அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) இந்த தொடரில் உணர்ந்தும், உணராமலும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் செய்து வரும் தீமையைப் பற்றி பார்ப்போம்
பெரியத்திரை சின்னத்திரை:
ஒரு காலத்தில் பெரியத்திரையில் வந்த படங்கள் பிறகு வீடியோ கடையில் கணக்கு வைத்து வாரம் ஒன்று எடுத்து பார்த்த நேரம் போய் பிறகு சீடியாக படங்கள் வெளிவந்தது. பிறகு சின்னத்திரையில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்பதும் போய் இப்பொழுது உங்கள் அபிமான சின்னத்திரையில் மூன்று படங்கள் தொடர்ந்து பார்த்து சந்தோஷமாக இருங்கள் என்ற விளம்பரம். பணம் ஒன்றுதான் குறிக்கோள், மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு இந்த சின்னத்திரை (தொலைக்காட்சி)கள் முன்னனியில் இருக்கிறது.
இணையதளம்:
இணையதளம் ஒரு கடல் இதில் நல்லதை தேடலாம் என்றால் இதிலும் திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் ஷைத்தான்கள் தலைவிரித்தாடுகின்றன. இப்பொழுது எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை திருட்டு சீடி என்று அலற வேண்டியதில்லை. என்ன படம் வேண்டும் உடனே டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் சினிமாவை பார்த்தவர்கள்தான். சினிமாவை பார்க்காத யாரும் இருக்க முடியாது. ஆனால் எப்பொழுது நமக்கு இது ஹராம் என்று தெரியவருகிறதோ இதிலிருந்து விலகி விடுவதுதான் நமக்கு நன்மையை பெற்றுத்தரும்.
ஒரு சகோதரர் சொன்னது என் உறவினர் வீட்டுக்கு செல்வது என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும். என்னால் அமல் செய்ய முடியாது. அவர்களின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவாகிவிட்டால் அமல் பெரிதாக இருக்கும், என்ன பெரிய அமல் படத்தை டவுன்லோட் செய்து பார்ப்பதுதான் அவர்களின் வேலையாம். நான் எவ்வளவோ சொன்னபிறகும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொன்னார். வல்ல அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்.
சின்னத்திரை:
குறுந்தொடர், மெகா தொடர் ஓடிக்கொண்டே இருக்கும். தொடர் 10 நிமிடம், விளம்பரம் 20 நிமிடம். சினிமா 2 மணிநேரத்தில் முடிந்து விடும். இந்த தொடர்கள் மாதக்கணக்கில் எடுப்பவர்களுக்கே முடிவு தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி என்ன நாட்டுபற்றையும் அறிவு வளர்ச்சியையும் இந்த தொடர்கள் சொல்லிக்கொடுக்கிறது. பட்டியல் போடலாம் மூட நம்பிக்கைகள், எப்படி கொலை செய்வது, கொள்ளையடிப்பது, மாமியார் மருமகளையும், மருமகள் மாமியாரையும் கொடுமை படுத்துவது. அடுத்தவன் மனைவியை கடத்திச்செல்வது இன்னும் இதுபோன்ற கேடுகெட்ட கலாச்சார சீரழிவை கற்றுத்தருபவகைள்தான் இந்த தொடர்கள்.
விளம்பரத்தை பார்த்து தேவையில்லாத பொருள்களை பெண்களை வாங்க வைக்கும் தந்திரமும் இதில் இருக்கிறது ஸ்பான்சர் வியாபாரிகள்தானே. தொடர்களில் மூழ்கி இருக்கும் சகோதரிகள் இதிலிருந்து விலகி தவ்பா செய்து விட்டு உண்மையான மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்.
லாப்டாப் (மடிக்கணிணி):
ஒரு ரூமில் ஐந்து நபர்கள் இருந்தால் ஐந்து பேரிடமும் மடிக்கணிணி. லாப்டாப் நல்லதுக்குத்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால் இளைஞர்களுக்கு அதிகம் பயன்படுவது சினிமா பார்க்கத்தான். மணிக்கணக்கில் பேசுவதற்கும்தான். சில ரூம்களில் தொடர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்து பிறகு ஸஹர் வைத்து தொழாமல் தூங்குபவர்களும் இருக்கிறார்கள்.
கண்ணால் ஏற்படும் பாவங்கள்:
கண் செய்யும் பாவங்களில் பார்க்கக்கூடாத காட்சிகளும் அடங்கும். நேரடியாக எதையெல்லாம் பார்க்க அனுமதி இல்லையோ அதை நிழற்படங்களாக பார்க்கவும் அனுமதி இல்லை. (உதராணத்திற்கு: அரை குறை ஆடையுடன் வரும் பெண்களை).
முதல் பார்வை சாதாரண பார்வை, இரண்டாவது பார்வை ஷைத்தானின் பார்வை ஆகவே மீண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்பது நபிமொழி.
பெரியத்திரைக்கு அதிகம் யாரும் போவதில்லை. சின்னத்திரை, மடித்திரை(மடிக்கணிணி) இவைகளில் படங்கள், மெகா தொடர்கள் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் மூழ்கி இருக்கிறோம், மேலும் நமது காரியங்கள் அனைத்தையும் இரண்டு மலக்குகள் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள், நாளை மறுமையில் நமது அமல்கள் அனைத்தும் புத்தக வடிவில் நமது கையில் வல்ல அல்லாஹ் கொடுப்பான் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் இருக்கும் ரூமில் கேமரா வைத்து கண்காணித்தால் ஒன்று மட்டும்தான் கண்காணிக்கும். வல்ல அல்லாஹ்வோ அவன் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். வலுவான சாட்சிகளாக மலக்குமார்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நமது உறுப்புகளும் சாட்சி கூறும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், நாளை மறுமையில் நாம் எதையும் மறைக்க முடியாது.
எனதருமை சகோதர, சகோதரிகளே! நமது தலைவர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை நெறியை அழகிய முறையில் கற்று, அழகிய முறையில் கடைபிடித்து அனைத்துவிதமான ஹராமான காரியங்களில் இருந்து விலகி முடிந்தவரை ஹலாலை பேணி உறுதியான ஈமானுடன் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ்!.
இன்ஷாஅல்லாஹ் வளரும். . .
S.அலாவுதீன்
வலைச்சுவடிகள்...
sabeer.abushahruk சொன்னது…
உண்ணாமலும் பருகாமலும் இருப்பது மட்டுமே நோன்பு போன்றதொரு மாயையில் கிடந்த நம் மக்களை இதுபோன்ற வழிகாட்டுதல்களே மீட்டெடுக்கும்.
ஜஸாக்கல்லாஹு க்ஹைரா, அலாவுதீன்
-------------------------------------------------------
அபுஇபுறாஹீம் சொன்னது…
அன்றாடம் அசாதரனமாக நடந்தேறும் நிகழ்வுகளில் குடியிருக்கும் தவறுகளை எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் ! இவைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன இப்படியான செயல்களிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக !
தொடருங்கள் காக்கா...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
ஆக்கபூர்வமான பதிவு!
ஊருக்கு ஓரிரு சினிமாத்திரை காலம் கடந்து,
வீட்டுக்கொரு சின்னத்திரை சீரழிவும் ஒழிந்து,
ஆளுக்கோர் மடிக்கணிணி தவழும் காலம் இது.
இந்தக் கணிணிக்கடலில் அறிவும் உண்டு அழிவும் உண்டு.
ஆவதும் தாழ்வதும் அவரவர் கையிலே!

VANJOOR சொன்னது…
அருட்கொடையாம் தொழுகை.
தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.
அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?
உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.
தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.
தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.
CLICK AND READ.
>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<
>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கியத்துவம் ஏன்? <<<
>>>
முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ? <<<
>>>
கடவுளின் உருவங்களற்ற பள்ளிவாசல்கள் எப்படி புனிதமாக இருக்கமுடியும்? <<<
வாஞ்சையுடன் வாஞ்சூர்.

சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.
CLICK >>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? பகுதி 1. VIDEO 1&2 of 14. <<< CLICK
CLICK >>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? அனைவரையும் கவரும். பகுதி 2. VIDEO 3 & 4 of 14. <<<< CLICK

Ameena A. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
-------
நாம் இருக்கும் ரூமில் கேமரா வைத்து கண்காணித்தால் ஒன்று மட்டும்தான் கண்காணிக்கும். வல்ல அல்லாஹ்வோ அவன் நேரடியாக பார்த்துக்கொண்டு இருக்கிறான். வலுவான சாட்சிகளாக மலக்குமார்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் நமது உறுப்புகளும் சாட்சி கூறும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், நாளை மறுமையில் நாம் எதையும் மறைக்க முடியாது.
--------
மிகச் சரியே, அல்லாஹ்வின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
தொடருங்கள் சகோதரரே...

அப்துல்மாலிக் சொன்னது…
நல்ல பகிர்வு, அதன் வழிநடப்போம் இன்ஷா அல்லாஹ்

Shameed சொன்னது…
அலாவுதீன் காக்காவின் கட்டுரை அழகிய அறிவுரை,
டிவி பார்ப்பதால் கண் கெட்டுப்போகும் என்பதை கூட யாரும் பொருள்படுத்துவது கிடையாது நாளை மறுமை நாளில் அந்த கண் நமக்கு எதிராக சாட்சி சொல்லும்,

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
பெரியதிரை,சின்னதிரையினால் ஏற்ப்படும்.சீரழிவுகளை தன் மனத்திரைலிருந்து படம் பிடித்து காட்டிய அலாவுதீன் காக்காவுக்கு.வாழ்த்துக்கள்.
ஜப்பான் நாட்டிலும் எத்தனையோ சேனல்கள் இருக்கின்றன.அவர்களுடைய சிந்தனையேல்லாம் தன் நாட்டு மக்களை அறிவாளியாக விஞ்சாநியாக வேண்டும் என்ற நோக்கோடு ஒவ்வொரு சேனலும் போட்டிபோட்டு செயல் படுகிறார்கள்.
இங்கு உள்ள கூத்தாடிகள் அயோக்கியர்கள் மக்களை மனித தன்மையிலிருந்து.மிருகத்தன்மையை அடைவதற்கு.போட்டி போடுகிறார்கள்.இதை உணராத என் அருமை முஃமீனான சகோதர சகோதரிகளும்.தூய்மை படுத்தமுடியாத சாக்கடையில் போய் விழுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.
இப்படிப்பட்ட முஃமீன்களை அல்லாஹ் காப்பாத்த போதுமானவன்.

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். கருத்து கருவூலம். மெய்ஞானபெட்டகம். தொடரட்டும் உங்கள் ஆக்கம். அல்ஹம்துலில்லாஹ்.

இன்று காலை தொலைதூரத்திலிருந்து (நானிருக்கும் நாடால்ல) நண்பன் ஒருவன் தொல்லைபேசி(க்) கொண்டிருந்தான் என்னுடன், அப்போது அதிரைநிருபரில் வெளியாகிருந்த இந்தக் கட்டுரையைப் வாசித்து விட்டு வாக்குவாதம் செய்தான்...
வேற ஒன்னுமில்லை(ங்க) ! அறிவுரைன்னு சொல்ல வந்தா எங்கிருந்துதான் அயர்ச்சி வருகிறதோ தெரியலை அதான் அப்புடி பேசினான், நானும் சொன்னேன் "நீ இப்படியெல்லாம் இல்லை என்றால் உனக்கில்லை என்று நினைத்துக் கொள் - இல்லை நான் அப்படித்தான் இருக்கேன் பழகிவிட்டதுன்னு சொன்னால் இது உனக்கும் உன்னைப் போன்றோர்க்கும் என்று வைத்துக் கொள் என்றேன்"
பேச்சோடு பேச்சாக (சும்மா உடாண்ஸ்) மற்றொன்றையும் சொன்னேன் "நான் எழுதிய கவிதை ஜெயா டிவியில் 'அந்த' பிரபலமான அறிவிப்பாளர் பெயரைச் சொல்லி வாசிக்கிறார் என்றேன்" உடனே நிமிர்ந்து உட்கார்ந்து பேசியிருப்பான் போலும் சுரு சுருப்பாயிட்டான், எப்போ, எத்தனை மணிக்கு அடாடா எனக்கு ரொம்ப லேட்டுலடா தயவு செய்து ரெக்கார்ட் செய்து அனுப்புறியா"ன்னு கேட்டான் !?
இது தாங்க வித்தியாசம் ! அறிவுரைக்கும் அழு(க்)குரல் உரைக்கும் ! - இதனையும் அவன் வாசிப்பான்னு தெரியும் இருப்பினும் இதனிச் சூடு என்று நினைத்தால் ஏசி போட்டுகிடட்டும், ரொம்பதா கூல் என்று நினைத்தாலும் அறிவுரைகள் தொடரும்டா நண்பா !!

அலாவுதீன்.S. சொன்னது…
கருத்திட்ட சகோதரர்கள்: சபீர், அபுஇபுறாஹிம்,
M.H.ஜஹபர் சாதிக், அப்துல் மாலிக், ஹமீது, தஸ்தகீர்,
லெ.மு.செ.அபுபக்கர். அனைவருக்கும் நன்றி!
கருத்திட்ட சகோதரி ஆமினா A. அவர்களுக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
/// வேற ஒன்னுமில்லை(ங்க) ! அறிவுரைன்னு சொல்ல வந்தா எங்கிருந்துதான் அயர்ச்சி வருகிறதோ தெரியலை அதான் அப்புடி பேசினான், நானும் சொன்னேன் "நீ இப்படியெல்லாம் இல்லை என்றால் உனக்கில்லை என்று நினைத்துக் கொள் - இல்லை நான் அப்படித்தான் இருக்கேன் பழகிவிட்டதுன்னு சொன்னால் இது உனக்கும் உன்னைப் போன்றோர்க்கும் என்று வைத்துக் கொள் என்றேன்"///
அன்புச் சகோதரர் அபுஇபுறாஹிம் தாங்களும் அழகிய அறிவுரையைத்தான் கூறியிருக்கிறீர்கள். நன்றி!

தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பினிய அலாவுதீன் காக்கா,
நவீன வடிவில் ஒவ்வொரு வீட்டிலும் நுழையும் சைத்தான் பற்றிய எச்சரிக்கைகளை விவரித்து சொல்லியமைக்கு மிக்க நன்றி.
பயனுல்ல நல்ல ஆக்கங்களை தந்துவரும் தங்களுக்காக இந்த புனித ரமழானில் து ஆ செய்கிறேன்.

0 Responses So Far:
Post a Comment