அலசல் தொடர் :
பத்து.
இந்த தொடரில் இந்த வாரம்
அரசர்கள் வாரம்.
முறை செய்து காப்பாற்றும்
மன்னர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டுமென்று மனுநீதி வரையறுக்கின்றது என்பதை
அலசும் முன்பு சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியது - மனுநீதி வரையறுக்கும்
நான்கு வகை இனத்தில் ஷத்திரிய இனத்தில் பிறந்தவர்தான் அரசராக வரவேண்டுமென்பதாகும்.
இவைகள் மனு நீதியின் ஏழாம் மற்றும் எட்டாம் அத்தியாயங்களில் சொல்லப்படுகின்றன.
2. A Kshatriya, who has received according to the
rule the sacrament prescribed by the Veda must duly protect this whole world.
நாம் இதுவரை பார்த்ததுபோல் மனித
இனத்தை பாகுபாடுபடுத்துபவர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கும் மனு
சாத்திரம் அரச பதவி போன்ற உயர் பதவிகள் வகிப்போர் , ஆள்வோர் கைக்கொள்ளவேண்டிய வழிமுறைகளை வகை கெட்ட
வகைகளில் வரையறுப்பது இந்த நாட்டை பிடித்த துரதிஷ்டம். உலகின் பல்வேறு நாடுகள்
தனது அரசியல் அமைப்பு சட்டத்தை, தனது மக்களை பாகுபடுத்தாமல் சமத்துவ முறையில்
வைத்திருக்கின்றன. சில நாடுகள் அயல் நாடுகளில் இருந்து நெடுங்காலம் முன்பு வந்து தங்கள்
நாட்டுக்கு புலம் பெயர்ந்தோருக்கும் குடியுரிமை வழங்கி சம உரிமையும் கொடுக்கின்றன. ஆனால் மனு நீதிக்கு இதெல்லாம் தலை
பொறுக்காதே. இந்த மண்ணில் பிறந்தவர்களுக்குள்ளேயே பேதம் கற்ப்பிப்பதற்கு கச்சை
கட்டுகிறதே.
ஒரு அரசு அலுவலகத்தில் அல்லது ஏதோ
ஒரு தனிப்பட்ட துறையில் தனிப்பட்டவர்களால் பாகுபாடுகள் கட்டப்படுமென்றால் அந்தச்
செயலை ஓரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளும் சட்டத்திலேயே பாகுபாடு
வைத்து ஒரு சட்டம் இருந்தால் அதை தீவைத்து கொளுத்தவே வேண்டும். இப்படிக்
கொளுத்தப்பட முழுத்தகுதி படைத்தது மனுநீதி சட்டம்.
அரசர் என்பவர் சாதி இனப்பாகுபாடுகளை தூக்கி நிலை நிறுத்தி
காப்பாற்றுவராக இருக்க வேண்டும் என்று மனு கூறுகிறது. இது
அரசர்களாக ஆட்சி செய்பவர்களுடைய முதலாவது தகுதியாகும். ஒரு அரசரின் தலையாய கடமை தனது குடிமக்களை காப்பதோ, நாட்டை நல்லபடி
ஆட்சி செய்வதோ, வளப்படுத்துவதோ, முன்னேற்றுவதோ , அல்ல. மாறாக சாதி என்கிற நரகலை
அந்த அரசர் அல்லது அரசு தனது தலையில்
தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்கிறது. அத்துடன் அந்தந்த சாதி மற்றும்
இனத்துக்குத் தகுந்த பாகுபாடான பொறுப்புகளை தனது மக்களுக்குத் தரவேண்டும் என்பதும்
மனு தரும் விதி. பார்த்தீர்களா? இது விளங்குமா? இதைத்தான் இப்படி சொல்கிறது
35. The king has been created to be the protector of the
castes (varnas) and orders who, all according to their rank, discharge their
several duties.
மேலும்
அரசர்களின் தகுதிகளை பட்டியல் இடும்போது எதிரிகளுக்கு பணியக்கூடாது,
புறமுதுகிடக்கூடாது என்பவனற்றோடு பிராமணர்களை மதிப்புமிக்க இடத்தில் வைத்து தேனும்
திணை மாவும் தரத் தயங்கக்கூடாது என்பதே கூடுதல் தகுதியாகும். இதோ
87-88. A king who, while he protects his people, is defied by
foes, be they equal in strength, or stronger, or weaker, must not shrink from
battle, remembering the duty of Kshatriyas: Not to turn back in battle, to
protect the people, to honor the Brahmins, are the best means for a king to
secure happiness.
ஒரு
அரசர் மற்றொரு நாட்டுடன் போர்செய்து வெற்றி பெற்றால் தனது கடவுளை வணங்குவதோடு
மட்டுமின்றி தனது நாட்டின் பிராமணர்களை கவுரவப்படுத்த வேண்டும்; அவர்களுக்கு நிறைய
சலுகைகள் வழங்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் வாயில் விரலை வைத்து சூப்பிக்கொண்டு
இருக்க வேண்டும். மரம வைத்து தண்ணீர் ஊற்றுபவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன்
இன்னொருத்தன். அந்த இன்னொருத்தன் எவனுமல்ல பிராமணனே. அவனவன் உயிரை பணயம் வைத்து
சண்டை போடுவானாம் அதில் வெற்றியும்
பெறுவானாம். ஆனால் பிராமணனை கவுரவப்படுத்த வேண்டுமாம். இதோ !
201. When he has gained victory, let him duly worship the
gods and honor righteous Brahmins; let him grant exemptions; and let him cause
promises of safety to be proclaimed [to his opponents].
அதுமட்டுமல்ல
நீதிக்குழு என்கிற கட்டுச்சோறு கட்டினால் அதில் கட்டாயம் ஒரு பிராமணப்பூனையும்
அல்லது ஒரு பெருச்சாளியையும் வைத்துக் கட்டவேண்டும் என்கிறது மனுவின் சட்டம். வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் குழு
அமைத்தால் அதில் கண்டிப்பாக பிராமணர்கள் இடம் பெற்று இருக்க வேண்டுமாம். எந்த
சூழ்நிலையிலும் ஒரு தாழ்த்தப்பட்டவன் நீதிபதிகளுள் ஒருவனாக ஆகமுடியாது.
A king, desirous of investigating law cases, must enter his
court of justice, preserving a dignified demeanor, together with Brahmins and
with experienced councilors.
அரசர்கள்
நீதி வழங்குவதிலும் , தண்டனை தருவதிலும் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மனு நீதியால்
வரையறுக்கப்படுபவை அப்பட்டமான பாகுபாடுகள். மாமியார் ஆக்கினால் மட்டன் கறி;
மருமகள் ஆக்கினால் மீன் கறி. ( மண்சட்டி பொன் சட்டியையே எவ்வளவு நாள் சொல்வது)
என்று ஒரே வகையான குற்றத்துக்கு இனத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கச் சொல்கிறது
மனு நீதி. இவைகளைப் படிக்கும் ரோஷமுள்ள
எவருக்கும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிடும்.
ஒரு
குழப்பமான வழக்கு அரசரின் முன் வந்தால்
அதில் மாறுபாடுகளான சாட்சிகள் இருக்குமானால் ஒரு பிராமணன் சொல்வதையே உண்மை என்று
ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிராமணன் மட்டுமே மனிதருக்குப் பிறந்தவன்
மற்றவர்கள் மாட்டுக்குப் பிறந்தவர்கள் இல்லையா?
Upon hearing contradictory testimony from
witnesses, the king is advised at Manu 8.73 to rely on what the majority
of witnesses say, or else the testimony of witnesses of superior qualities; if
discrepancy persists, the testimony of Brahmins is to be relied upon.[
ஒரு தாழ்ந்த சாதிக்காரன் மற்ற மூன்று உயர்
சாதிக்காரர்களை தூஷனையாக அவமானித்துப் பேசினால் அந்த தாழ்ந்த சாதிக்காரனது
உதடுகளை வெட்டிவிட அரசு உத்தரவிடவேண்டும்.
279. With whatever lip a man of a low caste does hurt to a
man of the three highest castes, even that lip shall be cut off.
ஒரு
உயர்ந்த சாதிக்காரனோடு அதே இடத்தில் ஒரு தாழ்ந்த சாதிக்காரன் உட்கார முயற்சித்தால்
தாழ்ந்த சாதிக்காரனுக்கு இடுப்பில் சூடு போடவேண்டும் அல்லது அவன் உட்காரப்பயன்படுத்தும்
உடலின் உறுப்பை ( இடக்கரடக்கல்) வெட்டிவிட வேண்டும்.
281. A low-caste man who tries to place himself on the same
seat with a man of a high caste shall be branded on his hip and be banished, or
the king shall cause his buttock to be gashed.
அடங்கா
கோபத்துடன் உயர் சாதியினர் மேல் காரி உமிழும் ஒருவனின் இரு உதடுகளும்
வெட்டப்படவேண்டும்; சிறு நீர் கழித்தால் ஆண் குறி வெட்டப்படவேண்டும்; உடலில்
இருந்து துர்நாற்றம் வீசும் காற்றை ( இதற்குமேல் நாகரிகமாக எனக்கு மொழி பெயர்க்க
தெரியவில்ல – அது அப்படி நாறுகிறது) அவன் மேல் விட்டால் விட்டவனின் மலம கழிக்கும் மூலத்தை
வெட்ட வேண்டும்.
282. If out of arrogance he spits on a superior, the king
shall cause both his lips to be cut off; if he urinates on him, the penis; if
he breaks wind against him, the anus.
ஒரு
பிராமணருக்கு சொந்தமான அல்லது அவனது பாதுகாப்பில் இருக்கும் தானமாக வழங்கப்பட்ட
பசுவை திருடும் தாழ்த்தப்பட்டவனின் இரண்டு கால்களின் பாதங்களும் அரைவாசி வெட்டப்படவேண்டும்.
325.
For stealing
cows belonging to Brahmins, piercing the nostrils of a barren cow, and for
stealing other cattle belonging to Brahmins, the offender shall forthwith lose
half his feet.
பிற
பெண்களை பிராமணர் மட்டும் தொட்டுக்கலாம்; பட்டுக்கலாம்; இட்டுக்கலாம்; எடுத்துக்கலாம்.
மற்றவர்கள் தொட்டாலும், பட்டாலும், இட்டாலும், எடுத்தாலும் மரண தண்டனை அரசால்
வழங்கப்படவேண்டும்.
359. A man who is not a Brahmin ought to suffer death for
adultery (samgrahana; for the wives of all the four castes must always be
carefully guarded.
கீழே
உள்ள 361, 362 ஆகிய இரண்டு மனுவின் சரத்துக்களை மொழி பெயர்க்க
எனக்கு உள்ளம் கூசுகிறது . தெரிந்தவர்கள் படித்துக்கொள்ளுங்கள் அல்லது வேறு
யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள். காரணம் கட்டிய மனைவியை அடுத்தவருக்கு தானே
அனுப்பிக்கொடுப்பதற்கான மனு நீதி தரும் அனுமதி அது.
.
361. Let no man converse with the wives of others after he
has been forbidden to do so; but he who converses with them in spite of a
prohibition shall be fined one suvarna.
362. This rule does not apply to the wives of actors and
singers, nor of those who live on the intrigues of their own wives; for such
men send their wives to others or, concealing themselves, allow them to hold
criminal intercourse.
இதற்குமேல்
சொல்ல வேறு என்ன இருக்கிறது? இந்த பாவிகள் படைத்துவைத்த சாத்திரங்கள் பற்றி?
374 முதல்
379
வரை குறிப்பிட்டுள்ள அரசரும் நீதித்துறையும் கடைப்பிடிக்கவேண்டுமென்ற வரைமுறைகளை ஏற்கனவே
வேறு சில அத்தியாங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அது ஒன்றுமில்லை. நொங்கு திருடியவன் ஓடிவிட்டான் நோண்டித்தின்றவன் மாட்டிக்கிட்டான் என்பதே. அதாவது உயர் சாதிப்
பெண்ணுடன் உறவு கொள்ளும் தாழ்ந்த சாதி ஆண்மகனின் தலை கொய்யப்படவேண்டும் ஆனால் ஒரு
தாழ்ந்த சாதி பெண்ணுடன் பலவந்தமாக உறவுகொள்ளும் உயர் சாதி ஆண்களுக்கு பணம் அபராதம்
– அதுவும் குலத்துக்கு ஏற்றபடி விதித்தால் போதும் என்பதே.
374. A Shudra who has intercourse with a woman of a
twice-born caste (varna), guarded or unguarded, shall be punished in the following
manner: if she was unguarded, he loses the offending part and all his property;
if she was guarded, everything even his life.
375. For intercourse with a guarded Brahmin, a Vaisya
shall forfeit all his property after imprisonment for a year; a Kshatriya shall
be fined one thousand panas and be shaved with the urine of an ass.
376. If a Vaisya or a Kshatriya has connection with an
unguarded Brahmin, let the king fine the Vaisya five hundred panas and the
Kshatriya one thousand.
377. But even these two, if they offend with a Brahmini
not only guarded but the wife of an eminent man, shall be punished like a
Shudra or be burnt in a fire of dry grass
378. A Brahmin who carnally knows a guarded Brahmini against
her will shall be fined one thousand panas; but he shall be made to pay five
hundred if he had connection with a willing one.
379. Tonsure of the head is ordained for a Brahmin instead
of capital punishment; but men of other castes shall suffer capital punishment.
இறுதியாக
கீழ்க்கண்ட இரண்டு மனுநீதியின் ஷரத்துக்களை சொல்லிவிட்டு குளிக்கப் போகிறேன்.
இவைகளை தொட்ட நாற்றம் நீங்க இருமுறை சோப்புப் போட்டு குளிக்கப் போகிறேன்.
அரசர்கள்
ஒரு காலமும் பிராமணர்களை அவர்கள் எந்த குற்றம் செய்து இருந்தாலும் கொலை தண்டனைக்கு
உட்படுத்தக் கூடாது. அவ்விதம் கொடும குற்றம் செய்த பிராமணர்களை குற்றத்திலிருந்து
விடுவித்து ,அவரது சொத்துக்களை திருப்பிக்கொடுத்து , உடம்பில் எவ்வித கீறல் காயம்
இல்லாமல் (பல்லக்கில் ஏற்றியா) அனுப்பி
வைக்க வேண்டும். இந்த உலகில் பிராமணர்களை கொலை தண்டனை விதித்து தண்டிப்பதை விட பெரிய
குற்றம் எதுவுமில்லை. ஒரு அரசர், ஒரு
பிராமணரை கொல்வதாக மனத்தால் கூட நினைக்க
கூடாது.
380. Let the king never slay a Brahmin, though the Brahmin
has committed all possible crimes; let the king banish such an offender,
leaving all his property to him and his body unhurt.
381. No greater crime is known on earth than slaying a
Brahmin; a king, therefore, must not even conceive in his mind the thought of
killing a Brahmin.
இதுதான்
மனுநீதி. இதற்குத்தான் பரிவட்டம் கட்டி,
ஆலவட்டம் சுற்றி, பன்னீர் தெளித்து , போற்றி பாடிக்கொண்டிருக்கின்றனர்
புத்தியற்றோர். டாக்டர் அம்பேத்காரால்
தீமூட்டி எரிக்கப்பட்ட மனு நீதி ,
பெரியாரால் காரித்துப்பப்பட்ட மனு நீதி
இன்றும் வழிபாட்டுத்தலங்களில் விளங்காத மொழிகளில் முழங்கப்படுகிறது. அவைகள்
தம்மை இழிவு படுத்தும் வாசகங்கள் என்று கூட அறியாத வகையற்றோர், கை கட்டி
வாய்பொத்தி , காதால் கேட்டு, காசுகளும் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். இவைகளை
எடுத்துச் சொல்லும் இயக்கம் இன்னும் தேவை- இந்த வகையற்றோரை நல்ல வழிகாட்டி
அழைத்துவர உழைப்புத்தேவை உடனே.
இன்னும் நிறுத்தவில்லை
நான்...
இபுராஹீம் அன்சாரி
13 Responses So Far:
//பிராமணர்களை மதிப்புமிக்க இடத்தில் வைத்து தேனும் திணை மாவும் தரத் தயங்கக்கூடாது என்பதே கூடுதல் தகுதியாகும். //
பிராமணர்கள் கறியும் கோழியும் சாப்பிடத்தால் தேனும் திணை மாவுடன் நிறுத்திக்கொண்டார்கள்
பதிவு நெடுக குத்தலும், சாட்டையும் போட்டி போடுகின்றன !
தெள்ளத் தெளிவான மார்க்கம் எல்லோரு கண்முன்னே இருக்கிறது... !
திறந்த மனதோடு ஒவ்வொரு இஸ்லாமியனும் இருக்கிறான்... கைகோர்த்து அனைத்துக் கொள்ள...
நீங்கள் சாதியில் உயர்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும், உங்களோடு வீதியில் ஒன்றாக இருக்க தகுதியானவன் இஸ்லாமியனே ! அவன் போற்றும் மார்க்கம் அது இட்டுச் செல்லும் இடம் சொர்க்கமே...!
மனித நேயம் போற்றுவோம்...
இவ்வளவு கொடுமைகளையும் தாங்கி கொண்டு
சாமி சாய் என்று மரியாதை கொடுக்கும்
தாழ்த்த பட்டவர்களை என்னவென்று சொல்வது
அறியாத உண்மைகள் தொடரட்டும்!
விளங்காத மொழி அது தன்னை தாழ்த்தும், வீழ்த்தும் வாசகம் என்று உணரும் காலம் வரனும். அப்போது இந்த நீதி நிச்சயம் வீழும். மனிதனை மனிதனாகவே மதிக்கும் மதம் எது என அவர்கள் தேடனும்.இஸ்லாம் ஒன்றே அது என அப்போது விளங்கனும். இன்சா அல்லாஹ் இதில் உங்கள் முயற்சியும் கைகூடனும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பினிய மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு.
காக்கா இந்த தொடர் மிக முக்கியமானது என்று கருதுகிறேன்...
ஆட்சியாளனும் சட்டமும் இன்றைய காலத்திலும் எப்படியெல்லாம் உயர்சாதி வர்க்கத்தின் கையிலிருந்து மற்ற சாதியை ஆட்டிப் படைக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம், இதற்கு இவர்களின் எழுதப்பட்ட மனுநீதி(நாற்றம்) தான் காரணம் என்பது நிறைய பேர்களுக்கு தெரிவதில்லை..
அவாள் படிப்பில், அறிவில் சிறந்தவாள் அதான் உயர் பதவியில் இருக்காள் என்று பாமரர்களை எண்ண வைத்து இன்னும் ஏமாற்றி வருவது என்னவோ மறுக்க முடியாத உண்மை...
இன்னும் எழுதுங்கள்... நிறைய கேட்கப்படாத சந்தேகங்கள் தெளிவாகும்...
//379. Tonsure of the head is ordained for a Brahmin instead of capital punishment; but men of other castes shall suffer capital punishment.//
இதை நம்பியவர் நீதித்துறையில் இருந்தால் எப்படி சாமானியனுக்கு நீதி கிடைக்கும்... படிக்கும் போது, கோபத்தைவிட வேதனையே அதிகம் எழுகிறது...
இதனால் என்னவோ முஸ்லீம் சிறைவாசிகளின் எண்ணிக்கை நம்முடைய மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகமாகவே உயர்த்தப்பட்டுள்ளதோ...
//இறுதியாக கீழ்க்கண்ட இரண்டு மனுநீதியின் ஷரத்துக்களை சொல்லிவிட்டு குளிக்கப் போகிறேன். இவைகளை தொட்ட நாற்றம் நீங்க இருமுறை சோப்புப் போட்டு குளிக்கப் போகிறேன்.//
காக்கா... இந்த பதிவை படிப்பவர்களும் சோப்பு போட்டு குளிக்க வேண்டுமா? :-(
//காக்கா... இந்த பதிவை படிப்பவர்களும் சோப்பு போட்டு குளிக்க வேண்டுமா?//
தம்பி தாஜுதீன்! எப்படியெல்லாம் தொந்தரவு வருகிறது என்று பாருங்கள். முடிந்தால் தளத்தில் படிப்பவர்கள் ஊர் பெயர் விபரம் தெரியவந்தால் அ.நி. சார்பாக ஆளுக்கொரு ஆரோக்கிய வாழ்வை காப்பது லைப் பாய் என்று பார்சல் அனுப்பிவிடலாமா?
சோப்பு போட்டு குளிப்பது புறன்தூய்மை தரலாம் . நாம் வேண்டுவது அகந்தூய்மை. அதை இஸ்லாமே தரமுடியும்.
//இதை நம்பியவர் நீதித்துறையில் இருந்தால் எப்படி சாமானியனுக்கு நீதி கிடைக்கும்... படிக்கும் போது, கோபத்தைவிட வேதனையே அதிகம் எழுகிறது... //
அண்மைக்கால உதாரணம் - ஆட்சியாளர்கள் செய்தது- நீதிமன்றங்கள் இழைத்த பிழைகள் இவ்வாறு எண்ண தோன்றுகின்றன.
ZION பள்ளி மாணவி பஸ்சின் ஓட்டையில் விழுந்து உயிர் இழந்தால் அந்த பள்ளியின் நிர்வாகி பிணையில் வர முடியாத வழக்கில் உள்ளே களி தின்கிறார்.
JPR கல்லூரி கட்டிடம் இடிந்ததற்காக நிறுவனர் உள்ளே பிடித்து போடப்பட்டார்.
ஆனால் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் இறந்தது பத்மா ஷேஷாத்ரி பள்ளி . அதன் நிறுவனர் MRS. YGP. அண்மையில் இந்த அரசால் வாழ்நாள் சாதனையாளர் விருது அவாளுக்கு வழங்கப்பட்டது . இங்கு மனுநீதியின் ஷரத்துக்கள் பின்பற்றப்பட்டன. நான் அவ்வளவுதான் சொல்வேன்.
மனுநீதி மனித குலத்துக்கு எதிரி...அதை ஆதாரத்துடன் சிதறி அடிக்கும் உங்கள் எழுத்துத்திறமை வியக்கவைக்கின்றது...அல்லாஹ் உங்கள் பூரண நலத்தை கொடுக்க துவாச்செய்கின்றோம்
இந்தத் தொடரின் தொடக்கத்தில் ஏதோ சின்னச்சின்ன கோல்மால் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்காக மாறாக பூதம் கிளம்பியதுபோல் இருக்கிறது ஒவ்வொரு அத்தியாயமும்
கோபமும், நக்கலுமாய் கலங்கடிக்கின்றது ஒவ்வரு சாட்டையும் !
புரிந்துக்கொள்ள வேண்டியவர்கள் புரிந்து ,தெளிந்தால் சரி !!!!!!!!!!!
மற்றவர்களின் உடல் உறுப்புகளை வெட்டச்சொல்லும் விதியை [ மனு [அ] நீதி ] உருவாக்கிய இனம் எப்படி சைவம் தான் சிறந்தது என்று சொல்கிறது. ?
என் முகநூலுக்கு வந்த செய்தி:
உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். ...
இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?
மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...
இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.
அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? ..... மறைந்த மகா பெரியவாளின் அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார்
Post a Comment