Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

SELAMAT HARI RAYA 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2012 | , ,

"உபயம்" TO: இந்த ஆர்டிக்கில் எழுத தூண்டுதலாக இருந்த சகோதரர்கள் அபு இப்ராஹிம் , தாஜுதின், சாகுல் , யாசிர், உன்னைபோல் ஒருவன், கிரவுன்.                                                                                 

மலேசியாவில் பெருநாள்.... அடிப்படையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் நாம் செய்யாத சில நல்ல விசயங்களை இந்த மலாய்க்காரர்கள் செய்கிறார்கள். அதாவது பெருநாள் தொழுகை தொழுதவுடன் வீட்டுக்கு வந்து தாய் தகப்பனிடம் அல்லது வீட்டிலுள்ள பெரியவர்களிடம் சலாம் கொடுத்து பிறகு "மன்னிப்பு" கேட்பது. சமயத்தில் நான் நினைப்பது உண்டு .. இந்த மாதிரி நம் ஊரிலும் இருந்தால் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைகள் ஓய்ந்து இருக்குமே. .. அந்த நாள் எப்போது தான் வருமோ..


[ கடப்பாசி , வட்டிலப்பம் பற்றி ஒன்னும் சொல்லலியே எனும் நண்பர்கள் கொஞ்சம் அவதானிக்க!]

சிலரின் பெற்றோர்கள் உயிருடன் இல்லாத பட்சத்தில் மையவாடிக்கு போய் அவர்களுக்காக யாசின் ஓதுவது [ சின்ன பிள்ளைகள்கூட ] அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு வருவார்கள். " நல்ல நாளும் பெரியா நாளும் யான் வாப்பா மைத்தாங்கரைக்கு போரா " என்று எந்த பெரியவர்களும் ” ப்ரேக்” போடுவதில்லை. ஏதோ நாம் மட்டும் "சாகாவரம்' வாங்கி வந்த மாதிரி.

அடுத்த மிகப்பெரிய விசயம் “BALIK KAMPUNG’ [ கிராமம் திரும்புதல்]


மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூர் எனபது அனைவருக்கும் தெறிந்ததே, ஆனால் இங்கு இருப்பவர்களின் பூர்வீகம் மற்ற ஊர்களாக [கிராமம்] ஆக இருக்கும். நோன்பு ஆரம்பத்திலேயெ இந்த பஸ், ரயில் டிக்கட் எல்லாம் விற்று முடிந்துவிடும். அதையும் தாண்டி பெருநாளைக்கு முதல் நாள் [ அல்லது 2 நாளைக்கு முன் ] எக்ஸ்பிரஸ் ஹைவே, நேசனல் ஹைவே எல்லாம் பிதுங்கும். ஒரு முரை இந்த டிராபிக்கில் மாட்டி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வர 4 மணி நேரம் பிடிக்கும் ஹைவேயில் 10 மணி நேரம ஆகி நத்தையை விட கேவலமாக நகர்ந்து , இடையில் உள்ள ஹைவே டாய்லெட் எல்லாம் உள்ளே புக முடியாத அளவு மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிந்ததால் அந்த இடத்திலேயெ முடிவெடுத்தேன்

• இந்த மாதிரி பெருநாள் காலங்களில் அவுட் ஸ்டேசன் தவிர்ப்பது.

• ஆட்டொமேடிக் கியர் கண்டுபிடித்து இவ்வலவு நாள் ஆகியும் 'எனக்கு மேனுவல் கார்தான் பிடிக்கும் என்ற மங்கம்மா / மங்காத்தா சபதத்தை கைவிடுவது.

மலேசியாவின் ஹைவெ ஒரு வித்யாசமானது. மலேசியாவின் தென்கோடி சிங்கபூரிலிருந்து வட எல்லை தாய்லாந்து வரை [அலியார்சாரின் பூகோளம் க்ளாஸுக்கு கட் அடித்துவிட்டு தூங்கியவர்கள் கூகிள் மேப் நோக்கவும்] ஏறக்குறைய 1100 கிலோ மீட்டரையும் ட்ராபிக் லைட் இல்லாமல் கடக்கலாம், அவ்வளவு நீட்டமான, நீட்டான ஹைவே. இப்போது இந்தியாவில் நிறைய ஹைவே ப்ராஜக்ட் இவர்கள் தான் செய்கிறார்கள்.


'பெருநாள் அன்று பெருநாள் தொழுகை இங்கு உள்ள டெலிவிசனில் நேரடி ஒளிபரப்பு உண்டு. தமிழ் புத்தாண்டுக்கு தமிழுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசும் / உளரும் நடிகைகளை வைத்து பேட்டி எடுக்கும் கொடுமை மாதிரி எதுவும் இவர்கள் செய்வதில்லை.

இங்கு உள்ள TV3 இஸ்லாத்தின் வளர்ச்சியையும் சரித்திரங்களையும் JEJAK RASUL என்ற நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 20 எபிஸோட் வரை எடுத்து மக்களுக்கு காட்டி இருக்கிறது. [ மலாய் மொழியில்] ஒரு எபிஸோட் = 30 நாட்கள், ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு லொகேசன்.. இதுவரை இவர்கள் கவர் பண்ணாத நாடே இல்லை எனலாம். இந்த வருடம் இவர்கள் கவர் செய்த இடங்களில் 30 நோன்பும் கொரியாவிலும் , ஜப்பானிலும் எந்த அளவு இஸ்லாம் வளர்த்து இருக்கிறது என்றால்... வார்த்தைகளுக்கு கட்டுப்படாத அந்த மக்கள் ... ஈமானின் பலத்தை இவர்களிடமிருந்து நாம் கற்ருக்கொள்ள நிரைய இருக்கிறது.

பிள்ளைகளுக்கு பெருநாள் காசு கொடுப்பதைகூட கலைநயத்துடன் ஒரு அழகிய என்வெலெப்பில் வைத்து செய்வார்கள். அதன் பெயர் "அங்பாவ்' இந்த சிஸ்டம் சீனர்களிடம் “சுட்டது’.


மற்றபடி பெருநாள் சாப்பாடு [ இப்பதான் நம்ம சப்ஜெக்ட்டுக்கு இந்த ஆளு வர்ராய்ன்யா என்பது காதில் விழுகிறது ]

நாம் எல்லாம் தென் இந்திய முஸ்லிம்களாக இருப்பதால் நம் அதிராம்பட்டினத்து 'தொலி, [ எந்த "லி"] வட்டிலப்பம் [ஹைபர்டென்சனின் 'சத்ரு'] கடப்பாசி, இடியப்பம் , எறச்சானம் என்று வயிறு 'காந்தும்" மெனுக்கள் அதிகமாகும். அடுத்த நாளின் "மொளவுதண்ணி' , ரசத்தின் ருசியில் மீண்ட சொர்க்கம் தெரியும்.

சாப்பாடு விசயங்களை ஒரு தனி ஆர்டிக்கில் ஆக எழுதலாம்.

இப்போது புதிய சமுதாயங்களின் காலமாக இருப்பதால் ரெடிமேட்சட்டையின் அளவு ஸ்டிக்கர் கிழிக்காமலும், டிஸ்ப்லேயில் மடித்துவைத்தமாதிரியெ அயன் பண்ணாது கித்தா[ரப்பர்] செருப்பும், பாம்பு மார்க்] சென்ட் போட்டு நமக்கெல்லாம் பெருநாள் காசு தந்து வளர்த்த அந்த வலுவான அப்பாக்கள் இப்போது இல்லை. [ இவர்களை பற்றி ஒரு ஆர்டிக்கில் முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். Infact that was my fisrt article in internet , அதிரை நிருபர் அனுமதித்தால் மறுபடியும் வெளியிடலாம், நான் அனுப்பி தருகிறேன்]

மலேசியாவில் கலர்புள்ளான விசயங்கள் கொட்டிகிடக்கிறது.

இங்கு பெருநாளை ஏறக்குறைய ஒரு மாதம் கொண்டாடுவார்கள். ஒவ்வொறு வார இறுதியிலும் பெருநாளைக்குறிய விருந்து இருக்கும்.

மெய்யாலுமே இது ஒரு மீள்பதிவுதானுங்க !
ZAKIR HUSSAIN

6 Responses So Far:

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்
ஈத் முபாரக் -
மலேசியா பற்றிய பெரு நாள் ச்ம்பந்தமான தகவல்கள் அருமை- இந்த ஒரு மாத காலகட்ட்த்தில் அவர்கள் நெருங்கிய சொந்தக்காரர்கள் வீட்டுக்கு குடும்பசகிதமாக விருந்தோம்பல் கடைபிடிப்பது பரஸ்பரம் சகஜமாகும்

sabeer.abushahruk said...

இந்த இறைத் துதியில் இணைந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.


http://www.satyamargam.com/2011

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நன்றி
சத்தியமார்க்கம்.com


யா அல்லாஹ்!

தாகத்தில் தொண்டை
தகிக்கையில்
ஒவ்வொரு துளி நீரின்
மூலக்கூறும்
உன்னருள் பொதிந்த
மூலம் கூறும்.



புசிக்காமல்
பசியின் சுவையை
ருசித்திருந்தோம்
சாவைக்கூட
சாத்தியப்படுத்தும்
பட்டினி பற்றிப்
பட்டுத் தெளிந்தோம்.

உறக்கம் ஜெயிக்கும்
வைகறைப் போதில்
இமைகளில் ஏறிய
சுமைகள் அழுத்த
நின்னருள் நாடி
விழித்திருந்தோம்.

"பொருளில்லார்க்கும் இவ்வுலகுண்டு;
நம்மில் அவர்தம் பங்குண்டு"
உன் வேதம் பயின்று
பொருளில்லார்க்குப்
பரம்பொருள் நின்றன்
அருள்தனை நாடி
மெய்ப்பொருள் அறிந்து
கைப்பொருள் பகிர்ந்தோம்

சில்லறையாகவும் மொத்தமாகவும்
நற்செயல் செய்தோம்
பதிந்து வைப்பாய் இறைவா!
மறுமையின் மைதானத்தில்
எழுப்பப்படும் நாளில்
கூட்டியும் பெருக்கியும் நன்மையை
ஏட்டில் வைப்பாய் - சொர்க்கம்
காட்டிவைப்பாய்.

எல்லா நேரமும் உன்
நினைவிருந்தும்
ஐவேளை வணக்கத்தில்
அமைதி கண்டோம்
இரவிலும் தொழுதோம்
இறையுனைத் துதித்து.

இறைமறைதனை
அனுதினம் ஓத
அனுக்கிரகம் செய்தாய்
புரிந்த வசனங்களால்
புல்லரித்த போதும்
பொருளறியா வசனங்கள்
பலநூறு கடந்தும்
புனிதம் புரிந்தே
படிப்பதைத் தொடர்ந்தோம்.

தூறல் அருட்கொடை மாறி
சாரலாய்ப் பொழிய
கடைசிப் பத்தில்
அடைமழை கண்டோம்
அகக்குடை மடக்கி
அளவற்ற நின்றன்
அருள்மழையில் நனைந்தோம்.

இருளைக் களைந்து
நின்றன்
அருளொளி நிறைத்த
இத்தகு மாதம்
இனியொரு முறை
எம்மை அடைய
அருள்புரி இறைவா!

அதுவரை இந்த
அற்புத மாதம்
அருளிய மாற்றம்
நிலைபெறச் செய்வாய், இறைவா!

சபீர்

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த மாதிரி நம் ஊரிலும் இருந்தால் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சினைகள் ஓய்ந்து இருக்குமே. .. அந்த நாள் எப்போது தான் வரும//

அன்புச் சகோ.ஜாகிர் ஹூஸைன்,
பெருநாள் வாழ்த்துகள்
நீங்கள் குறிப்பிட்டுள்ள இதே மாதிரியான எண்ணம் என்னுள் நீண்ட நாட்களாக உள்ளது; அதுவும், பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் பழக்கம் இருக்குமானால்.... என்று ஏங்கினாலும், அல்லாஹ்வும், அவனது இரசூல்(ஸல்) அவர்களும் அனுமதிக்காத வரை அவ்வண்ணம் செய்திட முடியாது என்பதால் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கும் நீங்கள் படத்தில் காட்டிய வண்ணம் பெற்றோரின் - உறவினர்களின் “கைகளில் முத்தமிட்டு” நம் அன்பை வெளிப்படுத்திக் கண்ணீர் விட்டு “மன்னிப்பு”க் கேட்கும் பழக்கமாவது உண்டாகுமானால் உறுதியாக முதியோர் இல்லங்கள் இல்லாத புதியதோர் உலகம் காண்போம் என்று சொல்லத் தூண்டிய உங்களின் வைரவரிகளை எழுதியக் கரங்கட்கு “முத்தங்கள்”.

நீங்கள் மலேசியாவில் இருந்தாலும் இந்தியாவில் பெற்றோர்களுடன் பெருநாளில் இருந்தாலும் இவ்வண்ணம் “மன்னிப்பு”க்கேட்கும் பழக்கம் உள்ளவராக இருந்தீர்களா? ஆம். என்றால் நீங்கள் பேறு பெற்ற புதல்வன்!!

என் மச்சானின் இறப்பினால் ஆழ்ந்த துக்கத்தில் உள்ள எங்கட்கு ஆறுதல் துஆ செய்த (தனி மின்மடலில்) அனுப்பிய செய்திக்கும் ஜஸாக்கல்லாஹ் கைரன். உங்களின் துஆவை அல்லாஹ் கபூல் செய்து எனக்கும் என் ராத்தாவுக்கும் என் மருமக்கட்கும் பொறுமை எனும் பொக்கிஷம் அருள்வானாக, ஆமீன்!

அப்துல்மாலிக் said...

மீள் பதிவா இருந்தாலும் ஒவ்வொருபெருநாளைக்கும் பிரசுரித்து சில பல நல்ல விசயங்களை நாம் கடைப்பிடிக்க ஏதுவா இருக்கும்லே குறிப்பா வாப்பா/உம்மாவை சந்திப்பது...

புதுசுரபி said...

பெருநாளை, மலேஷியாவில் கொண்டாடிய விதத்தில் அழகாக எழுத்தோடு அழைத்துச் சென்றிருக்கிறார் சகோ. ஜாஹிர் ஹுசைன் அவர்கள்.
நல்ல பண்புகள் கண்டேன்.
திட்டமிடல் அறிந்தேன்.
கடைப்பிடிக்க வேண்டியவை கற்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு