அதிரையை ஆராதித்த மழை, அட! மழையே என்று அமீரக சூட்டில் இருந்து கொண்டு அன்னாந்து பார்க்கும் அதிரையர்கள், வாராதோ இம்மழை என்று ஏங்க வைத்திருக்கிறது நேற்று (29-08-2012) மாலை 07:40க்கு ஆரம்பித்தை அழகு மழை அதிரையை குளிர வைக்க பெய்த மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்திருக்கிறது.
இறைவனின் அருட்கொடை, இல்லங்கள் இருக்கும் தெருக்களில் இதமான குளிரூட்டியிருக்கிறது.
மழையே மழையே
அசையாமல் நில்லு
மதி மயக்கும்
மாலைநேர மழையே
உன்னை படமெடுத்து
ஊராருக்கு காட்டத்தான்
அமீரகம் வருவாயா ?
அடிக்கடி மின்சாரம்
அனையாமல் அரவணைப்போம் ! :)
அதிரை மழையை படமெடுக்க மின்னல் உதவியது பளிச்சென்று, கிளிக்கென்று சொடுக்கியது விரல்கள்.
இரவு எட்டு மணிவாக்கில் மின்னல் கொடுத்த வெளிச்சம் அதிகாலை எட்டு மணிபோன்ற தோற்றம்.
அமைதியோடு அழகையும் ஆளுமை செய்வதிலும் அலாதி இன்பமே !
அதிரைநிருபர் குழு
11 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரையில் அழகு மழையிலும்.மின்சாரம் தடை இல்லாததால் இருட்டான பகுதியையும் பளிச்சிட செய்த மின்னொளி
நமக்கு கிடைத்த கானொளி.
நல்ல வேலை மழை பொழிவுக்கும் STAY வாங்காமல் இருந்தார்களே !
ஈரமான (அழகான) காட்சிகள்!
அதிரை மழை போன்று அமீரகத்திற்கு கிடக்காவிட்டாலும் எங்களுக்கு கிடைத்தது அதே நேரத்தில்!
அருமையான க்ளிக், மின்னலில் மின்னும் ரோடு ஜொலிக்குது... (இதை க்ளிக்க்யவருக்கு என் பாராட்டுக்கள்)
ஏங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க வைத்த ஒளி/ஓலிப்பேழைகள்,புகைப்படங்கள்
மழையே அமீரகத்துக்கு வா ஆனால் இரண்டு நாள் கழித்து...கவிக்காக்கா ஜூரத்தால் அவதிப்படுகிறார்கள் அல்லவா
அஸ்ஸலாமு அலைக்கும்.
வாவன்னா சார் அவர்கள் என்னைப் பார்க்க விரும்புவதாக தம்பி எல். எம். எஸ் மற்றும் தம்பி தாஜுதீன் அவர்களிடமிருந்து தகவல் வந்தது. இன்று அசருக்குப் பிறகு அவர்களை அவர்கள் வீட்டில் சென்று சந்திக்க தம்பி அபூபக்கர் அவர்களிடம் கூறி அவர்களின் வருகைக்காக காத்திருந்தேன். அழைப்பு மணி ஒலி கேட்டு கதவு திறந்தால் வாசலில்
மரியாதைக்குரிய ஜனாப். வாவன்னா சார் அவர்களே நின்று இருந்தார்கள். என்ன ஒரு பெருமகன். "வாவ்" வன்னா சார் . அன்பே காரணம். அத்துடன் இயல்பான அடக்கம்.
பல நினைவுகளை நகைச்சுவைகளுடன் பரிமாறிய பின் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி அ.நி.யில் வரும் ஆக்கங்களுக்கு வாவன்னா சார் அவர்களின் கருத்துப் பின்னூட்டத்தை கேட்டு நான் இடுவேன். இன்ஷா அல்லாஹ்.
இந்த ஆக்கத்துக்கு வாவன்னா சாரின் கமெண்ட்:
"அமீரக பண மழையே அதிரைக்கு வருவாயா?"
இரவில்
மழை
பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்!
உரவோடு பேசும்
உலகத்தார் போல
இரவோடு பேசும்
மழை!
எத்துணை முறை
மின்னல் உளி
இருளைப் பிளந்தாலும்
மீண்டும் மீண்டும்
இருகிப்போகும் இருட்டு
ஈர இருட்டு!
துளி! துளி!! மழைத்துளி!!
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்
மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்
இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்
அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம்
முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே
சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்
பாறை மேலே படரும் சந்தம்
உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்
பயிர்களும் மழையை பசியா(ற) உண்ணும்
வானம் அழுது வடித்து வழியும்
ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்
நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து நிறைக்கும்
நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்
மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை
எண்ணி மகிழ்வதால் இனிமை வீசுமே
பஞ்சமும் நாட்டில் பரந்துளப் பசியும்
அஞ்சியோர் வாழ்வில் அல்லலும் மசியும்
ஆற்றின் ஓட்டம் அழகுற நண்பன்
சேற்றில் நாட்டும் செயலில் வம்பன்
கடலின் நீரால் கருவாய்ப் பிறந்தான்
திடலின் சேறால் திருவாய்ச் சிறந்தான்
பிறந்த கடலில் பின்னர் மீட்சி
சிறந்த வாழ்வியல் செப்பும் சுழற்சி
//மரியாதைக்குரிய ஜனாப். வாவன்னா சார் அவர்களே நின்று இருந்தார்கள். என்ன ஒரு பெருமகன். "வாவ்" வன்னா சார் . அன்பே காரணம். அத்துடன் இயல்பான அடக்கம்.//
வாவ். வாவ்..உமர்தம்பியின் அண்ணா
வாவன்னா சார்..வாழ்க்கையில் மறப்பேனா
வார்த்த ஓவியமெலாம் உங்கள் பேனா...
வாக்கிய அமைப்புின் இலக்கணம்
வார்த்தெடுத்துக் கற்பித்தவர்!
வாசல்தேடி வந்து மதிக்கும்
வாஞ்சை மிகுப் பண்பாளர்!
வாய்த்த வரமென்பேன் எமக்கு
வாத்தியார் ஓவியத்தில் தானா?
வாய்க்கும் வாப்பை நழுவாமல்
வாய்மை உளத்தூய்மையுடன்
வார்த்தைகளின் இலக்கணம்
வார்த்தெடுத்து ஊட்டியவர்!
வாழ்க்கையின் அசைவுகள் சொல்லும்
வாவன்னா சாரின் கற்பித்தல் வெல்லும்!
குறிப்பு: மூத்த சகோ.இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு ஏற்பட்டது போன்ற ஒரு நெகிழ்ச்சியான- வியப்பான ஒரு செய்தி:
சென்ற விடுப்பில் ஊரில் இருந்த போது அலியார் சார், ஹாஜாமுகைதீன் சார், வாவன்னா சார் மற்றும் இரமதாஸ் சார் ஆகியோரைக் கண்டு உரையாடும் பேறு பெற்றேன்.
வாவன்னா சார் என்மீது வைத்துள்ள பேரன்பு, என்னைப்பற்றி ஊடகத்தில் அவர்கள் புரிந்து வைத்துள்ள விடயங்கள் யாவும் அவர்கள் பேசப் பேச அடியேன் வியப்பில் ஆழ்ந்து விட்டேன்!
மழை நம்மை தேடி வராது நாம் தான் மழையை தேடிபோகனும். அமீரகத்திற்கு மழை வருகிறது என்றால் மிக ஆச்சரியத்துடனும்,வியப்புடனும் பார்க்கணும் அதிரை நகரமே ஜொலிக்கிறது மழையிலும், இருட்டிலும்.
வானக்காதலன் பூமி காதலிக்கு கொடுக்கும் முத்தம் மழை...
Post a Comment