அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரிலும் உணர்ந்தும், உணராமலும் நமது சமுதாயத்தவரால் கடைபிடிக்கும் தீமையைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
புகைப்பழக்கம்:
சிகெரட் (தூய தமிழில் இதற்கு பெயர் : வெண்சுருட்டாம்), பீடி, சுருட்டு, பொடி எதுவாகவும் இருக்கலாம். படிக்கும் காலங்களிலேயே இதை நமக்கு கற்றுத்தருபவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் சிகெரட்டை பார்த்திராத இளைஞர்களையும் மச்சான், மாப்பிள்ளை என்று அழைத்து ஆண் மகன் என்றால் இதையெல்லாம் கற்றுக்கொள்ளாமல் இந்த உலகில் என்ன சாதிக்க போகிறாய் என்ற டயலாக் பேசி நல்ல பிள்ளையாய் இருக்கும் இளைஞர்களை படுபாதாளத்தில் தள்ளி விடுகிறார்கள். சும்மா ஒரு தம் அடிடா மச்சான் என்று நமது உடலுக்கு சத்துள்ள மாத்திரைகளை சாப்பிட சொல்வது போல் இந்த விஷத்திற்கு அடிமையாக்கி விடுகிறார்கள்.
ஆரம்ப காலங்களில் சிகெரட் பழக்கம் ஆண்மைக்கு அடையாளமாக இருந்தது. சாப்பிட்டவுடன் புகைத்தால் உண்ட உணவு செரிக்கும் என்றார்கள். ஏதாவது டென்ஷனா காப்பி அல்லது டீ ஒரு கப், ஒரு சிகெரட் ஒன்று பற்ற வைத்து ரூமில் அமர்ந்து கொண்டு தங்களைச் சுற்றி வளையம் வளையமாக புகைகளை விட்டு புகைக்கு நடுவில் அமர்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பார்களாம் சிந்தனைவாதிகள்??????
சிகெரட்டால் அவதிப்படும் குடும்பத்தவர்கள்:
கணவன், தந்தை, மகன் என்று புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். இவர்களின் புகைபழக்கத்தால் மனைவி, பிள்ளைகள் குடும்பத்தவர்களின் மனவேதனைக்கு ஆளாகிறார்கள். இவர்களை திருத்த வழியில்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள்.
மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவுதான் அறிவுரை சொன்னாலும் புகைக்கு அடிமையானவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவர்கள் விடும் புகை இவர்கள் குடலுக்குள் சென்று வெளிவரும்பொழுது வெளியில் விடும் புகையை விட மிக கெட்ட வாடையாக வெளிவருகிறது.
எனது அலுவலகத்தில் மேலாளருக்கும் எனக்கும் ஒரு தடவை சரியான சண்டை. நான் சில வருடங்கள் இதன் விபரீதங்களைப்பற்றி தெளிவாகவும் படங்கள் மூலமும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒருநாள் நான் அலுவலகத்தில் இருப்பதா? அல்லது நீ இருப்பதா ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும், உன்னால், நீ விடும் புகையால் நான் சிரமப்படுகிறேன். வெளியே சென்று புகைத்து வா என்றால், நான் மேலாளர் அப்படித்தான் இருப்பேன் என்றார். உன்னை விட பெரிய டைரக்டர் எல்லாம் வெளியேதான் செல்கிறார்கள். நீயும் வெளியில்தான் செல்ல வேண்டும் என்றேன். பிறகு அலுவலகம் வந்தால் அவர் அறையை மட்டும் மூடிக்கொள்வார். இருந்தாலும் செண்டரல் ஏசி மூலம் என் அறைக்கும் வந்து விடும். வல்ல அல்லாஹ்விடம் இந்த புகையின் தீங்கை விட்டு தினமும் பாதுகாவல் தேடி வருகிறேன். (எதிர்த்து வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை).
மேலாளர் ஒருநாள் ஆபிஸ்பாயிடம் சிகெரட் வாங்கி வரும்படி சொன்னார். மேலாளரின் பத்து வயது மகன் ஆபிஸ்பாயிடம் என் தந்தை இரவு முழுவதும் இருமி மிக கஷ்டப்படுகிறார். நீ போகாதே என்று பணத்தை பறித்து விட்டான். இதைப்பார்த்த மேலாளர் மகனை ஷைத்தான் ஷைத்தான் என்று திட்டி விட்டு ஆபிஸ்பாய் நீ போய் சிகெரட் வாங்கி வா என்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த சிகெரட்டை குடும்பம் முழுவதும் வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நோன்பு காலங்களில்:
நமது சமுதாய சகோதரர்களும், பெரியவர்களும் நோன்பு காலங்களில் நோன்பு திறந்தவுடன் அவர்கள் பற்ற வைப்பது சிகெரட்டைத்தான். இந்த சிகெரட்டில் விட்டமின் ஏ,பி,இ? ஏதாவது இருக்கா என்று தெரியவில்லை.
இவர்கள் எப்பொழுது நோன்பு திறப்போம் என்று பரபரப்பாக இருப்பார்கள். திறந்தவுடன் இந்த விஷவாயுவை குடலுக்குள் அனுப்பிவிட்டுத்தான் அடுத்த வேளை பார்ப்பார்கள். நான் சில வருடத்திற்கு முன்பு நோன்பு திறந்து விட்டு பள்ளிக்கு மஃரிபு தொழ சென்றேன். பள்ளிக்கு வெளியில் தெரிந்த சகோதரரின் உறவுக்காரர் ஒருவர் நோன்பு திறந்தவுடன் இந்த விஷ (சிகெரட்) வாயுவை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்.
அவரை தனியே அழைத்து தம்பி இப்படி நோன்பு திறந்தவுடன் சிகெரட்டின் புகையை வயிற்றுக்குள் அனுப்பிக்கொண்டு இருக்கிறாயே! இது நல்லதல்ல நாள்முழுவதும் வெறும் குடலாக இருந்த இந்த வயிற்றில் இது சென்றால் உன் வயிற்றுக்கு கெடுதல் ஆகிவிடுமே என்று அறிவுரை சொன்னேன். எதுவும் பதில் சொல்லவில்லை தலையை மட்டும் ஆட்டினார். பிறகு இன்னொரு சகோதரரிடம் இவர் யார் எனக்கு நாலுபேரை வைத்துக்கொண்டு அறிவுரை (நான் தனியாக அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொன்னேன்) சொல்ல நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன். அதனால் இவரின் (என்னுடைய) முகத்தில் (அறிவுரை சொன்ன காரணத்தினால்) விழிக்கமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி வெளியில் எங்காவது என்னைப் பார்த்தால் மறைந்து கொள்வார். ஒரு தீமையை தடுக்க அறிவுரை சொன்னதால் ஓடி ஒளிகிறார்.
சிகெரட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்:
சிகெரட்டில் உள்ள நிகோட்டின் கார்பன் மோனாக்சைட் போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம், பசியின்மை, கண்பார்வை குறைபாடு, சளித்தொல்லை, களைப்பு, புற்றுநோய்கள் இதுபோன்ற நிறைய நோய்கள் உடலுக்கு ஏற்படுகிறது.
மது, போதை பழக்கம்:
மதுவும், போதையும் வாழ்க்கையை சீரழிக்கும் ஆயுதங்கள். தெரிந்தும் தெரியாமலும் இளைஞர்களும், பெரியவர்களும் இதற்கு அடிமையாகி தள்ளாடிக் கொண்டு , இதனால் ஏற்படும் கேவலங்களை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இரவு நேரங்களில் காலி மனைகள் எல்லாம் டாஸ்மாக் பார்களாகி விடுகிறது. இதற்கு அடிமையாகி விட்டவர்கள் மீண்டு வருவதற்கு சிரமமப்படுகிறார்கள்.
சிகெரட்டால் அவதிப்படும் குடும்பங்கள் இந்த மதுப்பழக்கதிற்கு அடிமையான ஆண்களாலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிகெரட்டினாலும், மதுவினாலும் ஏற்படும் உடல் நோய்களைப்பற்றி நீங்கள் அதிகம் படித்திருப்பீர்கள்.
வீண் விரயம்:
உன்னுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்:7:31)
சிகெரட்டிலும், மதுவிலும் வீண் விரயம் அதிகமாகவே இருக்கிறது. வீண் விரயம் செய்வர்களை வல்ல அல்லாஹ் விரும்புவதில்லை என்கிறான்.
...உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் : 2:195) இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.(அல்குர்ஆன் : 7:157)
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் உங்கள் கைகளால் உங்களுக்கு தீங்கிழைத்து கொள்ள வேண்டாம் என்கிறான். மேலும் தீங்களிக்காத நல்லவற்றையே உண்ண வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.
வானவர்களுக்கு தொல்லை தரும் வாடை:
'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி : 855. )
ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: 'வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய செடியைச் சாப்பிட்டவர் நம் பள்ளியின் பக்கம் நெருங்கவே வேண்டாம். மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (முஸ்லிம்).
நல்ல உணவுப்பொருளையே வாடை இருப்பதால் வாடை போகும்வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றால் புகை வாடை அருகில் இருப்பவரை எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கும். தொழும் பள்ளியில் இந்த வாடையுடன் வந்து தொழுகையாளிகளுக்கு தொல்லை தருவதோடு மலக்குகளுக்கும் தொல்லை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சிகெரட், மது இவைகளை புகைப்பது, குடிப்பது, விற்பது எல்லாமே ஹராமாகவே இருக்கிறது. நிறையபேர் சிகெரட் ஹராம் இல்லை என்று வாதாடி புகைத்து கொண்டு இருக்கிறார்கள். புகை ஹராம் இல்லை என்று நினைப்பதால் புகைத்து விட்டு கெட்ட வாடையுடன் பள்ளிக்கு வருகிறார்கள்.
சகோதரர்களே, பெரியவர்களே, இளைஞர்களே! மது, சிகெரட் இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள். மலக்குகள் சிரமப்பட்டால் அதனால் நமக்கு நன்மை ஏற்படாது.
மூமின்களுக்கு தன்னால் எந்த சிரமத்தையும் தராதவரே சிறந்த மூமின் என்பது நபிமொழி.
...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்:5:2)
நன்மையை அதிகம் பெற்றுத்தரும் மாதமான ரமலானில் நிய்யத் வைத்து தனக்கும், பிறருக்கும் தீமையை ஏற்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் தண்டனையை பெற்றுத்தரும் சிகெரட், மதுவிலிருந்து வெளியேற இந்த இரண்டிற்கும் அடிமையாகி கிடப்பவர்கள் உறுதி மொழி எடுத்தால் இம்மையிலும், மறுமையிலும் வல்ல அல்லாஹ்விடம் இருந்து சிறந்த நன்மையை பெற்றுக்கொள்ளலாம். தூய்மையான மக்களாக வாழ வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்.. .
S.அலாவுதீன்
வலைச்சுவடிகள்
M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
புகை பிடிப்பவர்களூக்கு சரியான விளக்கங்களுடன் தடுப்பு ஊசியும் போட்டு இருக்கிறீர்கள்.
நல்ல சிகிச்சை.
ஷிஃபா அடையட்டும் சிகரெட் நோயாளிகள்.
UNICONCHENNAI சொன்னது…
Dear Brother,
Assalamu Alikkum,
Very useful information. There are many men and women become addict for smoking. I was one among them. By the grace of Allah I dropped smoking 10 years back when I was 46 yrs old. Though it was very late understanding today I feel very comfortable in my life. Brothers and sisters, please avoid smoking. This habit is equal to suiciding.
By stopping you are not only saving your life, you are saving others life and you save your money too.
Best wishes for Mr. Alaudeen for giving an elaborate message to our brothers. If one can't control ourselves during Ramadan and stop smoking, we will not find a chance.
Abdul Hameed
லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு சிகெரெட் குடிப்பவர்களுக்கு 13 பொருள்கள் இலவசம் .இலவசம் .இலவசம்
இதயத்தை புண்ணாக்கும் புகை பழக்கமுள்ளவர்களுக்கு.அலாவுதீன் காக்காவின் அலாதியான (விளம்பரம்) ஆக்கம்.
புகை பிடிப்பவரின் அருகாமையில் நின்றால்.அவர்கள் சுதந்திரமாக விடக்கூடிய மூச்சுக் காற்று.நாம் விடக்கூடிய மூச்சுக் காற்றை சிறை பிடித்துவிடுகிறது.கொஞ்ச நேரம் அப்படியே திணறிவிடுகிரோம்.
இந்த பழக்கமுள்ளவரின் மூஃமினான துனைவியர்களுக்கு அவர்களின் பொறுமையின் காரணமாக அல்லாஹ் சொர்க்கத்தை வழங்க போதுமானவன்.
அபுஇபுறாஹீம் சொன்னது…
அ = அலாவுதீன்(காக்கா) - அதே
அ = அழகிய (நடையில்) - மருவி
அ = அறிவுரை (சுடுகிறது) - புகையே !
இலகுவான எழுத்தில் எவரையும் வசியம் செய்யும் உங்களின் அக்கரையான அறிவுரை இதனை வாசித்த பின்னர் நிச்சயம் பாதிக்கப்பட்டர்களில் ஒருவரையாவது மாற்றும் இன்ஷா அல்லாஹ் !
----------------------
லெ.மு.செ.(அ): கருத்துக்கள் ஜொலிக்க்கின்றன ! - வழ்த்துக்கள் !
'ஒருவனின்' அடிமை சொன்னது…
இவர்கள் புகை பிடிப்பவர்கள்
அல்ல,
புகை விடும் தொழிற்சாலைகள்,
புகை போக்கிகள்
இவர்களால்
ஊரும்,நாடும்,குடும்பமும் கெட்டது
அல்லாஹ் நல்ல புத்தியை கொடுக்கட்டும்.
sabeer.abushahruk சொன்னது…
நல்லவேளை, விட்டுட்டேன்!
ZAKIR HUSSAIN சொன்னது…
அவசர சிகிச்சை செய்யும் இடங்களில் [ முக்கியமாக , இருதயம் , சுவாசம் சம்பந்தப்பட்ட் அவசர காலங்களில்] டாக்டருக்கு மிகப்பெரிய சவால் சிகரட் குடிக்கும் நோயாளிகளால்...இவர்கள் ஏற்கனவே குடித்த சிகரட் ரெசிடுவல் எல்லாம் சேர்ந்து சிகிச்சை அளிக்கும்போது பிரச்சினை தரும்.
இதே பிரச்சினை மது அருந்துபவர்களுக்கும்.
பொதுவாக இதுபோல் செய்தி படிக்கும்போது [ சிகரட் குடிப்பவர்களும் , மது குடிப்பவர்களும் ] " எனக்கு வராதுபா" என்று கனிமொழியும் ராசாவும் நம்பியிருந்தமாதிரி இருப்பார்கள்.
அபுஇபுறாஹீம் சொன்னது…
//பொதுவாக இதுபோல் செய்தி படிக்கும்போது [ சிகரட் குடிப்பவர்களும் , மது குடிப்பவர்களும் ] " எனக்கு வராதுபா" என்று கனிமொழியும் ராசாவும் நம்பியிருந்தமாதிரி இருப்பார்கள்.///
சான்ஷே இல்லை ! இப்படி உங்களால்தான் டைமிங் ஷாக் கொடுக்க முடியும் !
ஆமாம்லே இரண்டு பேரும் கனவுல கூட நெனச்சு பார்த்திருக்க மாட்டாங்க ஊழலை எதிர்க்கிறேன்னு நிய்யத்தில்லா நோன்பு வைக்கப்பார்த்தாரே வேடதாரி அ.ஹ. டெல்லி திஹாரில் அறை எண் 7ல் இருந்தாராமே அந்த இருவரையும் சந்தித்தாராமே !? ஊழல் எப்படி ஒழிக்கலாம்னு கேட்டாராமே !?
sabeer.abushahruk சொன்னது…
சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!
சிகரெட்
உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!
சிகரெட்
புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!
சிகரெட்
ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அனுஅனுவாய் அரிக்கப்போவது உறுதி!
சிகரெட்
சில்லரையாக செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.
சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்ட தார்ச்ஜ்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்ட கேன்வாஷ்
சிகரெட்....
தொடர்கதைபோல நீளும் வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம் துணுக்காக முடித்துவ்டும் அபாயம்!
- சபீ (சி.பி.)
sabeer.abushahruk சொன்னது…
// " எனக்கு வராதுபா" என்று கனிமொழியும் ராசாவும் நம்பியிருந்தமாதிரி இருப்பார்கள்.///
ஹிஹி...
நானும் அப்பிடித்தேன் இருந்தேன். ஆனா, ஆட்சி மாறுவதற்குள் பட்டுனு ஜகா வாங்கி கட்சி மாறிட்டேன்லோ. அப்ப... விட்டகுறை தொட்ட குறைனு ஏதும் வருமோ அலாவுதீனாக்கா, ஜாகிராக்கா?? பயம் காட்டாதியலுவோ
தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பினிய அலாவுதீன் காக்கா,
மிக சரியான நேரத்தில் எழுத பட்டுள்ள பதிவு.மிக்க நன்றி.
ரமழானைவிட வேறு ஒரு சந்தர்ப்பம் சிகரேட் பழக்கத்தைவிட கிடைக்காது.
இந்த பதிவை படித்து ஒருவர் சிகரேட் பிடிப்பதை நிறுத்திவிட்டால் என்றால் அது உங்கள் பதிவுக்கு கிடைத்த வெற்றி.
N.A.Shahul Hameed சொன்னது…
அஸ்ஸலாமு ஆலைக்கும்!
எனக்கு நினைவு தெரிந்து சிறுவனாக இருந்தபோது என் நண்பன் ஒரு பனை வேரைக்கொண்டு புகை பிடிக்க கற்றுத் தந்தார். அன்று இரவே என் மச்சான் என் அம்மாவிடம் போட்டுக் கொடுத்த்விட்டான். அன்று நான் வாங்கிய அடியும் உதையும் அன்றோடு புகையை எனக்குப் பகையாக ஆக்கிவிட்டது. போட்டுக்கொடுத்த மச்சான் பின்னாளில் புகைக்கே அடிமையாகிப் போனார்.
நான் இருக்கும் வியட்னாம் நாட்டில் நோன்பு திறந்தவுடன் எல்லோரும் முதல் வேலையாக செய்வது புகை பிடிப்பது தான். தந்தையும் மகனும் ஒன்றாகவே புகைக்கின்றனர். இமாம் புகைத்துவிட்டுத்தான் தொழுகை வைக்கின்றார்.
என்னையும் சில நேரங்களில் என் நண்பன் நிஜாம் புகை பிடிக்க வற்புறுத்துவான். அவனுக்காக ரேவடியில் அமர்ந்து பீடி புகைத்த காலமும் உண்டு. நிச்சயமாக புகை நமக்குப் பகையே.
Really an excellent posting.
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed
அபுஇபுறாஹீம் சொன்னது…
//சிகரெட்
புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!//
நெருப்பில்லாமல் புகையாதே !?
ஏதோ இருக்குமோன்னு (எட்டிப் பார்க்க வைக்கிறதே இந்தக் கவிதை)
சிகரெட்..
புன்னகைக்கும் இதழைக் கூட
பூச்சாண்டி ஆக்கிடும் கருப்பு
முகமூடி இட்டு !
கவிக் காக்கா ! எப்போ சபீ(சி.பி)யானீர்கள் ?
sabeer.abushahruk சொன்னது…
சி.பி.: சிகரெட்டுக்குப் பின்
சி.மு.: சிகரெட்டுக்கு முன்
//சிகரெட்..
புன்னகைக்கும் இதழைக் கூட
பூச்சாண்டி ஆக்கிடும்
கருப்பு முகமூடி இட்டு !//
நல்லாருக்கு. கிரவுன் எங்கே?
சிகரெட்...
வெளிர்தோல் போர்த்திய
கருந்தேள்
அபுஇபுறாஹீம் சொன்னது…
//நல்லாருக்கு. கிரவுன் எங்கே?//
புகையை கண்டால் (கிரவுனுக்கும்)பிடிக்காது !
என்ன இங்கே புகையுதே(ன்னு) வருவான் இன்னும் கொஞ்ச நேரத்தில்...
sabeer.abushahruk சொன்னது…
//என் நண்பன் நிஜாம் புகை பிடிக்க வற்புறுத்துவான்//
ஜாகிரு,
இவ்ரு வேறு யாரையோ சொல்றாரு. நீ பாட்டுக்கு என் நண்பனை கேள்வி கேட்டுப் படுத்திடாதே.
ஹமீது: கவனிச்சியிலா, போட்டுக் கொடுத்தத?
sabeer.abushahruk சொன்னது…
சிகரெட்டின் தீமைகளைப் பற்றி உரிமையோடு சொல்லும் தகுதி இந்த சபையிலேயே எனக்கும் (எனக்கு புகைப்பதிலும் விட்டதிலும் சீனியரான) யுனிகோன்சென்னைக்கும்தான் அதிகம் உண்டு.
நாங்கதான், பிடித்து, அவதிப்பட்டு, விட்டுன்னு அதன் எல்லா நிலையிலேயும் இருந்திருக்கிறோம். விட்டுடுங்கப்பா.
Shameed சொன்னது…
sabeer.abushahruk சொன்னது
//ஹமீது: கவனிச்சியிலா, போட்டுக் கொடுத்தத//
அநியாயமா சகோ நிஜம் மீது பழி போடுறார்!! அண்ணனுக்கு மூடு(புகைக்கும் ) வந்து எங்களையோ வெண்சுருட்டு வாங்கி வர சொன்னது மனதுக்குள் புகையாய் சுற்றி வருகின்றது (இமாம்முக்கு பத்த வைப்பது யாருன்னு சொல்லலையோ !!
