு ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு அடிப்படையான காரணம் ஷாஜஹானின் ஆடம்பர வாழ்க்கையே. இந்தப் பிளவு வளர்ந்து வளர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் பெரும் பள்ளத்தைத் தோண்டிவிட்டது. தந்தையையும் உடன் பிறந்த சகோதரர்களையும் சண்டையிட்டு வென்று,  இந்திய நாட்டின் அரியணையில் ஏறி சக்கரவர்த்தியானார். இந்த சக்கரவர்த்தித் திருமகனின் வாழ்வில் எண்ணற்ற, சுவையான, சூடான, சுறுப்பான திருப்பங்கள் இந்திய வரலாற்றை ஐம்பது ஆண்டுகள் ஆட்டிப் படைத்தன. மொகலாய மன்னர்களிலேயே  அதிக ஆண்டுகள் அரியணையை அலங்கரித்தவர் ஒளரங்கசீப்தான். (1657 முதல் 1707) வரை ஆட்சியின் எல்லைகளை விஸ்தரித்து ஆண்ட பெருமகன் இவர். 

ஒளரங்கசீப் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அவர் அடிப்படையில் ஒரு முழுமையான இஸ்லாமியர். திருமறையின் கோட்பாடுகளையும், நபிமொழியின் மாண்புகளையும் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்த அவர் ஆசைப்பட்டார். தந்தையை சிறையிடைத்து சகோதர்களை ஒடுக்கிய காரணமும் இதுவே. அதன் மூலம் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி நிறுவப்படுவதன் மூலம் அந்தக் காலத்தில் நிலவி வந்த சாதி இனப் பாகுபாடுகள், ஆடம்பரச் செலவுகள், மனிதரை மனிதர் அடிமைப் படுத்தி ஒதுக்கி வைக்கும் நிலைகள், கணவர் இறந்தால் பெண்களும் தீயில் விழுந்து சாவது போன்ற சமூக அவலங்களை ஒழிக்க அவர் ஆசைப் பட்டார். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்பது அவரது இலட்சியமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது. இதை முழுக்க முழுக்கத் தவறு என்றும் சொல்ல முடியாது. 

காரணம் சமத்துவத்தைப் போதித்த இஸ்லாத்தை தான் ஆளும் நாட்டில் அமுல் படுத்த விரும்பினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமுல்படுத்த விரும்பினார். அவரது இந்தத் தேர்வும் விருப்பமும் தவறென்று சொல்ல முடியாதவை. இன்று ஆட்சிக்கு வரத்துடிக்கும் பாரதீய ஜனதா  போன்ற கட்சிகள் தங்களின் சார்பில் எடுத்து வைப்பதும் இதுபோன்ற ஒரு கொள்கைதான்.  ஒரே கலாச்சாரம்! ஒரே பொதுச் சட்டம் ! என்று இன்றைக்கு எடுத்து வைப்பவர்கள் என்ன நியாயத்தை சொல்கிறார்களோ அதே நியாயம் ஒளரங்கசீப்புக்கும் இருந்தது. ஆனால் வித்தியாசம் என்ன வென்றால் பிஜேபி எடுத்து வைப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. அது ஒரு அவியல் கதம்ப சாம்பார். ஆனால்  ஒளரங்கசீப் எடுத்துவைத்தது உலகம் ஒப்புக் கொண்ட  பகுத்தறிவுக்கு ஏற்றது என்பதே ஆகும்.   இன்றைக்கு உலகெங்கும் இந்தக் கொள்கைகள் பரவி வருவதே இதற்கு சான்றுமாகும்.

ஒளரங்கசீப் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்கிற  வரியை விதித்தார் என்பதாகும் உண்மையில் இந்த வரி விதிக்கப் பட்டது இந்துக்களின் கோயில்களை நிர்வாகம் செய்வதற்கே ஆகும். இந்த வரி செலுத்துவதில் இருந்து முதியோர், பிச்சைக்காரர்கள், பாதிரியார்கள்,  அர்ச்சகர்கள், உடல் ஊனமுற்றோர்,  இராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு விதிவிலக்கும் தரப்பட்டு இருந்தது.

அந்த ஜிஸ்யா  வரியை  அரசுக்கு வருமானமாக அவர் ஒருபோதும் விதிக்கவில்லை. இந்த வரியும் கூட ஏற்கனவே ஆண்ட மொகலாய மன்னர்களால் விதிக்கப் பட்டதுதான்.  இன்று கோயில்களில் உள்ளே நுழைவதற்கு சீட்டுகள், தரிசன சீட்டுக்கள், தனிவழி சீட்டுகள், அர்ச்சனை சீட்டுகள் என்றெல்லாம் அவர்கள் நம்பும்  கடவுளைக் காண்பதற்கு வகுப்பு மற்றும் வரிசைவாரியாக  கட்டணம் வசூலிக்கிறார்களே அது மட்டும் சரியாகுமா? இந்தக் கட்டணங்கள் வசூலிப்பது கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு என்று சொல்பவர்கள் இதையே ஒளரங்கசீப் நாடு முழுவதற்கும் மொத்தமாக அமுல படுத்தினால் அதை எதிர்த்து வரலாற்றில் சேற்றை அள்ளி அவர் மீது பூசுவது ஏன்?

உண்மையில் ஒளரங்கசீப் அவர்கள் ஏற்கனவே  இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் என்பதே உண்மை. இதை வரலாறு மறைத்து வைத்து இருக்கிறது. இதோ அந்தப் பட்டியல் :-

இந்துக்கள் தங்களின்  வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று  அங்கு ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில் நீராடிவந்தால் பாவங்கள் நீங்கி விடுமென்பது அவர்களின் நம்பிக்கை. ஒளரங்கசீப்புக்கு முந்திய மொகலாயர்களின் ஆட்சியில் இவ்விதம் காசி செல்வதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது. இந்த வரியை நீக்கியவர் ஒளரங்கசீப் ஆவார்.

அதே கங்கையில் இறந்தவர்களின் அஸ்தி என்கிற சாம்பலைக் கரைப்பது என்பதும் அதற்கான கங்கைக்கரையில் சடங்குகள் செய்வதும் இந்துக்களின் பழக்கம். இதற்கும் வரி இருந்தது, இந்த வரியையும் நீக்கியவர் சாட்சாத் ஒளரங்கசீப்பே.

புனித நதிகளில் மீன் பிடிப்பதற்கும், பசு மாடுகளில் பால் கறந்து விற்பதற்கும், பெரும்பான்மை இந்துக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் விற்பதற்கும், சிலவகைப் பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரிகள் இருந்தன. அந்த வரிகள்  அனைத்தும் ஒளரங்க சீப் உடைய ஆட்சியில்தான் ரத்து செய்யப் பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை  எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே  வரி இருந்தது.  இந்த வரட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர். 

ஏதாவது ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில் ஜாதியில் கீழ்த்தரமான ஒரு விதவைப் பெண்ணை ஒரு உயர்சாதி ஆண் தொட்டு விட்டாலோ பட்டு விட்டாலோ திருமணமே செய்து கொண்டாலோ அதற்காக வரி செலுத்த வேண்டி இருந்தது. இந்த வரியையும் ஒழித்துக் கட்டி விதவை மணத்தை இந்து சமூகத்தில் ஊக்குவித்தவர் ஒளரங்கசீப்.

இந்துக்களின் கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளின் போதும் மக்கள் அதிகமாகக் கூடும் சந்தைகளிலும் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் கட்டிக் கொண்டிருந்த உள்ளூர் வரிகளையும் ரத்து செய்தார்.

மன்னர் ஒளரங்கசீப்புக்கும் மற்றவர்களுக்கும்  பிரச்னை எங்கே ஆரம்பித்தது என்றால் ஒளரங்கசீப்புக்கு முன்னே ஆண்டவர்கள் பயன்படுத்திய போதை வஸ்துக்களை ஒளரங்கசீப் அரண்மனையில் ஒழித்துக் கட்டியதில் தொடங்கியது. மதுவை வெறுத்தார். தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அரசின் பிரதிநிகள் உட்பட மதுவைக் கையால் தொடக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார். கேளிக்கை மற்றும் சூதாட்ட விடுதிகளை இழுத்து மூடச் செய்தார். அதன்பின் அரசவையில் இசை மற்றும் நாட்டிய தாளக் கச்சேரிகளை தடை செய்ததில் இவர் மேல் வெறுப்பு வளர்ந்தது. இஸ்லாமிய நெறிமுறைகளின்படி ஆடல் பாடல் கச்சேரிகள் ஹராமாகப் பட்டவை (தடை செய்யப்பட்டவை). அதைத்தான் மன்னரும் பின்பற்றினார். அவரது அவையில் இசைக்கலைஞர்களோ நடனக் கலைஞர்களோ இடம் பெறவில்லை. முந்தைய காலத்தில் அவ்விதம் இருந்தவர்களை திடீரென்று தடை செய்து விலக்கினாலும் மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு மானியம் வழங்கி உதவினார். பிறகு ஆடம்பரமான கட்டிடங்கள் கட்டுவதையும் அவர் தடை செய்தது பலருக்குப் பிடிக்கவில்லை. ஆத்திலே தண்ணீர் போல அரசுப் பணத்தை ஓடவிட்டால் நக்கிக் குடிக்கும் நயவஞ்சகர்கள் அனைவருக்கும் ஒளரங்கசீப் வைத்த ஆப்பு அவர்களது சுரண்டலுக்குப் போட்ட காப்பாகிவிட்டது.

