Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க – (நிறைவுரை) 37

அதிரைநிருபர் | April 28, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!


இந்த கட்டுரை இத்தொடரோடு முடிவதால் தொடர் 1 முதல் 15 வரை ஒரு முன்னோட்டம் பார்த்துவிடுவோம்.

நாடுகள் வாங்கும் கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை. (மேலும் விபரமாக படிக்க)

கடன் அட்டையில் வாங்கும் கடன் விபரங்கள், வளைகுடாவுக்கு வந்தவர்களின் கடன் வாங்கும் நிலைகள். (மேலும் விபரமாக படிக்க)

வளைகுடா சகோதரர்கள் மேலும் சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள். (மேலும் விபரமாக படிக்க)

ஊரிலிருந்து வளைகுடா சகோதரர்களுக்கு கடன் கேட்பவர்களின் நிலைகள், ஆடம்பர கடன், சகோதரிகள் வாங்கும் கடன்கள், புதிய நகைகள் செய்வது, நகை கடன், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், ஆகியவைகள் பற்றிப்பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)

இஸ்லாம் என்றால் என்ன?, வட்டி கடைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன். (மேலும் விபரமாக படிக்க)

குர்பானி கொடுப்பது பற்றி, வலீமா கடன்கள், திருமண கடன்கள். (மேலும் விபரமாக படிக்க)

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள், ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள், பாலைவனத்தில் பிடித்துவிடும் சகோதாரிகள், காலமெல்லாம் கணவனை பாலைவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள், கடன் எனும் நிழல் கூட தன்மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி. (மேலும் விபரமாக படிக்க)

நாம் தொழுவது எதற்காக?,  நன்மை எதில் உள்ளது, பிறசமுதாயத்தவர்களின் உதவிகள், அழகிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள், யார் கவலைப்படமாட்டார்கள். (மேலும் விபரமாக படிக்க)

வெற்றி பெற்றோரின் நிலை, நமது ஜகாத்துகள் பயன் அளிக்கிறதா?, அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யாரும் உண்டா?. (மேலும் விபரமாக படிக்க)

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள், கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்,தர்மம் செய்த கூலி வேண்டுமா? கடன் வாங்குவோர் நிலை,கட்டாய கடன்,கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். (மேலும் விபரமாக படிக்க)

கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்,கடன் வாங்கியவர்களின் திருப்பிச் செலுத்தும் எண்ணமும் ஏமாற்றும் எண்ணமும்,கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு.(மேலும் விபரமாக படிக்க)

கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்.(மேலும் விபரமாக படிக்க)

பிள்ளைகளின் சேமிப்பு, வாங்கும் பொருட்களில் சிக்கனம்,துணிமணிகள், வீண் விரயம்,தள்ளுபடி, வளைகுடா சகோதரர்களின் சிக்கனம், சிக்கனமா? கஞ்சத்தனமா?. (மேலும் விபரமாக படிக்க)

வட்டியில்லா கடன் திட்டம்,பைத்துல்மால்,பொருளாதார சுனாமி,இன்றைய செல்வந்தர்களின் நிலை என்று அனைத்துவிதமான தலைப்புகளிலும் தொடர் 1 முதல் 15வரை பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ஒன்றுமில்லாத காரியங்கள், கதைகளுக்கெல்லாம் உருவான விதத்தை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கடன் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இந்த ஆக்கம் உருவான விதத்தை தெரிவிப்பதில் சில படிப்பினைகள் இருப்பதால் விளக்குகிறேன்.


கடன் கட்டுரை உருவான விதம்:

நான் வளைகுடா நாட்டில் வந்த நாள் முதல் வேலை, ரூம், தொழுகை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் பெயர் தாங்கி முஸ்லிமாக, வெள்ளிக்கிழமை மற்றும் தொழுபவர்களாக இருந்தார்கள். இந்த சகோதரர்களோடு சேர்ந்து இருந்த பொழுது உண்மையான மார்க்கத்தையும், இஸ்லாத்தில் அழைப்பு பணி இருப்பதையும் அறியாமல் இருந்தேன். பல ஆண்டுகள் இவர்களோடு சேர்ந்து இருந்தபொழுது மார்க்கத்தில் எந்த முன்னேற்றமும் என்னிடம் கிடையாது. (இன்றளவும் வளைகுடா நாடுகளில் இருக்கும் நமது சகோதரர்கள் மார்க்கத்தை அறிய முயற்சி செய்யாமல் சினிமா, சீரியல், பாடல்கள் என்று நேரங்களை வீண் விரயம் செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் அழிவுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மறுமை பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்).

இந்த நேரத்தில் அழைப்பு பணி செய்யும் ஒரு சகோதரர் மூலம் தவ்ஹீது சகோதரர்கள் சேர்ந்து அழைப்பு பணி செய்வதை அறிந்தேன். அந்த சகோதரர் அங்கு அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையால் தூய்மையான மார்க்கத்தை  அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வார பயானுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். இவர்கள் மூலம் யு.ஏ.இல் அனைத்து இடங்களிலும் நடந்த பயான்களுக்கு சென்று வந்தேன்.

மறுமை சிந்தனையுள்ள சகோதரர்களோடு பழகும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. நான் பல ஆண்டுகள் பழகிய சகோதரர்கள் தொழக்கூட ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். தவ்ஹீது சகோதரர்களின் அறிமுகம் எனக்கு வல்ல அல்லாஹ் கொடுத்த வாய்ப்பே. தவ்ஹீத் சகோதரர்கள் சேர்ந்து கையெழுத்து பிரதி நடத்தி வந்தார்கள். (கையால் எழுதி அல்ல, கம்யூட்டர் மூலம் டைப் செய்து) இதன் ஆசிரியர் கீழக்கரையைச் சேர்ந்த சகோதரர் அப்துல்லாஹ் செய்யது ஆபீதீன், ஃபுஜைராவில் இருந்தார். இதன் காப்பியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி சரிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு தடவை ஃபுஜைராவில் நடந்த பயானுக்கு சென்றிருந்தோம் அங்கு தங்கி மறுநாள் காலை அங்கு கடலில் குளிக்க சென்றோம். கடலிலேயே மசூரா சகோ. அ.செய்யது ஆபீதீன் என்னை சத்தியப்பாதை கையெழுத்து பிரதியின் ஆலோசனைக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று மற்ற ஆலோசகர்களிடம் கூறினார். அந்த குழுவில் உள்ளவர்கள் ஆமோதிக்க நான் ஆலோசனைக்குழு உறுப்பினரானேன்.

இதன் பிறகு சில மாதங்கள் கழித்து இந்த கையெழுத்து பிரதியை மாத இதழாக வெளியிட வேண்டும் என்று எல்லோரும் ஆலோசனை செய்து தமிழ்நாட்டில் பதிவு செய்து ஆசிரியர் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின் உதவியுடன் சத்தியப்பாதை என்ற பெயரில் மாத இதழாக வெளி வந்தது. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மசூராவில் என்னை உதவி ஆசிரியராக சேர்க்க வேண்டும் என்று சகோ. அ.செய்யது ஆபீதீன் அறிவித்தார். ஆலோசனை குழுவிலிருந்து உதவி ஆசிரியர் ஆனேன். மீண்டும் ஒரு மசூராவில் என்னை இணை ஆசிரியராக அறிவித்தார். ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உதவி ஆசிரியர், இணை ஆசிரியர் நிலைக்கு என்னை கொண்டு வந்தார். அல்ஹம்துலில்லாஹ்!. இந்த நேரத்தில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பையும் இருவரும் கவனித்து வந்தோம்.

எனக்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தவுடன்தான் இந்த கடன் வாங்கலாம் வாங்க ஆக்கத்தை இதில் எழுத ஆரம்பித்தேன். பொருளாதார பற்றாக்குறையால் இந்த இதழை தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி விட்டோம்.

அதிரை நிருபரில் ஆக்கம்  வெளியானது:

ஒரு நாள் தற்செயலாக அதிரைநிருபரை பார்க்க நேர்ந்தது. சபீர் அதிரை நிருபரில் கவிதை வெளியிட்டது பற்றி என்னிடம் கூறியபோது நான் எழுதிய ஆக்கத்தை வெளியிட கேட்டு சொல்லும்படியும், அதிரை நிருபரில் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது என்று வெளியிட்டிருந்தார்கள் என்றும் கூறினேன். என் மெயிலுக்கு அனுப்பி வை நான் அவர்களுக்கு அனுப்பி வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நானும் அனுப்பி வைத்தேன்.

என்னிடம் சாப்ட் காப்பி இல்லை, சத்தியப்பாதை இதழ்தான் இருந்தது. முதல் ஆக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். இது சம்பந்தமாக சகோதரர் தாஜுதீனிடம் பேசினேன். ஆனால் தாஜுதீனிடம் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் வேறு ஒரு இணையதளத்துக்கும் இந்த ஆக்கத்தை அனுப்பி வைத்தேன். அந்த இணையதளத்திடம் இருந்து இரண்டு தடவை பதில் வந்தது. ஆக்கம்  முழுவதுமாக இருக்கிறதா? நாங்கள் ஆலோசனைக்குழுவில் வைத்து கலந்து கொண்டு தங்களுக்கு பதில் தருகிறோம் என்று பதில் மெயில் வந்தது. அதன்பிறகு இன்று வரை அவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒரு வேளை பதில் அன்றே வந்திருந்தால் அந்த இணையதளத்தில் இந்த ஆக்கம் வெளியாகியிருக்கும்.

சபீரிடம் இருந்து போன்: என்ன ஆச்சு ஏன் உன் ஆக்கம் வரவில்லை என்று, நான் தாஜுதினிடம் இருந்து பதில் இல்லை என்றேன். சரி நான் பேசுகிறேன் என்று சொன்ன பிறகு தாஜுதீனிடம் இருந்து போன் வந்தது. காக்கா உடல் நலமில்லாத காரணத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் பிறகு நான் ஆக்கத்தை அனுப்பி வைத்து நிறைவுரைக்கு வந்து விட்டேன்.
 
சத்தியப்பாதை இதழில் வெளிவந்தது கரு என்றால் அதிரை நிருபரில் வெளியானது முழுக்குழந்தை என்று சொல்லலாம். ஏன் என்றால் மேலும் பல அனுபவங்கள் மூலமும், தற்பொழுது உள்ள நிகழ்வுகளையும் சேர்த்து எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிக அளவில் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டது இந்த ஆக்கம்.


நன்றியுரை :

உலகை படைத்து பரிபாலித்து வரும் வல்ல அல்லாஹ்வுக்கே என்னுடைய முதல் நன்றி! (அல்ஹம்துலில்லாஹ்!) இந்த ஆக்கத்தை எழுதக்கூடிய சூழலை கொடுத்து எழுத வைத்தவன் வல்ல அல்லாஹ்வே!

அப்துல்லாஹ் செய்யது ஆபிதீன்:
என்னை ஆசிரியராக நியமித்து பின் எனக்கு இந்த ஆக்கத்தை எழுத வாய்ப்பு அளித்ததற்கு என் நன்றியை சகோதரர் செய்யது ஆபிதீனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

சபீர்:
அதிரை நிருபருக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆக்கம் வெளிவருவதற்கு முயற்சியும் செய்து மேலும் எழுதுவதற்கும் ஊக்கத்தையும் கொடுத்த சபீருக்கு என்னுடைய நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

தாஜுதீன்:
நான் இரண்டு வாரம் தொடர்ந்து கட்டுரையை அனுப்பிய பிறகு காக்கா நீங்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னபொழுது நான் நேரடியாக பதிந்தால் ஏதாவது தவறுகள் வந்தால் திருத்த வாய்ப்பிருக்காது என்று கூறிய பிறகு எனது ஆக்கத்தை படித்து பிறகு அதற்கான அழகிய படங்களை தேடி எடுத்து வேலை பளுவுக்கு இடையிலும் சிறந்த முறையில் பதிவு செய்த சகோ.தாஜுதீனுக்கு எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

அபுஇபுறாஹிம்:
ஆக்கம் வெளிவந்தவுடன் முதல் வாசகராக வந்து பின்னூட்டம் பதிந்ததற்கும் மற்றவர்களும் பின்னூட்டம் இடுவதற்கு ஊக்கமாக இருந்ததற்கும் எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.

வாசகர்கள்:

சகோதரர்கள்: அபுஇபுறாஹிம், தாஜுதீன், சபீர், யாசிர், தஸ்தகீர், ஹமீது, அப்துல்மாலிக், ஜாகிர், ஜலால், அஜீஸ், ஹாலித், நிஷாத் மீரா,  ஜமீல் காக்கா,அஹ்மது காக்கா, ரியாஷ் அஹமது, அப்துர்ரஹ்மான், நீடுர் அலி, மீராஷாஹ், அதிரை அபூபக்கர், ஹிதாயத்துல்லாஹ், அபு ஆதில், அஹமது இர்ஷாத், அபு இஸ்மாயில், அபு ஈசா, MSM நெய்னா முகம்மது, பின்னூட்டம் பதிந்த வாசகர்களுக்கும், படித்தும் பின்னூட்டமிட வசதி இல்லாத வாசகர்களுக்கும்,  படித்து பயன் பெற்ற சகோதரிகளுக்கும் எனது நன்றி!

ஒரு ஆக்கத்தை எழுதி பதிந்தால் மட்டும் போதாது அதை படித்து கருத்தை தெரிவிக்கும் வாசகர்கள் இருந்தால்தான் அந்த ஆக்கத்திற்கு வெற்றி! அந்த வகையில் கருத்திட்ட, கருத்திட முடியாத வாசகர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

நிறைவுரை:

வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த ஆக்கம் தொடராக வெளிவந்து என்னால் முடிந்தளவு நமக்குள் நடைபெறும் அனைத்து விதமான கடன்களையும் குர்ஆன், மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கடன் வாங்குபவர், கொடுப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கடனற்ற வாழ்க்கை வாழ நாம் எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன். இன்ஷாஅல்லாஹ் இதன்படி வாழ நாம் அனைவரும் நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதில் நிறைகள் இருந்து அதனால் நீங்கள் பயன் அடைந்து இருந்தால் அது இவ்வுலகையும், மனிதர்களையும் மற்ற படைப்பினங்களையும் படைத்து பாதுகாத்து வரும் சர்வ சக்தி படைத்த வல்ல அல்லாஹ்வுக்கேச் சேரும் - அல்ஹம்துலில்லாஹ்! குறைகள் இருந்தால் பலகீனம் நிறைந்த படைப்பாகிய மனிதனான என்னேயேச் சேரும்.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று மாறாக அல்லாஹ், இறுதிநாள் வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள், அவர்களே உண்மை கூறியவர்கள், அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் : 2: 177)

வாசகர்களுக்கு அன்பான கோரிக்கை:

அதிரை நிருபரில் வெளியான முக்கியமான ஆக்கங்களை வெளியிட வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆக்கங்களை நோட்டீஸாக வெளியிட வேண்டுமெனில் பொருளாதாரம் வேண்டும் ஒருவரே பொறுப்பு எடுப்பது சிரமமான காரியம். பரிட்சைக்கு படிக்கலாமா? என்ற ஆக்கத்தை மிகுந்த பொருட் செலவில் செலவு செய்து அதிரை நிருபர் குழு மட்டும் பொறுப்பு எடுத்து வெளியிட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

வாசகர்கள் அனைவரிடமும் என்னுடைய சொந்த கருத்தாக தெரிவிப்பது: வெளிவந்த நோட்டீஸ் செலவிலும், இனி நோட்டீஸாக வெளியிடப்போகும் செலவிலும் தங்களின் பங்களிப்பை (நன்கொடை) செய்து நன்மையை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (நன்மையை ஒருவரே எடுத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவித்துள்ளேன்). எந்த ஆக்கங்களை நோட்டீஸாக, புத்தகமாக வெளியிட போகிறார்கள் அதற்கு என்ன செலவாகும் என்ற விபரங்களை அதிரை நிருபர் குழுதான் வெளியிட வேண்டும். வாசகர்களின் கருத்தை தெரிவியுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (அல்குர்ஆன் : 2:254)

அவதூறு பரப்புபவர் - புறம் பேசுபவர்களுக்காக:

உனக்கு தெரியுமா? சேதி? அதிரை நிருபர் குழு நன்கொடை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்களாம் என்று புறம் பேச ஆரம்பிப்பவர்களின் கவனத்திற்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை: 

நன்மையிலும். இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

--- நிறைவுற்றது ---

-- S. அலாவுதீன்



அன்பு நேசங்களே..

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 2010 அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நம் அதிரைநிருபரில் மிகுந்த வரவேற்பை பெற்ற கடன் வாங்கலாம் வாங்க தொடர் விழிப்புணர்வு பதிவு இந்த பதிவுடன் நிறைவடைகிறது. முதலில் இறைவனுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்…

இந்த அற்புதமான விழிப்புணர்வு கட்டுரையை நம் அனைவருக்கும் பரிசாக தந்து பயனடைய செய்த  எங்கள் அன்பு பாசம் நிறைந்த சகோதரர் S. அலாவுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற தொடர் மூலமே அதிரைநிருபரின் தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நம் அனுமதியுடனும் மற்றும் நம் அனுமதியில்லாமலும் இந்த தொடர் ஆக்கத்தை வெளியிட்ட சகோதர வலைப்பூக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டங்களுடன் சகோதரர் அலாவுதீன் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் அளித்துவந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த தொடர் நம் அதிரைநிருபரில் வெளிவர காரணமாக இருந்த சகோதரர் சபீர் அவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் இருவருக்காக நாங்கள் எல்லாம்வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம். இந்த தொடர் ஆக்கத்தை படித்தவர்களும், படிக்கபோகிறவர்களும் இந்த இருவருக்காவும் துஆ செய்யுங்கள்.

அதிரைநிருபர் தேடல் பகுதியில் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தட்டினால் போதும் இந்த தொடர் ஆக்கத்தின் சுட்டிகள் அனைத்தும் கிடைக்கும். மேலும் கூகுல் தேடல் இணையத்திலும் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தேடினால் நம் அதிரைநிருபர் வலைத்தளமே முன்னனியில் வரும். இது மட்டுமல்ல கூகுல் தேடலில் அதிரை அலாவுதீன், சகோதரர் அலாவுதீன், அலாவுதீன் காக்கா என்று தேடிப்பருங்கள் சகோதரர் அலாவுதீன் அவர்களின் ஆக்கங்களே முதல் வரிசையில் கிடைக்கும்.

வல்ல அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

இது போன்று நன்மை தரும் விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுத அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல செல்வ வளத்தையும் தந்தருள்வானாக என்று துஆ செய்கிறோம். வாசக நேசங்களே நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்…

மீண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே..

தொடர்ந்து இணைந்திருங்கள்…

அதிரைநிருபர் குழு

37 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

"கடன் வங்கலாம் வாங்க" என் வாழ்வில் மறக்கமுடியாத இந்த தொடர் கட்டுரையை எங்கள் எல்லோருக்கும் பயன் தரும்விதமாக பல சிரமத்துக்கு மத்தியில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி.அல்ஹம்துலில்லாஹ்...

கடன் விழிப்புணர்வு தொடர் முடிந்துவிட்டதே என்ற வருத்தம் ஒரு புரம் இருந்தாலும். இந்த தொடர் கட்டுரை நம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற திருப்தி என் மனதை ஆறுதல் படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல பரக்கத்தையும் தந்தருள்வானாக.

உங்களைப் போன்ற நல்லவர்களுடன் நட்பை ஏற்படுத்திய அந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும். உங்களின் நட்பால் நிறைய பயனடைந்த நான், இன்ஷா அல்லாஹ் மீண்டும் நிறைய சூவர்ஸ்யமான தகவல்களுடன் பின்னூட்டமிடுகிறேன்.

அல்லாஹ் போதுமானவன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல தலைப்பில் 15 தொடரோடு நிரப்பமாக நிறைவுறை செய்த சகோதரர் அலாவுதீன் அவர்கள், அடுத்து ஒரு சிறந்த தலைப்பில் நிறைவுறையே இல்லாத என்றும் தொடரக்கூடிய நல்ல பலனுள்ள தொடரை எழுத எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் விழிப்புணர்வு ஞானத்தை அவர்களுக்கும், அதுபோல போல மற்ற உறுதுணையாளர்களுக்கும்
வழங்குவானாக ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

அலாவுதீனுக்கு இஸ்லாமிய அறிவுடன் பொருளாதாரம், வணிகவியல் போன்ற விசயங்களில் தெளிவும் கிடைக்க வழிவகுத்த இறைவனுக்கே எல்லா புகழும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,

மிகவும் அவசியமான விஷயத்தை எடுத்துக் கொண்டு மிகத் தெளிவாக எங்களை மாதிரியான பெண்களுக்கும் புரியும்படியும் எழுதிய சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

அதிரைநிருபரில் கடன் வாங்கலாம் வாங்க என்றொரு விளம்பரம் வந்திருக்கிறது ஊரிலிருப்பவங்களுக்கு வீடுகட்ட மனை வாங்க கடன் கொடுக்கப் போறாங்களாம் என்று என்னோட பிரண்ட்ஸ்ங்க கமெண்ட் அடித்தார்கள் சிலர் உண்மைதான் என்றும் சொன்னார்கள். நாங்கள் அதிரைநிருபர் வெப்சைட்டை வழக்கமாக வாசிக்கும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, இதனை எனது சாச்சா அவர்களிடமும் சொன்னேன் அவர்கள் இதனை ஒவ்வொரு ஆக்கத்தையும் பிரிண்டவுட் எடுத்துக் வாசித்து காட்டும்படி சொன்னார்கள், அப்படியே செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் மூன்றாவது பாகம் வந்ததும் அவர்களில் இரண்டு பேர் எங்களுக்கு நேரடியாக வெப்சைட்டில் வாசிப்பது எப்படின்னு கேட்டார்கள் தொடர்ந்தும் அவர்களும் வாசிக்க ஆரம்பித்தார்கள்.

நல்லதையே சொல்லும் இந்த மாதிரியான பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளும் மனதில் பதியும் படி தொடர்ந்திட சகோதரர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சமீபகாலத்தில் நமதூர் பெண்களை வதைக்கும் மொபைல் மற்றும் டி.வி. இவைகள் பற்றியும் புரியும்படியும் அதன் நன்மை தீமைகளை அவர்களை நேரடியாக புண்படுத்தாமலும் சகோதரர்கள் எழுதினால் நன்மை தரும்.

அதிரைநிருபரில் வரும் கமெண்டஸ்க்கு மட்டுமே நிறைய பேர் வாசிக்கிறது உங்களுக்குத் தெரியுமா ? ஆனால் அவர்களால் கமெண்ட்ஸ் எழுத முடியவில்லை, அதனால்தான் என்னோட முதல் இந்த கமெண்ட்டை ஈமெயிலில் அனுப்பியிருக்கேன்.

வஸ்ஸலாம்.

Umm-Hisham

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை நிருபர் குழுவுக்கு!

அல்ஹம்துலில்லாஹ்!

இந்தத் தொடரை 'கட்டுரை' என்று மட்டும் அடையாளப்படுத்துவது சரியல்ல என்று தோன்றுகிறது. ஜமீல் காக்கா ஒரு முறைச் சொன்னதுபோல ' இத்தகு தொடர்கள் எழுத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை'. நிறைய ஆய்வுகள் செய்தாலொழிய இந்தத் தொடர் சாத்தியப்பட்டே இருக்காது.

எனவே, 'கடன் வாங்கலாம் வாங்க' ஒரு ஆய்வு நூலாகவே அடையாளமிடப்படவேண்டும்.

எனக்களித்ததுபோலவே என் சகோதரன் அலாவுதீனுக்கும் வாய்ப்புத் தந்து தளமைத்துக்கொடுத்து பிரபலப்படுத்திய அதிரை நிருபர் குழுவுக்கு  என் மனமார்ந்த நன்றி.

எழுதியவனுக்கு எவ்வளவு சந்தோஷமோ அவ்வளவு எழுதத்தூண்டி அதை சரியான கைகளில் ஒப்படைத்த எனக்கும் சந்தோஷமே.

ஊடகத்துறையில் தலைமை பீடமேற்கும் அத்தனைத் தகுதியும் அதுரை நிருபருக்கு உண்டு என்பதை கீழ்கண்ட சம்பவத்தின்மூலம் உணர்கிறேன். 

இத்தொடர் எழுதிவரும் காலங்களில் அலாவுதீன் உடல் நலம் குன்றியபோது நானே சென்று பார்க்காதபோது முன்பின் அறிமுகமில்லாத தாஜுதீனும் அபு இபுறாஹீமும் அபுதாபிவரைச் சென்று நலம்பெற வாழ்த்தி வந்தது ஊடகத்துறையில் வித்தியாசமானது.

எதிலும் நன்மையை மட்டுமே நாடும் தாஜுதீன் தம்பி, இவர் வாகனம் கேட்டால் வானத்தையே வளைத்துத் தரும் நெய்னா தம்பி... கண்ணுபடப்போகுதைய்யா... வாழ்க!

அதிரை நிருபர் வாசகர்களுக்கும் அலாவுதீனுக்குமென இன்னும் இரண்டு பின்னூட்டங்களுடன் வருகிறேன் இன்ஷா அல்லா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அன்பிற்கினியவர்களே !

கடன் வாங்கலாம் வாங்க தொடர் சீக்கிரத்திலேயே நிறைவுக்குள் வராமல் தொடர்ந்திருக்கலாமோ என்று ஏங்க வைத்தது என்னவோ மெய்.

பல சிரமங்களுக்கு இடையே வேலப் பளு மற்றும் உடல் ஆரோக்கியம் இவைகளிலிருந்து நேரம் ஒதுக்கி எழுத்துருவாக்கித் தந்ததிலும் அலாவுதீன் காக்கா அவர்களின் சிரத்தை பாராட்டுக்குரியதே அல்லாஹ் அவர்களின் நனமையை நாடிச் செய்யும் அனைத்து செயல்களையும் அங்கீகரிப்பானாக.

மேலும் இந்த கட்டுரைமட்டுமல்ல மற்ற கட்டுரைகளுக்கான் காட்சி நிழல் படங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அதனை கனிவான பார்வைக்குள் வந்திட அச்சுக்களை அசத்தும் விதமாகவும் மனதைத் தொடும் விதமாகவும் வந்திட எனது தம்பியும் உழைப்புக்கும் அலலாஹ் நல்லருள் புரியட்டும்.

ஏற்கனவே அறிவித்திருந்த படி இந்த ஆய்வு நூலாக வடிவம் கொடுத்திட முயற்சிகள் எடுத்திருக்கிறோம் அதனையும் தொடர்ந்து நல்ல முறையில் நிறைவு செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய அதிரை நிருபரின் வாசக 'மகா'வட்டங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தரமான ஆக்கங்களுக்கு என்றுமே ஆதரவளிப்போம் என்பதை நாம் மீண்டும் நிரூபித்து, அதிரைவாசிகளின் ரசிப்புத்திறனை உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டது நாம் இத்தொடருக்கு அளித்த ஆதரவு.

புத்திமதி சொல்லும்போது உட்கார்ந்து கேட்பது சற்று கடினம்தான். ஆயினும், 'நம்முடைய நல்லதற்குத்தானேச் சொல்கிறார்கள் கேட்போமே' என்று கேட்டு பயனடைவது ஒரு பக்குவம். அந்த பக்குவம் நமக்கு இருக்கிறது என்பதற்கு ஆதாரம்தான் நாம் தந்த ஆதரவு. அதிலும் பின்னூட்டங்களின்மூலம் மேலும் கேட்டுத் தெரிந்துகொண்டோமே...அதிரைவாசிகள் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வோம்.

இம்மாதிரியான பயனுள்ள ஆக்கங்களுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவளிப்பதன்மூலமே நமக்குத் தேவையான இலக்கிய அறிவை நாம் பெற முடியும். 

எனவே, தொடர்ந்து இவர்களுடன் இணைந்திருப்போமே! (தாஜுதீனுக்கு வேலை மிச்சம்)

சக வாசகனாக,
சபீர்.

sabeer.abushahruk said...

அன்பு அலாவுதீனுக்கு,
இந்த ஆய்வு நூலை எங்களுக்காக சிரத்தையெடுத்து பிரதிபலன் பாராமல் தெளிவாகவும் தீர்க்கமாகவும் மார்க்க அடிப்படையிலும் வார்த்துத் தந்த உனக்கு அதிரை நிருபரின் வாசகர்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்வது யாருக்கும் எளிது;சொன்னதுபோல் வாழ்வதோ கடினம். நீ சொல்லித்தந்தைப்போலவே வாழ்ந்து வருபவன் என்பதை நான் அறிவேன்.

இந்த கசப்பு மருந்தை உன் அலாதியான எழுத்துநடையால் ஜனரஞ்சகமாக்கியது உன் மொழித்திறமையைப் பறை சாற்றுகிறது.

நாம் சின்னப் பசங்களாக இருக்கும்போது கும்பகோணத்து மேம்பாலத்தினடியிலும் ரயில் நிலையத்திலும் நீ சொன்ன கதைகளில் சுவாரஸ்யமிருக்கும். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாணி இருக்கும். 

நீண்ட கட்டுரைகள் வாசிக்க பயப்படும் எனக்கு இந்த தொடர் வாசிக்க வாசிக்க மேம்பாலக்கதைகளாய் ஆர்வமேற்படுத்தியது உண்மை.

சமூக நல, மனோ தத்துவ, வாழ்வியல் மற்றும் விஞ்ஞான கட்டுரைகள் போரடிக்காமல் தருவது சிரமம். 

நீ சாதித்துவிட்டாய். வாழ்க!

தவிர,

பின்னூட்டங்களுக்கான எற்புரையில் நீ எற்கனவே என்னிடம் சொன்னபடி 'சகோதரியே..!'தொடருக்கான அறிவிப்பை அவசியம் தர வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோ அலாவுதீன் அவர்களின் கடன் வாங்கலாம் வாங்க என்ற கட்டுரை அதிகப்படியான வியாழக்கிழமைகளில் அதிரை நிருபரில் இடம் பிடித்து எங்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது மறுக்க முடியாத உண்மை.

தற்போது கட்டுரை நிறைவு பெற்றதும் மனதுக்கு வருத்தமாகவும் அதே வேலை தங்களின் புதிய தொடர் கூடிய விரைவில் வரும் என்றும் மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

இனி வரும் காலங்களில் வரும் வியாழக்கிலமைகளை சகோ அலாவுதீன்அவர்களின் ஆக்கங்களுக்கு வேண்டி முன் பதிவு செய்து வைக்குமாறு அதிரை நிருபரை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

sabeer.abushahruk said...

அ.நி.:

உங்க மேடையிலே ரொம்ப பேசியிருக்கேன். ஆனா, எனக்கு இன்னும் சோடா வரல!

இன்னொரு மேட்டர்:

அலாவுதீன்,

நல்லதை பிரின்ட் செய்யும் செலவுகளில் நான் யாசிரெல்லாம் பங்குபெற அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டு மொத்த நன்மைகளையும் அவிங்களே அள்ளிக்கிட்டாய்ங்க. நாங்க என்ன செய்ய?

sabeer.abushahruk said...

//காலங்களில் வரும் வியாழக்கிலமைகளை சகோ அலாவுதீன்அவர்களின் ஆக்கங்களுக்கு வேண்டி...//

ஜாயிரு,

வியாழக்கிழமையிலும் கொத்பாவாம் ???!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அ.நி.:

உங்க மேடையிலே ரொம்ப பேசியிருக்கேன். ஆனா, எனக்கு இன்னும் சோடா வரல!
அனுமதி மறுக்கப்பட்டு மொத்த நன்மைகளையும் அவிங்களே அள்ளிக்கிட்டாய்ங்க. நாங்க என்ன செய்ய?///

ஊருக்குச் சென்றாவது இஞ்சி தேத்தனி போட்டுதரேன்னு மாநாட்டுத் தலைவருக்கு அறிவித்து விட்டு இதுவரை அப்படிச் செய்யாததால் "சோடாவவ" மேடையேற்ற வேண்டாமென்று தீர்மானம் நிறைவேற்றியது தெரியாதா ?"

இரண்டாவது : இந்தப் பதிவு புத்தக வடிவில் உருப்பெற்று பெரிய நன்மைகளில் பங்குண்டு உங்களுக்கும் காத்திருக்கவும்.

கவிக் காக்கா அங்கே மறுக்கப்படது என்றுச் சொல்வதை விட "அதிக நன்மைகள் கிடைத்திட தள்ளிப்போனதுன்னு" மாத்திக்கலாமா (wait and share please :) )

Meerashah Rafia said...

அலாவுதீன் காக்கா மெய்யாலுமே ஆச்சர்யம் பட வைகின்றீர்..

நீங்கள் சொல்வதுபோல்
சில கட்டுரைகளை அச்சாக வெளியிட பண உதவி பெற்றால், "நாளபின்ன பணம் செலுத்தியார் மூலம் ஏதாவது குறைகள்,கூற்றுகள் வரலாம்", "அ.நி.பணம் பெற்று நடத்துகிறார்கள் என்று புரமுதிகிட்டு புறம் பேசுவார்களோ" என்று யோசிக்கின்றார்களோ என்று யோசிக்கவைகின்றது. அப்படி அ.நி.யோசித்தாலும் தவறில்லை..ஆனால் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். நம் வார்த்தைகளை பல குடும்பங்கள் வாசிக்கப்படாதவரை நாம் யோசித்து எழுதிய எழுத்துக்களுக்கு அர்தம் இன்றி போய்விடுமோ என்றொரு அச்சம். ஆகையால் இதைபற்றி மேலும் நாம் கலந்துரையாட அ.நி. இதற்காக தனி மின்னஞ்சல் மூலம் பொருட்செலவை,நேரச்செலவை ஏற்க விருப்பமுள்ளவர்களை மட்டும் இணைத்துக்கொண்டு மின்னஞ்சல் மூலம் மட்டும் கலந்தாலோசித்தால் ஒரு முடிவுக்கு வரலாம், விடிவு பிறக்கும்(இன்ஷா அல்லாஹ்). ஓபனாக பிளாகில் கலந்தாலோசிப்பது சரியில்லை என கருதுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எவ்வகையிலும் எக்காரணம் கொண்டும் பொது நன்கொடை வேண்டி என்று அதிரைநிருபரில் பதிவுகள் வரவே வராது அதில் உடண்பாடில்லை அதனைத்தான் கவிக் காக்கா சுருக்கமாக சொல்லியிருந்தார்கள் !

தம்பி மீராஷா சொல்வதுபோல் பொதுவில் விவாதப் பொருளாக இவைகள் வேண்டமென்றாலும், எடுக்கும் / எடுக்கப்பட்டிருக்கும் சிரத்தையை / அயர்ந்திருக்கும் உறவுகளை சட்டென்று எழுப்பி உற்சாகப்படுத்துவதில் இருக்கும் வேகத்திஅ உணர வைப்பதற்காகத்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள்.

நட்புகள் மத்தியில் தனிமின்னாடலுடனும் கலந்துரையாடலுடனும் ஆலோசித்து நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுற்றியுள்ளோரைப் பற்றிய அக்கறை, சமுதாயச் சிந்தனை, நடைமுறையிலுள்ள தவறுகளைக் களைவதற்கான முயற்சி ஆகிய அனைத்தும் சகோ. அலாவுத்தீனுடைய எழுத்துகளின் பின்னணியில் பின்னிக் கிடக்கும். எனவே, வலைகளில் மேய நேரம் வாய்க்காத போதும் அவரது கட்டுரைகளை நேரம் ஒதுக்கி நான் வாசித்து விடுவதுண்டு.

அல்லாஹ், அலாவுத்தீனுடைய அறிவிலும் சிந்தனையிலும் நேரத்திலும் வளம் வாரி வழங்குவானாக!

சகோ. அலாவுத்தீனுடைய இத்தொடர் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே இது அச்சுப் பதிப்பாக வந்தால் பலருக்கும் பயனுள்ளதாயிருக்கும் என்று எண்ணியிருந்தேன். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் அ.நி.குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

'கடன் வாங்கலாம் வாங்க' நூலுக்கான ஒரு நேரடி கலந்துரையாடலைப் பரிந்துரைக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//'கடன் வாங்கலாம் வாங்க' நூலுக்கான ஒரு நேரடி கலந்துரையாடலைப் பரிந்துரைக்கிறேன். //

அன்பின் (ஜமீல்)காக்கா:

தங்களின் பரிந்துரைப்படி அதற்கான முயற்சியை செய்வோம் இன்ஷா அல்லாஹ் !

Mohamed Meera said...

இது போன்ற பயன் உள்ள கட்டுரைகள் எழுதுவதற்கு- ஆர்வம், அற்பணிப்பு, ஆழ்ந்த அறிவு, தெளிவு வேண்டும் - எல்லாம் ஒருங்கே அமைய பெற்றால் மட்டுமே இது போன்ற ஆக்கங்களை செதுக்க முடியும் - அந்த வகையில் மிக அழகிய முறையில் தொகுத்து வழங்கிய
அன்பு சகோ. அலாவுதீன் அவர்களுக்கு நன்றி.

அழகிய, அருமையான ஆக்கத்தை.
தொடர்ந்து வெளியிட்ட அதிரை நிருபர் குழுமத்திற்கு நன்றி.

(பொதுவாக எந்த (comments)கருத்துக்களையும் பதியாத, ஜெமில் காக்கா, குறிப்பாக இதற்கு பதிந்ததிலிருந்து- இந்த தொடர் கட்டுரையின் தாக்கம் -முக்கியத்துவம் - புரிகின்றது)

-முகமது மீரா

Yasir said...

அல்ஹம்துல்லாஹ் காக்கா, தங்களின் கட்டுரை வெற்றிக்கு யாரையும் நீங்கள் தேட தேவையில்லை....நானே ஒரு பெரிய உதாரணம்....சும்மாவாச்சிக்குமாவது கடன் அட்டையில் பொருள் வாங்குவது அதன் பேலன்ஸை பணம் இருந்தும் சிறிது சிறிது தாக அடைப்பது கண்ணுக்கு தெரியாத பேங்க வட்டியுடன்தான்...அந்த பழக்கத்தை அறவே மாற்ற உதவியது உங்கள் கட்டுரைதான் அதன் நன்மை அனைத்தும் உங்களுக்கே காக்கா....இப்பொழுது அனைத்து பிளாஸ்டிக் அட்டைகளும் வீட்டு அலமாரியில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கின்றன....கடனும் எதுவும் இல்லை.....இந்த பழக்கத்தை விட்டபிறகு சிறிது எனது ரிஜ்க் கூடி இருப்பதாகவே நினைக்கிறேன் அல்ஹம்துல்லாஹ்

உங்களை பாரட்ட எனக்கு வயதில்லை….உங்களுக்காக நாங்கள் துவா செய்கிறோம்…தங்களின் வாழ்க்கை மாற்றத்தை படிக்கும்போது,ஒரு ஜீனியஸ் உடன் அட்லீஸ்ட் பழக்கம் ஏற்பட்டதையை பாக்கியமாக கருதுகிறேன்

அதிரை நிருபரில் அது முடிந்து விட்டாலும் நாங்கள் பல ஊடங்களின் முலமாக உங்கள் அந்த கட்டுரைகயை தொடர்ந்து என்னுடைய பல நண்பர்களுக்கு தொடர்ந்து அனுப்பிகொண்டு இருக்கிறேன் (சாரி உங்களிடம் அனுமதி வாங்கவில்லை),

உங்களின் அடுத்த புரட்சிக்கட்டுரைக்காக காத்திருக்கிறோம்..அல்லாஹ் அருள் செய்வானக

sabeer.abushahruk said...

//பின்னூட்டங்களுக்கான எற்புரையில் நீ எற்கனவே என்னிடம் சொன்னபடி 'சகோதரியே..!'தொடருக்கான அறிவிப்பை அவசியம் தர வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

அப்பதான் அந்த தொடர் முடியும்போதும் சபீர் கேட்டதால்தான் என்று நிறைய 'நன்றி' கிடைக்கும்.

//அதனைத்தான் கவிக் காக்கா சுருக்கமாக சொல்லியிருந்தார்கள்// !

என்று சமாளிஃபிகேஷன் செய்து 'சிருசு'ட்டேர்ந்து காப்பாற்றிய்தற்கு மிக்க நன்றி அபு இபுறாஹீம்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//பின்னூட்டங்களுக்கான எற்புரையில் நீ எற்கனவே என்னிடம் சொன்னபடி 'சகோதரியே..!'தொடருக்கான அறிவிப்பை அவசியம் தர வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்//


நாங்களும் அதை வழி மொழிகின்றோம்

அப்பதான் அந்த தொடர் முடியும்போது சபீர் & ஹமீது கேட்டதால்தான் என்று எங்கள் பெயரும் வரும்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நிறைவான தொடர். நிறைவு பெற்றாளும் பிறரால் நினைக்கப்படும் அளவிற்கு , பயன் படுத்தும் அளவிற்கு விசயம் போதித்து (யாசர் சொன்னதுபோல்)சாதித்த தொடர். சீரிய நோக்கமும், தேர்ந்த எழுத்து நடையும், கூரிய அறிவுரையும் அள்ளித்தெளித்த ஆக்கம் .இது போல பல ஆக்கம் சகோ. அலாவுதீனிடமிருந்து ஆவலாய் எதிர் பார்க்கிறோம். காதில்(காகிதத்தில் வந்த)விழுந்த செய்தி! சகோதரி தொடர், சகோதரரிடமிருந்து ஆவலாய் எதிர்பார்க்கும் அன்பு சகோதரன்.முஹமது தஸ்தகீர்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ அலாவுதீன் அவர்களுக்கு,

பல அலுவல்களுக்கிடையே உங்களின் 'கடன் வாங்கலாம் வாங்க' பாடத்திட்டம் அருமையான அறிவுரையுடன் கூடிய மார்க்க ரீதியான நினைவூட்டல். அல்லாஹ் இது போல் பல இஸ்லாமிய பாடத்திட்டங்களை இணைய தளம் மூலம் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பகிர்ந்து ஈருலக பயனடைய உங்களுக்கும் படித்து பயன் பெறும் பயனாளிகள் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்....


உங்களின் ஒவ்வொரு பகிர்வுக்கும் பின்னூட்டம் இட இயலவில்லை. அதனால் உங்கள் ஆக்கம் எம்மை சென்றடைய வில்லை என எண்ணி விட வேண்டாம்.

யா! அல்லாஹ் சரியான மார்க்க கல்வியும், அதன் நெறிகளும் விளங்காமல் எம்மை இத்தரணியை விட்டு அப்புறப்படுத்தி விடாதே நாயனே என‌ பிரார்த்தித்த‌வ‌னாக‌ நிறைவு செய்கிறேன்.

வ‌ஸ்ஸ‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அலாவுதீன்.S. said...

தாஜுதீன் சொன்னது… /// எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல பரக்கத்தையும் தந்தருள்வானாக.//

வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) சகோ. தாஜுதீனுக்கு: தங்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், தங்கள் நேரத்திலும், செல்வத்திலும் பரக்கத்தை தந்தருள் புரியட்டும்.

தங்கள் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

/// M.H. ஜஹபர் சாதிக் சொன்னது… நல்ல தலைப்பில் 15 தொடரோடு நிரப்பமாக நிறைவுறை செய்த சகோதரர் அலாவுதீன் அவர்கள், அடுத்து ஒரு சிறந்த தலைப்பில் நிறைவுறையே இல்லாத என்றும் தொடரக்கூடிய நல்ல பலனுள்ள தொடரை எழுத எல்லாம் வல்ல இறைவன் மென்மேலும் விழிப்புணர்வு ஞானத்தை அவர்களுக்கும், அதுபோல போல மற்ற உறுதுணையாளர்களுக்கும் வழங்குவானாக ஆமீன். ///


சகோதரர் M.H. ஜஹபர் சாதிக்கிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் விருப்பப்படி ஒரு தொடர் எழுத இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்கிறேன். வல்ல அல்லாஹ் நினைப்பதை அவன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறான் நம்மால் எதுவும் இல்லை. நம் சமுதாய மக்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைக்கூடிய நல்ல வழிகாட்டி தொடராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கவலை.

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

///ZAKIR HUSSAIN சொன்னது… : அலாவுதீனுக்கு இஸ்லாமிய அறிவுடன் பொருளாதாரம், வணிகவியல் போன்ற விசயங்களில் தெளிவும் கிடைக்க வழிவகுத்த இறைவனுக்கே எல்லா புகழும். /// மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!


சகோதரர் ஜாகிருக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

சகோதரி Umm-Hisham சொன்னது… : ///மிகவும் அவசியமான விஷயத்தை எடுத்துக் கொண்டு மிகத் தெளிவாக எங்களை மாதிரியான பெண்களுக்கும் புரியும்படியும் எழுதிய சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்./// மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

சகோதரி அவர்களுக்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

/// நல்லதையே சொல்லும் இந்த மாதிரியான பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளும் மனதில் பதியும் படி தொடர்ந்திட சகோதரர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்./// இன்ஷாஅல்லாஹ் விழிப்புணர்வு உள்ள கட்டுரைகளை எழுத முயற்சி செய்கிறேன்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

அபுஇபுறாஹீம் சொன்னது… :/// பல சிரமங்களுக்கு இடையே வேலப் பளு மற்றும் உடல் ஆரோக்கியம் இவைகளிலிருந்து நேரம் ஒதுக்கி எழுத்துருவாக்கித் தந்ததிலும் அலாவுதீன் காக்கா அவர்களின் சிரத்தை பாராட்டுக்குரியதே அல்லாஹ் அவர்களின் நனமையை நாடிச் செய்யும் அனைத்து செயல்களையும் அங்கீகரிப்பானாக.///

சகோதரர் அபுஇபுறாஹீமிற்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! தங்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

sabeer.abushahruk சொன்னது… அன்பு சபீருக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) /// இந்த ஆய்வு நூலை எங்களுக்காக சிரத்தையெடுத்து பிரதிபலன் பாராமல் தெளிவாகவும் தீர்க்கமாகவும் மார்க்க அடிப்படையிலும் வார்த்துத் தந்த உனக்கு அதிரை நிருபரின் வாசகர்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ///
வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

/// இந்த கசப்பு மருந்தை உன் அலாதியான எழுத்துநடையால் ஜனரஞ்சகமாக்கியது உன் மொழித்திறமையைப் பறை சாற்றுகிறது./// மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

//// நாம் சின்னப் பசங்களாக இருக்கும்போது கும்பகோணத்து மேம்பாலத்தினடியிலும் ரயில் நிலையத்திலும் நீ சொன்ன கதைகளில் சுவாரஸ்யமிருக்கும். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாணி இருக்கும். நீண்ட கட்டுரைகள் வாசிக்க பயப்படும் எனக்கு இந்த தொடர் வாசிக்க வாசிக்க மேம்பாலக்கதைகளாய் ஆர்வமேற்படுத்தியது உண்மை.///
கும்பகோணத்தில் வாழ்ந்த எனக்கோ நிறைய விஷயங்கள் மறந்து விட்டது.(வயது கடந்து போய்க்கொண்டு இருப்பதால்) நீ நடந்த நிகழ்வுகளை சொல்லும்பொழுதுதான் என் நினைவுக்கே வருகிறது! உனக்கு நல்ல நினைவாற்றலை வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

/// சமூக நல, மனோ தத்துவ, வாழ்வியல் மற்றும் விஞ்ஞான கட்டுரைகள் போரடிக்காமல் தருவது சிரமம். நீ சாதித்துவிட்டாய். வாழ்க! /// மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!


///தவிர,பின்னூட்டங்களுக்கான எற்புரையில் நீ எற்கனவே என்னிடம் சொன்னபடி 'சகோதரியே..!'தொடருக்கான அறிவிப்பை அவசியம் தர வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்! ///
6 மாதமாக ஊருக்கு செல்ல முயற்சி செய்து புதனன்றுதான் விடுமுறைக்கு அனுமதி கிடைத்தது. இன்ஷாஅல்லாஹ் வருகிற 4ந்தேதி புதன்கிழைமை (ஒரு மாத விடுப்பில்) ஊர் செல்ல இருக்கிறேன். அதனால் சென்று வந்த பிறகு இன்ஷாஅல்லாஹ் அறிவிப்பு செய்கிறேன்.
உன்னுடைய கருத்திற்கும், அக்கரையான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி! வல்ல அல்லாஹ் உனக்கு நல்லருள் புரியட்டும். (ஜஸாக்கல்லாஹ் ஹைர்!)

அலாவுதீன்.S. said...

Shameed சொன்னது… /// தற்போது கட்டுரை நிறைவு பெற்றதும் மனதுக்கு வருத்தமாகவும் அதே வேலை தங்களின் புதிய தொடர் கூடிய விரைவில் வரும் என்றும் மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது.///

சகோ. ஹமீதிற்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) சிறிய கட்டுரை எழுதுவதில் சிரமம் இல்லை. தொடர் எழுத அதிக அளவு கவனம் தேவை. (மலையை சுமப்பது போன்ற காரியம்) இன்ஷாஅல்லாஹ் நான் ஊர் சென்று வந்த பிறகு புதிய தொடர் எழுத முயற்சி செய்கிறேன்.
தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

meerashah சொன்னது…
/// அலாவுதீன் காக்கா மெய்யாலுமே ஆச்சர்யம் பட வைக்கின்றீர்..///
மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

சகோ. மீராஷாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// நம் வார்த்தைகளை பல குடும்பங்கள் வாசிக்கப்படாதவரை நாம் யோசித்து எழுதிய எழுத்துக்களுக்கு அர்தம் இன்றி போய்விடுமோ என்றொரு அச்சம். ஆகையால் இதைபற்றி மேலும் நாம் கலந்துரையாட அ.நி. இதற்காக தனி மின்னஞ்சல் மூலம் பொருட்செலவை,நேரச்செலவை ஏற்க விருப்பமுள்ளவர்களை மட்டும் இணைத்துக்கொண்டு மின்னஞ்சல் மூலம் மட்டும் கலந்தாலோசித்தால் ஒரு முடிவுக்கு வரலாம், விடிவு பிறக்கும்(இன்ஷா அல்லாஹ்). ///

தங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன். மேலும் வழிமொழிகிறேன்.
தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

ஜமீல் சொன்னது… /// சுற்றியுள்ளோரைப் பற்றிய அக்கறை, சமுதாயச் சிந்தனை, நடைமுறையிலுள்ள தவறுகளைக் களைவதற்கான முயற்சி ஆகிய அனைத்தும் சகோ. அலாவுத்தீனுடைய எழுத்துகளின் பின்னணியில் பின்னிக் கிடக்கும். எனவே, வலைகளில் மேய நேரம் வாய்க்காத போதும் அவரது கட்டுரைகளை நேரம் ஒதுக்கி நான் வாசித்து விடுவதுண்டு.///

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
************************************************************
ஜமீல் காக்கா அவர்களுக்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)!
தங்களின் வேலைப்பளுவுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி கட்டுரையை வாசித்து, கருத்துக்களையும் பதிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!

/// அல்லாஹ், அலாவுத்தீனுடைய அறிவிலும் சிந்தனையிலும் நேரத்திலும் வளம் வாரி வழங்குவானாக! ///

தங்களின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

/// 'கடன் வாங்கலாம் வாங்க' நூலுக்கான ஒரு நேரடி கலந்துரையாடலைப் பரிந்துரைக்கிறேன்.///

தங்களின் கருத்தை வரவேற்கிறேன். ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

Mohamed Meera சொன்னது… ///
இது போன்ற பயன் உள்ள கட்டுரைகள் எழுதுவதற்கு- ஆர்வம், அற்பணிப்பு, ஆழ்ந்த அறிவு, தெளிவு வேண்டும் - எல்லாம் ஒருங்கே அமைய பெற்றால் மட்டுமே இது போன்ற ஆக்கங்களை செதுக்க முடியும் - அந்த வகையில் மிக அழகிய முறையில் தொகுத்து வழங்கியஅன்பு சகோ. அலாவுதீன் அவர்களுக்கு நன்றி.///

மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
**************************************************

சகோ. முகமது மீராவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தங்களின் அழகிய கருத்திற்கு மிக்க நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்! தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!

அலாவுதீன்.S. said...

Yasir சொன்னது… /// அல்ஹம்துல்லாஹ் காக்கா, தங்களின் கட்டுரை வெற்றிக்கு யாரையும் நீங்கள் தேட தேவையில்லை....நானே ஒரு பெரிய உதாரணம்....///

மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

//// பிளாஸ்டிக் அட்டைகளும் வீட்டு அலமாரியில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கின்றன....கடனும் எதுவும் இல்லை.....இந்த பழக்கத்தை விட்டபிறகு சிறிது எனது ரிஜ்க் கூடி இருப்பதாகவே நினைக்கிறேன் அல்ஹம்துல்லாஹ்!///

இந்த கட்டுரையின் மூலம் வட்டியிலிருந்தும், கடனிலிருந்தும், கடன் அட்டையிலிருந்தும் உங்களை விலக்கி உங்களுக்கு பரக்கத் செய்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

///….உங்களுக்காக நாங்கள் துவா செய்கிறோம்…///

தங்களின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!

//// கட்டுரையை தொடர்ந்து என்னுடைய பல நண்பர்களுக்கு தொடர்ந்து அனுப்பிகொண்டு இருக்கிறேன் (சாரி உங்களிடம் அனுமதி வாங்கவில்லை). ///
நல்ல விஷயங்களைத்தானே செய்கிறீர்கள். கட்டுரையை அனுப்புவதற்கு அனுமதி தேவை இல்லை. நன்மைதான் உங்களுக்கு கிடைக்கும்.

//// உங்களின் அடுத்த புரட்சிக்கட்டுரைக்காக காத்திருக்கிறோம்..அல்லாஹ் அருள் செய்வானக! ///
தொடர் எழுதுவது என்பது பெரிய காரியம்! வல்ல அல்லாஹ்தான் எனக்கு ஆற்றலைத் தரவேண்டும். எல்லோர் எதிர் பார்ப்பையும் வல்ல அல்லாஹ்தான் நிறைவேற்றித்தர வேண்டும்! தொடர்ந்து பிரார்த்தனை செய்து வாருங்கள்.

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்! தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும!

அலாவுதீன்.S. said...

crown சொன்னது…/// நிறைவான தொடர்.///
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

சகோ. தஸ்தகீருக்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

/// காதில்(காகிதத்தில் வந்த)விழுந்த செய்தி! சகோதரி தொடர், சகோதரரிடமிருந்து ஆவலாய் எதிர்பார்க்கும் அன்பு சகோதரன் முஹமது தஸ்தகீர். ///

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடர் எழுத முயற்சி செய்கிறேன். வல்ல அல்லாஹ் ஆற்றலைத் தரவேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள்!

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்! தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!

அலாவுதீன்.S. said...

Naina Mohamed சொன்னது…
///அஸ்ஸலாமு அலைக்கும்///சகோ. நெய்னா முஹம்மதிற்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

////சகோ அலாவுதீன் அவர்களுக்கு,
பல அலுவல்களுக்கிடையே உங்களின் 'கடன் வாங்கலாம் வாங்க' பாடத்திட்டம் அருமையான அறிவுரையுடன் கூடிய மார்க்க ரீதியான நினைவூட்டல்.////

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

///அல்லாஹ் இது போல் பல இஸ்லாமிய பாடத்திட்டங்களை இணைய தளம் மூலம் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பகிர்ந்து ஈருலக பயனடைய உங்களுக்கும் படித்து பயன் பெறும் பயனாளிகள் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்....///

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்!

////உங்களின் ஒவ்வொரு பகிர்வுக்கும் பின்னூட்டம் இட இயலவில்லை. அதனால் உங்கள் ஆக்கம் எம்மை சென்றடைய வில்லை என எண்ணி விட வேண்டாம்.///

ஆக்கத்தை தொடர்ந்து படித்ததற்கும், தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி!

////யா! அல்லாஹ் சரியான மார்க்க கல்வியும், அதன் நெறிகளும் விளங்காமல் எம்மை இத்தரணியை விட்டு அப்புறப்படுத்தி விடாதே நாயனே என பிரார்த்தித்தவனாக நிறைவு செய்கிறேன்.வஸ்ஸலாம். மு.செ.மு. நெய்னா முஹம்மது. ////

தங்களின் பிரார்த்தனையை சகோதரர்கள் நாம் அனைவரும் கேட்போம். உங்களின் பிரர்த்தனையை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நிறைவேற்றித்தரட்டும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்! வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலை பளு அதிகம் என்பதால் உடனே மேலும் கருத்திட முடியவில்லை.

இது போன்று நல்ல கட்டுரைகள் எழுதுவதற்கு இறையச்சம், ஆர்வம், அற்பணிப்பு, ஆழ்ந்த அறிவு, தெளிவு என்று இது போன்ற பண்புகள் அனைத்தும் அலாவுதீன் காக்கா அவர்களிடம் உள்ளது. இவற்றை இவர்களின் அனைத்துபதிவுகளிலும் நம்மால் காணமுடிந்தது.

சபீர் காக்கா.. அலாவுதீன் காக்கா பற்றி நீங்கள் சொன்ன அனைத்து செய்திகளும் உண்மை. ஒரு முறை அலாவுதீன் காக்காவிடம் பேசினால் போதும், ஏதாவது ஒரு நன்மையான செய்தி கிடைக்கும், அதில் மனதுக்கு ஒரு திருப்தியும் இருக்கும்.

கடன் வாங்கலாம் வாங்க 11 பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தற்காக எனக்கும், சபீர் காக்காவுக்கும், நண்பர் யாசிருக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்கை வரலாறு புத்தகம் ஒன்றை மூவருக்கும் பரிசாக்க தந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. அலாவுதீன் காக்கா நீங்கள் எங்களுக்கு அளித்த பரிசுக்கு மீண்டும் மிக்க நன்றி.

ஜமீல் காக்கா அவர்களின் வேண்டுகோளின்படி "கடன் வாங்கலாம் வாங்க" ஆய்வு கட்டுரையின் புத்தகம் வடிவம் தொடர்பாக நேரடி உரையாடல் விரைவில் ஏற்பாடு செய்யலாம். இன்ஷா அல்லாஹ்..

இது போன்று எல்லோருடைய விருப்பப்படி "சகோதரி" என்ற புதிய விழிப்புணர்வு தொடரை விரைவில் எங்கள் எல்லோருக்காகவும் தாருங்கள் காக்கா. இணையத்தின் மூலம் நம் சமுதாயம் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியைடைய நம்மால் முடிந்த முயற்சியை சேர்ந்து செய்யலாம். இன்ஷா அல்லாஹ்.

எல்லா சகோதரர்களின் பிரார்த்தனையுடன் சேர்ந்து நாம் அனைவரும் கேட்போம். நம் எல்லோருடையை பிரார்த்தனையை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நிறைவேற்றித்தரட்டும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்! வல்ல அல்லாஹ் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்!

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

அல்ஹம்துலில்லாஹ்....

அலாவுதீன்.S. said...

தாஜுதீன் சொன்னது… சகோதரர் தாஜுதீனுக்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)

/// கடன் வாங்கலாம் வாங்க 11 பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தற்காக எனக்கும், சபீர் காக்காவுக்கும், நண்பர் யாசிருக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்கை வரலாறு புத்தகம் ஒன்றை மூவருக்கும் பரிசாக்க தந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. அலாவுதீன் காக்கா நீங்கள் எங்களுக்கு அளித்த பரிசுக்கு மீண்டும் மிக்க நன்றி.///

மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

///ஜமீல் காக்கா அவர்களின் வேண்டுகோளின்படி "கடன் வாங்கலாம் வாங்க" ஆய்வு கட்டுரையின் புத்தகம் வடிவம் தொடர்பாக நேரடி உரையாடல் விரைவில் ஏற்பாடு செய்யலாம். இன்ஷா அல்லாஹ்..///
இன்ஷாஅல்லாஹ் ஏற்பாடு செய்யுங்கள்.

///இது போன்று எல்லோருடைய விருப்பப்படி "சகோதரி" என்ற புதிய விழிப்புணர்வு தொடரை விரைவில் எங்கள் எல்லோருக்காகவும் தாருங்கள் காக்கா. இணையத்தின் மூலம் நம் சமுதாயம் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியைடைய நம்மால் முடிந்த முயற்சியை சேர்ந்து செய்யலாம். இன்ஷா அல்லாஹ்.///

சகோதரி தொடர்: சகோதரர்கள் அனைவரும் எழுத சொல்லி ஆர்வமூட்டி விட்டீர்கள். தொடர் என்றால் மலையை பெயர்க்கும் காரியம். வல்ல அல்லாஹ்தான் நம் சமுதாயம் பயன்பெறும் வகையில் எழுதுவதற்கு எனக்கு ஆற்றலைத்தரவேண்டும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் ஊர் சென்று வந்த பிறகு எழுத தொடங்குகிறேன்.

///எல்லா சகோதரர்களின் பிரார்த்தனையுடன் சேர்ந்து நாம் அனைவரும் கேட்போம். நம் எல்லோருடையை பிரார்த்தனையை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நிறைவேற்றித்தரட்டும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்! வல்ல அல்லாஹ் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் நல்லருள்புரியட்டும்!எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
அல்ஹம்துலில்லாஹ்.... ///

இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். சகோதரர் தாஜூதீன் தாங்கள் இந்த கட்டுரைக்காக படங்களை தேர்வு செய்து, கட்டுரையில் திருத்தங்கள் செய்து அழகிய முறையில் கட்டுரை வெளிவருவதற்கு உதவி செய்திருக்கிறீர்கள் மேலும் அ.நிருபரை கவனமுடன் பல வேலைப்பளுவுக்கிடையிலும் நடத்தி வருகிறீர்கள்.

வல்ல அல்லாஹ் தங்கள் உடல் ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும், செல்வத்திலும், நேரத்திலும் தாரளமாக பரக்கத்தை வாரி வழங்கி அருள்புரியட்டும்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.