N.A.Shahul Hameed சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,
சாவன்னா எப்போவாவது நீ எனக்கு வெண்சுருட்டு வாங்கிக் கொடுத்தது உண்டா? அபாண்டம். சபீர் நான் நிஜாமைப் போட்டுக்கொடுத்தேன் என்று சொல்லி நீ ஜாஹீர் கிட்டேபோட்டுக்கொடுக்கிறீயே இது நியாயமா?
Hameed when are you returning back to KSA?
N.A.Shahul Hameed
அப்துல்மாலிக் சொன்னது…
புகை எனக்கு பகை, அதனாலே இந்த கடைக்கு நா வரலே@#@#
crown சொன்னது…
sabeer.abushahruk சொன்னது…
சிகரெட்....
தொடர்கதைபோல நீளும் வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம் துணுக்காக முடித்துவ்டும் அபாயம்!
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .அதனால் தான் வாழ்கையை கதையாக்கி முற்றும் போட வைக்கும் முனைப்பு இந்தசிகரெட்டின் நெருப்பு முனை.
நிகோடின் ""மூலம்" வாழ்வின் சாவுகோட்டின் வழி!.
crown சொன்னது…
sabeer.abushahruk சொன்னது…
சி.பி.: சிகரெட்டுக்குப் பின்
சி.மு.: சிகரெட்டுக்கு முன்
//சிகரெட்..
புன்னகைக்கும் இதழைக் கூட
பூச்சாண்டி ஆக்கிடும்
கருப்பு முகமூடி இட்டு !//
நல்லாருக்கு. கிரவுன் எங்கே?
சிகரெட்...
வெளிர்தோல் போர்த்திய
கருந்தேள்
---------------------------------------------
அருமை!அருமை வெளிர்தோல் போர்த்திய கருந்தேள்.
----------------------------------------------------
புகை சாவு குடியிருக்கும் குகை!
-------------------------------
" நெருப்புன்னா வாய் சுடாது,
புனைன்னா இதயம் சுடப்படும்".
crown சொன்னது…
sabeer.abushahruk சொன்னது…
//என் நண்பன் நிஜாம் புகை பிடிக்க வற்புறுத்துவான்//
ஜாகிரு,
இவ்ரு வேறு யாரையோ சொல்றாரு. நீ பாட்டுக்கு என் நண்பனை கேள்வி கேட்டுப் படுத்திடாதே.
ஹமீது: கவனிச்சியிலா, போட்டுக் கொடுத்தத?
-----------------------------------------------------------
நி(ஜா)ஜமாய் சொன்னா போட்டு கொடுப்பதா அர்தம் கொள்ளாதீங்க.
crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அலாவுதீன் நலமா? எப்படி நோன்பு போகிறது. இப்படி நல்ல, நல்ல விசயத்தை ஆழமாய் எழுதி எல்லாருக்கும் பயன்படும்படி செய்யும் உங்கள் எழுத்து அல்லாவிடம் நிறைய நன்மைகளை பெற்றுத்தரும். எங்களுக்கும் தூஆ செய்யுங்கள்.
அலாவுதீன்.S. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!
கருத்திட்ட சகோதரர்கள்::: M.H. ஜஹபர் சாதிக் ,Abdul Hameed,லெ.மு.செ.அபுபக்கர், அபுஇபுறாஹீம், 'ஒருவனின்' அடிமை, sabeer.abushahruk ,ZAKIR HUSSAIN, தாஜுதீன், N.A.Shahul Hameed ,Shameed, அப்துல்மாலிக் ,தஸ்தகீர் - - அனைவருக்கும் நன்றி!
அலாவுதீன்.S. சொன்னது…
///crown சொன்னது… அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அலாவுதீன் நலமா? எப்படி நோன்பு போகிறது. எங்களுக்கும் தூஆ செய்யுங்கள். ///
*************************************************************
அன்புச் சகோதரர் தஸ்தகீர் அவர்களுக்கு : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பும் நலமாக செல்கிறது, நானும் நலமாக இருக்கிறேன் - அல்ஹம்துலில்லாஹ்!
தாங்களும் வல்ல அல்லாஹ்வின் அருளால் நலமுடன் இருந்து வர துஆச் செய்கிறேன் -- இன்ஷாஅல்லாஹ்!
1 Responses So Far:
நல்ல கட்டுரை, தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை பிரசுரிக்கவும்.
அன்புடன்
வேதா
Post a Comment