Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆள் பாதி ஆடை பாதியா ? ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2010 | , ,


பாரம்பரிய ஆடைகள் (traditional dress) என்று இதுவரை நம்மிடம் என்ன இருக்கிறது என்று நான் இங்கே ஆராயவில்லை, இருந்தாலும் ஹஜ் பெருநாள் தொழுகையை ஈத்கா மைதானத்தில் முடித்து விட்டு வெளியில் வரும்போது அங்கே எனது பார்வைக்குள் சிக்கிய நமது அதிரைப்பட்டினத்து மக்கள் உடுத்தியிருந்த கண் கவரும் மேல் சட்டைகளும் அதன் மிடுக்கும் அதிலும் குறிப்பாக இளைஞர்களை பார்த்ததும் என்னுள் எழுந்த ஒரு சில எண்ண ஓட்டங்களை இங்கே கோர்வையாக்கிப் பார்க்கிறேன்.

நம்மவர்கள் உடுத்தும் ஆடைகளில் முக்கிய பங்கை வகிப்பது மேல் சட்டை அது முழுக்கை சட்டையாகட்டும் அரைக்கை சட்டையாகட்டும் இதன் பயன்பாடுகள் வயது வித்தியாசமில்லாமல் யாவருக்கு ஒத்துப் போகக் கூடிய வடிவமைப்பில் அவரவர் அளவுக்கு தைத்து போட்டு வந்திருக்கிறோம்.

நம்மூரில் சட்டை தைத்து தருவதற்கென்று நிறைய தையல்காரர்கள் இருந்தாலும் அதில் எத்தனை பேர் மண்ணின் மைந்தர்களாக கோலோச்சினார்கள்?, பெரும்பாலும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் அல்லது பிற மதத்தைச் சார்ந்தவர்களும் தான் இத் தொழிலில் ஊன்றி நிலைத்திருந்திருக்கிறார்கள்.

முதலில் உடல் உயரத்திலிருந்து முக்கால் உயரத்திற்கு இருந்த சட்டை சற்று உயரம் குறைந்து தொடைவரை தொங்கியது இன்று இடுப்பு வரை நிற்கிறது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று பிடித்தமான தையல்காரர்களை தேர்ந்தெடுத்து அல்லது அன்றைய கலாப் போக்கிற்கு (trend) ஏற்றார்போல் தைத்து உடுத்திக் கொண்டனர்.

மிதப் பட்ட காலத்தில் ஆயத்த ஆடைகளின் (readymade dress) பக்கம் மோகம் சூழ்ந்தது அப்போதும் இளையவர்கள் தத்தமது மோகத்தை காட்டினர், இன்னும் தயார் நிலையில் இருக்கும் மேல் சட்டைகளை வாங்கி உடுத்துவதில் நம்மவர்களின் ஆர்வம் குறைந்து விடவில்லை.

சில ஆண்டுகளாக நமது ஊரிலிருப்பவர்களை மிகவும் உண்ணிப்பாக கவனித்தால் இன்றைய இளைஞர்களின் ஆடை உடுத்தும் அற்புதங்களும் சட்டை வேட்டியுடன் தெரியும் ஒரு பணக்கார புறத் தோற்றம் (rich look) அசர வைக்கிறது. புடைத்த காலருடன் விரைப்பான மடிப்பு கலங்காத, உடலோடு ஒட்டி உறவாடும் அழகு சட்டைகள்தான் இப்படி இளைவர்களின் மீது யாவரின் பார்வையையும் நிமிர வைக்கிறது.

வசதியுடையவர்களும் சரி, அவ்வகையான சட்டைகளை தைத்து / எடுத்துப் போடும் தகுதியுடையவர்களும் சரி அவர்களின் ரசனை வியக்க வைக்கிறது. படித்த இளைஞர்களானாலும், படிப்பை பாதியில் விட்டவர்களானாலும், பள்ளிக் கூடம் பக்கமே போகாதவர்களாக இருந்தாலும் இவர்களின் மேல் சட்டை தேர்ந்தெடுக்கும் ரசனை எப்படி ஒன்றாகவே இருக்கிறது என்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

இவ்வகையான ஆடைகள் கொடுக்கும் மிடுக்குதான் பெரும்பாலான இளைஞர்களுக்கு (திருமண) விலை நிர்ணயம் செய்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே ? வெளியில் உடுத்தி வரும் ஆடையும் அனிந்திருக்கும் மேல் சட்டையும் பெற்றெடுத்துக் கொடுக்கும் மரியாதைக்கு எத்தனை இளைஞர்கள் தகுதியாக இருக்கிறார்கள் ?

மிடுக்கான உடையிருக்கிறது ஆனால் துடுக்கான நடையில்லை, அழகா இருக்கான் ஆனால் ஆடை உடுத்தத் தெரியவில்லை இப்படியாக விமர்சனம் செய்பவர்கள் ஆடையிலிருக்கும் அழகு அகத்தில் இருக்கிறதா என்றும் பார்ப்பதில் சற்றே தடுமாறிவிடுகிறார்கள்.

எதற்கு இவன் இப்படி இங்கே சொல்கிறான் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்த ஹஜ் பெருநாளைக்கு ஊரிலிருந்து தைத்து அனுப்பிய மேல் சட்டைதான் பெருநாள் சட்டை ! ஏன்னா அதுதான் இன்றைய காலப் போக்கிற்கான மேல் சட்டையாக இருக்கிறது அதிரைப்பட்டினத்தில் எவ்வித தெரு பாகுபாடின்றி யாவருக்கும் மிடுக்கான ஒரு பாங்கை உருவாக்கியிருப்பதும் நிஜமே.

அது சரி முதன் முதலில் நீங்கள் எந்த தையல்காரரிடம் சட்டை தைத்து போட்டீர்கள் ?

கேட்கத் தோனுச்சு ! அட உங்களுக்கும் சொல்லனும்னு தோனுமே !

- அபுஇபுறாஹிம்

11 Responses So Far:

Yasir said...

நானும் இளைஞர்கள் ( age 13 to 21 ) தற்போது போடும் வித்தியாசமான சட்டைகளை ரசித்ததுண்டு...அதுவும் கட் சட்டை ஒரு விதமான அழகுதான்...பெருநாள் நாளன்று ஒரு அசத்தலான அலசல்...வாழ்த்துக்கள் காக்கா...என் பெருநாள் சட்டை snowwhite லிருத்துதான்..யார் தைத்தது என்று தெரியவில்லை :)

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அருமையான அலசல்.இதற்கு தகுந்த பதிலை அலாவுதீன் காக்கா சொல்வார்கள். மார்கம் சொன்னபடி. இஸ்லாம் வலியுருத்தியது,மேனித்தெரியாமலும்,உடலை நன்குப்பிடித்து நம் மேனியின் திரட்சி தெரியாமலும் அணிய வேண்டியது.
இப்ப என்னைப்பொருத்தவரை இந்த கட்டுரை மூலம் அபுஇபுறாகிம் காக்கா மறை முகமாக சாட்டை சுழட்டியுள்ளார்கள் என்பதை கவனிக்கவும். சட்டையைப் பற்றி நான் எப்பொழுதும் சட்டை செய்வதும் இல்லை அதற்காக அசட்டையாக இருந்ததும் இல்லை. எனக்குத்தெரிந்து மிக எளிதான ஆடையே என் அடையாளம்.

ZAKIR HUSSAIN said...

To

Abu Ibrahim,

//இவ்வகையான ஆடைகள் கொடுக்கும் மிடுக்குதான் பெரும்பாலான இளைஞர்களுக்கு (திருமண) விலை நிர்ணயம் செய்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே ? வெளியில் உடுத்தி வரும் ஆடையும் அனிந்திருக்கும் மேல் சட்டையும் பெற்றெடுத்துக் கொடுக்கும் மரியாதைக்கு எத்தனை இளைஞர்கள் தகுதியாக இருக்கிறார்கள் ?//


நம் ஊரின் நிதர்சனத்தை அப்படியே எழுத்தில் படம் பிடித்திருகிறீர்கள். உடையை பார்த்து மாப்பிள்ளை எடுத்து பிறகு அவன் ஒரு 'காமெடி பீஸ்' என்பது தெரிந்து நொந்துபோன பல பெரியவர்களை எனக்கு தெரியும். நம் ஊரின் தற்போதைய இளைஞர்களில் நிறைய பேருக்கு மேலான்மை திறன் குறைவு...இது ஒரு முக்கிய காரணம் இவர்கள் வெளியூரில் கஸ்டப்படுவதற்கு.உடை உடுத்த கவணம் செலுத்தும் இவர்கள் [ இது தவறல்ல] தனது Soft skillஐ உயர்த்திக்கொள்ள முயற்சி எடுப்பதில்லை.


ZAKIR HUSSAIN

sabeer.abushahruk said...

வித்தியாசமான கரு, விளக்கமான அலசல்.
//மிடுக்கான உடையிருக்கிறது ஆனால் துடுக்கான நடையில்லை//

அழகாகச் சொன்னீர்கள். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தற்போதுள்ள இளைய சமுதாயத்திடம் குறைவுதான். சில ஆண்களிடம் பெண்ணைப்போன்ற மென் குணங்களும், சில பெண்களிடம் ஆணைப்போன்ற அலட்டல்களும் சற்று உறுத்தலானதே.

//யார் தைத்தது என்று தெரியவில்லை//
இதுதான் அக்மார்க் குசும்பு.

//சட்டையைப் பற்றி நான் எப்பொழுதும் சட்டை செய்வதும் இல்லை அதற்காக அசட்டையாக//

என்ன சேட்டை!!!
இந்த மொழி விளையாட்டை உங்களிடமிருந்து ஆட்டையை போடமுடிந்தால் நல்ல வேட்டை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சமீப காலத் திருமணங்களில் இளைஞர்களுடைய உடைகளின் பாங்கு வியக்கவே வைக்கிறது அதிலும் மனமகன் தேர்ந்தெடுக்கும் உடைகளுக்கு மேல் மற்றொரு மடங்காக்கி அவரது நட்பு வட்டங்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது நடைமுறை கால வழக்காக (trend) முன்பை விட இன்றையச் சூழலில் கடமையாக்கப் பட்ட ஃபர்ளாக இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை !

crown said...

sabeer சொன்னது…




//சட்டையைப் பற்றி நான் எப்பொழுதும் சட்டை செய்வதும் இல்லை அதற்காக அசட்டையாக//

என்ன சேட்டை!!!
இந்த மொழி விளையாட்டை உங்களிடமிருந்து ஆட்டையை போடமுடிந்தால் நல்ல வேட்டை.
--------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும். மேதைகளிடமெல்லாம் பாராட்டு.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.
தான் ஆடாட்டியும் சதை ஆடும் அல்லாவா? வேட்டை ஆடு விளாயாடு என்பது போலும் உள்ளது உங்கள் பாராட்டு.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஆண்பால்,பெண்பால். இருபாலரும் எதிர்,எதிர் பால்களை கவரும்பால். அணியும் ஆடைகள் ,பாலின் மேல் படியும் ஆடையைப்போல் மெலிதாக,எளிதாக உள்ளதுதான் இன்றைய (அ) நாகரீகம்.

crown said...

sabeer சொன்னது…
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தற்போதுள்ள இளைய சமுதாயத்திடம் குறைவுதான். சில ஆண்களிடம் பெண்ணைப்போன்ற மென் குணங்களும், சில பெண்களிடம் ஆணைப்போன்ற அலட்டல்களும் சற்று உறுத்தலானதே.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். யோசித்துப்பார்தேன் ஹைக்கூ ஒன்று எழுதத்தோன்றியது.'
இவர்கள் வாழ்வின் பக்கங்களில் எழுத்துப்பிழைகள்.
(சரியா? சபிர்காக்கா? தவறு இருந்தால் திருத்தி அனுப்பவும்.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்: ஆடை எந்த பாலின் மேலாடையாக இருந்தாலும் அதன் அழகு அனிந்திருக்கும் ஆண்/பெண்/பசும் பால்களை பொறுத்து !

என்ன வித்தியாசம் ஆணோ / பெண்ணோ இவர்கள் முயற்சியில்தான் ஆடைகள் உடுத்த வேண்டும் ஆனால், காய்ச்சி வைத்த (பசும்)பாலை கண்டு கொள்ளவில்லை என்றால் தானாக ஆடை உடுத்திக் கொள்ளும் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அஃறினையான பால் தானாய் ஆடை உடுத்திக்கொள்ளும் போது என்னா ஆடை உடுத்தினாலும் போதும்,கீழே விழும் படியும் உடுத்தும் சிலபண்ணாடைகள் பற்றித்தான் சொன்னேன்.பால் ஆறுவதற்குள் பதில் வந்துடுச்சே? இதுதான் காக்கா
உங்களிடம் பிடித்தது.அப்பால் பதில் எழுதலாம்னு நினைக்காமல்,தப்பாமல் உடன் சொன்னவிதம்.பாலாய் போன சிலருக்கு வரமாட்டேன் என்கிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு