Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 4 30

அதிரைநிருபர் | October 20, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

கான மயிலாட!
கடன் வந்து நிழலாட!
வாங்கியவன் கொண்டாட!
கொடுத்தவன் திண்டாட!
கடனே கேட்காதே!


விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முடிவு செய்து விட்டால் நம்மிடம் என்ன சேமிப்பு இருக்கிறதோ ( சேமிக்க முடியவில்லை என்று புலம்புவது புரிகிறது. ஏன்? திட்டமிடுவதில்லை? ) அல்லது இருக்கும் கையிருப்புக்குள் சென்று வர முயற்சி செய்வதில்லை. நண்பர்களிடமோ, கம்பெனியிடமோ, கடன் அட்டையிடமோ கடனுக்கு விண்ணப்பித்து பணத்தை பெற்று நீங்கள் வாங்கிச் செல்லும் பொருள்களால் குடும்பத்தில் யாராவது சந்தோஷம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை நீங்கள்தான் நான் கடன் வாங்கி பொருள்கள் வாங்கி வந்துள்ளேன் என்று சொன்னதுண்டா? பிறகென்ன யாருக்காவது சரியாக பொருள்கள் கொடுக்கவில்லை, கொண்டு வந்த பொருட்கள் சரியில்லை என்ற புலம்பல்தான். இந்த மனக்குறை ஒருபக்கம் மறுபக்கம் குடும்பத்தை பிரிந்த கவலை இரண்டையும் சுமந்து மீண்டும் திரும்பி இந்த பாலை வெயிலுக்கு வந்து விடுகிறோம்.

இதற்கிடையில் கடன் கொடுத்தவரின் நிலைதான் பரிதாபம். பணத்தையும் கொடுத்து விட்டு எப்பொழுது கொடுத்த கடன் திரும்ப வரும் என்று வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கடன் வாங்கியவரோ கொடுத்தவருக்கு எந்த தேவையுமில்லை என்ற நினைப்பில் தன்னுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இப்பொழுது சிலரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

ஒரு சகோதரர் அவர் நண்பருக்கு பல தடவை (கடன் கொடுத்து)உதவி செய்கிறார்.

வல்ல அல்லாஹ் கடன்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்:

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். (அல்குர்ஆன்: 2:282)

வாங்கியவர் எதற்காக என்ன தேதியில் வாங்கினோம் என்று எதுவும் எழுதி வைத்துக்கொள்வதில்லை. ஆனால்  கொடுத்தவர்தான் எழுதி வைத்துக்கொள்கிறார். கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க  வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் ஊருக்கு போகும்பொழுதெல்லாம் கடன் கொடுத்தவரையும் (நண்பராக இருப்பதால்) அழைத்துக்கொண்டு நகைகள், துணிகள் வாங்கிக் கொண்டு ஊர் சென்று வருகிறார். பழகி விட்டோமே எப்படி கேட்பது என்று கொடுத்தவர் கேட்பதற்கு தயங்குகிறார் (லூசா நீ என்று கடன் கொடுத்தவரைப்பார்த்து கேட்க தோன்றுகிறதா?). கடன் வாங்கியவருக்கு வரவேண்டிய தயக்கம் கொடுத்தவருக்குத்தான் பெரும்பாலான இடங்களில் வருவதை பார்க்க முடிகிறது. சில வருடங்கள் ஆன பிறகு கொடுத்த கடனை நண்பனிடம் திருப்பி கேட்கிறார். வாங்கியவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள்: ஏன் நான் கடனை திருப்பித்தரமாட்டேனா? அல்லது ஓடிவிடுவேனா? ஏன் என் மீது நம்பிக்கையில்லையா? நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்ற கணக்கை காட்டு என்று கடன் வாங்கியவர் கொடுத்தவர் போல் கோபப்படுகிறார். (இதில் கடன் வாங்கியவர் குறித்து வைத்துக்கொள்வதும் இல்லை, கெடுத்தவர் எந்த தேதியில் எதற்காக கொடுத்தோம் என்று தெளிவாக கூற வேண்டுமாம்??? ) இவர்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க மனம் வருமா?

நபி(ஸல்) அவர்கள் இப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி அறிவிப்பதை பாருங்கள்:

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி  அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, எண்: 2387)


இரண்டாவது சகோதரரைப்பற்றிப்பார்ப்போம்: அவர் வேலை செய்யும் கம்பெனி வெளியில் வேலை செய்து கொள்ளும்படி கூறி விடுகிறது. ஊருக்கு போக முடிவு செய்கிறார். போய் விட்டு வந்து வேலை தேட வேண்டுமாம். இந்த சூழ்நிலையில் துணிமனிகள் வாங்கி போக வேண்டுமாம். ஊரில் துணிகள் கொடுக்காவிட்டால் நன்றாக (மதிப்பு?) இருக்காதாம், கடன் வாங்குகிறார். கொடுத்தவரிடம் எப்பொழுது திருப்பி கொடுப்பேன் என்ற எந்த வாக்குறுதியும் கிடையாது. திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். கடன் கொடுத்தவர் நிலைதான் இப்பொழுது பரிதாபம். ஏன்? வேலைக்குச் சேர்ந்து, அவர் பிரச்சனைகள் அனைத்தும் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்  வேலையே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவர் வாங்கிய கடன் அவசியத்திற்குத்தானா? இல்லை என்பது புரிகிறது. இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்து உதவி செய்ய மனம் வருமா?

மூன்றாவது சகோதரர் ஊருக்கு செல்ல முடிவு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அதே கம்பெனியில் வேலையை தொடர முடியாத நிலை தெரிந்திருந்தும் கடன் வாங்கிச் செல்கிறார். இவருக்காக சில சகோதரர்கள் ஜாமீன் போடுகிறார்கள். ஊர் போய் வந்த பிறகு கடன் கொடுத்தவர்களிடம் அவருடைய நிலையை எடுத்துச் சொல்லி இத்தனை மாதங்களில் தருகிறேன் என்று சொல்லலாம். ஆனால் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் நிலைதான் பரிதாபம். ஏன்? வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நினைத்தார்கள். இதுபோன்ற சகோதரர்களுக்கு ஜாமீன் போடவோ, கடன் கொடுத்து உதவவோ நமக்கு மனம் வருமா?

நண்பர்கள் இப்படி என்றால் ஒரு அக்கா தங்கை கடன் கொடுத்த விபரத்தை பார்ப்போம்: தன் உடன் பிறந்த அக்கா மகன் வெளிநாடு செல்வதற்காக பணத்திற்கு சிரமபடுவதை பார்த்து தன்னிடம் உள்ள பணத்தை சகோதரிக்கு கடனாக கொடுக்கிறார். விஸாவுக்கு முயற்சித்து விஸா வரவில்லை. அவர் மகன் பயணம் போகவில்லை. பணம் கட்டிய இடத்திலிருந்து  ஒரு வருடம் கழித்து பணம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த கடனை அடைக்காமல் இருக்கிறார். அக்காவிடம் எப்படி கேட்பது அவராக தரட்டும் என்று (சில வருடங்கள்)  காத்திருக்க அந்த அக்காவோ வெளிநாட்டில் இருக்கும் தன் கணவரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் நகை வாங்கி வாருங்கள் என்று சொல்கிறார். மேலும் தன் வீட்டை கட்டுவதற்கு பேங்கில் கடன் வாங்கி வீட்டை கட்ட ஆரம்பித்து விட்டார். தங்கைக்கு கோபம், பார்த்தார் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் அக்காவிடம் பணத்தை திருப்பி கேட்காமல் இருந்தால் நம் பணம் வர வாய்ப்பே இருக்காது என்று நேரடியாக கேட்க தயங்கி வேறு ஒரு சகோதரியின் மூலம் சொல்லி பணத்தை வாங்கி விடுகிறார். கடன் கொடுத்ததால் அவர்களுக்குள் மனஸ்தாபம்.

மேற்கண்ட நால்வரின் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன சொல்கிறது - கடன் கொடுத்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமா? என்று நினைக்க தோன்றுகிறது. மார்க்கம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், கடனைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்று அறியாமல் இருப்பது தெளிவாகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.   (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, எண்: 2397 )

கடன் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் இது போல் நாமும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். அடுத்த தொடரில் இன்னும் எத்தனை வழிகளில் கடன் வாங்கப்படுகிறது என்று பார்ப்போம்.

அன்பு வாசக நெஞ்சங்களே! தாங்களும் கடன் கொடுத்து வாங்கியிருப்பீர்கள் வித்தியாசமான அனுபவங்கள் தங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன்.S.


30 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் அலாவுதீன்,

வழக்கமான தொடர் விழிப்புணர்வு ஆக்கத்திற்கு மிக்க நன்றி.

//அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, எண்: 2397 )//

இந்த ஒரு ஹதீஸை ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய frame போட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்க வேண்டும்.

இவ்வுலகில் தூய வாழ்கை வாழ்ந்த அமீருல் முஃமினீன் நபி (ஸல்) அவர்களே கடன் இல்லாத வாழ்கை வேண்டும் பிரார்த்தனை செய்தார்கள் என்றால் நாம் ஒவ்வொரு வினாடியும் துஆ செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கடன் வாங்க ஆரம்பித்தால் பொய் சொல்ல நேரிடும், வாக்கு தவற நேரிடும் என்ற நபிகளாரின் வார்த்தைகள் இன்று அன்றாடம் நாம் கண்டுவரும் கடன் சம்பந்தமான நிகழ்வுகளில் காண முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

வாழ்த்துக்கள், சகோதரரே.

Shameed said...

உங்களின் ஆக்கங்களை படிக்கப் படிக்க கடனில் இருந்து விலகி இருப்பது மேல் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

உள்ளதை கொண்டு நல் வாழ்க்கை அமைத்து கொள்வது நல்லது

Shameed said...

சம்பவங்களுக்கு ஹதீஸ்களை உதாரணம் காட்டும் உங்களின் பாணி அசத்தலாக உள்ளது

Shameed said...

ஊரில் சில பெண்களுக்கு 15 லட்சம் 20 லட்சம் கடன் உள்ளது என்கிறார்கள் இந்த திடீர் கடன் பற்றி கேள்விப்படும் போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது

இதுபற்றியும் கொஞ்சம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மேற்கண்ட நால்வரின் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன சொல்கிறது - கடன் கொடுத்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமா? என்று நினைக்க தோன்றுகிறது. மார்க்கம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், கடனைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்று அறியாமல் இருப்பது தெளிவாகிறது////

நிஜமே ! அல்லாஹ் உங்களிடமிருந்து வித்தியாசமான தலைப்பை கொடுத்து நல்லதொரு படிப்பினையை இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்... தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபோயிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்..credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு...

crown said...

Yasir சொன்னது…

சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபோயிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்..credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு...
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஒரு செய்தி அல்லது இயற்றபட்ட ஆக்கம் மற்றவர்களை பாதிதால் தான்(இங்கு அல்லாஹ் உதவியால் பாதுகாக்கப்படுகிறது)அதன் மூலம் விழிப்புனர்வு ஏற்பட்டாலே அந்த படைப்பு வெற்றி பட்டதாய் அர்த்தம்.அல்ஹம்துலில்லாஹ் அதற்கு சகோ.யாசிரே சாட்சி.(credit card balance-யும் “0” செய்து விட்டேன்). so that credits goes to brother ALAVUDEEN ALHAMDULILAH. (also said now balance is zero) It's mean brother yasir now your strength to be strong inshallah this all not magic It's power of Islam.ALHAMDULILAH.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அது போல் ஒரு தீய செயல் தடுக்கப்பட சரியான முறையில் எடுத்துச்சொல்லப்படனும்.ஆனால் நம் நாட்டிலோ குடி,குடியை கெடுக்கும் என்ற வாசகம் மட்டும் வைத்துவிட்டு அந்த குடும்ங்களை அழிக்கும் வேலையில் அரசுவே செய்கிறது.அதுபோல் புகைப்பது கேடு என்ற விளம்பரம் ஆனால் புகையிலையை விற்க அனுமதி.எயிட்ஸ் ஒழிக்கும் பிரச்சாரமோ அந்த எயிட்ஸை பரப்பும் அச்சாரமான விபச்சாரம் என்னும் காலாச்சார சீரழிவை,ஆனாச்சாரமாக பிரச்சாரம் செய்கிறேன் என்று முட்டாள் தனமான விளம்பரம் (பாதுக்காப்பான உடலுறவு அவசியம்!!!!)எப்படி சமுதாயம் நாடு செழுக்கும்? அதற்கு தீர்வு விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல் இருப்பதேன்னு சொல்ல என்ன தயக்கம்? முன்பு பாட்டாளிமக்கள் கட்சி தலைவன் ராமதாசுவின் மைந்தன் சுகாதரத்துறை மந்திரியா இருந்தவன் மருத்துவம் படித்த முட்டாள் சொன்னான் எயிட்ஸ தடுக்க ஆனும்,ஆனும்,திருமனம் செய்து கொள்வதை ஊக்குவிக்கனும்!!!!! எப்படி இருக்கு?ஓரினச்சேர்கையும் ஒரு வகை காரணி அந்த எயிட்சை வரவழைக்க என்பது படித்தவர்கள் அறிவார்கள்.இவையெல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் சகோ.அலாவுதீன் போல் விழிப்புனர்வு கட்டுரை அவ்வப்போது இங்கு வெளியிடுவது அவசியம் . நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பிவிட்டேன். சமயம் ஒழியும் போது மீதியை எழுதி அனுப்ப இருக்கிறேன் இன்சாஅல்ல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

Crown said///முன்பு பாட்டாளிமக்கள் கட்சி தலைவன் ராமதாசுவின் மைந்தன் சுகாதரத்துறை மந்திரியா இருந்தவன் மருத்துவம் படித்த முட்டாள் சொன்னான் எயிட்ஸ தடுக்க ஆனும்,ஆனும்,திருமனம் செய்து கொள்வதை ஊக்குவிக்கனும்!!!!! எப்படி இருக்கு?ஓரினச்சேர்கையும் ஒரு வகை காரணி அந்த எயிட்சை வரவழைக்க என்பது படித்தவர்கள் அறிவார்கள்///

இது உண்மையெனில் அவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். [ Evaluating the "Recognition status"]

Zakir Hussain

crown said...

இது உண்மையெனில் அவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். [ Evaluating the "Recognition status"]
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அதற்கு அவன் சொன்ன காரணம் அவ்வாறு ஆண் தனக்கு இணைக்கிடைத்துவிட்டால் அவன் கண்டவர்களிடம் உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற முட்டாள் காரணம் வேறு எப்படி இருக்கு?????

crown said...

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ.பி.கோ.377-வது பிரிவுப்படி, ஓரின சேர்க்கை குற்றம் ஆகும். இதன்படி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஓரின சேர்க்கை மீதான தடையை நீக்க, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார்.

crown said...

http://tamilkurinji.blogspot.com/2009_06_01_archive.html

sabeer.abushahruk said...

அலாவுதீன், உன் கட்டுரையின் வெற்றி அது ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் இருக்கிறது. "இல்லை" "செய்யாதே" "கூடாது" போன்ற கட்டளையிடும் வார்த்தைகளைத் தவிர்த்து கெஞ்சி கேட்கிறாய். நண்மைகளை அள்ளுகிறாய். கடன் வாங்கக்கூடாது என்கிற எண்ணம் எல்லோருக்கும் வலுத்து வருவது உண்மைதான்.அல்ஹம்துலில்லாஹ். தொடரட்டும் உன் பணி, இன்ஷாஹ் அல்லாஹ்!

sabeer.abushahruk said...

//நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பிவிட்டேன்//
அதை உடனே வாசிக்கத் தருமாறு கிரீடத்தின் வாசக வட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

crown said...

sabeer சொன்னது…

//நான் கூட சூனியம்,கைராசி பார்ப்பது பற்றி ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி சகோ.தாஜுதீனுக்கு அனுப்பிவிட்டேன்//
அதை உடனே வாசிக்கத் தருமாறு கிரீடத்தின் வாசக வட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.வெள்ளி பனி மலை எந்தலையில் வைத்ததாரு?
குருவின் வாசகத்தை நான் யாசகம் கேட்பவன்
அந்த குருவே இந்த சின்ன குருத்திடம் கருத்து கேட்கலாமா?
உங்கள்(சபீர்காக்கா) ஆக்கதை தூக்கத்தை தொலைத்து வேர்க்க,வேர்க்க படிப்பவன் நான் என்னிடம் நீங்கள் விசிறியா? என்னை கிள்ளி உண்மை தெரிந்தேன்.மொளனம் பேசுகிறது.மனதில் சிலென்று காற்று வீசுகிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.மகிழ்சியின் நெகிழ்சியில் வார்தைகள் எல்லாம் குழறிவருகிறது.எழுத்துக்கள் எல்லாம் தடுமாறிவிழுகிறது.விடுபட்ட எழுத்துக்களுக்கு நான் பொருப்பல்ல அவை ஓடி ஒளிந்துகொண்டன.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(ன்) தலைக்கு மேல இருக்கிற ஃபேனை ஆஃப் பன்னு வீசிறி(விட) இருக்கும்போது அதை ஏன் ஓட விடுறே ! :))

ஒரு ஆக்கம் எழுதி முதல் பகுதி அதிரைநிருபருக்கு அனுப்பிவிட்டேன் என்று சொல்லு(டா)ப்பா !

அலாவுதீன்.S. said...

சகோ. தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// இந்த ஒரு ஹதீஸை ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய frame போட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்க வேண்டும். வழக்கமான தொடர் விழிப்புணர்வு ஆக்கத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள், சகோதரரே. ///

தங்களின் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோ. சாகுல் ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// உங்களின் ஆக்கங்களை படிக்கப் படிக்க கடனில் இருந்து விலகி இருப்பது மேல் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. உள்ளதை கொண்டு நல் வாழ்க்கை அமைத்து கொள்வது நல்லது ///
*******************************************************************
உள்ளதை கொண்டு நல்வாழ்க்கை வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ். தங்களின் எண்ணத்தை வரவேற்கிறேன். தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோ. சாகுல் ஹமீது: ///ஊரில் சில பெண்களுக்கு 15 லட்சம் 20 லட்சம் கடன் உள்ளது என்கிறார்கள் இந்த திடீர் கடன் பற்றி கேள்விப்படும் போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. இதுபற்றியும் கொஞ்சம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.///

*********************************************************************
இதுபற்றிய விழிப்புணர்வு சகோதரிகளின் வீண் விரயம் எப்படி இருக்கிறது என்று இதே தொடரில் வெளிவரும் நேரத்தில் விளக்கமாக சொல்ல இருக்கிறேன். தாங்கள் மேலே குறிப்பிட்ட விபரம் நானும் கேள்விப்பட்டதுதான். இன்ஷாஅல்லாஹ் விளக்குகிறேன்.

தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோ.அபுஇபுறாஹிம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ///நிஜமே ! அல்லாஹ் உங்களிடமிருந்து வித்தியாசமான தலைப்பை கொடுத்து நல்லதொரு படிப்பினையை இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்... தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் !///
*********************************************************************
வித்தியாசமான தலைப்பை கொடுத்து நல்லதொரு படிப்பினையை செயல்படுத்திக்கொண்டு இருக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! கடன் என்பது நெருப்பு இதை நம் சகோதர, சகோதரிகள் நன்கு உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோ. யாசிர்: வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) ///சலாம் காக்கா...உங்கள் கட்டுரையைப்படித்தில் இருந்து...பிளாஸ்டிக் மணியை ( கிரெடிட் கார்டை இப்படிதான் நாங்கள் அழைப்போம்) உபயோகிப்பதை நிறுத்தி விட்டேன்...நினைத்து பார்த்தால் அது அவசியம் இல்லாததுதான்...இப்ப பர்ஸில் கேஷ் மட்டும்தான்....credit card balance-யும் “0” செய்து விட்டேன்...நன்றி உங்கள் விழிப்புணர்வு கட்டுரைக்கு...///

*********************************************************************

தாங்கள் கடன் அட்டையை (பிளாஸ்டிக் மணியை) உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டேன் என்பதை கேட்கும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! (தங்களை சுற்றியுள்ள சகோதரர்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களும் இந்த தீமையிலிருந்து வெளியேற உதவி செய்யுங்கள்) சொல்வது நம் கடமை அவர்கள் மனதை மாற்றுவது வல்ல அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது.

******* தாங்கள் கடன் அட்டையிடமிருந்து விடுபட்டதற்கும்!கருத்திட்டதிற்கும் நன்றி!. ******

அலாவுதீன்.S. said...

சகோ. தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// ஒரு செய்தி அல்லது இயற்றபட்ட ஆக்கம் மற்றவர்களை பாதித்தால் தான்(இங்கு அல்லாஹ் உதவியால் பாதுகாக்கப்படுகிறது)அதன் மூலம் விழிப்புனர்வு ஏற்பட்டாலே அந்த படைப்பு வெற்றி பட்டதாய் அர்த்தம்.அல்ஹம்துலில்லாஹ் அதற்கு சகோ.யாசிரே சாட்சி. ///
******************************************************************

சகோ. யாசிரை கடன் அட்டை தீமையிலிருந்து வெளியாக்கிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மாஷாஅல்லாஹ்! நமது கடமை விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமே. மனித உள்ளங்களை மாற்றக்கூடிய சக்தி வல்ல அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது.
------------------------

/// It's mean brother yasir now your strength to be strong inshallah this all not magic. It's power of Islam.ALHAMDULILAH. ///
*********************************************************

இது மாய வேலை இல்லை. இஸ்லாம் சக்திமிக்கது என்ற தங்களின் கருத்தை வரவேற்கிறேன். வல்ல அல்லாஹ்வின் திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வினையும் நாம் கடைப்பிடித்து உண்மையான முஸ்லிம்களாக நாம் வாழ்ந்தால் எந்த கவலையும்,துன்பமும், ஏமாற்றமும் வல்ல அல்லாஹ்வின் அருளால் நமக்கு ஏற்படாது.

*********************************************************
சகோ.தஸ்தகீர் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அரசியில்வாதிகள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.(தன் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாமல் வளர்த்துக்கொண்டு) நாம் நல்ல தமிழை வளர்க்க வேண்டும். தங்களுக்கு அன்பான வேண்டுகோள். தமிழிலே பின்னூட்டமிடுங்கள்.
*********************************************************
தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

சகோ.சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) /// உன் கட்டுரையின் வெற்றி அது ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் இருக்கிறது. 'இல்லை' 'செய்யாதே' 'கூடாது' போன்ற கட்டளையிடும் வார்த்தைகளைத் தவிர்த்து கெஞ்சி கேட்கிறாய். ///
*********************************************************************நம் கட்டுரையே வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படிதான் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நானும் அதிரை நிருபரில் வெளியாகும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. வல்ல அல்லாஹ் நாடியதை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறான்.
*********************************************************************

///கடன் வாங்கக்கூடாது என்கிற எண்ணம் எல்லோருக்கும் வலுத்து வருவது உண்மைதான்.அல்ஹம்துலில்லாஹ். தொடரட்டும் உன் பணி,இன்ஷாஹ் அல்லாஹ்! ///

*********************************************************************சகோதர ,சகோதரிகளுக்கு மனம் மாற்றம் ஏற்பட்டால் நாம் செய்த இந்த பணிக்கு நன்மையை வல்ல அல்லாஹ் தர போதுமானவன். வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும். கருத்திட்டதிற்கு நன்றி!
*********************************************************************

அப்துல்மாலிக் said...

கடன் இல்லாமல் வாழ கத்துக்கோ என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இதன் மூலம் எத்தனையோ குடும்பத்தில் குழப்பங்கள் வந்திருக்கிறது. யாரிடமும் பணம் எப்போதும் இருப்பதில்லை, தேவையானபோது வாங்கி வரும்போது திரும்ப கொடுத்துடவேண்டும்.

அருமையான கட்டுரை, தொடருங்க..

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. அலாவுத்தீன் அவர்கள் கடன் வாங்குவது, கொடுப்பது பற்றி மார்க்கத்துடன் உலகியலையும் இணைத்துக்கூறிய விதம் மிக அருமை. தொடர்ந்து எழுதி வாருங்கள். உங்கள் ஆக்கம் மூலம் அதை படிக்கும் ஒரு சிலர் திருந்தினாலும் அல்லது அவர்களால் ஒரு சிலர் திருத்தப்பட்டாலும் அதனால் உலகில் பிரதிபலன் ஏதும் தமக்கு இல்லாமல் போனாலும் ஆஹிரத்தில் அதற்குரிய அந்தஸ்தை அல்லாஹ் உங்களுக்கு வழங்க போதுமானவன். ஆமீன்...

ஒரு காலத்தில் கடன் வாங்கியவர்கள் மிகவும் வருந்தியவர்களாகவும், வாங்கிய கடனை எப்படியும் விரைந்து திருப்பிக்கொடுக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளும் உடையவர்களாக‌ காணப்பட்டனர். ஆனால் இன்றோ கொடுத்த கடனை போதிய காலம் போன பிறகு திருப்பிக்கேட்கும் சூழ்நிலை வரும் பொழுது அவர் சொல்லாத்துயரை அடைகிறார். "யான்டா ஒன்னுமே இல்லாதவனாட்டம் கொடுத்தக்கடனை திருப்பிக்கேட்கிறாயே"? என்ற வசை சொல்லும் கொஞ்சம் வாக்குவாதம் வரம்பு மீறும் பொழுது "உன்னால் ஆனதை பார்த்துக்கொள் வந்துட்டான் பணத்தை கேட்டு" என்று அகங்காரத்துடன், ஆணவமாக கடன் வாங்கியவர் பேசும் நிலையை நாம் பல இடங்களில் காண முடிகிறது.

இறுதியில் உன்னிட‌ம் தான் போதிய‌ ப‌ண‌ம் இருக்கிற‌தே? பிறகெதற்கு என்னை ந‌ச்ச‌ரிக்கிறாய்? என்ற‌ பிற்போக்கான‌ ம‌ன‌நிலைக்கு க‌ட‌ன் வாங்கிய‌வ‌ர்க‌ள் வ‌ந்து விடுகின்ற‌ன‌ர்.

க‌ட‌ன் கொடுத்த‌வ‌ன் தான் ந‌ம்மிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இருக்கிற‌தே? பிற‌கு அவ‌னிட‌ம் நாம் ஏன் கொடுத்த‌ப்ப‌ண‌த்தை திருப்பிக்கேட்க‌ வேண்டும்? விட்டு விடுவோம் என்ற‌ முடிவுக்கு (சூழ்நிலையைப்பொருத்து) வ‌ர‌வேண்டுமே த‌விர‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ன் ஒது போதும் தான் வாங்கிய‌ க‌ட‌னுக்கு வியாக்கியான‌ம் பேசி ஒரு முடிவுக்கு வ‌ர‌க்கூடாது. இது தான் ப‌ர‌வ‌லாக‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ர்க‌ள் பின்ப‌ற்றும் அர்த்த‌ம‌ற்ற‌ வியாக்கியான‌ம்/த‌ந்திர‌மாக‌ இருக்கிற‌து. (கட‌ன் வாங்கும் நேர‌த்தில் அவ‌ன் ந‌டிப்பிற்கு ஈடு கொடுக்க‌ உல‌கில் யாரால் முடியும்? ஆஸ்கார் அவார்டே அச‌ந்து போகும‌ல்ல‌வா?)

அடிக்கடி என் தகப்பனார் ஒன்றை எனக்கு ஞாபகப்படுத்தி அறிவுரை கூறுவார்கள் அது யாதெனில் "தம்பி நாம் வாழ்வில் பெரும் சொத்துக்களுடன் மாடமாளிகையில் வசித்து வர பெரும் சிரத்தையும், முயற்சியும் செய்வதை விட‌‌ எச்சூழ்நிலையிலும் இறுதியில் கடன் ஏதும் இல்லாமல் மரணிப்பதே மிகவும் ஏற்றதும், சிறப்பானதும் ஆகும். இதையே உன் இலட்சியமாகக் கொள்". என்பார்கள்.

வாழ்வில் அது சில்ல‌ரைக்க‌ட‌னாக‌ இருக்க‌ட்டும், பெரும் தொகையைக்கொண்ட‌ க‌ட‌னாக‌ இருக்க‌ட்டும் ந‌ம் மித‌மிஞ்சிய‌ ப‌ண‌த்தை யாருக்கும் க‌ட‌னாக‌ கொடுத்து உதவுகிறோமோ அல்ல‌து இல்லையோ? முடிந்த‌ வ‌ரை பிற‌ரிட‌மிருந்து வாங்குவ‌தை முற்றிலும் க‌ட்டுப்ப‌டுத்தி/ம‌ட்டுப்ப‌டுத்தி வாழ்ந்து வ‌ந்தால் நம் வாழ்க்கை இஸ்லாம் கூறும் அமைதியான‌ வாழ்க்கையாக‌வும் வ‌ச‌ந்த‌கால‌மாக‌வும் வாழ்நாள் இறுதி வ‌ரை இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

Notes from practical life MSM. comment that worth reading. -sabeer

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//.... எச்சூழ்நிலையிலும் இறுதியில் கடன் ஏதும் இல்லாமல் மரணிப்பதே மிகவும் ஏற்றதும், சிறப்பானதும் ஆகும். இதையே உன் இலட்சியமாகக் கொள்". //

அன்பு சகோதரர் MSM நெய்னா முகம்மது, மேல் சொன்ன அறிவுரையை இங்கு எங்களுக்கும் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. கடன் இல்லா வாழ்வும், கடன் இல்லா மரணமும் நம் அனைவருக்கும் கிடைக்க படைத்தவனிடம் ஒவ்வொரு நிமிடமும் துஆ செய்ய வேண்டும்.

உண்மை நிகழ்வுகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.

அலாவுதீன்.S. said...

சகோ.அப்துல்மாலிக் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)/// யாரிடமும் பணம் எப்போதும் இருப்பதில்லை. தேவையானபோது வாங்கி வரும்போது திரும்ப கொடுத்துடவேண்டும். ///

தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// உங்கள் ஆக்கம் மூலம் அதை படிக்கும் ஒரு சிலர் திருந்தினாலும் அல்லது அவர்களால் ஒரு சிலர் திருத்தப்பட்டாலும் அதனால் உலகில் பிரதிபலன் ஏதும் தமக்கு இல்லாமல் போனாலும் ஆஹிரத்தில் அதற்குரிய அந்தஸ்தை அல்லாஹ் உங்களுக்கு வழங்க போதுமானவன். ஆமீன்... ///
***************************************************
தங்களின் துஆவுக்கு ': '' ஜஸாக்கல்லாஹ் ஹைர் '''' (வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும்).

-----------------------------------------------------------------------------
/// க‌ட‌ன் கொடுத்த‌வ‌ன் தான் ந‌ம்மிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இருக்கிற‌தே? பிற‌கு அவ‌னிட‌ம் நாம் ஏன் கொடுத்த‌ப்ப‌ண‌த்தை திருப்பிக்கேட்க‌ வேண்டும்? விட்டு விடுவோம் என்ற‌ முடிவுக்கு வ‌ர‌வேண்டுமே த‌விர‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ன் ஒரு முடிவுக்கு வ‌ர‌க்கூடாது.///
*******************************************************************
இன்ஷாஅல்லாஹ் கடன் கொடுத்தவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விபரங்களை வரும் தொடரில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------

/// அடிக்கடி என் தகப்பனார் ஒன்றை எனக்கு ஞாபகப்படுத்தி அறிவுரை கூறுவார்கள் 'தம்பி நாம் வாழ்வில் பெரும் சொத்துக்களுடன் மாடமாளிகையில் வசித்து வர பெரும் சிரத்தையும் முயற்சியும் செய்வதை விட‌‌ எச்சூழ்நிலையிலும் இறுதியில் கடன் ஏதும் இல்லாமல் மரணிப்பதே மிகவும் ஏற்றதும்இ சிறப்பானதும் ஆகும். இதையே உன் இலட்சியமாகக் கொள்'. என்பார்கள்.///

********************************************************************
தங்களின் தந்தை கூறியது முத்தான அறிவுரை. தங்களின் கருத்திற்கு நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு