Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் - 1 15

அதிரைநிருபர் | October 22, 2010 | ,

அஸ்ஸலாமு அலைக்கும்.


காலங்கள் மாறுகிறது, விஞ்ஞானம் வளர்கிறது, மனிதன் நிலவில் கால் வைத்து விட்டான். வேறு எந்த கோள்களுக்குச் செல்லலாம் என்று ஆராய்ச்சியில் இருக்கிறான். இவ்வளவு இருந்தும் பிற மதமக்களிடம் இருக்கும் பல மூடபழக்கங்கள் மட்டும் நம்மவர்களிடமும் தொற்றுநோய் போல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நம்மிடையே குடிகொண்டுள்ள சில தீய மூடபழக்கங்களில்  ஒன்றுதான் குறி கேட்பதும், அதற்கு பரிகாரம் என்ற பெயரில் ஷிர்க்கான (இணை வைக்கும்) காரியங்களை செய்து வருபவர்களைப்பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சிகளின் வாயிலாக நாம் பார்த்து வருகிறோம். இது பற்றிய விழிப்புணர்வுதான் இந்த ஆக்கம். நம் சமுதாய மக்கள் (மார்க்கம் அறியாமல்) செய்வதை மட்டும் நயவஞ்சக ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டும் வேலையை நன்றாக செய்து வருகிறது. சமீபத்தில் மிகக்கொடூரமான சம்பவம் முஸ்லிம் (பெயர் தாங்கி) ஆணும், பெண்ணும் சேர்ந்து பச்சிளங்குழந்தையை அறுத்து பலியிட்ட செய்தி கேள்விப்பட்டு மிக வேதனையாக இருந்தது. இன்னும் பெயர்தாங்கி முஸ்லிமாக எத்தனை காலம் இருப்பார்கள். மார்க்கத்தை எப்பொழுது அறிந்து கொள்வார்கள். இன்னும் மார்க்கம் இவர்களிடம் சரியாக போய்ச்சேரவில்லையே  என்ற கவலை நமக்கு அதிகமாக இருந்து வருகிறது.

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட(அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. ........  (அல்குர்ஆன் 5:3)

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171)


 இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

15 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்: அப்ப்டின்னா வெத்திலையில எப்படி படம் பார்க்கிறாங்கன்னு சொல்லுவீயா(ப்பா)? அந்த டெக்னிக் இன்னை வரைக்கும் பிடிபடவேயில்லை !

நானும் DVX, AVI, MIO, VEX, VMR இன்னு நிறைய ஃபார்மெட்டிலெல்லாம் தேடிப் பார்த்துட்டேன் இந்த தொழில் நுட்பம் எனக்கு கிடைக்க மாட்டேங்கிறது யாராவது சொல்லுங்களேன்...

sabeer.abushahruk said...

தம்பி crown, நல்லதொரு நினைவூட்டல். இந்த பால் கிதாபு, தாயத்து, தட்டை எழுதிக் குடிக்கிறது எல்லாம் இன்னும் இருக்கிறதா?

//மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை//

முடியாது. எல்லாம் தகிடு தத்தம். உங்களுக்கும் எமக்கும் விளங்கியதை ஊருக்கும் விளங்க வைக்க நீங்கள் எடுக்கும் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மூடப் பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லும்போது நல்ல நகைச்சுவை கலக்க வாய்ப்புள்ளது. தீர்வு சொல்லும்போது மார்க்கம் refer பண்ணிச் சொல்கிறீர்கள். சிரித்து சிந்திக்குமாறு இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம்.

தொடருங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சூதுவாது தெரியாத புள்ளையா இருக்கானேன்னு எதுக்குச் சொல்றாங்க ?

களவையும் கற்று மறன்னு ஏன் சொன்னாங்க ?

அந்த எழுதிவைப்பட்ட தட்டு (அதுவும் பீங்கான் தாட்டில்தான் இருக்கனுமாம்) கீழே விழுந்து நொருங்கிவிட்டால் அதுக்கு ஒரு பரிகாரம் ?

நிச்சயம் ஒழிந்திருக்கும் இதுவரை...

crown said...

மூடப் பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லும்போது நல்ல நகைச்சுவை கலக்க வாய்ப்புள்ளது. தீர்வு சொல்லும்போது மார்க்கம் refer பண்ணிச் சொல்கிறீர்கள். சிரித்து சிந்திக்குமாறு இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா கணித்துள்ளீர்கள்,இனி நகைச்சுவை நாடகமே இருக்கு...போக போக அந்த் புதயல் வரும் அதுக்கும் கோழி அறுத்து காவு கொடுப்பார்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மூட நம்பிக்கைகள் இன்று அனேகம் மண்மூடிப்போய் விட்டது.

ஒரு காலத்தில் இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மூட நம்பிக்கைகளை பல தூக்கி எறியப்பட்டன. நவீண வடிவில் (டிவி நிகழ்ச்சிகளில், சீரியலில் மூட நம்பிக்கைகளை தூண்டும் காட்சிகள்) சைத்தான் நம்மை ஒவ்வொரு வினாடியும் சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் இக்காலத்தில் இந்த விழிப்புணர்வும் தொடர்ந்து செய்தே ஆக வேண்டும்.

அல்லாஹ் நம்மையும் நம் சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மறக்கப்பட்ட மூட நம்பிக்கை மீண்டும் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொடர் விழிப்புணர்வு ஆக்கத்தை தந்த அன்பு சகோதரர் தஸ்தகிர் அவர்களுக்கு மிக்க நன்றி.

தொடருங்கள்...

Shameed said...

தகடு வேலை வெற்றிலை குறி இதில் எல்லாம் நம் மக்கள் ஈடு படுகின்றார்கள் அதற்கு காரணம் ஈமான் குறைவு.இது போன்ற காரியங்களில் ஈடு படுவோரை இறைவன் மன்னிக்க மாட்டான் என்பது கூட அறியாமல் இதில் ஈடு படுகின்றார்கள்.

சகோ ;crown னின் இந்த ஆக்கம் பலரையும் விழிப்படைய வைக்கும்

crown said...

தாஜுதீன் சொன்னது…
நவீண வடிவில் (டிவி நிகழ்ச்சிகளில், சீரியலில் மூட நம்பிக்கைகளை தூண்டும் காட்சிகள்) சைத்தான் நம்மை ஒவ்வொரு வினாடியும் சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் இக்காலத்தில் இந்த விழிப்புணர்வும் தொடர்ந்து செய்தே ஆக வேண்டும்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.தாஜுதீனின் கவலை நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.இதைப்பற்றி சபிர்காக்கா விழிப்புணர்வு கவிதை ஆக்கலாம், நைனா,அஹமது சாச்சா,ஜமில் காக்கா யாரவது கட்டுரை பதியலாமே?

crown said...

Shahulhameed சொன்னது…
தகடு வேலை வெற்றிலை குறி இதில் எல்லாம் நம் மக்கள் ஈடு படுகின்றார்கள் அதற்கு காரணம் ஈமான் குறைவு.இது போன்ற காரியங்களில் ஈடு படுவோரை இறைவன் மன்னிக்க மாட்டான் என்பது கூட அறியாமல் இதில் ஈடு படுகின்றார்கள்.

சகோ ;crown னின் இந்த ஆக்கம் பலரையும் விழிப்படைய வைக்கும்.
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.சாகுல் முதலில் உங்கள் ஹஜ் பயணம் சிறப்பாய் முடிய அல்லாஹ் அருள்புரிவானாக ஆமின்.எமக்காகவும் துஆ செய்ய வேண்டுகிறேன்.இன்சாஅல்லாஹ் விழிப்புணர்வுகளை அல்லாஹ் தந்தருள்வானாக ஆமின்.

Yasir said...

நன்மையை ஏவி தீமையை தடுங்கள் என்ற இஸ்லாமிய கூற்றுக்கு ஏற்ப உள்ளது உங்கள் கட்டுரை…நிலைப்படியில் குதிரைகுளம்பு இரும்பு தகடு பதித்தல்,புது வீடு கட்டும் போது கண் திருஷ்டிகாக வீட்டு ஒனர் சாயலில் பூசணிக்காய் கட்டுதல்,தர்ஹா சந்தனத்தை தின்றல் போன்ற மூட நம்பிக்கைகள் மறைந்து இருந்தாலும்…சகோ.தாஜீதின் சொல்வது போல்….டிவி வழியாக வரும் வாஸ்த்து பார்த்தல்,ராசிக்கல் அணிதல் போன்ற மூட நம்பிக்கைகள் நம் சமுதாயத்தை சிறிதாக ஆட் கொள்ள ஆரம்பித்து உள்ளது…அல்லாஹ் பாதுகாப்பான்…..சகோ.கிரவுன் நன்றி உங்கள் விழிப்புணர்பு கட்டுரைக்கு

சகோ.அபுஇபுராஹிம்….palmtop technology-ஜ பல வருடங்களுக்கு முன்னரே இந்த ஜோதிடர்கள் கண்டுபிடித்து விட்டர்கள் என்று நினைக்கிறேன் :)

sabeer.abushahruk said...

//புது வீடு கட்டும் போது கண் திருஷ்டிகாக வீட்டு ஒனர் சாயலில் பூசணிக்காய் கட்டுதல்//,

ஹாஹ்ஹாஹாஹாஹா...

ZAKIR HUSSAIN said...

Bro Crown ,நல்ல விழிப்புணர்வு கட்டுரை ...நிறைய எழுதுங்கள்


மூடப்பழக்கவழக்கங்கலின் லிஸ்ட்

# " வீட்டுக்கு நிலைக்கதவு வைக்கும்போது மஞ்சள் தடவுவது'"

# கார் முதலில் ஓட்டும்போது எழுமிச்சையை டயரின் அடியில் வைத்து....பகுத்தறிவை நசுக்குவது'

# இன்னார் முகத்தில் விழித்தால் ராசி என்று நினைப்பது..

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்...எனக்கு தெரிந்த ஒருவர் சில அரபி எழுத்துக்கள் எழுதிய புத்தகங்களை கல்லா பெட்டியில் போட்டுவைத்து இருந்தார்...அது பணம் / செல்வம் பெருக உதவுமாம்....

[ வித்தியாசமானவர்கள்-பகுதி 2 எழுத விசயம் இருக்கிறது]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//[ வித்தியாசமானவர்கள்-பகுதி 2 எழுத விசயம் இருக்கிறது]//

காத்திருக்கோம் கதவை திறந்துகிட்டு குறுக்கே எதனையும் போடாம / ஓட விடாமா பார்த்துக்கிறோம் :)) (சகுணமாமே !)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் நானும் வித்தியாசமானவர்களைப்பற்றித்தான் 2,3 அத்தியாயம் எழுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பியுள்ளேன் .(னம்ம ஆள்கள் எவ்வாறெல்லாம் கூத்தடிச்சிருக்காங்க )

அப்துல்மாலிக் said...

சிறு வயதில் நம் வீட்டுலேயும், ஊருக்குள்ளேயும் நாம் பார்த்த எத்தனையோ பழக்கம் மூடப்பழக்கம் என்று பிற்பாடு தெரிந்து நொந்து இதெல்லாமா நாம் செய்தோம் என்று நினைக்கும்போது வருத்தம் மேலோங்குகிறது (உதாரணம்: வீடு கட்டும்போது மனைபோடுவது, நிலைவைப்பது, ஆசியம்மா ஓதி ஊதிய கருப்புகயிறு, வெத்தலையிலே மை, இப்படி நிறைய...)

நம் சந்ததினருக்கு இதெல்லாம் ஷிர்க் என்று போதிக்க வேண்டும், இனியும் இதையெல்லாம் அடியோடு விட்டொழிக்க வேண்டும். நம் சமுதாயம் முன்னேறாதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அல்லாஹ் நன்கறிந்தவன்...

அலாவுதீன்.S. said...

சகோ. தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
*********************************************************************
கண்மூடிப் பழக்கம் மண்மூடிப்போகட்டும்!
*********************************************************************
வாழ்த்துக்கள் சகோதரரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு