Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் குப்பை(களின்) ஊர்வலம்... ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2012 | , , , , ,

அதிரையில் குப்பைகளின் ஊர்வலம் ! - 27-ஆகஸ்ட்-2012

அதிகாலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நம் பார்வையில் பட்ட  குப்பைகள் சும்மா இருக்கவிடாமல் அவற்றின் ஊர்வலம் காண வைத்ததை உங்கள் பார்வைக்கு தருகிறோம். இங்கு பதியப்பட்டுள்ள புகைப்படங்கள் நம்மவர்களின் சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையின்மையையே காட்டுகிறது என்பது புலப்படும்.

எதற்கெடுத்தாலும், தேர்தலுக்கு பின்னர் அமைந்த புதிய பேரூராட்சி நிர்வாகத்தை மட்டுமே குறை சொல்லி கொண்டிருப்பது மூடத்தனம். மக்களின் பொறுப்பற்ற அலட்சியப் போக்கே இவ்வாறு ஊரில் குப்பைகள் சிதறி கிடப்பதற்கு முக்கிய காரணம்.

வெளியில் தெரு முச்சந்தியில் குப்பைகளை கொட்டத் துணியும் இவர்கள் தங்களின் வீட்டு வாசல் படிகள் அருகில் இப்படி கொட்டி வைத்து காத்திருப்பார்களா பேரூராட்சி மன்ற துப்புறவு ஊழியர்களின் வருகைக்கு? நிச்சயமாக அப்படி இருக்கமாட்டார்கள் காராணம் தன் வீடு பாதிப்புக்குள்ளாகும்போது ஏற்படும் வலி அடுத்தவர்கள் வீட்டுச் சுவர் அல்லது அருகில் கொட்டும்போது ஏன் ஏற்படுவதில்லை.

மக்களின் இவ்வகை போக்கு மாற வேண்டும் ! சுத்தம் வேண்டும், சுகாதாரம் வேண்டும்! அதோடு அடுத்தவர்கள் அக்கம் பக்கத்தாரின் நலனிலும் அக்கறை வேண்டும்.


நடுத்தெரு மற்றும் தக்வா பள்ளி அருகில்.


செக்கடிக்குளம் அருகில்


கடைத்தெரு முதல் பழைய போஸ்டபீஸ் ரோடு வரை.






போரூராட்சி எதிரில் உள்ள இடம்...



புதுதெரு பகுதி...


ஆஸ்பத்திரி ரோடு.. ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்


சி எம் பி லைன் பகுதியில் சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்.




சி எம் பி லைனில் உள்ள குப்பை தொட்டிக்கு EB போஸ்டர் உதவி செய்கிறது.




புதுமனைதெரு


அப்பாடா இந்த குப்பை தொட்டியில் முறையாக குப்பைகள் கொட்டப்பட்டிருக்கிறது.



பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் குப்பை...


இதுவரை பார்த்த குப்பைகளின் ஊர்வலப்படங்கள் சொல்லும் எச்சரிக்கையும் , நிவர்த்திக்கான நிலவரமும்.
  • மக்களின் பொறுப்பற்ற செயல், குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டுவதில்லை.ஏனோ வெளியில் கொட்டுபவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
  • குப்பை தொட்டிகளை ஆடு மாடுகள் எளிதில் சாய்த்து விடுகிறது, இதற்கு தெரு சங்கங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சரியான தீர்வு எட்ட வேண்டும்.
  • பேரூராட்சி நிர்வாகம் தடை செய்தும், பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதற்கு பொது மக்களின் பொறுப்பின்மையே காரணம் என்று சொன்னால் மிகையில்லை.
  • பேரூராட்சி நிர்வாகம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகள் விடயத்தில் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீது தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் நலன் மற்றும் மக்களின் சுகாதாரத்தில் அக்கறை என்று வார்த்தையிலும் எழுத்திலும் இல்லாமல் செயலில் எல்லோரும் செய்துதான்  பார்க்கலாமே...

