Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 3 35

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2013 | , ,


மாமன்னர் ஒளரங்கசீப் - தொடர்கிறது...

மாமன்னர் ஒளரங்க சீப் கட்டாயமாக மதமாற்றம் செய்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  ஆனால் சில வரலாற்றுச் செய்திகளை ஆய்ந்து பார்க்கும் போது  அவைகள் உள்நோக்கத்தோடு  இட்டுக் கட்டிய கட்டுக் கதைகள் என்றே பதியத் தோன்றுகிறது. முதலாவதாக :

மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் சாம்பாஜி. அவரது மகன் ஷாஜி. ஏழு வயதிலேயே சில நடைமுறை அரசியல் காரணங்களுக்காக  கைது செய்யப்பட்டான். அவனை சிறுவன் என்பதால் சிறையில் அடைத்துக் கொடுமைக்கு ஆளாக்க விரும்பாத மனிதாபிமானமிக்க ஒளரங்க ஒளரங்கசீப்,  சிவாஜியின் பேரனை தனது அரண்மனைக்குக் கொண்டு வரச் செய்தார்.  தனது  இரண்டாவது மகள் ஜீனத்துன்னிசாவை அழைத்து, "இனி இவன் உன் பொறுப்பு. இவனை ஒரு வீர மராட்டிய மன்னனாகவே வளர்த்து ஆளாக்கு. ஒரு போதும் மத மாற்றம் செய்யாதே! அல்லாஹ் அவனுக்கு அருள் புரியட்டும்” என்று அவரிடம் ஒப்படைத்தார். இந்த   வேதம் புதிது போலத் தோன்றவில்லையா?. 18 ஆண்டுகள் சிவாஜியின் பேரன், ஒளரங்கசீப் உடைய எந்நேரமும் திருமறை குர் ஆன் முழங்கும்  அரண்மனையில் ஒரு இந்துவாகவே வளர்ந்து வெளியேறினான். ஒளரங்க சீப் நினைத்து இருந்தால் அந்த இளம் நெஞ்சில் இஸ்லாமிய விதையை விதைத்து அவரை மதம் மாறி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. 

ஒளரங்கசீப் இந்து இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் அவர் மணக்கும் முன் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு  மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்? அவர் நினைத்து இருந்தால் இவர்களில் பாதியளவினரையாவது மதமாற்றம் செய்து இருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.  

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் தானே முன் வந்து  சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். 

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்று நோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத் தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். "பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது" என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. இந்த பனாரஸ் ஆணை பல வரலாற்று ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப் படாமலேயே மறைக்கப் பட்டு இருக்கிறது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture (1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. "ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத் தன்மையையும் மத சகிப்புத் தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

மத சகிப்புத் தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப் படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? 

அதே நேரம் ஒரு உண்மையை இங்கே உரக்க சொல்லியாக வேண்டும். ஒளரங்க சீப்பின் ஆட்சிகாலத்தில் தானாக மனம் மாறி மதம் மாறிய நிகழ்வுகள் இருந்தன. அதற்கு ஒளரங்க சீப்போ அல்லது அவரது ஆட்சியோ காரணமல்ல. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறுபவர்களுக்கு முப்பத்தி ஐந்து கிலோ அரிசியும் ஐந்து லிட்டர் மண்ணெண்ணையும் இலவசம் என்று அறிவித்து அரசின் மூலம்  மதமாற்றம் நடைபெறவில்லை. எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை.  இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன என்பதை வரலாறு பதிவு செய்கிறது. 
  • முதலாவதாக  “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் சமுதாயக் காரணங்களுக்காக தாங்களாக முன் வந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
  • இன்று அவுலியாக்கள் என்று போற்றப்படும் பலர் மதப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுடைய அழைப்புப் பணியால் ஈர்க்கப் பட்ட பலர் உண்மைகளை அறிந்து மனம் மாறி மதம் மாறினர்.
  • இஸ்லாமிய வர்த்தகர்களின் நம்பிக்கை நாணயம் வாழ்வுமுறை வணிகத்தில் நேர்மை ஆகியவற்றைப் பார்த்து பலர் மதம் மாறினர்.  
  • அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியவர்களும் மதம் மாறினர்.

ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. ஒளரங்கசீப்பால்  வெற்றி கொள்ளப் பட்ட குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் கூட மதம் மாற்றப் படவில்லை.  

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. அப்படி ஒளரங்கசீப் கட்டாயமாக மதமாற்றம் செய்து இருந்தால், ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு,  தளர்ந்து  போன மொகலாயர் ஆட்சியில், ஒளரங்க சீப்பால்  மதம் மாற்றப் பட்டவர்கள் மீண்டும் தங்களின் தாய் மதத்துக்குப் போய் இருக்கலாமே! அப்படி யாரும் போனதாகத் தெரியவில்லை என்பதே வரலாறு.  இஸ்லாத்தில் இணைந்தவர்கள் முஸ்லிம் ஆட்சி நீங்கிய பின்பும் பழைய மதத்திற்குத் திரும்பவில்லை என்பதும் கட்டாய மதமாற்றம் எப்போதும் நடைபெற்றதில்லை என்பதை நிரூபிக்கிறது. 

மாறாக,  ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார் என்பதையும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். 

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்தியதும் , பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடித்ததும் வேறு அரசர்கள் களத்தில் நடந்த வரலாற்று உண்மை. உதாரணத்துக்கு ,  ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில்  ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு. 

நாம் “சிதம்பர ரகசியம்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம் அல்லது பயன்படுத்துகிறோம். சிதம்பர ரகசியம் என்றால் என்ன? இந்த சிதம்பர ரகசியத்தின் பின்னணியில் ஒரு சிதம்பர ரகசியம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அது ஒரு கொலைக் கதை அல்லவா? சிதம்பரம் கோயில் கர்ப்பகிரகத்துள் வைத்து அப்பர் அடிகளை கொலை செய்துவிட்டு இறைவனுடன் கலந்து விட்டார் என்று கட்டிவிடப்பட்ட கதையல்லவா? (மஞ்சை வசந்தன்) . இந்த நிகழ்ச்சி பற்றி வரலாற்றாசிரியர்கள் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? இது போல் எத்தனையோ மகான்களை கொன்றுவிட்டு அவர் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று கட்டிவிடப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை வெளிக் கொணரும் தைரியம் எத்தனை வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கிறது? 

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது இட்டுக்கட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப் படுகிறது ;  பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்க சீப்  உடைய வாழ்க்கை ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் ஆள்வோருக்கும் ஒரு பின்பற்றப்படத்தக்க பாடம். பல போர்க்களங்களில் சமர் புரியும் நேரங்களில் தொழுகை நேரம் வந்தால் போர் புரிவதை நிறுத்திவிட்டு , நேரம் தவறாமல் தொழுகையை முடித்துவிட்டு , பிறகு தனது தாக்குதலைத் தொடருவார். எளிமையான வாழ்வுக்கு உதாரணமாக ஒரே ஒரு உதவியாளரை தன்னுடன் வைத்துக் கொண்டவர். அவருடைய ஆட்சிகாலத்தில் அவரால் லாகூரில் ஒரே ஒரு பள்ளி பெரிய அளவில் கட்டப்பட்டது. அதற்கு அடுத்து டெல்லி செங்கோட்டையின் உள்ளே, மிகச்சிறிய அளவில் அவரால் கட்டப்பட்ட  முத்து மசூதி ( Moti Masjid ) அவரது சிக்கன வாழ்வுக்கு சான்று பகரும். அரசின் பணத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தாத அவரது தன்மை இஸ்லாமிய கலிபாக்களுடைய வாழ்வை நினைவூட்டுகிறது. அவரது உயிலின் சில வாசகங்களை இங்கே தர விரும்புகிறேன். 
  • நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எதுவும் கட்டக் கூடாது.
  • என் கல்லறை மீது எவ்வித அலங்காரங்களும் இருக்கக் கூடாது. 
  • நான் தொப்பிகளை எனது கைகளால் தைத்து விற்று சேர்த்துவைத்து இருக்கும் பணத்தில் சிறிய அளவு அஜா பெக் இடம் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு எனது இறுதிச் சடங்குகளை செய்யவேண்டும். அந்தப் பணத்தின் அளவுக்கு மேல் எதுவும் செய்யக் கூடாது . 
  • என் இறுதி ஊர்வலத்தில் எவ்வித ஆடம்பரமும் இருக்கக் கூடாது. 
  • இதுவும் போக திருக் குர் ஆனை கையால் எழுதி , விற்று சேர்த்த பணம் என் பையில் இருக்கிறது . அது புனிதமான பணம். அதை ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிடுங்கள்  . 

ஆகியவை அவரது உயிலின் குறிப்பிடப்படவேண்டிய அம்சங்களாகும். 

Unlike his predecessors, Aurangzeb considered the royal treasury to be held in trust for the citizens of his empire. He made caps and copied the Quran to earn money for his use. He did not use the royal treasury for personal expenses or extravagant building projects. என்றுதான் வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் அவரின் இந்த நல்ல குணங்கள் பாட நூல்களில் பங்கு பெற்றனவா? இது போன்ற நற்குணங்களை போதிக்காமல், மொள்ள மாறிகள், முடிச்சவிக்கிகள் அல்லாத நல்ல அரசியல்வாதிகளை நாம் எப்படிக் காண முடியும்? 

ஒளரங்க சீப்பின் உயிலின் அம்சங்களை  இன்றைய அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அண்மையில் பதவி காலம் முடிந்து விலகிய ஒரு குடியரசுத் தலைவி , தான் சுற்றிய உலக நாடுகள் அனைத்துக்கும் தனது பேரன் பேத்தி உட்பட குடும்பத்தையும் கூடவே அழைத்துச் சென்றார். அவரது மம்மியை கூட அழைத்துப் போயிருந்தால் கூட பாதகமில்லை. ஆனால் தனக்கு மசாலா அரைக்க அம்மியையும் கூட விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் மரணமடைந்தால் அந்த மாநிலத்தில் அவரது இறுதிச் சடங்குகளில் அரசின் சார்பாக நடைபெறும் ஆடம்பர அலங்கோலங்களை இந்த நாடு கண்டது; கண்டு கொண்டு இருக்கிறது; இன்னும் காண விருக்கிறது.  

ஒரு உண்மையான  முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் இன்னொரு வரலாற்றுடன் அடுத்த வாரம். 

எனக்கு மட்டும் சொல்லுங்களேன் யாரைப் பற்றி என்று ஒரு குரல் கேட்கிறது. 

தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடைபவர்களை யார் என்று சொல்வோம்?

கஜினி முகமது என்றே சொல்வோம். இன்ஷா அல்லாஹ். 
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

35 Responses So Far:

Unknown said...

ஔரங்கசீபின் மறைக்கப்பட்ட வரலாறுகளை அழகிய முறையில் வெளிச்சம் போடுகின்றது உங்கள் ஆக்கம்.

உங்கள் ஆக்கத்தை படித்த பிறகு இந்திய வரலாறு எவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு நமக்கெல்லாம் மறைக்கப்பட்டு ஒரு போலியான ஒன்று வரலாறு என்ற பெயரில் இஸ்லாமிய மன்னர்களை தரம் தாழ்த்தி அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள் என்னும்பொழுது , உண்மையிலேயே வேதனைதான்.

இனி வரும் காலங்களிலாவது, திருத்தி எழுதப்பட்ட வராலாற்றை படிக்கும் வாய்ப்பு எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா ? அல்லது போலியான வரலாறு தொடருமா ?

இதை ஏன் நாம் நம் சமுதாயம் ஒற்றுமையோடு செயல் பட்டு இந்திய வரலாற்றுத்துரைக்கு ஒரு மனுவாக உண்மை சான்றுகளோடு தரக்கூடாது ?


அபு ஆசிப்

Ebrahim Ansari said...

இதை ஏன் நாம் நம் சமுதாயம் ஒற்றுமையோடு செயல் பட்டு இந்திய வரலாற்றுத்துரைக்கு ஒரு மனுவாக உண்மை சான்றுகளோடு தரக்கூடாது ?

IMPORTANT QUESTION
VERY DIFFICULT TO ANSWER. SPECIALLY FOR THE WORD ஒற்றுமையோடு

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

வாசிக்க வாசிக்க வஞ்சிக்கப்பட்ட உணர்வு மேலோங்குகிறது. இதுநாள்வரை கற்றறிந்த வரலாறு நரகலாறாக நாற்றமடிக்கிறது.

மாமன்னர், மாமனிதர் ஒளரங்கசீப்பின் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட அபத்தங்களை இனிமேலாவது பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க ஆவண செய்தல் வேண்டும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

இந்த கட்டாய மதமாற்றம் என்னும் கோஷமே எனக்கு ஒரு கையாலாகாத் தன்மையாகவே படுகிறது.

மனிதனை அவனுக்கு விருப்பமில்லாமல் ஒரு ஒரு வாரகாலத்திற்கு வேண்டுமானால் கட்டுப்படுத்தியோ மதம் மாற்றியோ வைக்க முடியுமே தவிர அவன் வாழ்நாள் முழுதும் பிடித்து நிறுத்தி வைக்க முடியவே முடியாது.
அவன் மீண்டும் தன் முந்தைய மதத்தையே போய்ச் சேர்வதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகளும் கடப்பாடுகளும் இருக்கவே செய்யும்.

அப்படி திரும்பாதிருக்க இறைகோட்பாடுகளால் மட்டுமே கட்டிப்போட இயலும்.

இதை மறைக்கவே இப்படியொரு கோஷம்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம் தம்பி சபீர்,

புதிய புரபைல் படம் கலக்குது - .

மாமன்னர் ஒளரங்கசீப் பற்றி இந்த மற்றும் முந்தைய பதிவுகளின் விபரங்களில் காணப் படும் கருத்துக்கள் உள்ளடக்கிய ஒரு கவிதை தாருங்களேன். அதை நமது கவிப் பேரவையின் மற்ற உறுப்பினர்கள் ஆன கவியன்பனும் கிரவுனும் தொடரட்டுமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுடச் சுட ! சூடு தெறிக்கிறது...

அன்று !
உண்மையச் சுட்டார்கள், உரிமையச் சுருட்டினார்கள்...

இன்று !
உணர்வுகளை உரசிப் பார்க்கிறார்கள் !

வரலாற்றை களவாடிய கயவர்கள்...

பொறுமையை போற்றும் மார்க்கம் நம்மை பொறுப்பற்று இருக்கச் சொல்லவில்லை...

நம் கடமை உண்மை பதிக்கப்பட வேண்டும் அது எவ்வகையிலிருந்தாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் !

எங்கள் வரலாற்று ஆசிரியருக்கு நன்றிகள் கோடியில்... (ரூபாயில் அல்ல) !

نتائج الاعداية بسوريا said...

//வரலாற்றை களவாடிய கயவர்கள்...//

களவாடியது மட்டுமல்ல
தூய உள்ளத்தோடு பணியாற்றிய மன்னர்களை தூஷிக்கவும் இவர்கள் தயங்கவில்லை.

உண்மையை சொல்லப்போனால் இந்துக்களுக்கு ஔரங்கசீப் போன்ற மன்னர்களின் காலம்தான் பொற்காலமாக இருந்து இருக்கின்றது என்பது தெளிவாகிறது.

இக்கயவர்கள் உண்மையை மறைத்து போலியான வரலாற்றை நம்மை படிக்க செய்து, தங்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கு நம் கல்விகாலங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்காலம் இவர்களை என்றைக்கும் மன்னிக்காது மன்னிக்காது மன்னிக்காது.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

//நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எதுவும் கட்டக் கூடாது.
என் கல்லறை மீது எவ்வித அலங்காரங்களும் இருக்கக் கூடாது.
நான் தொப்பிகளை எனது கைகளால் தைத்து விற்று சேர்த்துவைத்து இருக்கும் பணத்தில் சிறிய அளவு அஜா பெக் இடம் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு எனது இறுதிச் சடங்குகளை செய்யவேண்டும். அந்தப் பணத்தின் அளவுக்கு மேல் எதுவும் செய்யக் கூடாது .
என் இறுதி ஊர்வலத்தில் எவ்வித ஆடம்பரமும் இருக்கக் கூடாது.
இதுவும் போக திருக் குர் ஆனை கையால் எழுதி , விற்று சேர்த்த பணம் என் பையில் இருக்கிறது . அது புனிதமான பணம். அதை ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிடுங்கள் .

ஆகியவை அவரது உயிலின் குறிப்பிடப்படவேண்டிய அம்சங்களாகும். //

பொன் போன்ற எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வுயில்.

இதனை தெரிந்துமா இவர்கள் இம்மன்னரை தூஷிக்கின்றனர்?

அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே வரலாற்று ஆசிரியர்கள் நடிக்கின்றனரா??

உண்மையை மறைத்து வரலாற்றை எழுதி வருகின்றனரா ?

எது எப்படியோ ஔரங்கசீப்ஒரு தூய அப்பழுக்கற்ற அனைவராலும் போற்றப்படவேண்டிய ஒரு மாமன்னர் .

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்னாரைப் பற்றிய அரிய விளக்கம் என்று நாம் சொல்லும் அளவுக்கு தொடர்ந்து மோசடி வரலாறும் எழுதி நம்மையும் படிக்க வைத்துவிட்டார்கள்.

அப்படின்னா அக்கால நம்மவர்களும் இன்று போல் ஓரிரு சீட்டுகளை வாங்கி விட்டு வாயை சப்பிக் கொண்டு இருந்து விட்டார்களோ!

نتائج الاعداية بسوريا said...

அன்பு இப்ராஹிம் அன்சாரி காக்கா,

தாங்கள் ஏன் இந்திய வரலாற்று துறை பிரிவுக்கு மனு செய்து அங்கு அங்கம்
வகிக்கும் ஒரு உறுப்பினர் பதவியில் அமர்ந்து இந்திய உண்மை வரலாற்றை எழுதும் முயற்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடாது ?

வரும் கால சந்ததிகள் உண்மை இந்திய வரலாற்றை தெரிந்துகொள்ளும்
வாய்ப்பை பெற்றுகொள்ளுமல்லவா?

இது நடக்கும் காரியமா இல்லையா என்பது எனக்கு தெரியாது
என் மனதில் உள்ள ஏக்கத்தை சொன்னேன்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் இ.அ. காக்கா அவர்களின் ஆய்வு கூட வரலாற்றில் ஓர் ஏடாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இன் ஷா அல்லாஹ். தங்களின் நீண்ட ஆதாரங்களுடனும் உண்மைச் சம்பவங்களின் திரட்டுகளுடனும் தொடரும் இந்த வரலாற்று ஆய்வினால், மனமாற்றம் ஏற்பாட்டாலே போதும். எனவே, வழக்கம் போல் இத்தொடரைப் படிக்கத் தூண்டும் வண்ணம் இந்த இணைப்பை என் முகநூல் தொடர்பாளர்கள் மற்றும் என் மின்மடல் தொடர்பாளர்கள் அனைவர்க்கும் அனுப்பி வைக்கின்றேன்.

தங்களின் ஆணைக்கிணங்கி விட்டேன் தலைவர் அவர்களே!

இன் ஷா அல்லாஹ், தங்களின் முந்தைய தொடரை முன்வைத்துக் கருவாக்கி, என் மரபுப்பாக்களை யாத்தனுப்புகின்றேன்(தலைப்பை ஆஸ்தான கவிஞர் அவர்கள் தெரிவு செய்வார்கள்)

இன்ஷா அல்லாஹ், தங்களின் விருப்பத்தை நிறைவு செய்வது எங்களின் த்லையாய கடன் ஆகும்.

ZAKIR HUSSAIN said...

எல்லா யுனிவர்சிட்டியின் வரலாற்றுத்துறைக்கும் லின்க் அனுப்புவது ஒளரங்கசீப்பின் பெயரின் மீதான கலங்கத்தை துடைக்கும் முயற்சி.

கலங்கம்...இயற்கையானதல்ல.. மதவெறியர்களால் ஏற்படுத்தப்பட்டது.

sabeer.abushahruk said...

//புதிய புரபைல் படம் கலக்குது //

காக்கா, கோலாலம்பூர் வரை கேட்குமளவுக்கும் இன்னும் கொஞ்சம் சப்தமா ப்ளீஸ்.

ஓளரங்கசீப் கவிதையில் கவியன்பனைத் தொடர்வோம் இன்ஷாஹ் அல்லாஹ்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//புதிய புரபைல் படம் கலக்குது //

ஆமாங்க! கலக்குதுங் கோ.......லாலம்பூர்

KALAM SHAICK ABDUL KADER said...

////புதிய புரபைல் படம் கலக்குது //

குறுந்தாடியும், கருஞ்சட்டையும், சொக்கும் பார்வையும் எம்மை அங்கிங்குப் பார்க்க விடாமற் சிக்க வைத்து விட்டது கவிவேந்தே! மாஷா அல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

Sorry boss. I thought must be some Gujarat astrolager fellows writing I'm Tamil ( after seeing your profile photo)

ZAKIR HUSSAIN said...

Sorry boss. I thought must be some Gujarat astrolager fellows writing I'm Tamil ( after seeing your profile photo)

Ebrahim Ansari said...

ஹலோ கோலாலம்பூரா? பேசுறது காதில் விழுதா?
கோலாலம்பூர்தான் ஆனா காதிலே விழலை
என்ன விழலையா?
ஆமா விழலை ஆனா கேட்குது
ஓ! அது போதும் . அந்த வரலாற்றுத் திருப்பத்தை கவனித்தீர்களா?
எதைப் பற்றி சொல்கிறீர்கள்?
அதான் அந்த புது ப்ரோ பைல் போட்டோ
ஆமாம். நீங்கள் பார்க்கும்போதே நானும் பார்த்துவிட்டேன்.
நான் பாராட்டியபடி நீங்களும் பாராட்டும்படி இருக்கா?
இருக்கு! இருக்கு! இருக்கு!
நன்றி. மகிழ்ச்சி. ஸலாம். உலகத்துக்கு அறிவிக்கிறேன்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

என் ஃபோட்டோவுக்கு இத்தினி பேரு "கலக்குது"ன்னு போட்டிருக்காங்களே அதென்ன மூஞ்சியா இனிமாவா?

sabeer.abushahruk said...

காக்கா,

சொல்ல மறந்து விட்டேன். தாங்கள் தந்திருக்கும் புள்ளி விவரங்களை வாசிக்க வாசிக்க வாய்ப் பிளந்துகொண்டது. . இவற்றில் எதையாவது யாராலும் மறுக்க முடியாது என்னும்போது வரலாற்றுப் புத்தகங்களில் நடை முறைப் படுத்துவதை தடுப்பது எது.

இணையம் எங்கும் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் 'கையெழுத்துப் புரட்சி'யைப் போல மின்னஞ்சல் மூலம் நாம் எல்லோரும் வரலாற்றுத் துறைக்கு எடுத்துச் சொல்லலாமா?

தாங்களோ வேறு விவரம் தெரிந்த யாராவது ஒரு வழி சொல்லித் தாருங்களேன்.

Anonymous said...

பொறாமையிலும் வெறுப்பிலும் பூசிய பொய் சாயத்தை வெளுக்க வைத்து மெய்ச் சாயம் காட்டிய அருமையான வரலாற்று கட்டுரை. அவாள்களின் புளுகு மூட்டைகளை தன் எழுத்து ஆற்றல் மூலம் சந்திக்கு கொண்டு வந்த மைத்துனர் இப்ராஹிம்அன்சாரியை நாற்காலியில் உக்கார வைத்து குலவை இட்டு விரல்களுக்கு மருதாணி விடவேண்டும்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களின் அறிவு பூர்வமான - ஆக்கப்போர்வமான கேள்வி

//இணையம் எங்கும் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் 'கையெழுத்துப் புரட்சி'யைப் போல மின்னஞ்சல் மூலம் நாம் எல்லோரும் வரலாற்றுத் துறைக்கு எடுத்துச் சொல்லலாமா?//

சொல்லலாமே. இன்னும் கொஞ்சம் பொறுத்திடுங்கள். இன்ஷா அல்லாஹ் இது போல் இன்னும் பல வரலாற்றுப் பிழைகள் வரவிருக்கின்றன. அவைகளை பட்டியல் போட்டு ஆதாரங்களுடன் அனுப்பிவைப்போம்.

இப்படி கச்சை கட்டி இறங்கினால்தான் உண்டு.

Ebrahim Ansari said...

//நாற்காலியில் உக்கார வைத்து குலவை இட்டு விரல்களுக்கு மருதாணி விடவேண்டும்!// ஏன் இந்தக் குலவை வெறி மச்சான்?

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அவுரங்க சீப் உடைய ஆவி கேட்கிறது : நான் மறைந்த பின்னே ஏன் மீது இவ்வளவு சேற்றை அள்ளி வீச குற்றமென்ன செய்தேன்?

வரலாற்றுத்துறை: நீ ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்ததும் அதே முறையில் நாட்டை ஆண்டதுமே முதல் குற்றம். மற்ற குற்றங்கள் உமது முதல் குற்றத்தின் காரணமாகவே உம மீது புனையப்பட்டவை.

Yasir said...

மதச்சாயம் பூசப்பட்டு மறைக்கப்பட்ட வரலாற்றை உங்கள் எழுத்து என்ற பட்டசீலை போட்டு தேய்த்து உண்மையான வண்ணம் ஒளிரச்செய்துள்ளீர்கள் மாமா.....இதற்க்கான நற்க்கூலி உங்களுக்கு உண்டு....இந்த செய்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்லபட வேண்டும்....

Yasir said...

//புதிய புரபைல் படம் கலக்குது // அதானே இளமை திரும்புகின்றதோ புரஃபைலில்...:)

Shameed said...

மாமா எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஒரு கலக்கு கலக்கிபுடுரியலே நாங்க கலக்கியது எல்லாம் வெட்டி குள படித்துரையைத்தான்.

இதுக்கு மேலும் நாங்கள் பொறுமையா இருக்கமாட்டோம் இனிமேல் கொடுவா மீன் குடலும் கத்தரிக்காயும் சாப்பிட்டுவிட்டு எல்லா துறையையும் கையில் எடுத்துவிட வேண்டியதுதான்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அன்பிற்குரிய ,மதிப்பிற்குரிய மேதையே இப்படி கயவாளிகளால் மறைக்கப்பட்டதை பிட்டு,பிட்டு வைத்து இப்படி எல்லா சிக்கலையும் அவிழ்த்து,சில முடிச்சவிழ்கிகளுக்கு நல்ல தொரு பதிலடியை தந்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் அறிவு ஆராட்சி!வெளிவரட்டும் இதுபோல் நல்லவர்களின் அரசாட்சி !வீழட்டும் அவாள்களின் சூழ்ச்சி!இதுதான் எழுத்து புரட்சி!.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்!

அலைக்குமுஸ் ஸலாம்.

அலைபேசியில் அழைத்தும் பேசியதற்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

ஜாயிரு,

என் ஃபோட்டோவுக்கு இத்தினி பேரு "கலக்குது"ன்னு போட்டிருக்காங்களே அதென்ன மூஞ்சியா இனிமாவா?
------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிஞரே!சினிமா"வுக்குரிய முகம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு :

கவிஞருக்கு நடிக்கத் தெரியாதுங்கிறது எவ்வ்வ்வ்வ்ளோ சினிமாட்டிக்க சொலிட்டே!

Anonymous said...

//ஏன்இந்த குலவை வெறிமச்சான்//

அஸ்ஸலாமு அலைக்கும்! மச்சினம் புள்ளே! 'குலவை' இடுவது வெறியல்ல!

ஒரு வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் போது அதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் அஞ்சல்;. மகிழ்ச்சியின் ஓசை!

முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை ஊராருக்கு தெரிவிக்க ஏழு குலவையும், பெண் குழந்தை பிறந்தால் ஐந்து குலவையும் இடும் வழக்கம் நம் ஊரிலும் இருந்தது. திருமணத்தின் போது நிக்காஹ் சொல்லி முடிந்ததும் மாப்பிள்ளையே மணவறைக்கு கூட்டிசென்று புதுமணப் பெண்ணின் கையேடு மாப்பிள்ளையின் கையேயும் சேர்த்து விடும்போது பெண்கள் குலவை இடும் வழக்கம் நம்மூரிலும் இருந்தது. இந்த குலவை ஓசை கேட்ட பின்பே நிக்காஹ் சொல்லி கொடுத்த லைபை / ஆலிம்சா பாத்திஹா ஓதுவார். நாமெல்லாம் ஆமீன் சொல்லிவிட்டு பூவந்தி உருண்டையோ, வாழைப் பழமோ கொடுப்பதை கையில் வாங்கிk கொண்டு' வெளியே போட்ட செருப்பு' பத்திரமா கெடக்குதா?'' என்ற அச்சமும் பீதியும் மனதை கவ்வ' நீ முந்தி! நான் முந்தி' என்று வெளியே ஓடோடி வருவோம்!

இப்பொழுதெல்லாம் கல்யாணப் பத்திரிக்கை வந்தால் பந்தலுக்கு போய் Tஅல்லது காபி குடிப்பதோடு வீடு திரும்பி விடுவேன். நிக்காவுக்கு போவதில்லை. காரணம் ஒரு ஜோடி அங்கே சேர நான் என்னுடைய ஒரு ஜோடி ‘செருப்பை’ இழக்க விரும்பவில்லை!

குலவை இடுவது தமிழ்நாட்டு பண்பாடு மட்டுமல்ல தென் ஆப்பிரிக்க முஸ்லிம்களிடமும் இருந்ததாக ROOTSஎன்ற புத்தகத்தில் படித்த நினைவு உண்டு. இது மண் வாசனை;.வெறியல்ல!.

புதுயுகம் பிறக்கப் பிறக்க பழமைகள் ஏதோ ஒரு சாயம் பூசி மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது!

கஸ்தூரி மானாக இருந்த அவுரங்கசீப்பை மந்திதோல் போர்த்தி காட்டியதை தன் எழுத்துத் திறனாலும் வரலாற்று ஆய்வுத் திறனாலும் அவர் மந்தியல்ல! மான் அதுவும் கவரிமான் என்று நிரூபித்து மூடர்கள் போர்த்திய பொய் தோலை கிழித்தெரிந்து ‘மெய்’தோல் காட்டிய சாதனைக்கு கொடுக்கும் பாராட்டுக்கு இன்னொரு பெயர் குலவை'!.

'குலவை' மகிழ்ச்சியின் – பாராட்டின் - வாழ்துகளின் வெளிப்பாடு. அதுவெறியல்ல!விவேகம்.

''குலவை''என்பது'' 'குரவை' என்ற சொல்லின் திரிபு..

சிலப்பதிகாரத்தில் கவுந்திஅடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துக் கொண்டு காட்டு வழியில் மதுரைக்கு செல்லும்போது கட்டுவாசிகள் ஆனந்தத்தில் ஆடியும் பாடியும் அவர்களை வரவேற்றனர். அந்த ஆனந்த பாடலுக்கும் பெயர் 'குரவை'; ஆட்டத்துக்கு பெயர்' குரவைக் கூத்து!.'என்று இளங்கோ அடிகள் சொல்கிறார்!.

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

Unknown said...

தம்பி சபீர் அவர்களின் அறிவு பூர்வமான - ஆக்கப்போர்வமான கேள்வி

//இணையம் எங்கும் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் 'கையெழுத்துப் புரட்சி'யைப் போல மின்னஞ்சல் மூலம் நாம் எல்லோரும் வரலாற்றுத் துறைக்கு எடுத்துச் சொல்லலாமா?//

சொல்லலாமே. இன்னும் கொஞ்சம் பொறுத்திடுங்கள். இன்ஷா அல்லாஹ் இது போல் இன்னும் பல வரலாற்றுப் பிழைகள் வரவிருக்கின்றன. அவைகளை பட்டியல் போட்டு ஆதாரங்களுடன் அனுப்பிவைப்போம்....""

'பொறுக்க முடியவில்லையே காக்கா" உடனடியாக அதன் ஏற்பாடு செய்யுங்கள்... அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை உங்களுக்குத் தருவானாகவும்,,ஆமீன்...

Unknown said...

தம்பி சபீர் அவர்களின் அறிவு பூர்வமான - ஆக்கப்போர்வமான கேள்வி

//இணையம் எங்கும் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் 'கையெழுத்துப் புரட்சி'யைப் போல மின்னஞ்சல் மூலம் நாம் எல்லோரும் வரலாற்றுத் துறைக்கு எடுத்துச் சொல்லலாமா?//

சொல்லலாமே. இன்னும் கொஞ்சம் பொறுத்திடுங்கள். இன்ஷா அல்லாஹ் இது போல் இன்னும் பல வரலாற்றுப் பிழைகள் வரவிருக்கின்றன. அவைகளை பட்டியல் போட்டு ஆதாரங்களுடன் அனுப்பிவைப்போம்....""

'பொறுக்க முடியவில்லையே காக்கா" உடனடியாக அதன் ஏற்பாடு செய்யுங்கள்... அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை உங்களுக்குத் தருவானாகவும்,,ஆமீன்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.