ஒளரங்கசீப் இந்திய மண்ணில் புரையோடிப் போய் இருந்த புண்களை அகற்றுவதில் முனைப்புக் காட்டினார். இது புரோகிதக் கும்பலுக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும் போதே அதே நெருப்பில் இறந்தவரின் மனைவியும் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்  பழக்கம் இந்துக்களிடையே நிலவி வந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்று அழைக்கப் பட்டது.

ஒரு முறை போர்க்களத்தில் இறந்த ஒரு இந்து சமுதாயத்தைச் சார்ந்த வீரரின் உடலை எரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவனது மனைவியை  அந்த நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த கூட்டத்தார் கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீரனின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த மாமன்னர் ஒளரங்கசீப் அந்த செயலை இரும்புக் கரம்  கொண்டு தடுத்தார். மன்னர் தங்களின் மத விஷயத்தில் தலையிடுவதாக அங்கிருந்தோர் கூச்சலிட்டனர்; வாதம் செய்தனர்.  ஆனால் மன்னர் உறுதியாக இறந்து அந்த மனைவியை உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார். இனி இந்தக் கொடுமைகள் மொகலாயப் பேரரசில் எங்குமே இருக்கக் கூடாது என்று உடனே உத்தரவு பிறப்பித்தார். இதற்காகவும் ஒளரங்கசீப் மத விஷயங்களில் தலையிடுவதாக பழி தூற்றப் பட்டார். 

காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒளரங்கசீப் இடித்தார் என்று ஒரு வரலாற்றுப் புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அப்படி கோயிலை இடிக்கும்படி உத்தரவிட்டது உணமைதான். பொய்யைவிட மோசமானது பாதி உண்மையை சொல்வது சொல்வார்கள். அதுபோல்தான் இந்த சம்பவமும் கோயிலை இடிக்கச் சொன்னார் என்று சொல்கிறார்களே அது எதற்காக என்கிற வரலாற்று உணமையை ஏன் மறைக்கிறார்கள். அந்தக் கோயில் இடிக்கப் பட்டதற்குக் காரணமாக கூறப்படும் சம்பவம் என்னவென்றால், ஒரு இந்து குறுநில மன்னரின் ராணிகள் காசியில் குளிக்க வந்தார்கள். அந்த ராணிகளுள் ஒருவர் இருண்ட இடத்தில் கோயிலுக்குள் வைத்து மானபங்கப் படுத்தப் பட்டார்.  (அண்மையில் காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்கிற பூசாரி கூட கோயில் கருவறைக்குள் வைத்து ஒரு பெண்ணிடம் கசமுசா செய்த காட்சிகளால் வலைதளங்கள் நாறினவே அதுபோல் ஒரு செய்கைதான் இது.) இந்த சம்பவத்தால் காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்துக்கள் ஒன்றுகூடி மன்னர் இடம் முறை இட்டனர். இதனால் காசி விஸ்வநாதர் உடைய விக்கிரகம் அங்கிருந்து அகற்றப் பட்டது; கோயில் இடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்துக்களின் கோரிக்கைக்கு மன்னர் செவி சாய்த்ததால் நடந்ததே தவிர மன்னரின் விருப்பத்துக்கு அல்லது கொடுங்கோல் முறைக்கு உட்பட்டது அல்ல.  

அப்படிப் பார்த்தால் கோயில் மட்டுமா? ஒரு பள்ளிவாசல் கூட ஒளரங்கசீப் உடைய உத்தரவால் இடிக்கப் பட்டது. காரணம் என்ன? கோல்கொண்டா என்கிற பகுதியை  ஆண்ட  மன்னன்  தானஷா, அரசுக்கு வரிகட்டாமல் பல வருடங்கள் டிமிக்கி கொடுத்து வந்தான். மன்னர் பலமுறை கேட்டும் வரிகளைக் கட்டாமல் ஒரு முட்டாள்தனமான வேலை செய்தான். அதாவது ஒரு பள்ளிவாசலைக் கட்டினான். அந்தப் பள்ளிவாசலில் ஓரிடத்தில் தான் கட்டவேண்டிய  வரிக்குரிய செல்வத்தைப் புதைத்து வைத்தான். இதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் ஒளரங்கசீப் அந்த பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்கினார். புதைத்து வைத்திருந்த செல்வம் மீட்கப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப் பட்டது. கோயில் இடிக்கப் பட்டது பற்றி கொடி நாட்டிப் புலம்புவோர் இந்த பள்ளிவாசல் இடிக்கப் பட்டது பற்றி ’பேச்சு மூச்சையே காணோம்.’

மொகலாயப் பேரரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக  மன்னர்  சில சீர்திருத்தங்களை வெளியிட்டார். அதன்படி ஏற்கனவே இருக்கும்               வழிபாட்டுத்தளங்களை அழிக்கக்கூடாது. ஆனால் புதிய கோயில்களை பொருட் செலவில் கட்டக்கூடாது என்பதே அது. நாம் பார்த்து இருக்கிறோம். சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்கள் நாடெங்கும் பெரும் செலவில் பிரம்மாண்டமாகக்  கட்டப் பட்டு இருக்கின்றன.   இப்படி பெரும் பொருட் செலவில் கோயில்கள் கட்டுவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்று எண்ணிய மன்னர் அதைத் தடைசெய்தாரே தவிர இருந்த கோயில்களை இடிக்கவில்லை. இதனால் வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப் படவே இல்லை. சிக்கன நடவடிக்கையாக எடுக்கப் பட்ட ஒரு நிதித்துறை நடவடிக்கைக்கு மதச்சாயம் பூசி ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கினர்.  இப்படி கட்டிடங்களில் காசைக் கொட்டுவதால்தான் தன் தந்தை ஷாஜஹானையே சிறையில் வைத்தவர் ஒளரங்கசீப் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது. 

தமிழ்நாட்டில் குமரகுருபரர் என்பவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. சைவ சமயத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் பரப்பியவர்களில் அவர் முக்கியமானவர். குமரகுருபரர்  வாழ்ந்து பணியாற்றிய காலம் ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலமே ஆகும் (1625-1688).  குமரகுருபரர் கேட்டுக் கொண்டதன் பொருட்டு,  காசியில் சைவ மட ஆலயங்களை நிறுவ ஒளரங்க சீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன. அதே போல பல்வேறு மானியங்களும் வழங்கப் பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக் கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவமும் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடை படுத்தவில்லை. (பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802)

ஒளரங்க சீப் கட்டாய மதமாற்றம் செய்தாராமே! அப்படியா?

இன்ஷா அல்லாஹ்  அதையும் பார்க்கலாமே அடுத்த வாரம். 

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே, அவுரங்கஜேப் அவர்களைக் கண்ட போதில், அகமெலாம் மகிழ்ந்தேன். நேற்றிரவு முகநூலில், அன்புச் சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் இட்டக் கருத்துரைகளில் “ஆற்காடு நவாப் போன்றோரின் நடவடிக்கைகள் பிரிட்டிஷார்க்கு அடிவருடிகளாக இருந்திருந்தாலும் ஹிந்துக் கோயில்களுக்கு இனாமாக நிலங்களை வழங்கியுள்ளனர் சென்னையிலும், ஸ்ரீரங்கத்திலும்; இப்பொழுதுக் கூடக் கிறித்துவக் கல்லூரியின் மைதானம் ஈத்பெருநாள் தொழுகைக்குப் பயன்படுத்த அந்தக் கிறித்துவக் கல்லூரியின் நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதும் காணும் போதில் இங்கு வந்து இப்படிப்பட்ட சமய நல்லிணக்கத்தைக் குலைக்க வரும் மோடி மஸ்தானுக்கு இந்த மண்ணில் வெற்றி இல்லை என்பதைத் தான் காட்டும்; அதனால் எல்லாரும் இந்த விடயத்தை முகநூலில் பகிருங்கள்; ஏனெனில் அவன்களும் தீயாக வேலை செய்கின்றான்கள்” என்று எழுதியிருந்தார். அந்தக் கருத்துரையை யான் முகநூலில் பகிர்ந்து விட்டேன். இப்பொழுதுத் தங்களின் இந்த ஆக்கத்தின் இணைப்பைப் பகிர்வேன், இன்ஷா அல்லாஹ்.

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒளரங்கசீப் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். //

நிச்சயமாக ! நம்மில் நிறைய பேருக்கு உண்மை வரலாறு அறிந்திருக்கவில்லை !

பேரரசர் ஒளரங்கசீப் பற்றிய மேலும் உண்மைகள் உங்களால் பதியப்பட வேண்டும் காக்கா !

Shameed said...

மாமா வரலாறிலும் வரலாறு படைக்கின்றீர்கள்

crown said...

அந்த ஜிஸ்யா வரியை அரசுக்கு வருமானமாக அவர் ஒருபோதும் விதிக்கவில்லை. இந்த வரியும் கூட ஏற்கனவே ஆண்ட மொகலாய மன்னர்களால் விதிக்கப் பட்டதுதான். இன்று கோயில்களில் உள்ளே நுழைவதற்கு சீட்டுகள், தரிசன சீட்டுக்கள், தனிவழி சீட்டுகள், அர்ச்சனை சீட்டுகள் என்றெல்லாம் அவர்கள் நம்பும் கடவுளைக் காண்பதற்கு வகுப்பு மற்றும் வரிசைவாரியாக கட்டணம் வசூலிக்கிறார்களே அது மட்டும் சரியாகுமா? இந்தக் கட்டணங்கள் வசூலிப்பது கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு என்று சொல்பவர்கள் இதையே ஒளரங்கசீப் நாடு முழுவதற்கும் மொத்தமாக அமுல படுத்தினால் அதை எதிர்த்து வரலாற்றில் சேற்றை அள்ளி அவர் மீது பூசுவது ஏன்?
-------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும். மாற்று இன சகோதர்களிடம் கேட்கிறேன் இதைப்பார்போரே பார்பனர் செய்தால் நியாயமா? நல் முஸ்லிம் அரசன் செய்தால் குற்றமா?இந்த வரலாறுப்பற்றி பார்போரே, இதை இந்த நாயத்தை கேட்டால் என் இனத்தில் மீது போரா தொடுப்பது? நியாயம் கேட்போர் இல்லையா? சமத்துவம் , சகோதரத்துவம் போதித்த மன்னன் ஆரியரிகளின் சூழ்சியில் "சீப்"'ஆக்கப்பட்டனர் இதில் ஒளரங்க சீப்பின் மேல் நடத்தப்பட்ட ஓரங்க(ஓரவஞ்ஜனை) நாடகம் இன்னும் புரியலையா?

crown said...

உண்மையில் ஒளரங்கசீப் அவர்கள் ஏற்கனவே இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் என்பதே உண்மை. இதை வரலாறு மறைத்து வைத்து இருக்கிறது. இதோ அந்தப் பட்டியல் :-

இந்துக்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில் நீராடிவந்தால் பாவங்கள் நீங்கி விடுமென்பது அவர்களின் நம்பிக்கை. ஒளரங்கசீப்புக்கு முந்திய மொகலாயர்களின் ஆட்சியில் இவ்விதம் காசி செல்வதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது. இந்த வரியை நீக்கியவர் ஒளரங்கசீப் ஆவார்.

அதே கங்கையில் இறந்தவர்களின் அஸ்தி என்கிற சாம்பலைக் கரைப்பது என்பதும் அதற்கான கங்கைக்கரையில் சடங்குகள் செய்வதும் இந்துக்களின் பழக்கம். இதற்கும் வரி இருந்தது, இந்த வரியையும் நீக்கியவர் சாட்சாத் ஒளரங்கசீப்பே.

புனித நதிகளில் மீன் பிடிப்பதற்கும், பசு மாடுகளில் பால் கறந்து விற்பதற்கும், பெரும்பான்மை இந்துக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் விற்பதற்கும், சிலவகைப் பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரிகள் இருந்தன. அந்த வரிகள் அனைத்தும் ஒளரங்க சீப் உடைய ஆட்சியில்தான் ரத்து செய்யப் பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே வரி இருந்தது. இந்த வரட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர்.
-----------------------------------------------------------------

இந்துக்களுக்கு "வாரி வரிந்து கட்டிக்கொண்டு" முன்பு "கட்டி வந்த வரியை நீக்கினார்" என்பதை வரிக்கு வரி மெய்பிக்கும் இந்த வரலாறு உண்மை இன்னும் புரியவில்லையா?வரியவர் மேல் வரி இல்லாமல் செய்த மா மன்னர் ஒளரங்க சீப்.

crown said...

மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே வரி இருந்தது. இந்த வரட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர்.
-----------------------------------------------------------------------------
ஆஹா! இந்த வரலாற்றை புரட்டிப்போட்ட (தி)புருடர்களுக்கு சரியான பதில் அடி காக்கா!

Adirai pasanga😎 said...

படித்ததில் மிகவும் பிடித்தது -

//காரணம் சமத்துவத்தைப் போதித்த இஸ்லாத்தை தான் ஆளும் நாட்டில் அமுல் படுத்த விரும்பினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமுல்படுத்த விரும்பினார். அவரது இந்தத் தேர்வும் விருப்பமும் தவறென்று சொல்ல முடியாதவை. இன்று ஆட்சிக்கு வரத்துடிக்கும் பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் தங்களின் சார்பில் எடுத்து வைப்பதும் இதுபோன்ற ஒரு கொள்கைதான். ஒரே கலாச்சாரம்! ஒரே பொதுச் சட்டம் ! என்று இன்றைக்கு எடுத்து வைப்பவர்கள் என்ன நியாயத்தை சொல்கிறார்களோ அதே நியாயம் ஒளரங்கசீப்புக்கும் இருந்தது. ஆனால் வித்தியாசம் என்ன வென்றால் பிஜேபி எடுத்து வைப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. அது ஒரு அவியல் கதம்ப சாம்பார். ஆனால் ஒளரங்கசீப் எடுத்துவைத்தது உலகம் ஒப்புக் கொண்ட பகுத்தறிவுக்கு ஏற்றது என்பதே ஆகும். இன்றைக்கு உலகெங்கும் இந்தக் கொள்கைகள் பரவி வருவதே இதற்கு சான்றுமாகும்.// -

//மன்னர் ஒளரங்கசீப்புக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை எங்கே ஆரம்பித்தது என்றால் ஒளரங்கசீப்புக்கு முன்னே ஆண்டவர்கள் பயன்படுத்திய போதை வஸ்துக்களை ஒளரங்கசீப் அரண்மனையில் ஒழித்துக் கட்டியதில் தொடங்கியது. மதுவை வெறுத்தார். தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அரசின் பிரதிநிகள் உட்பட மதுவைக் கையால் தொடக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்.//

தற்போது நம் நாட்டில் மதுவுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு இது ஒரு வரலாற்றுக்குறிப்பாகும்.

crown said...

ஒளரங்கசீப் இந்திய மண்ணில் புரையோடிப் போய் இருந்த புண்களை அகற்றுவதில் முனைப்புக் காட்டினார். இது புரோகிதக் கும்பலுக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும் போதே அதே நெருப்பில் இறந்தவரின் மனைவியும் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் இந்துக்களிடையே நிலவி வந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்று அழைக்கப் பட்டது.
------------------------------------------------------------------------------------------------
பெண்னுரிமை பேனிய கண்ணியவான் எங்கள் மாமன்னர்.ஆனால் பெண் சுதந்திரம் என்று கூச்சலிடும் கருங்காலி கூட்டங்கள் பெண்ணையுன் சிதையில்(சீதையை சிதையில் குதிக்கச்சொன்ன கட்டுக்கதை ராமாயணம் படிக்கும் புத்தி என்ன செய்யும்????)தள்ளி கொள்ளி வைத்தனர்.

crown said...

(பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802)
-----------------------------------------------------------------------------------------
இவர் வரலாற்றை கேட்க,கேட்க தந்தவர்,வரலாற்றின் தாத்தாவாக இருந்துள்ளார்.

Unknown said...

ஔரங்கசீப்பின் உண்மை வரலாற்றை எங்கே படிக்கவிட்டார்கள் ?

இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்ட மொகலாய மன்னர்களையெல்லாம், தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய இவர்கள் உணமையாக மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தி நல்லாட்சி கண்ட மொகலாய மன்னர்கள் அனைவரும் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு வில்லனாகவே தெரிந்தார்கள்.

அதனால்தான் பள்ளியில் படிக்கும் காலங்களில் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாதர்வர்களாகவே நாம் காலங்களை கழித்திருக்கின்றோம்.

இதற்க்கு வரலாற்றை திருத்தி எழுதி உண்மையை மறைத்த வரலாற்று காழ்ப்புணர்ச்சி ஆசிரியர்களே பொறுப்பு. இவர்களை வரும்காலம் மன்னிக்காது.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன் அவர்களின் வார்த்தை சொல்லாடல்கள் வரலாற்று சொல்லாடல்களுக்கு அழகு சேர்க்கின்றன.

சகோதரர் அஹமது தாஹா அவர்களின் கருத்து

//தற்போது நம் நாட்டில் மதுவுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு இது ஒரு வரலாற்றுக்குறிப்பாகும்.//

ஆம்.! ஆளும் கட்சி மற்றும் முக்கிய எதிர்க் கட்சியின் பெரும்புள்ளிகள் யாவரும் ஒன்று கூடி நடத்தும் மதுபான ஆலைகள், மதுக் கடைகள், மது விடுதிகள் ஆகியவற்றை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தினால் இரு கட்சிகளும் சேர்ந்தே அவர்களை நன்றாக " கவனிக்கின்றன".

sabeer.abushahruk said...

வரிவரியாக அரிய தகவல்கள்!

வரிவாரியாக அறிய பட்டியல்!

மக்களின் வரிப்பணத்தில் உம்மாவுக்கு மஹால் கட்டிய வாப்பாவையே உள்ளே வைத்த கைசுத்தக்கார மன்னரைப் பற்றி அவதூறாக எழுதி வைத்து வரலாற்றை திரித்துப் பதிந்து வைத்தனர் மோசக்காரர்கள்.

அதையே மனனம் செய்து வளர்ந்த சமூகம் ஓளரங்கசீப்பை வெறுக்கத்தானே செய்யும்?

பகுதிபகுதியாக போட்டுடையுங்கள் காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk said...

//ஒளரங்கசீப் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அவரைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.//

ஞாயமான முன்னுரை.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்கள் சொன்னது

//அதையே மனனம் செய்து வளர்ந்த சமூகம் ஓளரங்கசீப்பை வெறுக்கத்தானே செய்யும்?//
அவரை வெறுக்க வைக்க வேண்டுமேன்பதுதானே நோக்கம். காரணம் இவர்களது ஆட்டம் அல்ல பாச்சா எதுவும் அவுரங்கசீப் இடம் பலிக்கவில்லை.
அவர் பெண் பித்தர் அல்ல
அவர் மதுப பிரியர் அல்ல
அவர் ஆடம்பரப்பிரியர் அல்ல
தானும் எளிய வாழ்வு வாழ்ந்து மற்றவர்களையும் அப்படி வாழச்சொன்னவர். நல்லவர்களை இந்த உலகத்துக்குப் பிடிக்காது.

Ebrahim Ansari said...

அன்பின் கவியன்பன் அவர்களே!

//அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே, அவுரங்கஜேப் அவர்களைக் கண்ட போதில், அகமெலாம் மகிழ்ந்தேன்//

மிகவும் அக்கறை எடுத்தப் படிக்கும் தங்களின் ஆர்வத்துக்கும் ஆர்வமூட்டலுக்கும் நன்றி. தாங்க குறிப்பிட்டுள்ள இதர கருத்துக்கள் நாளை நடைபெறவிருக்கும் ஈத் மிலன் மத நல்லிணக்க சந்திப்பில் இன்ஷா அல்லாஹ் எதிரொலிக்கும்.

ZAKIR HUSSAIN said...

இந்த வாரம் வந்த இந்த ஆக்கத்தை மட்டும் சென்னைப்பல்கலைக்கழகம் [ வரலாற்றுப்பிரிவு ] , தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், ஆர்கியாலஜி டிப்பார்ட்மென்ட் [ உடைக்கப்பட்ட பள்ளிவாசல் / கோயில் எல்லாம் இவர்களின் அதிகாரத்தில் இப்போது வரும் என்பதால் ] இந்தியாவில் இருக்கும் ஹிஸ்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா, மற்றும் இந்த துறை சார்ந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நல்லது செய்த ஓளரங்கசீப்பை இப்படி கேவலப்படுத்தி எழுதியதற்கு காரணமே அவர் ஒரு முஸ்லீம் அரசர் என்பதுதான்.

ZAKIR HUSSAIN said...

ஜிஷியா வரி என்றால் என்ன என்று கேள்வி கேட்டு நம்மை எல்லாம் ஓளரங்கசீப்பை திட்டி எழுத வைத்து மார்க் தந்த பாடத்திட்டங்கள், அந்த பாடங்களை எழுதியவர்கள் எல்லாம் எப்படி வருடக்கணக்கில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

மதுவை தடை செய்த முஸ்லீம் அரசன் அயோக்கியன். டாஸ்மார்க் கடைக்கு அனுமதி தந்து பல கோடி மக்களை ஏழ்மைக்கும், கேவலத்துக்கும் தள்ளி, குடிகாரன் வீட்டுப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் செய்தவன் "தேசிய நீரோட்டத்தில் முக்கியமான தலைவன் / தலைவி '.........என்னங்கடா ஞாயம் உங்களுடையது????

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒளரங்கசீப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பற்றிய அழகு விளக்கங்கள்!

மத வெறி பிடித்த வரலாற்று மடையர்கள் அதே வெறி பிடித்த சில இந்துக்களை மட்டுமல்லாமல் நம்மீதும் அன்னார் பற்றிய அவதூற்றை பரப்பி நம்மையும் மூளைச்சலவை செய்து விட்டார்கள்.

உங்களைப்போல் அப்ப சுட்டிக்காட்டி குட்டி இருந்தால் நாமும் தெளிவாகி இருப்போம். காவியும் அப்பவே வெளுத்து இருக்கும்.இனி உங்களைப்போல் இருக்கமட்டும் , மற்றும் நவீன ஊடக வளர்ச்சியால் இட்டுக்கட்டுவதை அப்பப்போது குட்டி அவர்களை மாட்டிக்கொள்ள வைக்க முடியும்.(இப்போது தனக்கு தானே ஆப்பு வைத்து தானே மாட்டிக் கொள்வது போல)

இன்னும் பகிரங்கப்படுத்துங்கள் (அவர்களில் சிலரைப்போல அல்லாமல்) உள்ளதை உள்ளபடியே!

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா, இ.அ. காக்கா.

தங்களின் பேருரையைக் கேட்க, இம்முறை குறுவிடுப்பில் தாயகம் வராமல் போனது என் குறையாகக் கருதுகிறேன்.

ADIRAI B.PRABU said...

friends don't try to make a wrong man into a good man if aurangaseep is a good king then wat about the Great Akbar. Aurangaseep sencha rightna athaiye bjb sencha righta? Aurangaseep kalathil mathamattram nadandhadhu enpathaI pala foreign historiens also accept, But u people r not think about Akbar because he give same status to hindus also so u dont say he is best. I have more respect on adirai muslims and i think akbar is the best king in indias all time he really seperate religion and politics and do many goods to india. Do u know about khan abdul kabar khan a freedom fighter please explore this kind of histories this will create more respect on indian muslims i really expect this kind of histories from u

crown said...

Do u know about khan abdul kabar khan
--------------------------------------------------------------
எல்லை காந்தி

Ebrahim Ansari said...

அதிரை பிரபு என்கிற அன்புச் சகோதரர் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு வரவேற்பும் நன்றியும் செலுத்துகிறேன்.

தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பேரரசர் அக்பர் பற்றியும் எழுதப் பட இருக்கின்றது.

அவுரங்க சீப் பற்றி சில வரலாற்று ஆசிரியர்களால் எழுதப் பட்டுள்ள தவறான தகவல்களை அவை தவறு என்று காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். இவை ஒரு கற்பனைக் கதை அல்ல.

ஒரு தவறான ஆளை நல்லவர் என்று வாதிட அல்ல. நல்லவர்களையும் நல்லவர் என்போம் தவறானவர்களை தவறானவர் என்றே பறை சாற்றுவோம். இதில் சந்தேகம் வேண்டாம்.

அவுரங்க சீப் அவர்களின் காலத்தில் மத மாற்றம் நடந்ததா என்பது பற்றிய விவாதமே அடுத்த அத்தியாயம் . அதையும் படித்துவிட்டு தாங்கள் கருத்து தெரிவித்தால் எங்கள் தரப்பில் தவறு என்றால் அதற்காக வருத்தம் தெரிவிக்க நான் பின்வாங்கமாட்டேன்.

தங்களின் அன்பான கருத்திடலுக்கு மீண்டும் நன்றி.

Unknown said...

Lots of incidents ,which ,most of us never hear about before ...Thanks Ansari Kaakka.

Anonymous said...

//கங்கையில் குளிக்க வந்த ராணிகளிடம் கோயில் குரு 'கசமுசா'//

அடே! அது அப்பவே ஆரம்பிச்சுடுச்சா? இப்போ உள்ள விடலை உள்ள விடலை பசங்க கிட்டே அதை எல்லாம் விளா வாரிய சொன்னா நிலமே வேறே மாதிரி ஆயிடும்ன்னு தான் Blackout பண்ணி சாயம் பூசிட்டாங்க!

இருந்தாலும் ஒன்னு- ரெண்டு கசமுசா வாசப்படி தாண்டி வெளியே வருதுதான். பாத்துக்கிட்டு தானே இருக்கோம்! பாத்தா என்ன கெட்டா போயிடும்!.

மோகம் மங்கையோடு கரையட்டும்; பாவம் கங்கையோடு கரையட்டும்!.

S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

காசியில் ராஜவம்சத்துப் பெண் கற்பழிக்கப் பட்ட விஷயத்தை நான் சுருக்கமாகவே குறிப்பிட்டேன். அதைப் பற்றி இன்னும் விளக்கம் தேவை என்று எனக்கு அதிரையில் இருந்து ஒரு சகோதர மதத்தைச் சார்ந்த நண்பர் அலைபேசி மூலம் விளக்கம் கேட்டார். நான் தளத்தில் பதிகிறேன். விளக்கமாகப் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அந்த விளக்கம் இதுதான். நித்யானந்தர்களும் பிரேமானந்தர்களும் அன்றே உருவாகிவிட்டனர்.
=============
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர்.

ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது.

ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் போதுமா? இன்னும் வேண்டுமா என்று தரைவழி தொலைபேசியில் அழைத்த நண்பரே சொல்லவேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு