Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 1 29

அதிரைநிருபர் | October 01, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!


தலைப்பை பார்த்து விட்டு அதிரைநிருபர் குழு கடன் வழங்கும் திட்டம் எதுவும் ஆரம்பித்திருக்கிறார்களா? என்ன? என்று கற்பனையில் இறங்கி விடாதீர்கள். (உலகத்தின் பெரிய வட்டி கடையான உலக வங்கியால் மட்டும்தான் கடன் கொடுக்க முடியும்).

கடன் - என்ற சொல் இனிப்பா? கசப்பா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். கடன் - இந்த வார்த்தையை கேட்காத நேரம் இல்லை, சொல்லாத மனிதர்களும் இல்லை. கடன் நமது இரத்தத்தோடு கலந்து போய் உயிர்நாடியில் சங்கமம் ஆகிவிட்டது. கடன் - வாங்கியவருக்கு மகிழ்ச்சியைத்தரும். ஆனால் கொடுத்தவருக்கோ வேதனை அளிக்கும்.

நாம் வாங்கும் கடன்கள் நமது மார்க்கத்திற்கு உட்பட்டு எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். நமக்குள் கொடுத்து வாங்கும் கடன்களை பார்ப்பதற்கு முன் கடன் என்ற பெயரால் இந்த உலகத்தில் நடைமுறையில் நடைபெற்று வரும் கடன்களின் தரத்தை ஒவ்வொன்றாக அலசுவோம்.


நாடுகள் வாங்கும் கடன்:

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் கடன் வாங்குவது கௌரவமான செயல் என்பதுபோல் கருத்து பரவி வருகிறது. நமது இந்தியாவும் கடன் வாங்குவதில் முன்னோடியாக உள்ளது. பிறக்கும் இந்தியன் ஒவ்வொருவரின் கணக்கிலும் வாங்காத கடனுக்காக நம்மீது வலிந்து கடனாளி என்ற பெயர் திணிக்கப்பட்டுள்ளது. கடனுக்காக இந்தியாவை விற்றுவிடும் அவல நிலை எதிர்காலத்தில் வந்தாலும் வரலாம். உலகமயம், தாராளமயம் என்ற போர்வையில் மற்ற நாடுகளில் தானாக முன் வந்து உலக வங்கி கடன் கொடுத்து அடிமையாக்கி வருகிறது. மேலும் கடன் கொடுக்கும் உலக வங்கி (உலக ரவுடி வங்கி) நம் நாட்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் நமது ஆட்சியாளருக்கு கடும் கட்டளைகளை பிறப்பிக்கிறது. கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஆள்வோரும் அப்படியே செயல்படுகிறார்கள். வாங்கிய கடன் சரியாக செலவழிக்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியே! (அரசியல்வாதிகளும் சரி, மீடியாக்களும் சரி இந்தியா கடன் வாங்குகிறது என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜப்பான் நிதி வழங்கியது, உலக வங்கி நிதி வழங்கியது என்றுதான் சொல்வார்கள். கடன் வழங்கியது என்று சொல்லமாட்டார்கள். நிதியா??? கடனா??? நிறையபேர் நிதி என்றால் மற்றநாடுகள் உதவியாக தருகிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய சங்கெடுத்து அவர்களின் காதில்  ஊதி இனிமேலாவது கடன் வழங்கியது, கடன் வாங்கினோம் என்று  அறிவிக்கச் சொல்லுங்கள்.).


மேலும் உலகமயம், தாராளமயம் என்ற போர்வையில் பன்னாட்டு கம்பெனிகளும் பலவிதமான கவர்ச்சி விளம்பரங்களுடனும் அதற்கு ஒத்துழைக்கும் மீடியாக்களுடனும், நம் இந்திய நாட்டின் வளங்கள் அனைத்தையும் வியாபாரம் என்ற பெயரில் கொள்ளையடித்து செல்ல ஆரம்பித்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது. இதை ஆள்பவர்களும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஒத்துழைப்புடன்தான் அனைத்தும் நடக்கிறது பிறகு எதற்கு கவலைப்பட வேண்டும்.


மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். நம்மை கடனாளி ஆக்குவதில் இந்த பன்னாட்டு முதலாளி (முதலை)களின் பங்கு முக்கியமாக இருக்கிறது. இன்று இவர்களின் செயல்பாடுகள் ஆக்டோபஸ் அளவுக்கு விரிவடைந்து வருகிறது. மக்கள் விழிப்புணர்வு பெறும்பொழுது இந்த கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்.

(தொடர் -1 ஆய்வு கட்டுரை)


இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- Alaudeen.S.

கடன் வாங்கலாம் வாங்க முகப்பு                     கடன் வாங்கலாம் வாங்க 2 --->

29 Responses So Far:

அதிரைநிருபர் said...

வித்யாசமான தலைப்பில் விழிப்புணர்வு ஆய்வுக் கட்டுரையை நம் அதிரைநிருபரில் பதிய முன் வந்துள்ள அன்பு சகோதரர் அலாவுதீன் அவர்களை பேரன்புடன் அதிரைநிருபர் குழு சார்பாக வரவேற்கிறோம்.

தங்களின் இந்த சேவை மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அல்லாஹ்விடமும் துஆ செய்கிறோம்.

வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் எழுப்பணியை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் கடன் வாங்குவது கௌரவமான செயல் என்பதுபோல் கருத்து பரவி வருகிறது//

ஆரம்பமே பயன்படுத்தாத கவுரவ கடன் அட்டைகள் வைத்திருப்பவர்களை நறுக்கென்று குத்துக்கிறது.

அடுத்த தொடர்களில் இன்னும் நிறைய விழிப்புணர்வு செய்திகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்கிறோம்.

வாழ்த்துக்கள்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்தியா மூன்று பக்கம் நீராலும்,ஒருபக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட தீபகற்பம் மட்டுமல்ல நான்குபக்கமும் கடனால் சூழப்பட்ட தீவும் ஆகும்.மனிதன் பிறந்த பின்தான் கடன் இருக்கும் அனால் இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை கடனாளியாகிவிடுகிற அவலம். நல்ல ஆரம்பம் அசத்துங்க சகோதரரே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா அசத்துங்க சகோ.அலாவுதீன், அப்புறமா உங்க எழுத்துக்களை கொஞ்சம் அழகிய "கடனாக" கேட்க போட்டி உருவாகலாம். தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபுஇபுறாஹிம் on Friday, October 01, 2010 10:29:00 AM said...
ஆஹா அசத்துங்க சகோ.அலாவுதீன், அப்புறமா உங்க எழுத்துக்களை கொஞ்சம் அழகிய "கடனாக" கேட்க போட்டி உருவாகலாம். தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

அப்படி கடனாக வழங்க முன் வரும் பட்சத்தில் நீங்கள் அதனை "நீதி"யாக (தீர்ப்பாக) வழங்குங்கள் :)

sabeer.abushahruk said...

அன்பு அலாவுதீன்,
அன்பு அலாவுதீன்

sabeer.abushahruk said...

என் வேன்டுகோளுகினங்கி துவங்கியதற்கு நன்றி. தொடரட்டும் உன் மார்க்க பணி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தக் கட்டுரையை பார்த்த என் நட்பின் வீட்டார் அவனிடம் சொன்னது அதான் கடன்வாங்கலாம்னு போட்டிருக்கே அங்கே ஒரு டோக்கன் எடுத்து கேளு ஃபிரண்டுகிட்டேன்னு ! அதுக்கப்புறம்தான் இந்தக் கட்டுரையை அவனே வாசித்து இருக்கான் - அதிரை நிருபரின் சலனமில்லாத பயனம் எல்லோருக்கு அறிந்திருக்கிறது மவுனமாக வாசிப்பவர்கள் அதிகம் அதிலும் பெண்களும் உள்ளடக்கம், கருத்துச் சொல்லத்தான் கண்மனிகள் இருக்கிறார்கள் என்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் போலும் ! :)

யோசனை : இந்தத் தொடரை நம்முடைய வார விடுமுறைய ஆரம்பமாகும் வியாழன் மதியமே வலம் வர வைக்கலாமே இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் said...

//இந்தத் தொடரை நம்முடைய வார விடுமுறைய ஆரம்பமாகும் வியாழன் மதியமே வலம் வர வைக்கலாமே இன்ஷா அல்லாஹ்.//

நல்ல யோசனை, இது போன்ற தொடர் கட்டுரைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பதிய முயற்சி செய்கிறோம்.

Shameed said...

கடன் வாங்கும் போது சந்தோசமா இருக்கும் கொடுக்கும் போது சச்சரவ போவும்.

Shameed said...

எல்லாம் சரிங்க நமக்காக கவர் மெண்ட் வாங்கும் கடனுக்கு கவர் மெண்ட் திருப்பி செலுத்தா பட்சத்தில் மருமைலே நாம அந்த கடனுக்கு பதில் சொல்லனுமா ? யாரவது விபரம் தாருங்கள்.

அதிரைநிருபர் said...

அமீரகத்தில் மட்டும் கடன் அட்டை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு மில்லியன் கணக்கில் கூடுதலாக பணம் இழக்கிறார்கள், மேலும் தகவலுக்கு இன்று கல்ஃப் நியூஸ் இணையத்தில் வெளியாகியுள்ள கட்டுரையை படித்துப்பாருங்கள்.

http://gulfnews.com/business/general/uae-consumers-lose-millions-every-year-in-credit-card-usage-1.690432

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சகோ. சபீர், சகோ. தாஜூதீன் இருவருக்கும் நன்றி! இந்த கட்டுரையை எழுத ஊக்கம் கொடுத்ததற்கு.– Alaudeen.S.

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இந்த கட்டுரையை வெளியிட்ட:
அதிரைநிருபர் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.– Alaudeen.S.

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இந்த கட்டுரையை அழகிய வடிவில் வெளியிட்ட தாஜூதீன் & அதிரைநிருபர் குழுவினருக்கும், பின்னூட்டமிட்ட:
1) அதிரைநிருபர் குழு சகோதரர்கள்
2) சகோ.தாஜூதீன்
3) சகோ.தஸ்தகீர்
4) சகோ.அபுஇபுறாஹிம்
5) சகோ. சபீர்
6) சகோ. சாகுல் ஹமீது
ஆகிய அனைவருக்கும் அன்புடன் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். -- அலாவுதீன் S.

அலாவுதீன்.S. said...

சகோதரர் சாகுல் ஹமீதிற்கு : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவர்களைப்பற்றி விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ( அல்குர்ஆன் : 6:52 )

( பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 6:164 )

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 17:15 )

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார் ( அல்குர்ஆன்:39:7 )

ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன் (அல்குர்ஆன் : 52:21)

மேற்கண்டவாறு குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறுவதால் :

******* எல்லாம் சரிங்க நமக்காக கவர் மெண்ட் வாங்கும் கடனுக்கு கவர் மெண்ட் திருப்பி செலுத்தா பட்சத்தில் மருமைலே நாம அந்த கடனுக்கு பதில் சொல்லனுமா ? யாரவது விபரம் தாருங்கள்.*******

தங்களின் கேள்விக்கு பதில்:

அரசாங்கம் வாங்கும் கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் (கடனுக்கு பதிலாக நாட்டை எழுதி கொடுத்து விடுவார்கள் அரசியல் வியாதிகள் - கவலை வேண்டாம்) மறுமையில் வல்ல அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டான். -- சகோ.அலாவுதீன் S.--

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Masha Allah ! Great to see worthy and prompt responsible reply from Bro. Alauddin.

Shameed said...

alavud38
மறுமையில் வல்ல அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டான். -- சகோ.அலாவுதீன் S.--

வலைக்கும் முஸ்ஸலாம்.
தங்களின் பதில் திருப்தியாக இருந்தது , தங்கள் தம்பி ஜாகிருக்கு என் சலாம் சொல்லவும்.

அதிரைநிருபர் said...

சகோதரர் அலாவுதீன், உங்கள் அன்பும், கனிவான பேச்சும், சமூக அக்கரையுடன் கூடிய உங்கள் பங்களிப்பும் எங்களை நெகிழ வைத்துள்ளது, மிக்க மகிழ்ச்சி. இந்த நட்பு தொடர்ந்து நம்மிடம் இருந்து நம்மால் முடிந்த விழிப்புணர்வுகளை இணையத்தின் மூலம் கூட்டாக சேர்ந்து நம் சமுதாயத்தில் ஏற்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் குழு சார்பாகவும், அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள் அனைவரின் சார்பாகவும், அதிரைநிருபர் படிக்கும் அதிரை மற்றும் வெளியூர் மக்கள் அனைவரின் சார்பாக உங்களுக்கு மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும், துஆக்களும்.

அதிரைநிருபர் வலைப்பூ நல்ல செய்திகளை பகிர்வதோடு அல்லாமல், பல அதிரை இதயங்களை இங்கு இணைத்துக்கொண்டு இருப்பதை நாளுக்கு நாள் நம்மால் காணமுடிகிறது. வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இந்த நட்புகள் அனைத்தும் தொடரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ்

நம் சமூக ஒற்றுமைக்காக அல்லாஹ்விடம் கையேந்தும் ஒவ்வொரு முறையும் துஆ செய்வோம்.

அப்துல்மாலிக் said...

தெளிவான கட்டுரை தொடருங்க...

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அலாவுதீன் உங்கள் பொருளாதாரம் சம்பந்தமான கட்டுரை மிகவும் பயனானது. கருத்துக்கு நன்றி சொல்லும்போது மளிகைகடை சிட்டை முறையை [ 1, 2, போட்டுஎழுதுவது] கடைபிடிக்க தேவை இல்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதென்ன "உங்கள் பொருளாதாரம்" கடன் வாங்கலாம்னு சொன்னதினாலா ? கடன் வாங்குவதைத்தான் சொல்லியிருப்பதால் ஆகவே எண்ணிக்கை விட்டுடக் கூடாதில்லையா ! யார் யாருக்கு கொடுக்கலாம்னு வரிசைப் படுத்தியிருக்காங்க ஜாஹிர் காக்கா :)

ZAKIR HUSSAIN said...

அபு இப்றாஹிம்..உங்கள் பொருளாதாரம் என்பது சேர்ந்த வார்த்தை அல்ல.[ இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா???]

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள்: சாகுல் ஹமீது, அபுஇபுராஹிம்,அப்துல் மாலிக், ஜாகிர் ஹூசைன் ஆகியோர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) -- பின்னூட்டமிட்டதற்கு நன்றி!.
****************
சகோ: சாகுல் ஹமீது:
////தங்களின் பதில் திருப்தியாக இருந்தது//// தங்களின் சந்தேகம் தீர உதவி புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். -- சகோ. அலாவுதீன்.S.

அலாவுதீன்.S. said...

அதிரைநிருபர் குழுவினர் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தாங்கள் நல்ல ஒரு கருத்தையும், நன்றியையும், வாழ்த்தையும் தெரியபடுத்தியதற்கு – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! ''ஜஸாக்கல்லாஹ் ஹைர்'' (இறைவன் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்).

உமர் பின் கத்தாப்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:'' (ஸஹிஹூல் புகாரி பாடம்: 1)

நம் சக்திக்கு உட்பட்டு இன்ஷாஅல்லாஹ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதற்கு வல்ல அல்லாஹ் நம் காரியங்களையும், எண்ணங்களையும் இலகுவாக்கி நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தந்து மேலும் நமது நேரத்தில் பரக்கத் செய்து அருள் புரிய வேண்டும். இதற்கு அனைவரும் துவாச் செய்யுங்கள். –அலாவுதீன்.S-

அலாவுதீன்.S. said...

அதிரைநிருபர் குழு சகோதரர்கள்
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அதிரைநிருபர் said...

வ அலைக்குமுஸ்ஸலாம், அன்பு சகோதரர் அலாவுதீன், நம் சக்திக்கு உட்பட்டு நேர் வழிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ்.

வல்ல அல்லாஹ் நம் காரியங்களையும், எண்ணங்களையும் இலகுவாக்கி நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தந்து மேலும் நமது நேரத்தில் பரக்கத் செய்து அருள் புரிய வேண்டும் என்று நாம் அனைவரும் துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

எல்லாவற்றிற்கு அல்லாஹ் போதுமானவன்

MS said...

இது தேவையான தலைப்பு, இந்த தலைப்பை கொண்டு அரியாத விசயத்தை தெரியபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்

காலம்.....பதில் சொல்லும் said...

இதை படிக்க நான் கடன் பட்டு இருக்கின்ரேன்.,

அ.ர .நூருல் ஹசன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு