Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

செய்திகள் வதைபடுகின்றன ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2012 | , , ,

செய்திகளால் வதைப்பது - சபீர் அபுஷாருக்

முக்கிய செய்திகள்:

-அமெரிக்க முன்னால் கவர்ச்சி நடிகை மர்லின் மான்றோ மருத்துவமனையில் அனுமதி

-லட்சத்தீவுகளில் ஒன்றான டகால்ட்டியில் திருவிழா

விரிவான செய்திகள்:

குடியரசுத்  தலைவர் தேர்தலில் எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்தும்கூட சொர்ப்ப வாக்குகளே பெற்றாலும் சோர்வுறாத சங்மா இறுதிவரைப் போராடிவிடுவது என்று தீர்மானித்து பிரணாப் பதவி ஏற்கச்செல்லும்போதுகூட கடைசி முயற்சியாக அவர் ஜிப்பாவைப் பிடித்து இழுத்த காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இழுத்த இழுப்பில் பிரனாபின் ஜிப்பா கிழிந்ததால் முகர்ஜியின் முகம் அலர்ஜியால் வெளிறியது.

இந்தச் சம்பவம் பற்றி சங்மாவிடம் கேள்வி எழுப்பியபோது நைட்மேரிலிருந்து விழித்ததுபோல் மலங்க மலங்க விழித்த அவர் கூறினார், "தமிழ்நாட்டு ஓட்டுகள் எனக்கு மட்டுமே.  அம்மாவுக்கு நான் உடன்கட்டை பட்டிருக்கேன்" என்று உடன்படுவதையும் கடமைப்பட்டிருப்பதையும் கலந்து உளறிக்கொட்டினார்.

அமெரிக்க முன்னால் கவர்ச்சி நடிகை தனது 86வது வயதில் கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வந்தது அறிந்ததே. தற்போது அவர் ஐ சி யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய அமெரிக்க பெருசுகள் பெருமூச்சுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி அம்மா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "மைனாரிட்டி கருனாநிதியின் கடந்தகால அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக உழைத்த கழக கண்மணிகளுள் ஒருவரான தூக்கனாம்பட்டி ஒன்றிய தலைவர் மொக்கச்சாமியின் மறைவு தமக்கு வருத்தத்தைத் தந்ததாகவும், பிறப்பிலேயே அநாதையான மொக்கச்சாமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறிக்கொள்வதோடு  கட்சி நிதியிலிருந்து பத்து லட்சம் உதவித்தொகையும் வழங்க தாம் உத்தரவிட்டிருப்பதாகவும்" அறிவித்தார். அந்த உதவித்தொகையை மொக்கச்சாமியே நேரில் வந்து அம்மா கால்களில் விழுந்து பெற்றுக்கொண்டார்.

காட்டான்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து தம் மனைவி கருப்பாயியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பப்பரப்பாவை... மன்னிக்கவும்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பாயிக்கும் வெளித்தெரு வெள்ளைச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற காத்தமுத்து பக்கத்துத் தெரு பச்சையம்மாளுடன் தானும் கள்ளத்தொடர்பு வைத்து மனைவியை பழிக்கு பழிக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸில் சரணடைந்த காத்தமுத்து, "தன் மனைவி கருப்பாயி தன்னிடமும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளாததால்தான் ஆத்திரமுற்று கொன்றதாக" கூறினார்.

அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த காட்டான்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் கேனய்யன் இந்த கேஸில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து கேசை சி பி ஐக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தின் தரித்திரம்...சாரி... தலையெழுத்து சூப்பர்ஸ்ட்டார் அவர்கள் கலந்துகொண்ட காவடி தூக்கும் விழா ஒன்றில் அவரின் அடுத்த திட்டம்பற்றி கேட்கப்பட்டபோது, ஒற்றை ரூபாய் காசை லாவகமாகச் சுண்டி வீசிவிட்டு எந்திரத்தனமான குரலில், "கதம் கதம்" என்று கூறினார்.  அதன் அர்த்தத்தை முழுதும் விளங்கிக்கொண்ட ரசிகர் மந்தை " தலீவா கொண்ணுட்டே" என்று கோஷங்களை எழுப்பினர்.

அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய செய்தியாளாரின் கேள்விக்கு பதிலளித்த பாப்பர்...ஐ மீன்... சூப்பர் ஸ்டார், "ஷங்கர் டைரக்ட் செய்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன் இமையமலை போகாமல் இருந்தால் கே எஸ் ரவிக்குமாருக்காக ஒரு படம் பண்ணப்போவதில்லை என்று ஆண்டவன் சொல்றான் (முஷ்டியை மடக்கி தன்னை நோக்கி விரலை நீட்டி) முடிக்கிறான்" என்றார். கேள்வி கேட்ட செய்தியாளரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி அவர் அரக்கபறக்கக் கிளம்பி ஓடினார்.

விளம்பர இடைவேளைக்குப் பிறகு செய்திகள் இடறும்.

ச்சப்பாத்தி மெதுவாக வரவேண்டுமா? கவலைப்படாமல்   நெஹன் லன்க்காவில் ஏற்றி விடுங்கள். அது எப்பவுமே மெதுவாகத்தான் வரும். சமயத்தில் வரூம்...ஆனா வராது.

***

"வாங்கய்யா.  உங்க மகன்  குமார் நல்லாருக்கானா?"

"அடப்பாவி. நான்தான்டா குமார். நீ கொடுத்த ஆண்களுக்கான ஃபேர்நெஸ் க்ரீம் பயன்படுத்தினேன். சட்டுனு மூஞ்சிக்கு மட்டும் வயசாயிடுச்சிடா பாவி"

***

சொதப்பகல்கள் தொடர்கின்றன...

பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாடங்களை மாற்றக்கோரி நாமக்கல் மாவட்ட அரசினர் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியாளர் மனீந்த்தர் சிங் பிரச்னையை விசாரித்தபோது மாணவர்கள் காட்டிய சர்ச்சைக்குரிய மூன்று பாடங்களும் மலையாளத்தில் இருப்பது கண்டு "படத்தில்தன் மலையாள பிட்டுகள் போட்டு படுத்தறாங்க...பாடத்திலேயுமா?"என்று அதிர்ச்சி தெரிவித்தார். கேள்விகளும் மலையாளத்திலேயே கேட்கப்பட்டுள்ளதைக் கண்டு கொதித்துப்போன மாணவர்கள் சுமுகமான தீர்வு ஏற்படும்வரை சாலையிலேயே சமைத்துச்சாப்பிடும் போராட்டத்தை அறிவித்ததால் போக்கு வரத்து புளகாங்கிதம் அடைந்தது. இந்த சாலை மறியல்  எதிர்கட்சிகளின் சதி என்றும் இதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் அரசு அறிவித்தது கண்டு குழம்பிய செய்தியாளர்கள், ஏற்கனவே அந்தச் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இந்த மறியலால் மேற்கொண்டு பாதிக்கப்படப்போவதில்லை என்பதை உணர்ந்து சூசகமாக அறிக்கை விட்ட அரசாங்கத்தின் அரசியல் சாணக்கியத்தனம் கண்டு வியந்து போயினர்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் அப்புக்குட்டன் நாயர், கப்பையும் கட்டன் காப்பியுமாய்ட்டு பறைகுகையில், " பத்து பதினைந்நு பாடஙளு தமில்ல இருக்கும்போல் மூநு பாடம் மலையாளத்ல ஷேத்திரத்தில் வாயிக்கட்டெ, ஒந்நு புத்திமட்டில்லா அன்னாச்சி." எந்நு பரைஞிட்டு ஓஃபீஸ்லைக்குப் போய் வாதில் அடைச்சு.

விளையாட்டாய் சில செய்திகள்:

இலங்கைக்கு எதிரான இந்திய அணி இரண்டாவது போட்டியில் 130க்கு சுருண்டதைப்பற்றி கேப்ட்டன் தோனி கூறுகையில், " விக்கட்டுகள் மலமலவெனச் சரிந்ததும் இலங்கை சிறப்பாகப் பந்து வீசியதும்தான் காரணம்" என்று புதிரை அவிழ்த்தார். “கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா?” என்ற கேள்விக்கு, "மற்ற அணிகளின் தோல்வியாலேயே இந்தியா எப்போதும் ஃபைனலுக்குத் தள்ளப்பட்டு வருவது ரசிகர்கள் அறிந்ததே. ஆனால், இம்முறை இலங்கை இந்தியா இரண்டு அணிகளே களத்தில் இருப்பதால், அந்த வாய்ப்பு இல்லாததால், கடினமாகப் போராடி ஃபைனலுக்கு வருவோம்" என்று நம்பிக்கைத் தெரிவித்ததோடு, "வி வில் ப்ளே அவர் நேட்ச்சுரல் கேம். கோப்பையைக் கைப்பற்றுவது நோக்கமல்ல. பட் தி ட்ரோஃபி இஸ் அவர்ஸ்" என்று கட்டை விரல் உயர்த்தியதின் மர்மம் யாருக்கும் பிடிபடாத ஒரு ஃபிக்ஸிங் ஆகவே இருக்கிறது.

லண்டன் ஒலிம்ப்பிக்கில் தங்கம் வெல்லும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மின்ட்டன் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவுகளை இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறியடித்தன. "தங்க விலை எக்குத்தப்பாக ஏறிப்போயிருப்பதே தங்கப்பதக்கம் வாங்கமுடியாத தோல்விக்கு காரணம்” என்று விளையாட்டு வீராங்கனைகள் சொன்னபோது மெய்சிலிர்த்து மயிர் கூச்செறிந்தது.  “அட்ஷய கிருதிகளில் மட்டும் தங்கம் வாங்கும் பழக்கத்திலிருந்து இந்தியா மீளவேண்டும்” என்று விளையாட்டுத்துரை அமைச்சர் சோம்பேரி சுந்தரம் கருத்துத் தெரிவித்தார்..``

இனி தங்கம் வெள்ளி பற்றிய விலை நிலவரம்:

தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஆபரணத்தங்கம் சவரனுக்கு 22,500 க்கு விற்கப்படுகிறது. . இது நேற்றைய விலையைவிட 120 ரூபாய் கூடுதலாகும். நாளைய விலையைவிட 120 ரூபாய் குறைவாகும். வெள்ளியின் விலையில் இந்த பிறப்பில் மாற்றமில்லை.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் கீழிறங்கி குறிப்பிடமுடியாத அளவுக்கான நிலையில்லாத மதிப்பைத் தொட்டது. இனி வரும் காலங்களில் ரூபாய் அச்சிடப்படுவதற்கான காகிதத்தின் எடையைக் கூட்டுவதன் மூலமே நாம் டாலரைவிட வெயிட்டான கரன்ஸியை உருவாக்க முடியும் என்று கருத்து தெரிவித்த நிதி அமைச்சரின் அறிவைக் கண்டு ஐ நா சபையே அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.

வா(வரண்ட)நிலை அறிக்கை:

"ஷார்ஜாவில் வாணம் மேகமூட்டமாக இருந்து ஓரிரு துளிகளைத் தூவியதாக" கனவுகண்டு பீதியில் விழித்த கந்தசாமி கூறினார். அந்தத் துளிகளைக் காட்டி "ஏஷ் ஆதா" என்று கேட்ட அமீரக அராபியக் குழந்தைகளுக்கு "இதுதான் மழை என்பது" என்று விளக்கினர் அரபாபுகள்.

இதற்கிடையில் மழையில்லாமலேயே குளித்த தோரணையில் இருந்த வலைகுடா வாசிகள் ஆங்காங்கே டிஹைட்ரேஷனில்(DEHYDRATION) மயங்கி விழுந்தனர். வெப்ப நிலவரம்: துபை உண்மையில் 50 டிகிரி ; அறிவிக்கப்பட்டது 45 டிகிரி.

வெளிநாட்டுச் செய்திகளை வெளிநாட்டில் வசித்து வரும் அசத்தல் காக்கா என்கிற மருத்துவக் காக்கா பாடிகாட்…சாரி படிக்கட்டுகள் புகழ் ஜாகிர் அவரகள் தொகுத்து அடிப்பார் என்று கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிகைகளை தவறாமல் வாசியுங்கள்… மேலும் விபரங்களுக்கு editor@adirainirubar.in கேளுங்கள் (அதனை பதிவுகளாக வெளியிட்டால் நான் பொறுப்பல்ல)...

சபீர் அபுஷாருக்

32 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமைச் செய்தியாளர்!
வதைக்கப்பட்ட செய்திகளல்ல!
உண்மையாகவும் சில செய்தியாக்கப் படுகிறது என்பதே உண்மை.
தங்கக் கணக்கில் தப்பு இருக்கு தலைவரே!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நன்பர்கள் இருவர் போனில் பேசிக்கொள்கிரார்கள்
நன்பன் 1; உனது பிறந்த நாலுக்கு கிளி ஒன்று பரிசாக
அனுப்பி இருந்தேனே கிடைத்ததா நன்றாகயிருந்ததா

நன்பன் 2; ஓ கிடைத்தது நன்றாகயிருந்தது சூப்பர் நல்ல ருசி

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாட் நியூஸ்( என் அன்பர்கள் , மூத்த சகோதர்கள் எல்லாரும் நான் சொல்ல இருப்பதை மன்னிக்கவும் ,என்னா ஒரே பீடிகைன்னு பார்காதிங்க!)கண்ணியமிக்க நோன்பு நேரம் எல்லா நகைச்சுவை செய்திகளும் ஒரு மாற்றத்திற்குத்தான்.ஆனால் சில எடிட் செய்தால் நலம் என்பது என் அபிப்பிராயம்.அமெரிக்க முன்னால் கவர்ச்சி நடிகை தனது 86வது வயதில் கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வந்தது அறிந்ததே. தற்போது அவர் ஐ சி யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய அமெரிக்க பெருசுகள் பெருமூச்சுடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.காட்டான்பட்டியைச் சேர்ந்த காத்தமுத்து தம் மனைவி கருப்பாயியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பப்பரப்பாவை... மன்னிக்கவும்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது........தமிழகத்தின் தரித்திரம்...சாரி... தலையெழுத்து ....

crown said...

இந்த மூன்றும் நகைச்சுவைக்காக என்றாலும் ( என்னை தப்பா புரிஞ்சுக்காதிங்க அன்பானவர்களே)தவிர்க்கலாமே என்பதுதான் என் அபிப்பிராயம்.

Yasir said...

காக்கா நல்ல வதை....சாரி கடி...சாரி செய்திகள்

அதிரை சித்திக் said...

கவிஞர் சபீர் ...கட்டுரையாளர் சபீர் ..செய்தியாளர் சபீர் ..
அ.நி .நல்ல பத்திரிக்கையாளர் கிடைத்துள்ளார் ..
செய்தி வடிவமைப்பது ஒரு கலை ..நேர்த்தியாக
செய்துள்ளார் சபீர் அவர்கள் ..டிவி யில் வாசிக்கும்
செய்திக்கும் ..செய்தி தாளில் வரும் செய்திக்கும்
நல்ல வித்தியாசம் உண்டு ..நல்ல முயற்சி ..

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய கிரவுன்,
உங்கள் விருப்பத்தை நிராகரிக்கும் நோக்கம் என்றைக்குமே கண்டிப்பாக எனக்கு இல்லை. நீங்கள் பாராட்டும்போது உஙகளைப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டும்போது உங்களையேத் தவறாகப் புரிந்துகொண்டுவிடும் பக்குவமற்றவன் அல்லன் நான்.

இன்னும் சொல்லப்போனால், தவறு என்று சுட்டிக்காட்டப்படும்போது கூடுதல் கவனத்துடன் வாசித்து கிரகிப்பவன் நான்.

சரி, விஷயத்திற்கு வருவோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று செய்திகளையும்(!) நீக்குவதும் நீக்காததும் அதிரை நிருபரின் தலைவலி. இதற்கிடையே, நான் எழுதியதைச் சரிதான் என்று நியாயப்படுத்த இந்த அவகாசத்தை எடுத்துக்கொள்கிறேன்.

முதலில், நடிகை மேட்டரில் எந்த இடத்தில் வரம்பு மீறியிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “கவர்ச்சி” என்ற வார்த்தையா? ‘அலங்கோலமான நடிகை’ என்று மாற்றினால் ஏற்புடையதாகிவிடுமா? அல்லது நடிகை என்னும் வார்த்தையா? அல்லது அமெரிக்க பெருசுகளா? நான் அமெரிக்கப் பெருசுகள் என்று சொன்னது வெள்ளைக்காரர்களை, வெள்ளையாயிருந்தாலும் உஙகளை அல்ல (). பயப்படாதிய. ஒரு பைசாவுக்குப் பெறாத செய்தியைத்தான் இப்பவெல்லாம் முக்கியச் செய்தியாக வாசிக்கிறாய்ங்க என்று குட்டத்தான் இந்த மேட்டர்.

கள்ளத்தொடர்பு சார்ந்த கொலைகள் இல்லாத செய்தியே அன்றாடம் கிடையாது, கிரவுன். தொலைகாட்சி, பத்திரிகை, செய்தித்தாள் எல்லாவற்றிலும் மனைவி கணவனையோ கணவன் மனைவியையோக் கொல்வது 80 விழுக்காடு கள்ளக்காதல்/கள்ளத்தொடர்பு விவகாரங்களில்தான்.

அதிகமாக கள்ளத்தொடர்பு சம்மந்தமான கட்டுரைகள், கதைகள் எழுதப்பட்டுவரும் இந்த காலக்கட்டத்தில் அதை செய்தியாகத் தந்தாலும் அதற்கு எதிரான ஓர் எண்ணம் இழையோடுவதைக் கவனிக்கவில்லையா?
கள்ளத்தொடர்பு மலிந்துவிட்டது என்பதும் இவிங்கல்லாம் கொலை செய்யப்பட்டுதான் சாவாய்ங்க என்னும் மெஸ்ஸேஜ்() / எச்சரிக்கை இருக்கா இல்லையா?

ரஜினியைப்போட்டு கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். வாணாங்கிறிய? அந்தக் கால ரஜினி ரசிகரோ? இவனையெல்லாம் பாராட்டினால்தான் கிரவுன் எழுத வேண்டாம்ங்கனும். நானோ செய்தி என்ற போர்வையில் அவனை அவமானப்படுத்தித்தான் இருக்கிறேன். இதுகூடவா ஹராம்?

“நோன்பு நேரத்தில வேண்டாமே” என்று சொல்லியிருக்கீங்கள்ல்ல…இது பேச்சு.
மற்றபடி இதைப்பற்றியெல்லாம் எழுதக்கூடாது என்றால், “பூனைக் கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போனது” என்று சொன்ன கதையாகத்தான் ஆகும்.

சாக்கடை என்று நான் ஒதுங்கிப் போவதைவிட அதை சுட்டிக்காட்டி ஏனையோரையும் ஒதுங்கச் சொல்வதோடு “சுத்தம்பண்ணுங்கோடா” என்று சொல்லி வருவதே என் பாணி.

அதெல்லாம் முடியாது. நீக்கியே தீரவேண்டும் என்றால்…எனக்கு கிரவுனை விட இந்த அட்டு செய்திகள் முக்கியமல்ல…உடனே நீக்கி விடலாம். என்ன சொல்றிய?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமை காக்கா கவி சக்கரவர்தியே! முதலில் இந்த செய்தி கொலைகளைப்பற்றி எனக்கு சில விசயம் தெரிய செய்தீர்கள் அப்பொழுதே வாய் விட்டு சிரித்தேன். மேலும் இதை நோன்பு என்கிற காரணத்திற்கு மட்டும் நான் சொல்லவில்லை! நீங்கள் தான் இளம் மொட்டுக்கள் தடுமாறுவதை பற்றி கவலையுடன் கவிதை படைத்தவர். மேலும் உங்கள் எல்லா ஆக்கம், பேச்சில், நடவடிக்கையில் சமுதாய சிந்தையே அதில் மேல் நோக்கி இருக்கும்.இப்ப நான் குறை சொல்வது போல் சொன்னதற்குறிய காரணம் எப்பொழுது நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நகைச்சுவை செய்திகளை தெரிவித்தீர்களோ அப்பொழுதே சொல்லியிருப்பேன்.ஆனால் இந்த சபையில் சொல்ல காரனாம்???????? என்னை பற்றி நங்கு அறிந்தவர் நீங்கள்! நான் சொல்லபோவதும் உண்மை. சப்பைகட்டு அல்ல. சப்பை கட்டு கட்டும் கோழையும் அல்ல. நான் இங்கே கேட்ருக்காவிட்டால் உங்களைப்பற்றி புரியாமல் யாரவது கேட்டிருந்தால் ? அதற்கு முன் "அடியை" நான் வாஙுவதுதான் நல்லது என தீர்மானித்தேன் மேலும் அதற்கு நீங்கள் கன்டிப்பாக விளக்கம் தருவீர்கள். இதுதான் ரகசியம். இதை இங்கே தெரிவிப்பதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை.(முன்பு இங்கே தெரிவிக்காமல் நெரியாளரிடம் பல விசயம் தெரிவிதிருக்கேன் உடனே அவர்களும் கலந்து என் கருத்து சரியெனில் பலமுறை சரி செய்துள்ளனர் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்).இதையெல்லாம் மீறி யாரவது கிரவுன் நீ சரியான ஜால்ரன்னு சொன்னா சபிர்காக்கமாதிரி நல்லவர்களுக்கு திறமையானவர்களுக்கு நான் என்றும் ஜால்ரவாக இருப்பேன் .

Shameed said...

செய்திகள் அனைத்தும் சூப்பர் ஒரு குறை விளம்பரம் மிக சொற்பமாக இருந்தது கம்பெனிக்கு கட்டுபடி ஆனதா ?

sabeer.abushahruk said...

ரொம்ப மகிழ்ச்சி கிரவுன். எனக்குக்கூட லேஸா டவுட் இருந்துது. பல சந்தர்ப்பங்களில் உங்கள் ரசனையும் பார்வையின் கோணமும் என்னை ஒத்து இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். போட்டு வாங்குகிறாரோ என்கிற சந்தேகம் தீர்ந்தது.

திடீரென்று என்ன "தம்பி தன் காக்காவின்" குச்சியை கையில் எடுத்துவிட்டார் என்று குழம்பினேன்.

தம்பி அர அல பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று அடக்கித்தான் வாசிக்கிறோம் தெரியுமா?

sabeer.abushahruk said...

//தங்கக் கணக்கில் தப்பு இருக்கு தலைவரே!//

தொண்டர்படையின் இளைஞரணித் தலைவரே, அதிரையின் போர்வாளே, லண்டனில் பவுன்ஸில் புழங்கும் தொண்டனே, உம்மிடமிருந்து தப்ப முடியுமா எந்த தப்புக்கணக்கும்?

கூறும்...கூறிப்பாரும்...எங்கு பிழை கண்டீர்? சொல்லிலா பொருளிலா?

நோன்பு வைத்துக்கொண்டு எழுதும்போது வரும் தங்க விலைப்பிழைகளைச் சற்று திருத்தி வெளியிடு என் சிங்கமே

sabeer.abushahruk said...

//ஒரு குறை விளம்பரம் மிக சொற்பமாக இருந்தது கம்பெனிக்கு கட்டுபடி ஆனதா ?//

மேலும் இரண்டு விளம்பரங்களைப் போட்டு நட்டத்தைச் சரி கட்டவும்.

“உங்க ட்டூத் ப்பேஸ்ட்டில் உப்பு இருக்கா?”

“என்ன அப்பு கேட்டிய?”

“ப்பேஸ்ட்டில் உப்பு இருக்கா..ன்..னு..?”

“எப்ப இருஞ்ச்சி இப்ப இருக்க?"

“அப்ப உங்க பல்லு குப்பையிலே”

“என்ன சொல்லுதிய?”

“உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே. உப்பு இல்லா பல்லும் குப்பையிலே”

“ஙே”

“அப்படீன்னா, குப்பை இருப்பது குப்பைத் தொட்டியிலே. அப்ப உங்க வாய் குப்பைத்தொட்டி. கார்ப்பரேஷன் காரன் வந்து கையை உட்டுத் துலாவ்றதுக்குள்ள எங்க ப்பேஸ்ட்டை யூஸ் பண்ணுங்க”

***
“அவ என் மனைவிடீ”

“அடப்பாவி மனுஷா, அப்ப நான்?”

“ஹிஹி. நீயும் என் மனைவிதான்.”

“அப்ப ஏன்யா சொத்தையெல்லாம் அவ பேர்ல மட்டும் எழுதி வச்சே. சொல்லிய்யா?”

“சொத்துத்தான் அவளுக்கு. உனக்கு நான் இருக்கேனே”

“என்னது 70 கோடி ரூவா சொத்தை அவளுக்குக் கொடுத்திட்டு…70 வயது சொத்தையை எனக்குக் தர்ராளா”

---திங்கள் முதல் வெள்ளிவரை “செல்லமே”

sabeer.abushahruk said...

எம் எஸ் எம் சபீர்,

நீஙக எம்.எஸ்.எம். சபீர்

நானு எம்.எஸ்.எம். நகர் சபீர். ஹிஹி.

sabeer.abushahruk said...

வீட்டிலேயும் ஒருத்தரும் இல்லை, தனியா இருக்கேன். இங்கேயும் பேச்சுத் துணைக்குக்கூட ஒருத்தரையும் காணோம். போங்கப்பா பயமா இருக்கு. நான் குர் ஆன் ஓதப் போறேன்.

மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன போட்டியில் கீழ்கண்டவர்களில் யார்யார் கெலிக்கப்போறாங்களோ தெரிய்ல:

நூர் முஹமது காக்கா,
இபுறாகீம் அன்சாரி காக்கா,
அபு இபுராகீம்
தாஜுதீன்
கவியன்பன்
கவி புகாரி
ஜாகிர்
அலாவுதீன்
எம் எஸ் எம் நெய்னா
அமெரிக்க அப்பா
வியட்நாம் ஃபிஸிக்ஸ் பேரா.
என் ஷஃபாத்
தம்பி மீராஷா
மற்றும் சுற்றமு நட்பும்

அதிரை சித்திக் said...

கவி சபீர் அவர்களே ...!
ஏற்புரையில் என்னை மட்டும் மறந்து விட்டீர்களே
உங்கள் தளத்திற்கு வந்த என்னை வரவேர்காதது
விருந்துண்ண வந்த என்னை வரவேற்காமல் ..
வராத நபரை என் அருகிலே விசாரித்து போன்று இருந்தது
நன்றி......

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய சகோ. அதிரை சித்திக்,

அங்கே மணி என்ன ஆகிறது? நீங்கள் என்னை அவ்வளவு பாராட்டியும் நன்றி சொல்ல மறப்பேனா? யாசிருக்கும்தான் இன்னும் நன்றி சொல்லவில்லை. காரணம், நான் இன்னும் இந்த பதிவுக்கான் ஏற்புரையை முடிக்கவில்லை சகோ. இடையில் குர் ஆன் ஓதும் நேரம் வந்துவிட்டதால் 12வது ஜூஸை முடித்துவிட்டுத் தொடரலாம் என்று எழுந்து போனேன்.

//விருந்துண்ண வந்த என்னை வரவேற்காமல் ..// நோன்பாளியிடம் விருந்தா? நோன்பு துறந்ததும் தருவோம்ல விருந்து. பொறுமை ப்ளீஸ்.

அதிரை நிருபர்: வாடா கஞ்சி இப்டி ஏதாவது இருக்குங்க்ளா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா,

காலங்காத்தாலே வதைப்பதை வாசிக்க உட்கார்ந்தேனா அங்கே என்னடான்னா...

ஏற்கனவே சுடச் சுட இருந்த செய்திகளால் சுட்டுடுச்சேன்னு கிரவ்ன் ரொம்பவே ஹாட்டா இருக்குன்னுதும்... சரி சரி ஆரட்டும் மெதுவா வந்து பார்க்கலாம்னு இருந்துட்டேன்.. ஹி.. ஹி.. :)

என்ன கிரவ்னு நல்லாவே ஜால்ரா(தான்பா) ! - அதான் சொல்லிட்டியே... சொன்னாலும் பரவாயில்லைன்னு !!:)

உன்னைய ஒரு புடி புடிக்கலாம்னு இருந்தேன்... ஆனா நீ, அருகில் இல்லையே...

அதிரை சித்திக் said...

இங்கு காலை 8 மணி ..நோன்பு நாட்களில்
தங்களின் விருந்து இப்தார் விருந்தாகத்தான் இருக்கும்
எனக்கும் தம்பி யாசிருக்கும் இரண்டாவது sift விருந்தா ..?
கஞ்சி..வாடா ..மற்றும் சகலதும் இருக்குமா .அல்லது மிஞ்சின
கஞ்சி மட்டும்தானா..
(சும்மா ..கலாய்க ஆசை ..)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கஞ்சி..வாடா ..மற்றும் சகலதும் இருக்குமா .//

மக்களே ! உண்டு உண்டு உண்டு !

அதிரை சித்திக் said...

எம்பாட்டுக்கு ..எதிர் பாட்டு அபு இபுராகிமிடமிருந்தா..?
காஞ்சி சூடா இருகனு ஆம்மா...இல்லைனா ..
நானும் ..தம்பி யாசிரும் ஹோட்டலுக்கு போய் விடுவோம் ..

crown said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//கஞ்சி..வாடா ..மற்றும் சகலதும் இருக்குமா .//

மக்களே ! உண்டு உண்டு உண்டு !
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த பதில் புதிரா இருக்கே! உண்டு என்றால் நீங்கள் எல்லாம் உண்ட பின் மிச்சம் உண்டா? எங்களுக்கெனவே உண்டா? என்பதுதான் சித்திக்காக்கா கேள்வி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு !

உண்டென்றால் உண்டு ! - ஊரில்
உண்டதும் உண்டு !
கண்டதும் உண்டு ! - அவைகள்
எப்படி உருவாகிறது என்பதும் உண்டு !

Yasir said...

//நானும் ..தம்பி யாசிரும் ஹோட்டலுக்கு போய் விடுவோம் ../// சித்திக் காக்கா சிரமத்தை பார்க்காமே !!! :) துபாய்க்கு என் கெஸ்ட்டா ஒரு எட்டு வந்துவிட்டு போய்டுங்க..பாப் அல் ஷாம் என்ற அருமையான ஹோட்டல் இருக்கின்றது...டிரடிஷனல் அரபிக் ரெஸ்டாரண்ட் & ரெசார்ட்ஸ்...ஒரு நோன்பாவது அங்கே திறக்க வேண்டும்

http://www.meydanhotels.com/babalshams/

அதிரை சித்திக் said...

இன்ஷா அல்லாஹ்...!அடுத்த வருடம் ..

துபாய் ..வருகை உண்டு ..அன்பு தம்பி யாசீரை

சந்திப்பேன் ..

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரே!
நிலா தொலைக்காட்சியில்
உலா வர ஆசையா?
அங்கே எங்கள் கவியரங்கக் கவிநிலாவை
அந்நிலாத் தொலைக்காட்சி
தொகுப்பாளினியாக அமர்த்தியது;
செய்திகள் வாசிக்க உண்ங்களை
அப்பூவின் மூலம் சிபாரிசு
செய்யச் சொல்லவா?

நகைச்சுவை என்பது உங்களிடம்
உள்ள நகைக்கடை

குறிப்பு:1)

மறையோதும் நேரம் குறைவாக இருப்பதால், மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் ஆகி விடாது. காலக் குறைவிலும் அ.நி யைப் பார்க்காமல் என் கணினியில் கண் தூங்காது தெரியுமா?

குறிப்பு: 2)

என் ஏற்புரை (”பசிக்க வைத்த...” கவிதைக்கு)காணவில்லையா கண்மணியே! கவிவேந்தே!!

KALAM SHAICK ABDUL KADER said...

//துபாய் ..வருகை உண்டு ..அன்பு தம்பி யாசீரை

சந்திப்பேன் //

தமிழூற்று துபாயில் மட்டும் தான் பீறிடுமா? அபுதபி, ஷார்ஜா வந்து எங்கள் மனவயற்களீல் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ச்சாதோ?

Meerashah Rafia said...

//மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன போட்டியில் கீழ்கண்டவர்களில் யார்யார் கெலிக்கப்போறாங்களோ தெரிய்ல:
..
தம்பி மீராஷா
..
//

ஆஹா...மறைந்திருந்து படித்துவிட்டு போ(பொ)த்திகிட்டு போகலாம்னு பார்த்தா காக்கா கண்ணுல வெளக்கன்னைய ஊத்திக்கிட்டுல பார்கிறாங்க..
ஹ்ம்ம்.. வாசிப்பவர் வயசானவராகிருந்தாலும், வாசித்த செய்தி பழசாகிருந்தாலும் நல்லாத்தான் இருக்கு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புடன் சபீர் காக்கா, செய்தியாளராக்கா...

இப்புடியெல்லாம் சொல்லி புட்டியலே நாளைய அப்பா!

யாருமே இதெ 'கேர்' பண்ணாததாலே நோன்புலே நாந்தான் தப்பா புரிஞ்சேனே என்னவோ தெரியலே!

//தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஆபரணத்தங்கம் சவரனுக்கு 22,500 க்கு விற்கப்படுகிறது. . இது நேற்றைய விலையைவிட 120 ரூபாய் கூடுதலாகும்//

கிராமுக்கு 120 கூடியிருந்தால் 22,500 என்ற விலைப்படி பார்த்தால்
நேற்றைய விலையை விட 960(8x120) ரூபாய் கூடுதலாகும் என்றுலோ இருக்கனும்.

(நாளைய விலையை விட 120 என்பதை வேனுமானால் கணக்கு பிழையாக எடுக்காமல் ஜோக்காக செய்தியை வதைப்பதற்காக வைத்துக் கொள்ளலாம்.

சாரி தலைவரே நாந்தான் புரிஞ்சது தப்போ?

அதிரை சித்திக் said...

அதிரை நிருபர் மூலம் ..
அன்பின் வெளிப்பாடு கூடுதல்
கிடைப்பது உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி
அடைகிறேன் ..என் அம்புள்ள கவியன்பர் கலாம் காகாவையிம் சந்திப்பேன்
இன்ஷா அல்லாஹ் ...

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

//

//செய்திகள் வதைபடுகிறது ! //

இங்கே இலக்கணம் வதைபடுவதை
அங்கே தமிழறிஞர்கள் மறைந்திருந்தே பார்க்கவில்லையா?

அல்லது,
வதைபடும் செய்திகள் என்பதால்
உதைபடும் இலக்கணம் என்றானதா?

Ebrahim Ansari said...

//மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன போட்டியில் கீழ்கண்டவர்களில் யார்யார் கெலிக்கப்போறாங்களோ தெரிய்ல://

இந்த லிஸ்டில் என் பெயரையும் சேர்த்த சதிக்கு என் கடுமையான கண்டனம்.
நான் மறைந்து இருந்து பார்க்கவில்லை. நான் பறந்திருந்ததால் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை.

அதிரையில் இணையதள தொடர்பு இணைப்புகளின் வேகம் தம்பி தாஜுதீன் அவர்கள் சொன்னால் நலம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.