அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும் என்பதை என்றும் நினைவூட்டுகிறோம்.
அதிரையில் Sha an Sha (mens way) என்ற தையல் ஆடையகம் ஆண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுகான ஆடைகள் வடிவமைத்து தரமான மேல்சட்டைகளை (shirts) வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்பவும் புதிய ஃபேஷன்ஸ்களுக்கு ஏற்ப அவர்களின் தேவைகள பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்களுக்கான தையல் ஆடையகம் அதிரையைச் சார்ந்த சகோதரர் H. ஷேக் ஷமீம் (S.K.M.ஹாஜா முகைதீன் சார் அவகளின் இளைய மகன்) அவர்களால் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற பிரபலமான நகரங்களில் இருக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் (readymade mens wear shop) அவர்களின் ஆர்டர்களுக்கு ஏற்ப செய்து கொடுக்கும் அனுபவமும், உள்ளூரிலேயே நமது சகோதரர்களின் ரசனைக்கேற்றார்போல் மேலாடைகளை வடிவமைப்பதில் மிகச் சிறந்த அனுபவும் உடையவர்களால் செயல்படுகிறது.
Sha an Sha - Mens Way :: சிறப்பம்சங்கள்.
- தேவையான டிசைனகளின், சூழலுக்கு ஏற்றார்போல் 300க்கு மேற்பட்ட டிசைன்களில் சட்டை துணிகள் அனைத்தும் கிடைக்கிறது
- இந்தியா மற்றும் உலகின் தரமான பிராண்டட் துணிகள் இங்கு கிடைக்கும், (காட்டு: Raymonds, Aravind, Vaneri, Monti, Cotton Fitio, Villa Italiya, Shoktas, Linon adithya, birla, Bombay dyeing, Bomday lying, Vimal மற்றும் பல பிராண்ட் மேலாடைகளுக்கான துணிமனிகள் கிடைக்கும்.
- அதீதமாக நிலான் காட்டன் துணிகள் இங்கு மட்டுமே மிகக்குறைவான விலையில் கிடைக்கிறது.
- மிகக் குறைந்த விலையில் தரமான துணிகளை தைக்கும் இடத்திலேயே தேர்ந்தெடுக்கும் வசதி.
- பள்ளிச் சீருடைகளை சிறுவர்களின் மிடுக்கான தோற்றத்தை எடுத்துக் காட்டும் திறன்
- ஆண்களின் எடுப்பான தோற்றத்தை மிளிர வைக்கும் நேர்த்தியான தையல் வேலைபாடுகள்
- சீதோஷன சூழலுக்கு ஏற்றார்போல் உடுத்திக் கொள்ள ஆடைகளின் வகைப்படுத்தல்
- கல்யாண சீசன் ஆர்டர்கள் சிறப்புடனும் நேர்த்தியாகவும் செய்து கொடுப்பது.
- பெருநாட்களுக்கென்று மேலதிகமான டிசைன்களின் கலெக்க்ஷன்ஸ்.
- அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களின் இளைஞர்களின் மேலாடைகளின் சங்கமம்
- தேடிவரும் வாடிக்கையாளர்களிடம் தன்மையான அனுமுறை
- நேரில் வருகை தருவோருக்கு கிடைக்கும் திருப்தியே சாட்சி இதன் சிறப்பம்சங்களை சொல்ல.
- குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், வெளிநாடு வாழ் அதிரை மற்றும் சுற்று வட்டார ஊர்களின் இளைஞர்கள் மிகவும் விரும்பும் ஆண்களின ஆடையகம் இது ஒன்றே !
- சமீம் அவர்களின் கைத்திறனாலும், திறமை வாய்ந்த தையல் கலைஞர்களின் வேலைப்பாடுகள் இந்த ஆடையகத்தின் தரத்தை தூக்கி நிறுத்தி வைத்திருப்பதை மறுக்க இயலாது.
உள்ளூரிலேயே லேட்டஸ்ட் ஃபேஷன்களில் வெளிவரும் அனைத்து வகையான மேலாடைகளின் துணிகளை ஒரே இடத்தில் கிடைத்திட வகைசெய்திருக்கும் இந்த ஸ்தாபனத்தை தேவையுடையவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெற்கென சிரத்தை எடுத்து அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று அலைவதிலிருந்தும் நேரம் மிச்சவாதையும் மனதில் கொண்டு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சார்ந்த சகோதரர்கள் பயனடைய நல்ல சந்தர்ப்பம்.
இளைஞர்கள் மட்டுமல்ல ஆண்களில் அனைத்து வயதினருக்கும் பொருத்தமான மேலாடைகள் (shirts) ஒரே இடத்தில் கிடைப்பதால் அவர்களின் தேடலுக்கு நல்ல இடமென்று நம்பலாம்.
மேலும் விபரங்களுக்கும் கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Sha an Sha - Mens Way
6-E Rich Comples, Sethu Road, (ECR road) - காதிர் முகைதீன் கல்லூரி சாலை
Adirampattinam, 614 701 , Thanjavur District.
Phone: +91 99654 97583
இந்த சுட்டியையும் சுட்டிப் பார்த்திடுங்களேன் : http://adirainirubar.blogspot.com/2010/11/blog-post_8374.html
அதிரைநிருபர் குழு
18 Responses So Far:
சகோதர சமீமின் ஆடைத்தொழில் அவருக்கு திருப்தியோடு மென்மேலும் வளர்ந்திட துஆவும் வாழ்த்தும்.
நல்ல முயற்சி,வாழ்த்துக்களும்,துவாவும்
ஆள்பாதி அடை பாதி - பழகிய மொழி !
ஆடை பாதி ஷா&ஷா மீதி - இப்போ பழகும் மொழி ! :)
வாழ்த்தும் துஆவும் இன்ஷா அல்லாஹ் !
We must support our local entrepreneurs to grow up their business, cause of self-motivated career in home town. Even we are working in abroad for high salary, it won’t be comparable for local businessmen and his peaceful life. Please support all local entrepreneurs to grow up their business broadly. I wish Mr. Shameem to achieve his goal and will get a certain turnover on his business looming.
Abdul Razik
Dubai
சமீபத்தில் அதிராம்பட்டினம் வந்த போது இவரிடம் என் சட்டையை தைக்க கொடுத்தேன். பொதுவாகவே என் ஆஸ்தான டெய்லர் தஞ்சாவூரில் உள்ள கடையாக இருந்தாலும், இவரிடம் [ ஷேக் சமீம்] தைத்ததில் எனக்கு மிக்க திருப்தியும் சந்தோசமும் [இதை டைப் செய்யும்போதும் அவர் தைத்த சட்டைதான் போட்டிருக்கிறேன்]
சமீபத்தில் ஊர் வந்த நண்பன் இக்பால் இடமும் சொல்லி இவரையே அனுகசொன்னேன்.
என் ஆஸ்தான டெய்லராக இவரையே திரைவு செய்து விட்டேன்.
சொன்ன நேரத்துக்கு சரியாக இவரிடமிருந்து எனக்கு டெலிபோன் வந்தது என் சட்டை ரெடி என்று. [பெரும்பாலும் பல டெய்லர்கள் இதை செய்வதில்லை]
He will succeed with the mercy of Allah.
எந்த ஒரு தொழில், வாடிக்கையாளருடன் நேரடியா தொடர்புடையதாக இருக்கிறதோ, அந்தத் தொழிலில் சிறக்க, வாடிக்கையாளருடனான தொடர்பு/குறைகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தித்தல், Followup எனப்படும், குறைகளை தீர்க்கும்வரை பின்தொடர்தல், அவர்களின் தகவல்களை திரட்டி அதனை முறையாக பயன்படுத்துதல் போன்ற சில தன்மைகளினால் வாடிக்கையாளரின் திருப்தி, அவரை தக்கவைத்தல்,மற்றும் அவர்கள் மூலம் பரவும் விளம்பரத்தினை பயன்படுத்துதல் என்பது வெற்றிக்கு வழிவகை செய்யும். அதை சகோ.ஷமீம் திறம்பட செய்கிறார் என்று அறிகிறேன். வெற்றிபெற வாழ்த்துகள்!
எனது செய்திவாசிப்பிற்கு பிற்கு எனக்காக 10 வினாடிகள், ஒதுக்குவார்கள், அதை எனது உடையின் ஸ்பான்சருக்கான விளம்பரத்திற்காக பயன்படுத்தலாம்,
சகோ. விரும்பினால் என்னைத் தொடர்புகொள்க,
ஆயிரம் 'தன்னம்பிக்கை' சார்ந்த புத்தகங்கள் தராத ஒரு நம்பிக்கையை, பொருத்தமாக தைத்து அணியப்பட்ட ஆடை தரவல்லது. நூலொடு நூல் சேர்த்து நுட்பத்துடன் தைக்கப்படும் ஆடை, மனிதனில் பாதி, மற்றவை மீதி.
அழகிய இந்த தையற்கலையை தொழிலாக எடுத்து நடத்தி வரும் ஷமீம் காக்காவின் தொழிலில் அல்லாஹ் அருள் பாலிப்பானாக, ஆமீன்.
அதிரை நிருபரின் 'தொழில் முனைவோர்' பகுதிக்கு ஒரு சிறப்பு பாராட்டுகள்!!
சென்ற மாதம் விடுப்பில் ஊரிலிருந்த போது இவ்விளம்பரம் கண்ணில் பட்டிருந்தால் நானும் பயன்படுத்தியிருப்பேன்; இன்ஷா அல்லாஹ் அக்டோபரில் ஹஜ்ஜுப் பெருநாள் விடுப்பில் தாயகம் செல்வேன்; அவசியம் SKMH சார் அவர்களின் மகனாரிடம் சட்டை தைக்கக் கொடுப்பேன். விளம்பரம் இல்லை என்றால் யாரறிவார்; இத்தகு அருமையான தையலகம் அதிரையில் இருப்பது இந்த விளம்பரம் வழியாகவே அறிகின்றேன். நாம் இங்கிருந்து வாங்கிச் செல்லும் சட்டைகள் அதிகமானவைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள்; இந்தியாவில்- அதிரை எனும் உள்ளூரில் இவ்வளவு நேர்த்தியான முறையில் சட்டைகள் கிடைக்கின்றன என்றறிந்திருந்தால் வீணாக “லக்கேஜ்” செலவழிக்காமல் ஊரிலேயே சட்டைகள் எடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்து விட்டது இவ்வாக்கம்; நம் பின்னூட்டங்கள் இக்கடையின் உரிமையாளர் அவர்கட்கு ஓர் ஊக்கம்; எல்லாம் விளம்பரம் செய்தத் தாக்கம்!
நாங்கள் வணிகவியல் பட்டப்படிப்பு படிக்கும் பொழுது ADVERTISING என்ற ஒரு பாடம் படித்தோம்; அதில் சொல்லப்பட்டவைகள் இன்று நிதர்சனமாகக் காண்கின்றேன்; விளம்பரங்களில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் “புதுக்கவிதை”யின் சாயலில் ஆங்கிலத்தில் எழுதும் வாசகங்களும் எல்லாரையும் கவரும்; அத்தகைய வாசகம் MENS WAY என்று எழுதியிருப்பதும் SUPER catching words!
It's a man thing
Wear as you desire
Tailoring your ideas
போன்ற வரிகளும் பயன்படுத்தலாம்.
நிர்வாணமான ஊசியே
நிர்வாணம் போர்த்தும்
ஆடைகளைத் தைக்கும்
//புத்தகங்கள் தராத ஒரு நம்பிக்கையை, பொருத்தமாக தைத்து அணியப்பட்ட ஆடை தரவல்லது. நூலொடு நூல் சேர்த்து நுட்பத்துடன் தைக்கப்படும் ஆடை, மனிதனில் பாதி, மற்றவை மீதி.//
நூலும் ஊசியும் இணைந்துத் தைக்கப்படும் ஆடையுடன் நூலினை(புத்தகத்தை)ஒப்பீடு செய்ததில் உன்றன் நுண்மதி கண்டேன்!
வாழ்த்துகளும் துஆவும்.
நல் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.
JANAB. SKMH சார் சம்பந்தப்பட்டிருப்பதால் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருக்கும். சார் சொல்லவில்லையே.
கவியன்பன் அவர்கள் கூறுவது போல் இன்ஷா அல்லாஹ் இனியாவது பயன்படுத்துவோம்.
நண்பன் ஷமீமின் டிரெஸ்ஸிங் சென்ஸ் எப்பவுமே நேர்த்தியாக இருக்கும் ,அதுபோலேவே அவரின் கடையும் அழகாய் இருக்கிறது .மேலும் பல ஊர்களிலும் கிளைகள் தொடங்க வாழ்த்துக்கள் .
புகைபடத்தில் உள்ள காலரின் பினிஷிங் நன்றாக உள்ளது .
கடைக்காக ஒரு இணையத்தளம் தொடங்கினால் நன்றாக இருக்கும்.வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆர்டர் செய்ய வசதி செய்தால் மிக நன்றாக இருக்கும் .
தொழில் முனைவோரின் எழில்மிகு வணிக நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகின்ற அ.நி. குழுவினர்க்கு உளம்கனிந்த வாழ்த்துகள்;உங்களின் உளத்தூய்மையான இப்பணியால் இன்ஷா அல்லாஹ் அயல்நாட்டு மோகம் அடியோடு ஒழியும். கந்தக பூமியில் வெந்துபோகும் நிலைமையும் அழியும்; தாயகத்தில் வணிகம் செய்து வளம்பெற வழி பிறக்கும்;நம் வருங்கால சந்ததியர் வாழ்வு சிறக்கும்.
இயல்பாகவே வியாபாரி மகன் வியாபாரியாகவும்; பட்டப்படிப்பிலும் வணிகவியலைப் படித்தவனும்; படித்துக் கொண்டே (திருவாரூரில்எந்தையார் வைத்திருந்த) துணி வணிகத்தில் ஈடுபாடு உடையவனுமாகிய அடியேனுக்கு- இடையில் இத்தனை ஆண்டுகள் அயல்நாட்டுப் பிழைப்பில் கழிந்தாலும் இன்ஷா அல்லாஹ் ஒருநாள் தாயகம் போய்த் தீருவோம்; அவ்வேளையில் மீண்டும் பயிற்சியுள்ளத் துணி வணிகம் செய்யலாம் என்று எப்பொழுதும் என் நினவில் ஓர் எண்ணம் (நிய்யத்) உண்டு. அதனைச் செயல்படுத்த முடியும் என்ற ஆர்வமும் ஊக்கமும் உங்களின் இவ்வாக்கம் என்னுள் ஏற்படுத்தியிருப்பது போல் வாசகர்களில் சிலருக்கும் ஏற்பட்டிருக்குமானால் அதற்கான நன்மைகள் இவ்வாக்கத்தை அமைத்து அனுப்பிய அன்புச் சகோதரர் அவர்கட்கே சாரும்.
வல்ல இறைவன் இத் தொழிலில் அபிவிருத்தியும், திருப்தியும் தருவானாகவும் ஆமீன்...
வரும் வாடிக்கையாளருக்கு அவர்கள் நினைத்துக்கொண்டு வருவதைவிட புது புது டிசைன் ஐடியா கொடுப்பதில் வல்லவர்
என் இபுவிடன் கேட்டேன் இந்த பெருநாளைக்கு சட்டை என்ன சாய்ஸ் என்றுதாங்க கேட்டேன்...
சட்டென்று வந்த பதில் இதுவே "ஒரு சட்டை எடுக்கலாம்னு போயி இன்னும் இரண்டை எடுக்க வைத்த ஷமீம் மாமா தைத்துக் கொடுத்த சட்டைதான் இருக்கே டாடி" என்றான்..
எப்போருக்கும் பிடித்த தையலகம் !..
வாழ்த்துகளும் துஆவும்.
Post a Comment