அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )
ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது அதற்குள் பணத்தை பேங்கில் திருப்பி செலுத்தி விடலாம் என்ற தைரியத்தில் தேவை - தேவையில்லை என்ற கண்ணோட்டம் இல்லாமல் பொருள்களை வாங்கி விடுவோம், ஒரு மாதத்திற்குள் பணத்தை பேங்கில் செலுத்தமுடியாமல் வேறு எதுவும் நமக்கு பிரச்சனைகள் வந்து விட்டால் (வராது என்று அடித்து நம்மால் சொல்ல முடியாது அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று சொல்லத் தெரியா விஞ்ஞான உலகின் அதிசய மனிதர்கள் நாம்) என்ன ஆகும் வட்டி பின் அதன் குட்டி அதன் பேரப்பிள்ளைகள் என்று போய்க்கொண்டே இருக்கும் எதுவரை வக்கீல் நோட்டீஸ் வரை. அரபுநாடுகளில் பரவாயில்லை வக்கீல் நோட்டீஸ் வரை போய் இதற்கு பதில் இல்லை என்றால் சிறையில் அடைத்து விடுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டிலோ ஒவ்வொரு நிறுவனங்களும் ரவுடிகளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு புகுந்து ரகளை செய்வதற்கென்று, இவர்களின் வேலை மிரட்டல் பின் தர்ம அடிதான். சுயமரியாதை இழந்து ஒரு கடன் அட்டை தேவைதானா கால் வயிறே கஞ்சி ஆனாலும் கௌரவமாக வாழக்கூடாதா?????
அமீரகத்தில் பணிபுரியும் சகோதரர் கடன் அட்டை மூலம் கடனாளியாகி உள்ளார். நீ வாங்கிய கடன் எதற்காக என்று கேட்டேன். என் மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை ஊர் வரும்பொழுது நகையோடுதான் வரவேண்டும் என்று சொன்னதால் என்னிடம் பணம் இல்லை அதனால் கடன் அட்டையில் எவ்வளவு எடுக்கலாம் என்ற அனுமதி இருக்கிறதோ அதுவரை எடுத்துவிட்டேன். (இவர் வாங்கிய கடன் அவசியத்திற்கு இல்லை) இப்பொழுது திருப்பி அடைப்பதற்கு (சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்காததால்) சிரமமாக உள்ளது என்று சொன்னார்.
இவர் சொன்ன அடுத்த வார்த்தைதான் ஆச்சரியத்திற்கு உரியதாய் இருந்தது. (யாரையும் ஏமாற்றக்கூடாது என்று நாம் இருப்பதால்) நான் ஊரில் போய் நிரந்தரமாக தங்கலாம் என்று இருக்கிறேன். இந்த கடனையும் அடைக்கமுடியவில்லை அப்படி போனால் போகும் வழியில் எனக்கு எதுவும் பிரச்சனை வருமா? என்று ஆலோசனை கேட்கிறார். போகும் வழியில் பிரச்சனை இல்லாமல் போய் விடுவாய் ஆனால் மஹ்ஷர் பெருவெளியில் இந்த கடனுக்கான கேள்வி உண்டு இதற்காக வல்ல அல்லாஹ் தண்டனை தருவான் என்று சொன்னேன்.
இன்னொரு சகோதரரரிடம் இதுபற்றி சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது கடன் அட்டை பணத்தை நாம் திருப்பி செலுத்த முடியாமல் போனால் வங்கிக்கு எதுவும் நஷ்டம் கிடையாது. நாம் கடன் அட்டை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் நம் பெயரில் இன்ஷூர் செய்யப்படும். நாம் திருப்பி செலுத்தாவிட்டால் வங்கிக்கு நஷ்டம் கிடையாது. வங்கியை நடத்துபவர்கள் ஏமாளியா? என்ன? இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வங்கிகள் பணத்தை பெற்றுக்கொள்ளும் என்று சொன்னார். வங்கிகளும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் எப்படியோ போகட்டும். ஒரு நல்ல மூமின் (இறை நம்பிக்கையாளன்) வங்கியோ, மனிதர்களோ யாரையும் ஏமாற்றலாமா?
இந்த சகோதரர் நான் கடன் அட்டை உபயோகப்படுத்துகிறேன் சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்திக்கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார் எவ்வளவு காலம் சரியாக செலுத்துவீர்கள். சம்பளம் தாமதமானால் இல்லை ஊரில் உள்ள குடும்பத்திற்கு அதிகமான பணத்தேவைகள் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கும்பொழுது எனக்கு ஏற்படவில்லை ஆனால் எதையும் நிச்சயம் சொல்ல முடியாது என்று சொல்கிறார். சரியாக செலுத்த முடியாமலும் போகலாம் என்பது தெரிகிறது... சமாளிக்கிறார்....
02.10.2010 கல்ப் நியூஸ் முதல் பக்க செய்தி : High price of Credit card use - UAE consumers lose millions every year (கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள் - அமீரகத்தின் கார்டுதாரர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து நஷ்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கிறது) வங்கி உங்களுக்கு அனுப்பும் மாதந்திர பில் விவர பட்டியலை நன்கு படித்து பார்த்து உங்களுக்கு எதுவும் தண்டம் போட்டிருக்கிறார்களா? என்று மாதா மாதம் கவனமாக பார்க்கவும் என்றும் அப்படி பார்க்கத்தவறினால் உங்களின் மதிப்பு மிக்க பணத்தை இழக்க நேரிடும் என்ற செய்தியை போட்டிருக்கிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களிடம் இதை தெரிவித்தால் பார்த்துக்கொள்வோம் என்ற அலட்சிய பதில்தான் வருகிறது.
கடன் அட்டை செய்திகளை இத்துடன் முடித்துக்கொண்டு இப்பொழுது தாயகத்திலிருந்து வளைகுடாவுக்கு வந்துள்ள சகோதரர்கள் வாங்கும் கடன்களை ஊரிலிருந்தே ஆரம்பிப்போம். ஊரில் தொழில் செய்ய விருப்பப்பட்டு பணம் இல்லாமல் உறவுக்காரர்களிடம் உதவி கேட்கிறார் கைவிரித்து விட்டார்கள். உள் நாட்டில் தொழில் வைக்க வழியில்லாமல் வெளிநாட்டிற்கு சென்று சம்பாரிக்கலாம் என்ற எண்ணத்தில் உதவி கேட்கும்பொழுது ஊரில் தொழில் வைக்க பணம் கொடுக்க மறுத்தவர்கள் பணமாகவோ, நகையாகவோ ( நகையை நாம் அல்லது அவர்கள் பேங்கில் அடகு வைத்து பணம் வாங்க வேண்டும் ) தருவதற்கு முன் வருகிறார்கள் - இதற்கு என்ன காரணம் வெளிநாடு சென்று விட்டால் நாம் கொடுத்த கடன் உடன் திரும்ப கிடைத்து விடும். ஊரில் தொழில வைக்க கொடுத்தால் திரும்ப கிடைப்பது கடினம் என்பதுதான்.
நம்முடைய கடன் எப்பொழுது ஆரம்பம் ஆகிறது விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே கடன்காரன் என்ற பட்டத்துடன் வளைகுடா நாடுகளில் காலடி எடுத்து வைக்கிறோம். (இப்பொழுது அமெரிக்கா, லண்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா செல்பவர்களையும் கடன்காரர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்). ஆரம்பமே கடன் என்ற பட்டம் இலகுவாக நமக்கு கிடைத்து விடுவதாலும் கடன் என்பது நெருப்பு என்பதை அறியாமலே ஊரில் வாங்கி வந்த கடனை சில நேரங்களில் உடன் திருப்பி கொடுக்க வேண்டிய நிலை வருவதால் தெரிந்தவர்கள், உறவினர்கள் யாரிடமாவதோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நமக்கு ஆரம்ப காலங்களில் கடன் வாங்குவதில் இருந்த ஒருவித தயக்கம் போய் விடுகிறது. பிறகு தைரியமாக கடன் வாங்க ஆரம்பிக்கிறோம். சரி நாம் வாங்கும் கடன்கள் நியாயமான தேவைகளுக்குத்தானா? என்பதும் கேள்விக்குறியே? எதற்காகவெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை பட்டியல் போடலாம் : வீடு கட்ட, பெண்களின் திருமணத்திற்காக மேலும் ஊருக்கு போக முடிவு செய்து விட்டால் துணிமணிகள் முதல் நகைகள், மின்னனு பொருட்கள் வரை வாங்குவதற்காக கடன் வாங்குகிறோம். இப்படி கடன் வாங்கித்தான் இந்தப்பொருள்கள் வாங்க வேண்டுமா? நாம் சிந்திப்பதே இல்லை நாம் வாங்கும் கடனை சரியான நேரத்தில் திருப்பி கொடுத்து விடுவோம் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து வாங்கிய கடனை அடைப்பதற்குள் இரண்டு வருடம் ஓடி விடுகிறது, மீண்டும் ஊர் செல்லும்பொழுது கடன் வாங்குகிறோம். இப்படியே நிறையபேர் வாழ்க்கை தொடர்கிறது. இப்படிப்பட்ட கடன் வாழ்க்கையில் நிம்மதி இருக்குமா?
இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- Alaudeen.S,
9 Responses So Far:
நிம்மதியின் எதிர்ப்பதம் "மேலேச் சொன்ன காரண காரனிகளே" எவ்வித சந்தேகமும் இல்லை.
கடன் கொடுத்தவருக்கும் நிம்மதி இருக்காது கடன் வாங்கியவருக்கும் நிம்மதி இருக்காது.
இப்படி இரு தரப்புக்கும் நிம்மதி இழப்பை ஏற்படுத்தும் .கடன் கொடுப்பதும் வாங்குவதும் கத்தி மேல் நடப்பதற்கு சமம்.
அஸர் தொழுஹைக்குப் பிறகு வாசிக்கப்படும் தஹல்லிம் கேட்கும் திருப்தியைத் தருகிறது நீ சொல்லித்தரும் விதம். (நான் அமல்களின் சிறப்பைச் சொல்லவில்லை) .உடல்நலக்குறைவிற்கிடையேயும் இவ்வார பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி.
வியாழன் மாலை வெளியிலிருந்து லேட்டாக வந்தால் அல்லது வெள்ளி காலையில் எழுந்ததும் வீட்டில் லைட்டை on செய்றோமோ இல்லையோ மடிக்கணினியின் powerபொத்தனைத்தான் அழுத்துறோம் "கடன் வாங்கலாம்ல" என்ன சொல்ல வந்திருக்காங்கன்னு தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஈர்ப்பு.
சஃபீர்காக்க சொல்லித்தான் உடல்நலக்குறைவுச் சிரமத்தையும் பொருப்படுத்தாது சிறப்பான ஆக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள், அல்லாஹ் நம் யாவருக்கும் உடல் நல் ஆரோக்கியத்தை கொடுக்க தூஆச் செய்கிறோம், இன்ஷா அல்லாஹ் !
வாழ்த்துக்கள் சகோதரர் அலாவுதீன். கடன் அட்டையால் ஏற்படும் அவலங்களை தெளிவாக விளக்கம் தந்ததுக்கு.
//சுயமரியாதை இழந்து ஒரு கடன் அட்டை தேவைதானா கால் வயிறே கஞ்சி ஆனாலும் கௌரவமாக வாழக்கூடாதா????? //
கடன் அட்டையை முறையாக பயன் படுத்தாதவர்களுக்கு இந்த ஒரு கேள்வி போதும்.
கடன் கொடுத்தவன் நல்லவனோ கெட்டவனோ அது அவனின் பணம். கடன் அட்டையில் எடுக்கப்பட்ட கடனை அடைக்க முடியாமல் ஊருக்கு சென்றாலும் பல வெளிநாட்டு வங்கிகள் இந்தியவிலும் கடன் பணத்தை வசூலிக்க அரசாங்கத்துடன் அனுமதியுடன் வசூல் வேட்டையாடி வருகிறது.
வங்கியில் பணிபுரியும் சில விஷமிகள் அவர்களிடம் இருக்கும் DATABASEயை வைத்துக்கொண்டு, கடனை திருப்பி செலுத்திய நிம்மதியனவர்களை பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொந்ததரவும் கொடுத்து நிம்மதியிழக்க செய்கிறார்கள் என்பதையும் நாம் அன்றாடம் காணமுடிகிறது.
எது எப்படி இருந்தாலும்.... 'மஹ்ஷர் பெருவெளியில் இந்த கடனுக்கான கேள்வி உண்டு இதற்காக வல்ல அல்லாஹ் தண்டனை தருவான்' என்பது மட்டும் அழிக்க முடியாத உண்மை.
//கடன் எப்பொழுது ஆரம்பம் ஆகிறது விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே கடன்காரன் என்ற பட்டத்துடன் வளைகுடா நாடுகளில் காலடி எடுத்து வைக்கிறோம்.//
வரதட்சனை செலவுகள், பெண்ணுக்கு வீடு செலவுகள், சீர் சீராட்டு செலவுகள், இது போன்ற சமூக அவலங்ளை சமாளிக்க படும் பாட்டால் ஏற்படும் நோய் நொடி செலவுகள் இவை போன்ற அத்தியாவிசயமில்லாத செலவுகளால் நம் சமூக மக்களின் மனதில் தானாக ஏற்பட்டுள்ள 'அதிக பொருளாதார எதிர்ப்பார்ப்பு' என்ற தீராத நோய் தான் இவைகளுக்கு காரணம். இந்த தீராத நோய் குறிப்பாக நம் பெண் மக்களிடமிருந்து குணப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒரே வழி அனைவரிடம் மார்க்க சிந்தனையை அதிகமதிகம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
தொடருங்கள் சகோதரர் அலாவுதீன் அவர்களே.
போகும் வழியில் பிரச்சனை இல்லாமல் போய் விடுவாய் ஆனால் மஹ்ஷர் பெருவெளியில் இந்த கடனுக்கான கேள்வி உண்டு இதற்காக வல்ல அல்லாஹ் தண்டனை தருவான் என்று சொன்னேன்.
கட்டுரைன் எடுத்துக்காட்டுக்கள் மிக அருமை .ஒவ்ஒரு எடுத்துக்காட்டும் சுள் என்று உள்ளது .
தொடரட்டும் உங்களின் சேவை
கிரடிட் கார்டு ஒரு நவீன தூக்கு கயிறு...கடைசியில் கழுத்தை இருக்கும்போதுதான் வலியின் அகோரம் தெரியும். ஒரு மாத வட்டி 1.5% என சொல்லி பிறகு வருடம் 18% என்பது தெரியாமல் மாட்டிவிடும் சமாச்சாரம்.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்பர்வகளுக்கு தேவைப்படலாம்...மற்றபடி சமூக அந்தஸ்த்து இருக்கிற மாதிரி சீன் காட்ட பயன்படும் கார்டு...Thats All ..
Zakir Hussain
அன்புச் சகோதரர்கள் அபுஇபுறாஹிம்,சாகுல் ஹமீது, சபீர், தாஜூதீன், ஜாகிர் ஹூசைன் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
************************* உங்களின் கருத்துக்கள்: அபுஇபுறாஹிம் :நிம்மதியின் எதிர்ப்பதம் "மேலேச் சொன்ன காரண காரனிகளே" எவ்வித சந்தேகமும் இல்லை.
=========
Shahulhameed : இரு தரப்புக்கும் நிம்மதி இழப்பை ஏற்படுத்தும் .கடன் கொடுப்பதும் வாங்குவதும் கத்தி மேல் நடப்பதற்கு சமம்.
=========
sabeer : அஸர் தொழுஹைக்குப் பிறகு வாசிக்கப்படும் தஹல்லிம் கேட்கும் திருப்தியைத் தருகிறது நீ சொல்லித்தரும் விதம். (நான் அமல்களின் சிறப்பைச் சொல்லவில்லை)
=========
அபுஇபுறாஹிம் : "கடன் வாங்கலாம்ல" என்ன சொல்ல வந்திருக்காங்கன்னு தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஈர்ப்பு.அல்லாஹ் நம் யாவருக்கும் உடல் நல் ஆரோக்கியத்தை கொடுக்க தூஆச் செய்கிறோம், இன்ஷா அல்லாஹ் !
=========
தாஜுதீன் : கடன் அட்டையை முறையாக பயன் படுத்தாதவர்களுக்கு இந்த ஒரு கேள்வி போதும். கடன் கொடுத்தவன் நல்லவனோ கெட்டவனோ அது அவனின் பணம். எது எப்படி இருந்தாலும்.... 'மஹ்ஷர் பெருவெளியில் இந்த கடனுக்கான கேள்வி உண்டு இதற்காக வல்ல அல்லாஹ் தண்டனை தருவான்' என்பது மட்டும் அழிக்க முடியாத உண்மை.
=========
தாஜுதீன் : நம் சமூக மக்களின் மனதில் தானாக ஏற்பட்டுள்ள 'அதிக பொருளாதார எதிர்ப்பார்ப்பு' என்ற தீராத நோய் தான் இவைகளுக்கு காரணம். இந்த தீராத நோய் குறிப்பாக நம் பெண் மக்களிடமிருந்து குணப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒரே வழி அனைவரிடம் மார்க்க சிந்தனையை அதிகமதிகம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
=========
Shahulhameed : கட்டுரையின் எடுத்துக்காட்டுக்கள் மிக அருமை. ஒவ்வொரு எடுத்துக்காட்டும் சுள் என்று உள்ளது.
=========
Zakir Hussain : கிரடிட் கார்டு ஒரு நவீன தூக்கு கயிறு... ஒரு மாத வட்டி 1.5% என சொல்லி பிறகு வருடம் 18% என்பது தெரியாமல் மாட்டிவிடும் சமாச்சாரம். சமூக அந்தஸ்த்து இருக்கிற மாதிரி சீன் காட்ட பயன்படும் கார்டு...Thats All
******************************************
தாங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் என்னுடைய நன்றி!
Post a Comment