Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை - ஜோப்லின், மிஸ்ஸோரி 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2012 | ,


ஆகஸ்ட் 6, அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாநிலமான மிஸ்ஸோரியில் உள்ள ஜோப்ளின் என்ற ஊரில் 'இஸ்லாமிக் சென்டர் ஆஃப் ஜோப்லின்' என்னும் இறையில்லம் இருந்து வந்தது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 03:30 மணிக்கு தீ பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் தீயிணை அணைக்கும் முயற்சில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட எரிந்து முடிந்து விட்ட நிலையில் இறையில்லம் காட்சி தருகின்றது. அல்லாஹ்வின் பேருதவியால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்ப்டவில்லை. இந்த தீக்கான காரணம் அறியும் குழுவில் 30 பேர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

"வணக்கஸ்தலங்களுக்கு ஊறு விளைவிப்பதை சட்டம் கடுமையான கண்கொண்டு பார்க்கின்றது.. காரணம் அது நம் சமுதாயத்தின் பதுகாப்பிற்கான அச்சுறுத்தல்" என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் மிஸ்ஸோரிக்கான சிறப்பு அலுவலர் மைக்கேல் கேஸ்ட் தெரிவித்தார்.


தீயில் எரிந்த பள்ளியின் மீதம்

அதிகாலை பஜ்ரு தொழுகைக்கு வந்து பார்த்த பள்ளியின் இமாம் லஹ்முத்தீன், இந்த நிகழ்வு வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்த பள்ளியின் மூலம் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பல நல உதவிகளை பெற்று வந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பள்ளியின் இமாம் லஹ்முத்தீன் சோகத்தில் அழும் காட்சி

இதனிடையே, இந்த பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் சிறித்துவ தேவாலயத்தின் போதகர் ஜில் மைக்கேல் "அதிகாலையில் வந்து பார்க்கும்போது எனது தேவாலயம் எரிந்து தரைமட்டமாகியிருப்பது போல் என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை . இது வருத்தம் தரக்கூடிய நிகழ்வாகும். இஸ்லாமியர்கள் கூடுவதற்கு இடம் தேவைப் பட்டால், எங்களது தேவலயாத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

இதே பள்ளிவாசல் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி அன்றும் கொடியவன் ஒருவனால் தீமூட்டப் பட்டது (பார்க்க வீடியோ). 


இதுவரையிலும் அவன் பிடிபடவில்லை. பள்ளியின் பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருந்த அந்த ஆளின் முகம் வெளியிடப்பட்டு அவனைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய நாள், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவின் மற்றொரு பகுதியில், சீக்கியர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியிருக்கின்றது. சீக்கியர்களை முஸ்லிம்கள் என எண்ணி சுட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. 

இறைவா.. எங்கிருந்த போதும் நீயே எங்களுக்கு பாதுகாவலன். எங்கள் சமுதாயத்தை எல்லா வகையான ஆபத்துகளை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக!! ஆமீன்.

தகவல்: அதிரை என்.ஷஃபாத்.

கூடுதல் தகவலுக்கு: http://www.kansas.com/2012/08/06/2438224/joplin-mosque-razed-in-fire-2nd.html

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யா அல்லாஹ் இந்த கொடூரத்தை செய்த அநியாக்காரனை தண்டிப்பாயாக… !

இறைவா.. எங்கிருந்த போதும் நீயே எங்களுக்கு பாதுகாவலன். எங்கள் சமுதாயத்தை எல்லா வகையான ஆபத்துகளை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக!! ஆமீன்.

KALAM SHAICK ABDUL KADER said...

இச்சம்பவம் படித்ததும் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு நினைவில் வந்தது:

911 அழிவின் போது அமெரிக்கர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்களின் மீது வீணான வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அத்தருணம் நான் தனியாகச் செல்லும் பொழுது மூன்று கறுப்பு அமெரிக்கர்கள் வழிமறித்து என்னிடம்,”ஆர் யு முஸ்லிம்?” என்று கேட்டனர். “வி ஹேவ் சீன் யு வொய்ல் கோயிங் டு மாஸ்க் ஆன் ஃப்ரைடேஸ்” என்று என்னைக் கண்காணித்ததை உறுதி செய்து கொண்டு கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை செய்ய எத்தனித்தனர்;என் உயிரைக் காப்பாற்ற என் உடைமைகளைப் பறி கொடுத்து விட்டு அல்லாஹ் உதவியால் உயிருடன் தாயகம் திரும்பி வந்து விட்டேன். இன்னும், குடும்பத்துடன்அங்கு இருப்பவர்களையும் கண்காணித்துப் பெண்கள் தனியாக இருக்கும் தருணம், அக்கறுப்பு அமெரிக்கர்கள் வீடு புகுந்து கொலை செய்வார்கள்!

இதுபோன்ற “பேஸ்மண்ட்” பள்ளிவாசலுக்குப் போகும் பொழுதும் பின் தொடர்ந்து மிரட்டுவார்கள். ஊரிலுள்ளோர் நினைக்கலாம் நம்மவர் அமெரிக்காவில் நன்றாக இருப்பார்கள் என்று; ஆனால், அங்கு இப்படிப்பட்ட பயத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைத்து வருவதை உணர்ந்தால் நம்மவர்களின் தியாகம் எப்படிப்பட்டது என்று புரியும்!

911 க்கு முன்பு இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொண்ட அம்மக்கள் வாரந்தோறும் இதுபோன்ற பள்ளிவாசலில் காத்திருப்பார்கள்; தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஆசைப்பட்டவர்களாக! ஆனால், அக்கோரக் கொடுமைக்குப் பிறகு அவர்கள் அப்பள்ளிவாசலின் மீதும் அங்குச் செல்லும் முஸ்லிம்கள் மீதும் மிகுந்த வெறுப்பை தங்கட்குள்ளாக ஏற்படுத்திக் கொண்டனர். அதனாற்றான், நியூஜெர்ஸியிலிருந்து - ப்ளைன்ஃபீல்டு (என் பணியிடம்) போகும் வரை இரயிலில் குர்- ஆனை ஒதிக் கொண்டுச் சென்ற நான், 911 க்குப் பிறகு அச்சுறுத்தல் அதிகம் மற்றும் குர்-ஆன் மற்றும் அரபு எழுத்துக்களைக் கண்டாலே கோபத்துடன் நோக்கும் அம்மக்களின் மனோபாவம் புரிந்து கொண்டதால் அவ்வண்ணம் வெளியில் குர்-ஆன் ஓதுவதை விட்டு விட்டு அறையில் ஓதுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.

அன்புத் தம்பி ஷஃபா அத் எழுதியுள்ள இவ்வாக்கம் படித்தேன்;துடித்தேன். இன்னும் அம்மக்கள் திருந்தவே இல்லை என்றே கருதுகின்றேன்.

நம்மக்கட்கும் பள்ளிவாசல்கட்கும் அல்லாஹ் பாதுகாப்புத் தர போதுமானவன் (ஆமீன்)

Aboobakkar, Can. said...

அமெரிக்கவில் சீக்கிய வழிப்பாடுத்தளம் தாக்கபட்டதை அதை முஸ்லிம்கள் யென கருதி தாக்கபட்டது என்பது பொய்.கிருஸ்தவர்கள் தவிர மற்ற எதுவும் கூடாது என்பதெ அவர்களின் குறிக்கோள்.படத்தில் தீ மூட்டுவது ஒரு மெக்சிகன் அமெரிகன் என்பதை சுலபமாக சொல்லிவிடமுடியும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவா.. எங்கிருந்த போதும் நீயே எங்களுக்கு பாதுகாவலன். எங்கள் சமுதாயத்தை எல்லா வகையான ஆபத்துகளை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக!! ஆமீன்.

Ebrahim Ansari said...

புதிய பள்ளிகள் அமெரிக்காவில் தோன்றுவதாக அண்மையில் படித்த செய்தி தந்த மகிழ்ச்சி மறையும் முன்பே அதிகாலையில் இப்படி ஒரு செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

அனைவரையும் அல்லாஹ் காப்பானாக! தீயவர்களுக்கு தண்டனை தர அவனே போதுமானவன்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

புதிய பள்ளிகள் அமெரிக்காவில் தோன்றுவதாக அண்மையில் படித்த செய்தி தந்த மகிழ்ச்சி மறையும் முன்பே அதிகாலையில் இப்படி ஒரு செய்தி அதிர்ச்சியாக உள்ளது.

அனைவரையும் அல்லாஹ் காப்பானாக! தீயவர்களுக்கு தண்டனை தர அவனே போதுமானவன்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் சிறித்துவ தேவாலயத்தின் போதகர் ஜில் மைக்கேல் "அதிகாலையில் வந்து பார்க்கும்போது எனது தேவாலயம் எரிந்து தரைமட்டமாகியிருப்பது போல் என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை . இது வருத்தம் தரக்கூடிய நிகழ்வாகும். இஸ்லாமியர்கள் கூடுவதற்கு இடம் தேவைப் பட்டால், எங்களது தேவலயாத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.(சேற்றில் முளைத்த செந்தாமரைகளையும் கானலாம்).அல்லாஹ் போதுமானவன்

sabeer.abushahruk said...

அனைவரையும் அல்லாஹ் காப்பானாக! தீயவர்களுக்கு தண்டனை தர அவனே போதுமானவன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யா அல்லாஹ் உலக முஸ்லிம், உலக மஸ்ஜித் அனைத்தையும் பாதுகாப்பாயாக!
இந்த அநியாயச் செயலை செய்தவனுக்கும் ஹிதாயத்தை நஸீபாக்கி வைத்து, இதன் மூலமும் பல இறையில்லங்கள் புதிதாக உருவாக காரணமாக்கி வைப்பாயாக.
அருகில் இருந்த தேவாலய போதகருக்கும் இஸ்லாத்தை உணரச் செய்வாயாக!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்தவ, யூத குழுக்களும், மத்தியக்கிழக்கு அரபு நாடுகளில் ஷியா, அலாவி குழுக்களும், இந்தியாவில் மதவெறி கொண்ட இந்து பாஸிச, பார்ப்பனக்குழுக்களும், இலங்கை, பர்மா,சீனாவில் புத்தபிக்குகளும் அதன் அரசுகளும் ஓரணியில் கைகோர்த்து இஸ்லாத்தையும் அதை பின்பற்றும் முஸ்லிம்களையும் எளிதில் அழித்து உலகை விட்டு துடைத்தெறிந்து விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

யா அல்லாஹ்! இவர்களின் சூழ்ச்சிகளையும், சதித்திட்டங்களையும், அத்துமீரல்களையும், அடக்குமுறைகளையும் தவிடு பொடியாக்கி உலகில் இஸ்லாத்தின் கை ஓங்கச்செய்ய உனக்கு ஒன்றும் பெரிய காரியமோ அல்லது அதில் சிரமமேதும் இல்லை.

எங்களுக்கு முறையிட்டு மண்டியிட்டு நிற்க உன்னைத்தவிர வேறு யாருமில்லை எங்கள் இறைவா!

உலக நிகழ்வுகள் என்ன தான் எங்களை வாட்டி வதக்கினாலும், வறுத்தெடுத்தாலும் உன்னை விட்டால் உதவி தேட வேறு யார் இருக்கின்றனர்?

இப்னு அப்துல் ரஜாக் said...

அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்தவ, யூத குழுக்களும், மத்தியக்கிழக்கு அரபு நாடுகளில் ஷியா, அலாவி குழுக்களும், இந்தியாவில் மதவெறி கொண்ட இந்து பாஸிச, பார்ப்பனக்குழுக்களும், இலங்கை, பர்மா,சீனாவில் புத்தபிக்குகளும் அதன் அரசுகளும் ஓரணியில் கைகோர்த்து இஸ்லாத்தையும் அதை பின்பற்றும் முஸ்லிம்களையும் எளிதில் அழித்து உலகை விட்டு துடைத்தெறிந்து விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

THE QURAN
அதேபோன்று,அமெரிக்காவில் மிக வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது.மிக சிறு குழுக்கள் இப்படி இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.ஆனால்,எதிர்ப்பைக் காட்டும் அவர்களே,சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழித்து,இஸ்லாத்தை தழுவி விடுகின்றனர்.இன்ஷா அல்லாஹ். no panic

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை ஊதி அனைத்து விட நினைக்கிறார்களா?
அது ஒருபோது நடைபெறாது என்பதை இஸ்லாமிய விரோதிகள் புரிந்து கொள்ளட்டும்.
நெருப்பை ஊத ஊத அதிகமாக சுடர் விட்டும் எரியுமென்பது அந்த மூடர்களுக்கு தெரியாதா?
ஒரு இறை இல்லத்தை எரித்தால். இன்ஷா அல்லாஹ் பத்து இறை இல்லம் உருவாகும் என்பதை அந்த கயவர்கள் கண்டு கொள்வார்கள் .

அதிரை சித்திக் said...

இஸ்லாத்திற்கு ..சோதனைகள் என்பது ..
இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே
நடந்து கொண்டுதான் இருக்கிறது ..
ஒவ்வொரு கச்ட்டதிற்கு பின் பெரிய
வெற்றி கிடைப்பதும் காலம் சொல்லும் வரலாறு ..
LMS கூறியது போல் இஸ்லாம் சுடர் விட்டு
ஒளிர போகும் பகுதிதான் இந்த பகுதி ..
இஸ்லாம் புதைக்க படவில்லை ..மாறாக
விதைக்கப்படுகிறது ....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.