நேற்றைய தினம் சில்லென்ற காற்றோடு அழகிய சிறு மழையொன்று அல்லாஹ்வின் ரஹ்மத்தாக அதிரையில் தூவியது, இதனைக் கண்ட அதிரை மின்சாரம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரைவேற்ற இந்த மழைக்கு பயந்து ஒளிந்து கொண்ட மின்சாரத்தை தேடித் தேடி அலைந்தனர் மக்கள் விளைவு வழக்கம்போல் மக்களின் ஓய்வுக்கு பின்னர்தான் மின்சாரமும் வெளியில் வந்தது !!!?
இது ஒரு சாரல் மழையே அதுவும் அரைமணி நேரமே பெய்தது இதனைக் காரணம் காட்டி, மின்சாரத்தை துண்டித்தனர் அதுவும் நள்ளிரவு 01:30மணி வரை...
இந்த சாரல் மழைக்குபின்னர் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டது...!!!?????
இதற்கிடையில் சகோதர வலைத்தளங்களில் வெளியான செய்தியில் பொய்யான காரணம் சொல்லிக் கொண்டிருந்த அதிரை மின்சார வாரியத்தினை கண்டித்து அதிரை இளைஞர்கள் சாலை மரியலில் ஈடுபட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
செய்திச் சுட்டி : http://adiraipost.blogspot.com/2012/08/blog-post_6719.html
இத்தகைய பொடுபோக்கான அரசு துறை ஊழியர்களால் அரசு அலுவலங்கள் மீதும் அதன் பனியாளர்கள் மீதும் கோபம் கலந்த அவநம்பிக்கையே எழுகிறது.
இவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருப்பதா ? அல்லது திருத்தப்பட வேண்டியவர்கள் என்று செயலில் இறங்குவதா ?
அதிரை மக்களாகிய நாம் தான் சீக்கிரமே முடிவு செய்ய வேண்டும் !
அதிரைநிருபர் குழு
3 Responses So Far:
மழையில் நனையும் அதிரையும், காதுக்கினிய தொழுகையின் இறைவசனத்தின் அழகான ஒலியும் அருமை.
அரசிடம் பெறவேண்டியதுக்கு காத்திருந்து கழுத்தறுத்தது போதும்.
இனி
களமிரங்கித் தான் காரியம் சாதிக்கனும்.
மின்சாரம் இருக்கிற இடத்தில் சம்சாரம் இல்லை; சம்சாரம் இருக்கிற இடத்தில மின்சாரம் இல்லை! இதுதான்யா லைஃப்!
(சபீர்,எப்புடிடா இப்டீல்லாம்? அதெல்லாம் தானா வர்ரதுடா...விட்றா விட்றா!)
//மின்சாரம் இருக்கிற இடத்தில் சம்சாரம் இல்லை; சம்சாரம் இருக்கிற இடத்தில மின்சாரம் இல்லை! இதுதான்யா லைஃப்!//
ரமலானின் பகற்பொழுதில் உற்ற மனைவியை உற்று நோக்கும் குற்றம் தவிர்த்திட “ரமலானில் அமல்களால் நிரப்புங்கள்” கவிவேந்தர் சபீர்!
எங்களைப் போன்ற married bachelor கதியினையும் நீங்கள் சற்று நினைத்திட ஓர் அரிய வாய்ப்பு அய்யா!
Post a Comment