புடமிடு தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
16 Responses So Far:
எட்டு மாதத்திற்குப் பின்வந்திட்ட ரமலானை
இட்டமாய் வாழ்த்தியே விடையனுப்பக் கண்ணீரால்
மட்டிலாத் துயரினை அருவியாய் வரச்செய்யும் -அபுல்
கலாமெனும் கவிஞரின் கவியே கவி!
ஏங்க வைக்கும் ரமதான் !
அதை சொல்லில் வடித்து
கவிதையாய் படம்மிட்டு
மனதை வருடும் கலாம்
காக்காவின் கவிதை !
அற்புத மாதத்திற்கான அழகான வழியனுப்பு!
அமல்களைக் கொண்டு சேர்க்கும் துஆவுக்கு ஆமீன்!
நன்றி, கவியன்பன்!
பொழியும் அன்போடு
வழியனுப்பும் பன்போடு..
கவிதையின் கருவே
பிரார்த்தனையின் சாரல்.. !
//பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்//
தினம் தினம் மனிதனுக்கு பொறுமையை ஊட்ட இறைவனால் ஏற்படுத்த பட்ட ஏற்பாட்டை 4 வார்த்தையில் எளிதாக புரிய வைத்து இருக்கிறீர்கள்.
வழியனுப்பும் கவிதை விழிகளை நிறைத்துவிட்டது. வாழ்த்துக்கள் அன்பு கவியன்பன் கலாம் அவர்களே!
அற்புத மாதத்திற்கான அழகான வழியனுப்பு!
அமல்களைக் கொண்டு சேர்க்கும் துஆவுக்கு ஆமீன்!
இன்று என் மச்சான் அவர்கட்கு (துபையில்) நினைவிழந்த நிலையில் ஹாஸ்பிட்டலில் ஐ சி யு வில் சிகிச்சை பலனின்றி இருப்பதால் அவசரமாக துபை வருகின்றேன்; இன்ஷா அல்லாஹ் நாளை நேரம் கிடைக்கும் பொழுது பின்னூட்டம் இடலாம் என்று எண்ணி , இப்பொழுது துபைக்குப் புறப்பட்டு வருகின்றேன்; அவர்கள் ஹக்கில் எல்லாரும் துஆ செய்யுங்கள்.
கவிதையில் இது புனிதம்.
------------------------
தங்கள் மச்சான் நலனில் துஆ செய்கிறேன்.இன்சா அல்லாஹ் குணம் கிடைக்கும்.
தங்கள் மச்சான் நலனில் துஆ செய்கிறேன்.இன்சா அல்லாஹ் குணம் கிடைக்கும்
தங்களின் மச்சான் அவர்களின் உடல் நலம் பற்றி அடிக்கடி நீங்கள் உரையாடும்போது கவலையுடன் குறிப்பிடுவீர்கள். அவர்களுக்கு அல்லாஹ் நல்ல சுகத்தை தர துஆக்கள் செய்கிறோம். இறைவன் காதுகளில் இந்த துஆக்கள் கேட்கும். நிறைவேற்றுவானாகவும். ஆமீன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
தங்கள் மச்சான் நலனில் துஆ செய்கிறேன்.இன்சா அல்லாஹ் குணம் கிடைக்கும்
அன்புச் சகோதரர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும்
என் மச்சான் அவர்கள் வஃபாத் ஆகி விட்டார்கள்(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)அவர்களின் வஃபாத் செய்தியை வெளியிட்ட அதிரை நிருபர், அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை வலைத்தளங்கட்கும், நேற்றிரவு மரணச் செய்தி அறிந்ததும் அரசு சம்பந்தப்பட்ட விடயங்கட்காக அலைந்து எங்கட்குரிய ஆவணங்களைப் பெற்று தந்த அதிரை அனைத்து முஹல்லா துபை கிளை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உடன் வந்து ஆறுதல் சொன்ன என் நண்பர்கள்/ உறவினர்கள் அனைவர்க்கும், வியாழன் அன்று என் அன்பு மச்சானைக் காண அபுதபியிலிருந்து துபைக்கு என்னை வாகனத்தில் அழைத்து வந்த கவிவேந்தர் சபீர், அன்பு நெறியாளர் அபூஇப்றாஹிம் , சகோ.அலாவுதீன் ஆகியோர்க்கும் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கட்கு ஆறுதல் சொல்லும்/ சொல்லிக் கொண்டிருக்கும் அனைவர்க்கும் எங்கள் நன்றியை ஜஸாக்கல்லாஹ் கைரன் எனும் துஆவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
என் இக்கவிதைக்குப் பின்னூட்டமிட்ட அறிஞர் ஆரீப், கவிஞர்அப்துற்றஹ்மான், உளவியலார் ஜாஹிர் ஹுஸைன், கவிவேந்தர் சபீர்,அன்பு நெறியாளர் அபூஇப்றாஹிம், எழுத்தாளர் ஜெஹபர் சாதிக், மூத்த சகோ. பொருளாதார நிபுணர் இப்றாஹிம் அன்சாரி காக்கா,கல்வியாளர் யாசிர் மற்றும் வார்த்தை வித்தகர் யாசிர் ஆகியோர்கட்கு என் உளப்பூர்வமான நன்றியை ஜஸாக்கல்லாஹ் கைரன் எனும் துஆவுடன் ஏற்புரையாக ஏற்க வேண்டுகின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் மற்றுமோர் ஆக்கத்துடன் சந்திப்போம்.
வார்த்தை வித்தகர் கிரவுன் என்று திருத்தி வாசிக்கவும்; அச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்
இன்று அசர்க்குப் பிறகு நடைபெற்ற என் மச்சான் அவர்களின் ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு அவர்கள் ஹக்கில் துஆ செய்த அனைவர்க்கும் எங்கள் குடும்பத்தினார் சார்பில் நன்றியை தெரிவிக்கின்றோம், ஜஸாக்கல்லாஹ் கைரன்
Post a Comment