கடன் வாங்கலாம் வாங்க - 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.

â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.

â            நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.

â        வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.

â        பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.

â        எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.

இப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

இங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா? என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.

சகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா? வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம்  பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோடு கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.

ஆடம்பர கடன் எது தெரியுமா?

வீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ??? நம் கௌரவம்??? குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம்.  இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

சகோதரிகள் வாங்கும் கடன்கள் :

சகோதரிகளே! தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

புதிய நகை :

நகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்தின் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா? அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:

... உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)

நகை கடன் :

நகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே! சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்! எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா? அல்லது மருத்துவ செலவுக்கா? (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்)  பெரும்பாலும்  வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.

வங்கியின் நிலைபாடு :

வங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.

உங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா? சிந்திப்பீர்களா சகோதரிகளே! (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்).
இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி? வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.

வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன?????? நகையை விற்றால் வாங்க முடியுமா????? அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா? என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).

வட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.


உதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.


இரவல் நகை கடன் :

சில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).

அடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா? அல்லது துணை போவீர்களா?

உறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே! எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள்? கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை  இந்த கடன் அவசியம்தானா? வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன்.S.


32 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

வங்கியியல் (banking) என்று ஒரு பாடம் வணிக வகுப்பில் இருந்தது அங்கே இப்படியெல்லாம் யாரும் சொல்லித் தரவில்லை... தொடருங்கள் உங்களின் படிப்பினையை இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk சொன்னது…

அலாவுதீன்,
மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் பிரச்சனைகளை அலசுகிறாய். அரைகுறையாய் விட்டுவிடாமல் தீர்வுகளும் சொல்லித் தருவது உன் அக்கறையைக் காட்டுகிறது. வாழ்க உன் தொண்டு.

வளரட்டும் இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN சொன்னது…

//இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும்.///

வாய் அதிகம் பேச தெரிந்த பெண்கள் அமைதியான பெண்களின் நகையை "ஆட்டை" போட கண்டுபிடித்த உள்ளூர் ஏமாற்று வேலை. சி.பி.ஐ & இஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா" அளவில் பேசப்படும் பெண்களில் ஒருவராக இருப்பார்கள். நகையை அடமானம் வைத்து விட்டு மீட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பதாலும் "தெரு' அளவில் அதிகம் பேசப்படுகிறார்கள் இப்போது.

jalal சொன்னது…

அண்ணாத்த...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
தற்போது தான் "கடன் வாங்கலாம் வங்க" கட்டுரையினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கட்டுரை அணைவரும் பாடித்து பயன் பெரும் ஒரு வழிகாட்டி. மேலும் அதனை படித்து அதன்படி எல்லோரும் கடன், வட்டியினை தவிர்த்துக்கொண்டு அல்லாஹ் சுபஹானஹு தாலா அணைவருக்கும் எதனையெல்லாம் ஹலாலாக்கி வைத்துருக்கின்றானோ ! அதனையே மனம் உவர்ந்து வாழவும், எதை எல்லாம் ஹராமாக்கிவிட்டானோ அதனை விட்டு விலகியும் வாழ, எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும்.
அண்ணாத்த உண்மையில் எழுத்து நடை, அதனை அணைவரும் புரியும்படி சொன்ன விதம் சூப்பர்.அதற்க்கு ஒரு சல்யூட்
#################################################
எவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவrகளின் அதிபதியிடம் உரிய கூலி இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும்மாட்டாட்கள். (ஆனால்) வட்டி உண்பவர்கள் சைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். (அல்குர் ஆன் : 2 - 275)

Shameed சொன்னது…

எளிய முறையில் பேங்க் கடன் பற்றி அருமையாக விளக்கி உள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பனி

Shameed சொன்னது…

ZAKIR HUSSAIN சொன்னது…
வாய் அதிகம் பேச தெரிந்த பெண்கள் அமைதியான பெண்களின் நகையை "ஆட்டை" போட கண்டுபிடித்த உள்ளூர் ஏமாற்று வேலை. சி.பி.ஐ & இஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா" அளவில் பேசப்படும் பெண்களில் ஒருவராக இருப்பார்கள். நகையை அடமானம் வைத்து விட்டு மீட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பதாலும் "தெரு' அளவில் அதிகம் பேசப்படுகிறார்கள் இப்போது.

இஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா"
நாள் ஒன்றுக்கு இரண்டு ராகேட் வீதம் அனுப்பலாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஜாஹிர் காக்கா மற்றும் சாஹுல் காக்கா இந்த இரவல் ராணிகள் ராக்கட்டையும் ஆட்டை போட்டு(தானே) நாள் ஒன்றுக்கு இரண்டு ராகெட் விடுவாங்களோ ? ஏன்னா ஊரார் உழைப்பில் ஊதியம் பார்ப்பவர்கள் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சகோதரர் ஜலால் அவர்கள் இரயில் தண்டவாளத்தையே கோடாக போட்டு தனது பங்கிற்கு (அல்குர்ஆன்: 2 - 275) சேர்த்து அழுத்தம் கொடுத்திருக்கிறீர்கள் அலாவுதீன் காக்காவின் படிப்பினைத் தொடருக்கு !

உங்களிடமிருந்து அசரவைக்கும் ஆக்கம் வருமென்று எதிர்பார்க்கிறோம் ! with smile :)

ZAKIR HUSSAIN சொன்னது…

Abu Ibrahim said....

//ஜாஹிர் காக்கா மற்றும் சாஹுல் காக்கா இந்த இரவல் ராணிகள் ராக்கட்டையும் ஆட்டை போட்டு(தானே) நாள் ஒன்றுக்கு இரண்டு ராகெட் விடுவாங்களோ ? ஏன்னா ஊரார் உழைப்பில் ஊதியம் பார்ப்பவர்கள் !//

கொஞ்சம் அசந்தால் இஸ்ரோவில் உள்ள ராக்கெட்டையும் தனலக்ஷ்மி பாங்கில் அடகுக்கு வைக்க முயற்சிக்களாம் இந்த பெண்மணிகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஜாஹிர் காக்கா : அங்கேயும் பத்தரை கூடிகிட்டு போயி அடமான விலை நிர்ணயம் செய்வதற்கும் மேற்படி வங்கி தயாரத்தன் இருக்காம் !!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அன்பு சகோதரர் அலாவுதீன்,

மீண்டும் ஒரு அற்புதமான சிந்தனை ஆக்கம்.

//லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள்.//

வெளிநாட்டில் இருந்தும் அநேக சகோதரர்கள் கடனாளியாக போவதற்கு நீங்கள் மேல் சொன்ன சிந்தனையற்ற செயலே காரணம். கஷ்டம் இல்லாதவன் இவ்வுளகில் இல்லை, கஷ்டங்கள் பல கட்டங்களில் செய்கையாகவே தினிக்கப்படுகிறது.

நம் அனைவரின் விருப்பப்படி கடன் இல்லாத வாழ்வும், கடன் இல்லாத மரணமும் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

அன்பினிய சகோதரரே தொடருங்கள் இந்த விழிப்புணர்வு சேவையை.

Shameed சொன்னது…

நாம் இங்கு இருந்து போகும் போது போடும் சட்டையும் அடிக்கும் செண்டும் நாம் செய்யும் அளப்பரையும் அவர்களை லட்சம் கோடி என யோசனை செய்ய வைக்கின்றன.

அலாவுதீன்.S. சொன்னது…

கருத்து சொன்ன சகோதரர்கள் : அபுஇபுறாஹிம், சபீர், ஜாகிர் ஹூசைன், ஜலால், சாகுல் ஹமீது, தாஜுதீன், அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தாங்கள் அனைவரின் கருத்திற்கும் நன்றி!
**************************************************
சகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள்.

அப்துல்மாலிக் சொன்னது…

குறிப்பாக அதிரையில் நகை அடகு என்பது தவிர்க்கயியலதாதாகிவிட்டது, விற்க சொன்னால் திரும்ப புதுசு வாங்க மனம் வராது என்றும், அடகு வைத்தால் அதை எப்பேர்பட்டாவது திருப்பிவிடுவீர் என்று சொல்லப்படுகிறது.

அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை(ஆடம்பரம்)க்காகவே அதிகம் கடன் வாங்கப்படுகிறது

அருமையான தெளிவான தொடர் சகோ...

Azeez சொன்னது…

தாஜுத்தீன் கக்காவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த தொடரைப்பற்றி எனக்கு தெரிவித்தார்கள். மாஷா அல்லா மிகவும் பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் உங்கள் முயற்சி.

Azeez சொன்னது…

அடகுவைதல் எனபது ஒரு பெரும்பாவம் என்ற சிந்தனையே இல்லாமல் வங்கியை நோக்கி படையெடுக்கும் மக்களுக்கு நறுக்கென்று சொன்னீர்கள்,

Shameed சொன்னது…

அலாவுதீன்.S. சொன்னது…
சகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள்.

இதில் சகோதரிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது
சகோதரர்களும் கூட சில சமயங்களில் அரசியல் வாதியை விட மோசமாக.
(கிலோ கணக்கில் தங்கம்) வாங்கி தருவதாகஆசை வார்த்தைகளை பெண்களிடம் அள்ளி வீசிவிடுகிறார்கள். என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Shahulhameed சொன்னது…

இதில் சகோதரிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது சகோதரர்களும் கூட சில சமயங்களில் அரசியல் வாதியை விட மோசமாக.(கிலோ கணக்கில் தங்கம்) வாங்கி தருவதாகஆசை வார்த்தைகளை பெண்களிடம் அள்ளி வீசிவிடுகிறார்கள். என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் ///

சாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க ! கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் .தாமதத்துக்கு வருந்துகிறேன்.சகோ.அலாவுதீனுடன் அருகில் வசிப்பவரோ,கூட வசிப்பவர்களோ பாக்கியம் செய்து இருக்கனும்.அல்ஹம்துலில்லாஹ் என்னவொரு தெளிவான விளக்கம். நம் மனதில் ஏற்படும் கேள்வியை அவர் நம் நிலையில் கேட்டு அதற்கு மார்க ரீதியாகவௌம்,தர்க ரீதியகவும் சொல்லும் விளக்கம் அருமை என்பதை சொன்னால் மட்டும் போதாது ஏற்று நடப்பதில்தான் அதன் நன்மை நக்கு சிறப்பான வாழ்வை அமைத்து தரும் இன்ஷால்லஹ்.

Shameed சொன்னது…

அபுஇபுறாஹிம் சொன்னது…
சாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க ! கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)


எல்லாம் ஒரு லிங்க் தான்

crown சொன்னது…

Shahulhameed சொன்னது…

அபுஇபுறாஹிம் சொன்னது…
சாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க ! கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)


எல்லாம் ஒரு லிங்க் தான்
---------------------------------------------------------------------
ஹா,ஹா,ஹா,ஹா(ஹாஸ்யம்)ஆனால் லிங்க் பற்றியது(ஜோஸியம்,வசியம்,)இதை உணரனும் அவசியம்.மேலும் இந்த லிங்க் ஜோசியக்காரன் வாயிலிருந்து எடுக்கும் லிங்க்'கம் லிங்கல்ல, நல்ல பயணனுள்ள குட்லிங்க்.

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ. அப்துல் மாலிக், அஜீஸ், தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//சகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள். //

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பு சகோதரர் அலாவுதீன்,

அது நம் சமுதாய பெண்கள் போடும் நகை இல்லை என்பதாக நம் பெண்மணிகளிடமிருந்து பதில் வந்து விட்டது. புகைப்படத்தை பார்த்து எந்த ஆண்களும் பயப்பட வேண்டாம்.

jalal சொன்னது…

இறைநம்பிக்கை கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணம்டைய வேண்டாம். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும் நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்க்ளை அதிலிருந்து காப்பாற்றிவிட்டான்.இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுப்ப்டுத்துகிறான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக ! (அல்குர் ஆன் : 3 - 102,103)
################################################
தம்பி அபுஇபுறாஹிம்..,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
என்ன தம்பி ! ச...கோ...த...ர...ர்..., என்று ரொம்பதூரத்துக்கு தள்ளிவச்சுட்டியலே ! அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ "காக்கா" என்றே போட்டுருக்களம்? (நானும் அதிரைக்காரன் தானுங்கோ...)
தண்டவாளத்துல ரோடு போடுறது என்ன, நாங்க வானத்துலேயே படம் வரைஞ்சுடுவோம்ல.....ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா
# எல்லோரும் படைப்பாளியாகிவிட்டாள் அதைப்படிப்பது யார்?
# கட்ச்சின்னு ஒன்னு இருந்தாள் எதிர்கட்ச்சின்னு ஒன்னு இருக்கனும் ? அப்பதான் காரஞ்சாரமா இருக்கும் !
அதேபோல் நம்ம மின்னூட்டத்தில் பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருப்போம் என்னா சரிதானே !

crown சொன்னது…

jalal சொன்னது… தம்பி அபுஇபுறாஹிம்..,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
என்ன தம்பி ! ச...கோ...த...ர...ர்..., என்று ரொம்பதூரத்துக்கு தள்ளிவச்சுட்டியலே ! அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ "காக்கா" என்றே போட்டுருக்களம்? (நானும் அதிரைக்காரன் தானுங்கோ...)
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அது ஒன்னுமில்ல தூரத்து சொந்தம்னு அவர் உங்களை அழைத்திருப்பார்னு நினைக்கிறேன்.

jalal சொன்னது…

அன்பிர்க்கினிய சகோ.க்ரவுன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)

"உங்களிள் ஒருவனாக" ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி.
தொடருவோம் நம் உறவுகளை (எல்லாம்வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாஹ ஆமீன்).
##################################################
முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்டும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர் ஆன் : 9 - 100)

crown சொன்னது…

jalal சொன்னது…

அன்பிர்க்கினிய சகோ.க்ரவுன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)

"உங்களிள் ஒருவனாக" ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி.
தொடருவோம் நம் உறவுகளை (எல்லாம்வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாஹ ஆமீன்)
--------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும். நேற்று பேஸ்புக்குல ஒரு சிரீலங்க சகோ.வினவினார் தூரத்து நட்புக்கு கவிதைதாருங்கள்
நான் உடனே எழுதினேன் இப்படி:
தூரத்து நட்பு என்று உலகம் சொன்னது,இதயத்துக்குள் வந்தபின்னே எப்படி தூரமாகும்?.அதே விசயத்தை நாம் இன்றும் எழுதும்(பேசும்) படி ஆகிவிட்டது .வியப்புத்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஜலால் காக்கா வேற ஒன்னுமில்ல இங்கேயிருக்கிற எங்களோட பாசக்கார காக்காமார்களை நீங்க மச்சான்ஸ்ன்னு சொன்னதும் காக்காவோட மச்சான்(chance)ஐ சம்பந்தி வீட்டுக்கரங்க மாதிரியா நடந்துட்டேனா அடடா இதுக்கெல்லாமா வாசல்லையே நிக்கிறது உள்ளே வாங்க உங்க பங்கிற்கு ஆக்கித்தான் போடுங்களேன்... சாப்பிடவா சொல்லித்தரனும், ஆனா தம்பியாகத்தான் சாப்பிடுவோம் சம்பந்தி வீட்டுக்கரங்க வெறப்புள இருக்க மாட்டோம் என்ன சரியா :))

jalal சொன்னது…

அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்..,)
தம்பி அபுஇபுறாஹிம்
எங்க பங்குக்கு ஆக்கிபோட்டுப்புடுவோம் (ருசியாதான்),ஆனால் நீங்க சம்மந்தியா வந்தாலும் சரி ! சமபந்திக்கு வ்ந்தாலும் சரி !
விருந்து என்னமோ "மொய் விருந்து" தன் சரியா?
இல்லேன்ன இந்த ஆட்டத்துக்கு நான் ஜீஜீஜீஜீஜீட்ட்ட்........
அதாம்மா ஆக்கி அறிக்கிறதுக்கு தான்.

jalal சொன்னது…

அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்பிற்குரிய சகோ.க்ரவுன்
போங்க அசத்திப்புட்டிங்க

நட்ப்பு
என்
உடலுக்குள்
குடியேரிய
என் நண்பனின்
ஆவி

(அப்பதாங்க பிரிக்கமுடியாதுங்க)
அல்லாஹ்வையன்றி ஒன்ற்மில்லை அவனே போதுமானவன்.

crown சொன்னது…

jalal சொன்னது…

அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்பிற்குரிய சகோ.க்ரவுன்
போங்க அசத்திப்புட்டிங்க

நட்ப்பு
என்
உடலுக்குள்
குடியேரிய
என் நண்பனின்
ஆவி

(அப்பதாங்க பிரிக்கமுடியாதுங்க)
அல்லாஹ்வையன்றி ஒன்றுமில்லை அவனே போதுமானவன்.
---------------------------------------------------------------------
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்...)இந்த ஆவியை எந்த மந்திர தந்திரத்தாலும் விரட்டமுடியாது.காரணம் உடலுக்குள் வந்த ஆவி அப்பாவி அல்ல!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

"மொய் விருந்து" தன் சரியா? இல்லேன்ன இந்த ஆட்டத்துக்கு நான் ஜீஜீஜீஜீஜீட்ட்ட்........ ///

ஏன் காக்கா மெய்யுல போய் கால் போட்டுட்டீங்க, விருந்துன்னு சொன்னது "மெய்"தானே :) "மொய் எழுதாம ஏன் போறீங்கன்னு" ஒருத்தர் கேட்டாராம் அதுக்கு அவர் சொன்னது எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதேன்னு சொன்னாராம் :)

வாங்க உங்கள் நேசம் எங்கள் வசமாகட்டும் இன்ஷா அல்லாஹ்...