குறிப்பு: இந்த புகைப்படங்கள் எடுத்த பிறகு அதிரை பேரூராட்சி நிர்வாக துப்புரவு பணியாளர்களால் அநேக இடங்களில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது,பொதுமக்களின் அலட்சியத்தையும் கோடிட்டு காட்டத்தான் அப்படியே பதியப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் குழு

11 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

முன்பொரு கட்டுரையின் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று. "ஊரின் சுகாதாரம் என்பது கூட்டும் முயற்சியல்ல, அது ஒரு கூட்டு முயற்சி". மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், குப்பைகள் நிறைந்து நோய்கள் மிகுந்த ஊராக இருக்கும் நிலை தொடரும். விழிப்புணர்வு பெற வேண்டும்!!

sabeer.abushahruk said...

//மக்களின் பொறுப்பற்ற செயல், குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டுவதில்லை//

அப்புறம் எப்படி விளங்கும்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


ஆள்பவர் சொந்த விடுமுறையில் போய் விட்டால் அடுத்தவர் கண்காணிக்கும் பழக்கம் இல்லையா?
ஆள்பவருடன் ஒத்துழைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும்.
எதிரியை மதிக்காவிட்டாலும் நல்ல செயலை ஆதரிக்க வேண்டும்.
ஆயிரம் பகை இருந்தாலும் அதிரை நலனுக்கு ஒத்துழைப்பு முக்கியம்.
சில பகுதி போட்டோக்களை பார்த்தால் ஆள் பவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாக தெரிகிறது.
தவளை தன் வாயால் கெடுவது போல அதிரை தன் அங்கத்தின் சிலரால் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
விஞ்ஞான முன்னேற்ற காலத்தில் கேமரா கருவிகள் மலிந்த இக்காலத்தில் முதல் கட்டமாக சந்தேகத்திற்குரிய இடத்தில் வாரம் ஒரு முறை ரகசிய கேமரா பொறுத்தி கண்காணித்து வரிவசூலில் செய்யும் நடவடிக்கை போன்ற அதிரடி நடவடிக்கை,தண்டனை, அபராதம் ஏற்படுத்த வேண்டும்.

Kavianban KALAM, Adirampattinam said...

குடியரசு நாட்டினிலே சாலை யோரம்
.. குடிசையின்றி நெடுவானக் கூரையின் கீழ்
மடிபவர்க்கும் வாக்குரிமை கொடுத்தோம் என்பார்
.. மகாத்துமாவைப் படமாக்கி வைத்துக் கொண்டு!
நடிக்கின்றோம் நாமிந்த நாட்டு மக்கள்
.. நாதியற்றோர் வேதனைக்கு விடிவாய்க் கண்ணீர்
வடிக்கின்றோம் எழுதுகின்றோம் பேசு கின்றோம்
.. வாய்ப்பந்தல் யாருக்கு நிழல் கொடுக்கும்?

ஏட்டுக்குத் தகுந்தபடி கேட்டை நன்றே
.. என்றெழுதி பணம்பண்ணல் ஈனம் தானே!
பாட்டுக்குத் தக்கபடி அமைதல் பண்ணா?
.. பண்ணியல்பால் பாவத்தை மாற்றல் பாட்டா?
வீட்டுக்குள் குப்பைகளே குவிந்திருக்க
.. வெளிச்சுவரில் சுண்ணவண்ண வெளிச்சம் ஏய்ப்பு!
நாட்டுக்குப் பெயர்நீட்ட விளம்பரங்கள்
.. நாற்றிசையும் தன்மான வேட்டு வைப்பா?

தகுதியுள்ள தன் இனத்தான் உயர்வைப் பெற்றால்
.. தாங்காது மனங்கொதிப்போன் தமிழன் தானா?
பகுதிஎது விகுதிஎது அறியான் தன்னை
.. பைந்தமிழ்க்குக் காவலனாய்ப் பறையடித்தால்
மிகுதியுமாய் அகந்தையென்னும் சேற்றில் ஆழ்வான்
.. முற்றிவிட்டால் முருங்கையதும் குப்பை தானே?
வெகுமதியைப் பெறுவதற்கு வீசும் சொற்கள்
.. வெற்றோலிகள் எனக்கற்றோர் அறிவார் அன்றோ?

ZAKIR HUSSAIN said...

குப்பையாய் போன மனமும் செயலும் ஊரை குப்பையாக்கியிருக்கிறது.

எப்படியோ டாக்டர்கள் / மருத்துவமனைகள் / லேபரட்டரிகள் நல்லபடியாக கல்லா கட்டுவது உறுதி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்றொரு நாள் மதிப்பிற்குரிய வாவண்ணா சார் இட்ட பின்னூட்டம் இன்று நினைவுக்கு வருகிறது. 'மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையான வாக்குகளையும், குப்பைகளையும் போடக்கூடாத இடத்தில் போட்டு செல்கின்றனர்'. ஆஹா....என்ன தத்துவம்.......

மக்கள் குப்பைகளை சரிவர போடக்கூடிய இடத்தில் போடாமல் அலட்சியம் காட்டினால் (நோய்நொடியால்) விரைவில் சந்தூக் பெட்டி நம்மை அள்ளிச்சென்று விடும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அன்றொரு நாள் மதிப்பிற்குரிய வாவண்ணா சார் இட்ட பின்னூட்டம் இன்று நினைவுக்கு வருகிறது. 'மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையான வாக்குகளையும், குப்பைகளையும் போடக்கூடாத இடத்தில் போட்டு செல்கின்றனர்'. ஆஹா....என்ன தத்துவம்.......

மக்கள் குப்பைகளை சரிவர போடக்கூடிய இடத்தில் போடாமல் அலட்சியம் காட்டினால் (நோய்நொடியால்) விரைவில் சந்தூக் பெட்டி நம்மை அள்ளிச்சென்று விடும்.

அப்துல்மாலிக் said...

என்னத்த சொன்னாலும் நான் செய்றதுதான் சரி என்று செய்யும் மக்களை என்னதான் செய்யமுடியும், வீட்டிலிருந்து அவ்வளவு தூரம் தூக்கிகொண்டு வரும் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் சரியாக கொட்டுவதற்கு சோம்பேறி, எங்கே உருப்படப்போறோம்..... என்பது டஜன் கேள்வி...

Yasir said...

குப்பைகளை சரியான இடத்தில் கொட்டாதவர்களை
”சாணியை கரைச்சு தலையில ஊத்தி, செருப்பால் அடிக்கபடும் “ என்று போர்டு வச்சா திருந்துவாய்ங்களா ??..சில சமயம் இந்த மாதிரி டிரீட்மண்ட் உதவி செய்யும்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாவன்னா (சார்) பெரியப்பா என்றோ சொன்னது இன்னும்.நினைவில் இருக்கிறது.
நம் மூளைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளே தெரு மூலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு முழுக் காரணம் .
ஆகையால்.சாமானைக் கொண்டு தெரு மூலையை அசுத்தம் செய்யாமல் முதலில் ஈமானை கொண்டு நம் மூளையை சுத்தம் செய்து கொள்வோம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

யாசிர் சொன்னது.
// குப்பைகளை சரியான இடத்தில் கொட்டாதவர்களை
”சாணியை கரைச்சு தலையில ஊத்தி, செருப்பால் அடிக்கபடும் “ என்று போர்டு வச்சா திருந்துவாய்ங்களா ??..//
ஒரு வீட்டில் வாசலுக்கு முன்பாக குப்பைகளை கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.எவ்வளோவோ சொல்லியும் கேட்க்காத அந்த ஜென்மங்களுக்கு.தன் வீட்டு சுவற்றில் செருப்பு படத்தை வரைந்து இதால் அடிக்கப் படும் என்று எழுதி இருக்கிறார்கள்.அதற்கு மரியாதை கொடுக்கும் மக்(கு)கள், உங்கள் கருத்துக்கும் மரியாதை கொடுப்பார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு