Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 6 33

அதிரைநிருபர் | November 04, 2010 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள் ஏராளம். மனிதகுலம் அடைந்த பயன்களும் ஏராளம். எந்தவொரு நெறிமுறைகளும் இல்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில், மனிதன் எழுந்தது முதல் தூங்கும் வரை அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் வந்து அவனை பண்புள்ள மனிதனாக வாழ வழி காட்டியது இஸ்லாம். உலகில் உள்ள மனிதன் யாராக இருந்தாலும் அவனிடம் இஸ்லாத்தின் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் நாகரீகம், மனித நேயம், நீதி இவைகள் அனைத்தும் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நேரத்தில் இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கமாய் அடிமையாய் கிடந்த மக்களை தட்டி எழுப்பி அவனின் வாழ்வியல் நெறியாக மனதார ஏற்று நடக்க வைத்து சுயமரியாதை உள்ள மனிதனாக  மாறச்செய்தது.

படிப்பறிவு இல்லாதவர்களையும், வறுமையுடன் வாழ்ந்தவர்களையும் பண்புடன் வாழச்செய்தது. இஸ்லாம் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் தற்பொழுது நடந்து வரும் சீரான நிர்வாக அமைப்பு முறை (பஞ்சாயத்து முதல் செங்கோட்டை வரை) இருந்திருக்காது. நிர்வாகத்தை, பண்பை, மனிதநேயத்தை கற்று கொடுத்த இஸ்லாம் அப்படியே இன்றும் வைரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது வற்றாத நதியாய். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் செயல்பாட்டால் இஸ்லாத்திற்கு களங்கம் என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன் இஸ்லாத்திற்கு எந்த களங்கமுமில்லை, பின்பற்றுபவர்களின் பண்பற்ற செயலால் அவர்களுக்குத்தான் களங்கம். கோழிக்கு குப்பையில் வைரம் கிடைத்தால் என்ன செய்யும். கோழி  அறியுமா? வைரத்தின் மதிப்பை.

உலக மக்களை நெறிப்படுத்திய இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவர்களின் நிலை எப்படி உள்ளது. இஸ்லாத்தின்படி வாழ விரும்புகிறார்களா? முயற்சி எடுக்கிறார்களா? வல்ல அல்லாஹ் கொடுத்த பொருளாதாரத்தை வீண் விரயம் செய்பவர்களின் வீடுகளில் குர்ஆனின் தமிழாக்கம் இருக்கிறதா? தமிழாக்கம் வாங்கியவர்கள் முழுவதுமாக படித்திருக்கிறார்களா? மார்க்கத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கான  புத்தகங்கள் இருக்கிறதா?  கண்மனி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நபிமொழி புத்தகங்கள் இருக்கிறதா? தினமும் குர்ஆன் ஓதப்படுகிறதா? பெண்கள், பிள்ளைகள் தொழுகிறார்களா? எந்தவொரு செயல் செய்யப்படுவதற்கும் முன்னால் மார்க்கம் இந்த காரியத்தைப்பற்றி என்ன சொல்கிறது, காரியம் கூடுமா? கூடாதா? என்ற கேள்விகள் கேட்கப்படுகிறதா? அதிகமான பதில் இல்லையே என்றுதான் நம்மிடம் வரும். இஸ்லாத்தை பின்பற்றும் நாம் என்ன செய்யப்போகிறோம்.

இன்று முஸ்லிம்களில் படித்தவர்கள் ஏராளம், செல்வந்தவர்களும் ஏராளம் ஆனால் இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறதா? கேள்விக்குறியே? இஸ்லாத்தை பின்னுக்குத் தள்ளி நமது உலக வாழ்க்கையை முன்னால் கொண்டு வந்து விட்டோம். இஸ்லாம் வேறு உலகம் வேறு என்றாகிவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி நாங்கள் அறியாமலா இருக்கிறோம் ஏன் இவ்வளவு விளக்கம் என்று யாருக்காவது மனதில் தோன்றலாம். தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு இஸ்லாத்தை பற்றிய அறிமுகம் தேவையாய் இருக்கிறது. நாம் செய்யும் காரியம் வல்ல அல்லாஹ்வும்  நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழியா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

தற்பொழுது தமிழக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வட்டி கடைகள் படையெடுத்து வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் ஊர்களில்தான் அதிகமான வட்டி கடைகள் பெருகிக்கொண்டே போகிறது. எதற்கு ஆதரவு அதிகமாக இருக்கிறதோ அது வளர்ந்து கொண்டேதான் போகும். முஸ்லிம் சமுதாயம் அதிகம் வாழும் ஊர்களாக பார்த்து வட்டிக்கடைகள் வளர்ந்து வருவதை பார்க்கும்பொழுது கவலை அளிக்கிறது.

வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் வந்து கடை திறக்க இடம் கொடுப்பது முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருப்பவர்களே. வட்டி கடை வைப்பதற்கு நம் இடத்தை கொடுக்கிறோமே என்ற சிந்தனை இல்லை. அல்லாஹ்வின் அச்சமும், மறுமை பயமும் இருந்தால் தங்களின் இடத்தை வட்டி கடை வைப்பதற்கு வாடகைக்கு விடுவார்களா?

சில இடங்களில் கேள்விப்படும் செய்திகள், வட்டி கடை வைப்பவர்கள் சிறிது காலம் கழித்து அந்த இடத்தையே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். இடத்தின் உரிமையாளர்கள் வட்டிக்கு வாங்கியிருப்பார்கள், இந்த தொகை வட்டி, குட்டி என்று திருப்பி செலுத்த முடியாமல் போனபிறகு இடத்தையே இழந்து பரிதவிக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கி மனிதர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது கோபப்படுவதா?

இப்படித்தான் வாழ வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்து கூறியிருக்க, எப்படியும் வாழலாம் என்று பெயர்தாங்கி முஸ்லிம்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள். வட்டியினால் ஏற்பட்ட பல கொடுமையான நிகழ்வுகளை செய்தி தாள்களின் மூலம் படித்திருப்பீர்கள். கடை கட்டி வாடகைக்கு விடுபவர்கள் வட்டிகடைகளுக்கு வாடகைக்கு விடுவதில்லை என்ற உறுதியான முடிவு எடுத்தால் நலமாக இருக்கும். செய்வார்களா???

சென்ற தொடரில் சகோதரிகளின் கடனைப்பற்றி சொல்லியிருந்தேன். இதில் பாக்கியுள்ள கடன்களை   தொடர்ந்து பார்க்கலாம்:

ஏலச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த ஏலச் சீட்டு கடன் ஆண்கள், பெண்கள், நிறுவனங்கள் என்று அனைவரும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம். குறைந்தது 10பேர் சேர்ப்பார்கள். தலைக்கு 1000ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.(அதிகமாகவும் இருக்கும், நிறுவனங்கள் நடத்தும் சீட்டு லட்சக்கணக்கிலும் இருக்கும்).

இந்த சீட்டில் ஏலம் கேட்கப்படும். மொத்தம் 10ஆயிரத்தில் உறுப்பினர்கள் எல்லோரும் ஏலம் கேட்டு யார் அதிகமாக கேட்கிறார்களோ உதாரணத்திற்கு 5ஆயிரத்திற்கு கேட்டால் இதற்கு மேல் யாரும் கேட்கவில்லை என்றால் கேட்டவருக்கு 5ஆயிரம் மட்டும் கிடைக்கும். கேட்டவரும் மற்றவர்களும் தலைக்கு 500ரூபாய் கட்டினால் போதும். முதல் சீட்டுக்கு மட்டும் நடத்துபவர், உறுப்பினர்கள் பணம் மொத்தம் 10ஆயிரம் வரும். இந்த முதல் சீட்டு பணத்தை முழுவதுமாக நடத்துபவர் எடுத்துக்கொள்வார்.

சீட்டை நடத்துபவருக்கும், கடைசி சீட்டை அடைபவருக்கும்தான் இதில் லாபம். இடைபட்டவர்களுக்கு நஷ்டம்தான். 5ஆயிரம் எடுத்தவர் 10ஆயிரம் வரை கட்டினால் இது வட்டி இல்லையா? நடத்துபவர்களை கேட்டால் வட்டி இல்லை என்பார்கள். இது தெளிவான வட்டி.

பலவருடங்களுக்கு முன் இந்த சீட்டு பிரச்சனையால் இரண்டு சகோதரிகளுக்கு இடையே வாய் பேச்சு கைகலப்பாகி கட்டிப்புரண்டு தெருவில் ஓடும் கழிவு நீரிலும் புரண்டு சண்டை. தெருவில் உள்ள பெண்கள் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வது என்று குழப்பத்தில் வேடிக்கை பார்க்க, நான் இருவரையும் சத்தம் போட்டு (இருவரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால்) மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை விலக்கினேன். (குடிக்கு அடிமையான ஆண்கள் இதுபோல் சண்டை போடுவதை பார்த்திருந்த எனக்கு பெண்கள் சண்டை போடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்). ஷைத்தானிடம் உள்ள சூழ்ச்சியில் இந்த ஏலச்சீட்டும் ஒன்று என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.


ஏல சீட்டு நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் அடிக்கடி தலைமறைவான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும். புதுப்புது பெயர்களில் மீண்டும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த ஏமாற்று வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நடத்துபவர்களும் ஏமாற்றுவார்கள். உறுப்பினராக உள்ளவர்களும் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விடுவார்கள். நியாயமாக சில பேர் நடத்தினாலும் இந்த சீட்டு முழுக்க முழுக்க வட்டியின் அடிப்படையில்தான் நடந்து கொண்டு இருக்கிறது. சகோதர, சகோதரிகள் யாராவது தற்பொழுது இந்த சீட்டில் (அறியாமல்) சேர்ந்திருந்தால் இதிலிருந்து விடுதலை அடைய முயற்சி செய்தால் வட்டி என்ற பாவத்திலிருந்த விலகிய நன்மையும், நிம்மதியும் கிடைக்கும்.

சகோதரிகளுக்கு லட்சக்கணக்கில் கடன் ஏன் ஏற்படுகிறது (சகோதரர் சாகுல் ஹமீது இது பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்) என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சகோதரிகளின் வீண் ஆடம்பர செலவுகள், உணவுக்காக திட்டமிடாத அதிகமான செலவு செய்வது, சீட்டு நடத்துவது அல்லது உறுப்பினராக இருப்பது. ஒரு சீட்டில் மட்டும் சேருவது கிடையாது. நான்கு அல்லது ஐந்து இடத்தில் சீட்டுகளில் சேர்ந்து கொள்வது. (பல பேங்கில் கடன் அட்டை வாங்கி வைத்திருப்பது போல்) இது போன்ற காரணங்களால்தான் இறையச்சம் இல்லாத சகோதரிகள் இன்று பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு சகோதரிக்கு இரண்டு வீடுகள் இருந்தது. வீண் ஆடம்பரத்தால் (சீட்டுகளிலும் சேர்ந்திருக்கிறார்) பல லட்சங்கள் கடனாகி இரண்டு வீட்டையும் விற்று கடனை அடைத்து விட்டு தற்பொழுது வாடகை வீட்டில் இருந்து வருகிறார். இவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இவருடைய ஆடம்பரமும், வட்டியும்தான். (சொந்த வீட்டில் ராணிபோல் வாழ்ந்தவர் வாடகை வீட்டில் இருக்கும்பொழுது இவருடைய மனநிலை எப்படி இருக்கும்).

தினச் சீட்டு (வட்டி)கடன்:

தினச் சீட்டு என்பது பெரும்பாலும்  கடை வைத்திருப்பவர்கள் வாங்குவது.வட்டிக்கடைக்காரனிடம் 1000ரூபாய் கடன் கேட்டால் 100 அல்லது 200 எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை கொடுப்பான். இதை இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்ற கணக்கு இருக்கும். தினமும் 50 அல்லது 100 திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் பாக்கி உள்ள பணத்திற்கு மீண்டும் வட்டி போட்டு தொடர்ந்து கட்டி வரவேண்டும். (இதில் மீட்டர் வட்டி என்ற பெயரில் 1 மணிநேரம், அரைநாள், ஒருநாள் வட்டியெல்லாம் பெரிய நகரங்களில் நடந்து கொண்டு இருக்கிறது).


வாரச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த சீட்டு எப்படி கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 100ரூபாய் கடன் கேட்டால் 25 ரூபாய் வட்டி எடுத்துக்கொண்டு 75ரூபாய் தருவார்கள். திருப்பி 4 வாரத்திற்குள் வட்டி சேர்த்து வாரம் 25ரூ வீதம் 100ரூபாய் கட்டி விட வேண்டும். தவறினால் மீண்டும் வட்டி கூடும். தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு போன்ற வட்டி கடன்களை எந்தவித உறுத்தலும் இல்லாமல் நம் சமுதாய மக்கள் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வாரச்சீட்டு, மாதச்சீட்டு கடன் பெண்களுக்கு வீடு தேடி வந்து கொடுக்கப்படுகிறது.

இந்த கடனை மாடி வீட்டு பெண்களும் வாங்குகிறார்கள். இவர்கள் வீட்டு ஆண்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள. வசதி இல்லாதவர்கள் கடன் வாங்குகிறார்கள் என்றால், இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் என்று என் மனதுக்குள் கேட்டுக்கொள்வேன் (அவர்களிடம் சென்று கேட்கமுடியாது). வெளிநாட்டில் வீட்டு ஆண்கள் இருந்தும், தங்க நகைகள் வைத்திருந்தும் சீட்டு கடன் வாங்க வேண்டிய காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரிடம் வந்து எதுவும் கடன் வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த சகோதரி வாரச்சீட்டு வட்டி கடனை வாங்குகிறார். (தெருவில் உள்ளவர்கள் இந்த பணக்கார பெண்மனியே வட்டிக்கு வாங்குகிறார். நாம் எப்படி இவரிடம் கடன் வாங்குவது என்று கேட்காமல் இருந்து விடுவார்கள்).

பிறமத ஆண்கள்தான் இந்த வசூலுக்கு சைக்கிளிலும், பைக்கிலும் வருகிறார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்களில் அதிக ஆண்கள் வெளிநாடுகளில். இப்படிப்பட்ட நேரத்தில் அந்நிய ஆணிடம் பழக்கம் ஏற்பட ஷைத்தானின் சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் தவறுகள் நடைபெறுவதை கேள்விப்படுகிறோம். தாயகத்தில் உள்ள நமது இளைஞர்கள், பெரியவர்கள் ஷைத்தானின் வட்டிகள் தெருவில் நடமாடுவதை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். பிரச்சனை ஆகிவிட்டால் நடவடிக்கை என்று ஏதாவது செய்வார்கள். பின் மறந்து விடுவார்கள். முற்றாக ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற செயல் திட்டம் யாரிடமும் இல்லை.

இந்தியாவிலும், உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும். இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மீடியாக்கள், கல்விக்கூடங்கள், மற்றும் பல வழிகளின் மூலமாகவும் இறை நிராகரிப்பாளர்கள் ஒன்றினைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதில் வட்டியின் அடிப்படையில் செயல்படும் காரியங்களும் முன்னிலையில் இருந்து வருகிறது. (பசி வந்தால் பத்தும் பரந்து போகும் என்பது பழமொழி. இதில் வறுமையும், வீண் ஆடம்பரமும் கண்களை மறைக்கும் காரணிகளாக உள்ளது).

காரணம் இதில் அந்நிய ஆண்களிடம் பழகும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் தவறுகள் இருந்தாலும். இதில் வட்டிக்கு பணம் வாங்க செல்லும் இடங்களிலும், வீடு தேடி வட்டியை வசூலிக்கும் ஆண்கள் மூலமும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எல்லோரையும்  குறை சொல்ல முடியாது.

தற்பொழுது நடந்த செய்தியை  கேள்விப்பட்டு இருப்பீர்கள். முஸ்லிம் பெயர்தாங்கி (3கயவர்கள் இதில் ஒருவன் பிற மதத்தைச்சேர்ந்தவன் என்று நினைக்கிறேன்) இன்னொரு முஸ்லிம் குடும்பத்திற்கு வட்டிக்கு கொடுத்திருக்கிறான். வட்டியை வாங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார்களாம். கணவர் இல்லாத நேரத்தில் அந்தப்பெண்ணை சீரழித்ததோடு அல்லாமல் செல்போன் கேமராவில் படம் எடுத்து (அந்தப்பெண் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு) அதை காட்டியே மிரட்டி தொடர்ந்து கொடுமை படுத்தி தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வட்டியினால் கிடைத்த துன்பத்தை நினைத்து அந்த குடும்பம் வேதனை அடைந்து கொண்டு இருக்கிறது. (நான் சொல்லியது சிறிதளவுதான், நிறைய இருக்கு பெண்களைப் பற்றிய செய்திகளாக அதிகம் உள்ளதால் தவிர்த்துக்கொண்டேன்).

ஷைத்தானின் வலையால் பின்னபட்டுள்ள தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு, ஏலச்சீட்டு  என்று எத்தனை வகையான சீட்டுக்கள் இருக்கிறதோ இதிலிருந்தும் மேலும் வங்கிகள், அடகு(வட்டி) கடைகள், கூட்டுறவு வங்கிகள் இது போன்ற இடங்களில் நம் சமுதாயப் பெண்கள், சென்று நகை கடன், சீட்டு கடன் வாங்குவதை தடுப்பதற்கு நாமும், சமூக அக்கரை கொண்டவர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.

அருமை சகோதரர்களே!

என்னருமை சகோதரர்களே! இஸ்லாத்தையும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களையும அழிக்க சில கூட்டங்கள் திட்டமிட்டு முழு நேர வேலையாக (உலகளவில்) பெரிய வலைப்பின்னலில் தங்களின் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து கொண்டு இருக்கிறார்கள்.


அதனால் தூய்மையான இஸ்லாத்தை நாமும், நம் குடும்பத்தாரும், நம்மை சுற்றியுள்ளவர்களும் கடைபிடித்து வாழ்வதற்காக நமது நேரங்களை அதிகம் செலவிட வேண்டும். (வாழ்நாளை எவ்விதம் செலவழித்தாய் என்ற வல்ல அல்லாஹ்வின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். அதனால் தங்களின் பொன்னான நேரத்தை நல்வழியில் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் செலவிடுங்கள். பணம் போனால் திரும்ப வந்து விடும். நேரம் போனால்... போனதுதான்... திரும்பி வராது...). 

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3)

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான கடனில் இருந்தும், வட்டியிலிருந்தும் நாமும் நமது உறவினர்களும், நமது குடும்பத்து பெண்களும் விலகி இருக்க நம்மால் ஆன முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் வீட்டு செலவுகளுக்கு மாதா மாதம் பணத்தை சரியாக அனுப்பி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் கடன்களிலிருந்தும், கடன் என்ற பெயரில் வட்டி என்ற பாவத்தில் மாட்டிக்கொள்வதிலிருந்தும் அவர்களையும், தங்களையும் காத்துக்கொள்ளுங்கள். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியபாதையில் செலுத்தி, ஈருலகிலும் நாம் வெற்றியடைய தொடர்ந்து துஆச் செய்து கொண்டே இருப்போம்.

இன்ஷாஅல்லாஹ் கடன் - வட்டி இந்த இரண்டிலிருந்தும் நாம் விடுபட தீர்வுகளை வரும் தொடர்களில் பார்ப்போம்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன். S.


33 Responses So Far:

sabeer.abushahruk said...

அலாவுதீன்,

உன் தன்னிகரற்ற எழுத்து நடையும், ஆழ்ந்த அறிவும், முற்றிலும் அலசும் பொறுப்பும், மார்க்கப் பற்றும், சமூக அக்கறையும் இந்த தொடரின் எல்லா இடத்திலும் மிளிர்கிறது..

நல்லது சொல்வோருக்கு, அதுவும் தன்னடக்கத்தோடும், முற்றிலும் அறிந்தவனும் முழுமையானவனும் அவன் ஒருவனே என்ற எண்ணததோடும், எளிமையாகவும், தலைக்கணம் சற்றேனும் இல்லாமலும் நீ சொல்வதால் உனக்கான வாசக வட்டம் நாளுக்கு நாள் அதிகமாவது இயற்கையே.

உன் பதிவை விமரிசிப்பதைவிட, உணர்வதும் இதை தொடர்ந்து எழுத உனக்காக துஆக் கேட்பதும் மட்டுமே சாலச்சிறந்தது.

வளர்க உன் தொண்டு, இன்ஷாஹ் அல்லாஹ்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இது நல்ல ஒரு நீதி போதனை.எப்பொழுதும் சகோ.அலாவுதீன் எழுதுவதற்கு கருத்து சொல்ல நேரம் எடுத்துக்கொள்வேன்.காரணம் அதில் உள்ள விசயத்தின் கணம்.அதுவும் கருத்து என்பது ஏதும் திருத்தம் இருக்காது எண்ணத்தின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கும். நல்லதொரு ஆக்கம்.அல்ஹம்துலிலாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதல் ஆக்கத்திலேயே சொன்னதுதான் அதனையே இங்கே மறுபடியும் சொல்கிறேன்... "ஒரு வித்தியாசமான தலைப்பை அல்லாஹ் உங்களிடம் கொடுத்து எங்களை நெறிப்படுத்திட உங்களைப் பயண்படுத்திக் கொண்டிருக்கிறான்" தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

முக்கியம், தங்களின் ஆரோக்கியத்தைப் நன்றாகப் பேணிக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்...

(கிரவுன் : என்னடா கடன் கொடுத்தவன் மறைமுகமா (உடம்பு எப்படியிருக்கு) மிரட்டுற மாதிரியிருக்குன்னு கமெண்ட் போட்டுடாதே(டா)ப்பா !)

jalal said...

அண்ணாத்த ..,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
நச்... நச்....நச்-ன்னு அறைவது போல் உள்ளது.! சிறு பிள்ளைகூட முழுமையாக புரிந்துக்கொள்ளும் அளவுக்கு ஏலச்சீட்டு, தினச்சீட்டு, வாரச்சீட்டு இவைகளை பிரித்துக்காட்டி அதன் பாதிப்புகளையும் தெல்லத்தெளிவாக சுட்டிக்காட்டி அதன் அவலங்களையும் எடுத்துரைத்து, அண்ணாத்த உங்களுடைய எழுத்துப்பனி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன்.
**************************************************
இறைநம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் உண்மயில் நம்பிக்கையாளராக இருப்பின் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (உங்களுக்கு வரவேண்டிய) வட்டிப்பாக்கிகளை விட்டு விடுங்கள். ஆனல்,அவ்வாறு நீங்கள் செய்யாவிடின், அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். (இப்பொழுதும்கூட) நீங்கள் பாவமன்னிப்புக்கோரி (வட்டியைக் கைவிட்டு) விட்டால் உக்ன்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கபபடக் கூடாது. உங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் ஊண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.(அல்குர் ஆன் : 278,279,280)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜலால் காக்கா : //இன்னும் சிறந்ததாகும்.(அல்குர் ஆன் : 278,279,280)// அத்தியாயம் எனவென்றும் coolல சொல்லிடுங்களேன் !

jalal said...

தம்பி அபுஇபுறாஹிம்
எழுத்து பிழைக்கண்டு தட்டி எழுந்து உட்க்கார வைத்ததற்க்கு நன்னிங்க(means thanks) (அத்தியாயம் 2- 278,279,280)
(எல்லாம் தூக்கக்கிறக்கம் தான்)

ZAKIR HUSSAIN said...

தேவைப்பட்டதை வாங்குவதை விட்டு ஆசைப்பட்டதை வாங்குரவங்க உறுப்பட்டதா சரித்திரமெ இல்லெ....

Adirai khalid said...

டாக்டர் ( phd ) பட்டம் வாங்கும் அளவிற்கு அலசி ஆரயும் ஒர் சமூக கட்டுரைத்தொடர் ஏதோ நம்மூர் அல்லது இஸ்லாமிய சமூகம் மட்டும் தான் கடன் வட்டி போன்ற சமூக இன்னல்களில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டு இருப்பதுபோல் காட்டப் படும் மாயயை நீக்கி இத்தொடரை அனைத்து மொழி இனமக்களுக்கு கிடைக்குமாறு செய்வது நம் அனைவரின் கடமை.

உண்மையை சொல்வதுயென்றால் சகோ அலாவுதீன் எழுதும் இத்தொடரை தனியாக ஆவனக் காப்பகத்தில் வைக்கலாம். தேவையானவர்களுக்கு தேவை படும்பொழுது அனுப்பி வைக்கலாம்.இமெயில், கடுதாசி, பள்ளிகளில் நோட்டிசாகவும் வெளியிடலாம், முடிந்தால் இத்தொடர் முடிவுக்கு வருமுன் புத்தகமாக வெளியிடலாம்

சபீர் சொன்னது
////நல்லது சொல்வோருக்கு, அதுவும் தன்னடக்கத்தோடும், முற்றிலும் அறிந்தவனும் முழுமையானவனும் அவன் ஒருவனே என்ற எண்ணததோடும், எளிமையாகவும், தலைக்கணம் சற்றேனும் இல்லாமலும் நீ சொல்வதால் உனக்கான வாசக வட்டம் நாளுக்கு நாள் அதிகமாவது இயற்கையே.///

அபு இபுறாஹிம் சொன்னது

////முதல் ஆக்கத்திலேயே சொன்னதுதான் அதனையே இங்கே மறுபடியும் சொல்கிறேன்... "ஒரு வித்தியாசமான தலைப்பை அல்லாஹ் உங்களிடம் கொடுத்து எங்களை நெறிப்படுத்திட உங்களைப் பயண்படுத்திக் கொண்டிருக்கிறான்" தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

முக்கியம், தங்களின் ஆரோக்கியத்தைப் நன்றாகப் பேணிக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்...///

நானும் வழிமொழிகிறேன்

Unknown said...

அருமையான தொடர் தொடரட்டும்.

Yasir said...

சலாம் காக்கா...”கடன் வாங்கலாம் வாங்க “ என்று தலைப்பை போட்டுவிட்டு,இனி வாழும் காலம் வரையிலும்..கடனை முடிந்த அளவிற்க்கு வாங்க கூடாது / தவிர்க்க வேண்டும் என்ற ஆணித்தரமான உணர்வை உங்கள் கட்டுரை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையல்ல….

நானும் சபீர் காக்காவின் துவாவிற்க்கு ஆமின் சொல்கிறேன்

அப்துல்மாலிக் said...

வட்டி இவ்வளவு கொடுமையானதா? அல்லாஹ் சும்மாவா ஹராம் என்று சொன்னான். சிறுவயதில் சைக்கிளில் சீட்டுக்கட்டி பணம் வாங்க சைக்கிலில் வந்து பிறகு மோட்டார் வாகனம் மாறி காரில் வந்து வாங்க்யது நினைவு வருகிறது.

நம் சமூகத்தை இந்த கொடுமையிலிருந்து காப்பானாகவும். ஆமீன்

குடும்பத்தலைவர்களை மிறி எதுவும் நடக்காது, இப்படி ஒவ்வொருவரும் தடுக்க நினைத்தால் இதை முற்றிலும் ஒழிக்கலாம்.

Shameed said...

உங்களின் சீட்டு பற்றிய கட்டுரை இண்டு இடுக்குகளில்
எல்லாம் புகுந்து செய்திகளை வாரி வந்து மிக தெளிவாக விளக்குகின்றது.

சொல்லின் எளிமை சொல்லியவிதம் அனைத்தும் படித்தவுடன் பளிச் என்று புரிகின்றன.

குப்பையில் மாணிக்கம் கோழி கதை விளக்கம் சூப்பர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"இண்டு இடுக்குகளில்" இது அதிரை(ப்பட்டினம்) அசத்தல் மொழி அகராதியில் உண்டுதானே ?

அலாவுதீன்.S. said...

சகோ. சபீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ///உன் பதிவை விமரிசிப்பதைவிட, உணர்வதும் இதை தொடர்ந்து எழுத உனக்காக துஆக் கேட்பதும் மட்டுமே சாலச்சிறந்தது.///

உன்னுடைய கருத்திற்கு நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

அலாவுதீன்.S. said...

சகோ.தஸ்தகீர், ஜாகிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)/// முக்கியம், தங்களின் ஆரோக்கியத்தைப் நன்றாகப் பேணிக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்... ///

தங்களின் கருத்திற்கும் அக்கரைக்கும் நன்றி!
''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

அலாவுதீன்.S. said...

தம்பி. ஜலால் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ///அண்ணாத்த உங்களுடைய எழுத்துப்பனி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன்.///

உன்னுடைய கருத்திற்கு நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

அலாவுதீன்.S. said...

சகோ.மீரா,அப்துல் மாலிக்,சாகுல் ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களுடைய கருத்திற்கு நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

அலாவுதீன்.S. said...

சகோ. உன்னைப்போல் ஒருவன் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ///இத்தொடரை அனைத்து மொழி இனமக்களுக்கு கிடைக்குமாறு செய்வது நம் அனைவரின் கடமை.///

தங்களின் கருத்திற்கும், சகோ.சபீர், சகோ. அபுஇபுறாஹிம் அவர்களின் கருத்தை வழிமொழிந்ததற்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''


/// முடிந்தால் இத்தொடர் முடிவுக்கு வருமுன் புத்தகமாக வெளியிடலாம் ///

தங்களின் கருத்தை அதிரை நிருபரும் கவனத்தில் கொள்வார்கள். நம் சக்திக்கு உட்பட்டு புத்தகமாக வெளிவர முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலாவுதீன்.S. சொன்னது…
சகோ. உன்னைப்போல் ஒருவன் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ///இத்தொடரை அனைத்து மொழி இனமக்களுக்கு கிடைக்குமாறு செய்வது நம் அனைவரின் கடமை.///

தங்களின் கருத்திற்கும், சகோ.சபீர், சகோ. அபுஇபுறாஹிம் அவர்களின் கருத்தை வழிமொழிந்ததற்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''


/// முடிந்தால் இத்தொடர் முடிவுக்கு வருமுன் புத்தகமாக வெளியிடலாம் ///

தங்களின் கருத்தை அதிரை நிருபரும் கவனத்தில் கொள்வார்கள். நம் சக்திக்கு உட்பட்டு புத்தகமாக வெளிவர முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்.
--------------------------------

இத்தொடர் நிறைவை எட்டும்போது எடுத்து வைக்கப்பட்ட யோசனைக்கான நற்செய்தியை அதிரைநிருபரில் பதிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்..

அலாவுதீன்.S. said...

சகோ. யாசிர் வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) ///...'கடன் வாங்கலாம் வாங்க ' என்று தலைப்பை போட்டுவிட்டு இனி வாழும் காலம் வரையிலும்..கடனை முடிந்த அளவிற்க்கு வாங்க கூடாது தவிர்க்க வேண்டும் என்ற ஆணித்தரமான உணர்வை உங்கள் கட்டுரை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையல்ல....நானும் சபீர் காக்காவின் துவாவிற்க்கு ஆமின் சொல்கிறேன் ///

உங்களுடைய கருத்திற்கு நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்!''

Yasir said...

//தங்களின் கருத்தை அதிரை நிருபரும் கவனத்தில் கொள்வார்கள். நம் சக்திக்கு உட்பட்டு புத்தகமாக வெளிவர முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்// இந்த சமுதாய சிந்தனை உள்ள பதிப்பை ஆசிரியர் விரும்பினால் சார்ஜாவில் உள்ள நமது அச்சகத்தில் அச்சிட்டு கொடுக்கலாம் ..அல்லாஹ்வின் உதவியால் பெரிய விசயமல்ல

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Yasir சொன்னது…
//தங்களின் கருத்தை அதிரை நிருபரும் கவனத்தில் கொள்வார்கள். நம் சக்திக்கு உட்பட்டு புத்தகமாக வெளிவர முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்// இந்த சமுதாய சிந்தனை உள்ள பதிப்பை ஆசிரியர் விரும்பினால் சார்ஜாவில் உள்ள நமது அச்சகத்தில் அச்சிட்டு கொடுக்கலாம் ..அல்லாஹ்வின் உதவியால் பெரிய விசயமல்ல ///

தம்பி யாசிர் இதே சிந்தனை எனக்குள்ளும் இருக்கிறது அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ்... இவைகள் பெரிய விஷயமே அல்ல !

sabeer.abushahruk said...

பெரிய மனது உள்ளவர்க்கு
பெரிய மட்டுமல்ல
பெரிய பெரிய விஷயமெல்லாம்
பெரிய விஷயமே அல்ல.

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
"இண்டு இடுக்குகளில்" இது அதிரை(ப்பட்டினம்) அசத்தல் மொழி அகராதியில் உண்டுதானே ?


"உண்டு உண்டு அமத்து"

அலாவுதீன்.S. said...

சகோ.யாசிர், அபுஇபுறாஹிம், சபீர் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) /// இந்த சமுதாய சிந்தனை உள்ள பதிப்பை ஆசிரியர் விரும்பினால் சார்ஜாவில் உள்ள நமது அச்சகத்தில் அச்சிட்டு கொடுக்கலாம் ..அல்லாஹ்வின் உதவியால் பெரிய விசயமல்ல///
///தம்பி யாசிர் இதே சிந்தனை எனக்குள்ளும் இருக்கிறது அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ்... இவைகள் பெரிய விஷயமே அல்ல !///

/// பெரிய மனது உள்ளவர்க்கு
பெரிய மட்டுமல்ல
பெரிய பெரிய விஷயமெல்லாம்
பெரிய விஷயமே அல்ல. ///

தங்களின் எண்ணங்களை வல்ல அல்லாஹ் நிறைவேற்றித்தரட்டும்!

நம் சமுதாய மக்களின் எண்ணங்களில் மார்க்க சம்பந்தபட்ட புத்தகங்களை படிப்பதில் ஒரு அலட்சிய மனப்பான்மையை பார்க்க முடிகிறது. உலக சம்பந்தபட்ட காரியங்களுக்கு தாரளமாக செலவழிக்க தயாராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கல்விக்கூடத்திற்கு பிள்ளைகளுக்கு LKG வேறு எந்த வகுப்பாக இருந்தாலும் இதற்கும் டியூசனுக்கும் பணத்தை தர தயாராக இருப்பவர்கள், பிள்ளைகளுக்கு ஓதி கொடுக்கும் ஆலிம்களுக்கு ரூ200 அல்லது ரூ300 கொடுப்பார்களா?. தற்பொழுது ஓதும் பிள்ளைகளுக்கு ரூ10 அல்லது ரூ20 கொடுக்கிறார்கள் (இது தெரு அளவில்தான்). மதரஸாவுக்கு ஓரளவு பணம் செலுத்தி படிப்பார்கள் என்று நினைக்கிறேன். இலவசமாக கொடுத்தால் படிக்கலாம் என்ற எண்ணங்கள் உள்ளவர்கள்தான் அதிகம். வல்ல அல்லாஹ் நன்மையாக்கித்தரட்டும்!

புத்தகத்தை இலவசமாக கொடுத்தாலும் அதை படிப்பதற்காக நாம் எதுவும் இலவசம் சேர்த்து கொடுக்கனுமா???

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு பாசம் நிறைந்த சகோதரர் அலாவுதீன் அவர்களின் அற்புதமான ஆக்கம். இதுவரை இந்த தலைப்பில் வேறு யாரும் தொடர்கட்டுரையாக எழுதி நான் படித்தது இல்லை. என் அறிவுக்கு தெரிந்து கடன் பற்றி இணையத்தில் தொடர் கட்டுரையாக வருவது இதுவே முதல் முறை என்று கருத்துகிறேன்.

தங்களில் இந்த நல்லெண்ண முயற்சி இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றியை தேடித்தரும். படைத்தவனிடம் துஆ செய்கிறேன்.

பல சகோதரர்கள் சொல்வது போல், இத்தொடர்க்கட்டுரையை இன்னும் அதிக மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம்.

அல்லாஹ் போதுமானவன்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஏலச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு என்று வட்டி வசூலுக்கு வரும் அன்னிய ஆண்களின் அட்டகாசம் இன்னும் அதிரை தெருக்களில் பார்க்க முடிகிறது.

வேதனை என்னவென்றால் மார்க்க எழுச்சி ஏற்பட்டுள்ள நம் அதிரைப்போன்ற ஊர்களில் இன்னும் இந்த மாதிரியான் வட்டி வசூல்கர்களை வலம் வரவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது தான்.

அல்லாஹ் நம்மையும் நம் சமுதாயத்தையும், நம் வருங்கால சமுதாயத்தையும் பாதுகாப்பானாக.

அலாவுதீன்.S. said...

சகோ. தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///தங்களின் இந்த நல்லெண்ண முயற்சி இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றியை தேடித்தரும். படைத்தவனிடம் துஆ செய்கிறேன்.///

தங்களின் கருத்திற்கும், துஆவுக்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்''

அதிரை தாருத் தவ்ஹீத் said...

சகோதரர் அலாவுத்தீனுக்கு நல்வாழ்த்துகளும் பிரார்த்தனையும்!

கடும் உழைப்பினால் விளைந்த இதுபோன்ற விழிப்புணர்வுத் தொடர் கட்டுரைகளின் இறுதியில் அதற்கு முந்தைய பதிவின் சுட்டியை இணைப்பது நன்றெனப் பரிந்துரைக்கிறேன்.

மாதிரி : http://www.satyamargam.com/1553

அலாவுதீன்.S. said...

சகோ. ஜமீல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)///இதுபோன்ற விழிப்புணர்வுத் தொடர் கட்டுரைகளின் இறுதியில் அதற்கு முந்தைய பதிவின் சுட்டியை இணைப்பது நன்றெனப் பரிந்துரைக்கிறேன்.///

தங்களின் பரிந்துரையை அதிரை நிருபர் கவனத்தில் கொள்ளும் இன்ஷாஅல்லாஹ். தங்களின் கருத்திற்கும், துஆவுக்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்''

அதிரைநிருபர் said...

// ஜமீல் சொன்னது…
சகோதரர் அலாவுத்தீனுக்கு நல்வாழ்த்துகளும் பிரார்த்தனையும்!

கடும் உழைப்பினால் விளைந்த இதுபோன்ற விழிப்புணர்வுத் தொடர் கட்டுரைகளின் இறுதியில் அதற்கு முந்தைய பதிவின் சுட்டியை இணைப்பது நன்றெனப் பரிந்துரைக்கிறேன்.

மாதிரி : http://www.satyamargam.com/1553 //

// அலாவுதீன்.S. சொன்னது…

அலாவுதீன்.S. சொன்னது…
சகோ. ஜமீல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)///இதுபோன்ற விழிப்புணர்வுத் தொடர் கட்டுரைகளின் இறுதியில் அதற்கு முந்தைய பதிவின் சுட்டியை இணைப்பது நன்றெனப் பரிந்துரைக்கிறேன்.///

தங்களின் பரிந்துரையை அதிரை நிருபர் கவனத்தில் கொள்ளும் இன்ஷாஅல்லாஹ். தங்களின் கருத்திற்கும், துஆவுக்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்''

தங்களின் பரிந்துரையை அதிரை நிருபர் கவனத்தில் கொள்ளும் இன்ஷாஅல்லாஹ். தங்களின் கருத்திற்கும், துஆவுக்கும் நன்றி! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்'' ///

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் அன்பான ஜமீல் காக்கா அவர்களின் பரிந்துரையை ஏற்று தொடர் கட்டுரைகளின் இறுதியில் அதற்கு முந்தைய பதிவின் சுட்டியை இணைத்திருக்கிறோம். மிகச் சிறப்பான, பயனுள்ள யோசனை. எங்கள் ஜமீல் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி. நம் அதிரைநிருபரின் தரத்தை உயர்த்த தங்களிடமிருந்து இது போல் நல்ல பல பரிந்துரைகள் எதிர்ப்பார்கிறோம்.

நேரமின்மை மற்றும் பல சிரமத்துக்கு மத்தியிலும் வாரா வாரம் தவறாமல் தொடர் ஆய்வுக் கட்டுரையை எழுதி நம் அதிரைநிருபரில் பதிந்து வரும் எங்கள் அன்பு பாசம் நேசம் நிறைந்த சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்வதில் பெருமையடைகிறோம்.

எல்லாவற்றிற்கும் நம்மை எல்லாம் படைத்து, பாதுகாத்துவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அன்பானவர்களே தொடர்ந்து இணைந்திருங்கள்....

KPARTHIBAN said...

அரெபியாவில் வட்டி இல்லா வங்கி உல்லது ,அதை பத்தி எலுதவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு