ஆகஸ்ட் 6, அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாநிலமான மிஸ்ஸோரியில் உள்ள ஜோப்ளின் என்ற ஊரில் 'இஸ்லாமிக் சென்டர் ஆஃப் ஜோப்லின்' என்னும் இறையில்லம் இருந்து வந்தது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 03:30 மணிக்கு தீ பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் தீயிணை அணைக்கும் முயற்சில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட எரிந்து முடிந்து விட்ட நிலையில் இறையில்லம் காட்சி தருகின்றது. அல்லாஹ்வின் பேருதவியால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்ப்டவில்லை. இந்த தீக்கான காரணம் அறியும் குழுவில் 30 பேர் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
"வணக்கஸ்தலங்களுக்கு ஊறு விளைவிப்பதை சட்டம் கடுமையான கண்கொண்டு பார்க்கின்றது.. காரணம் அது நம் சமுதாயத்தின் பதுகாப்பிற்கான அச்சுறுத்தல்" என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் மிஸ்ஸோரிக்கான சிறப்பு அலுவலர் மைக்கேல் கேஸ்ட் தெரிவித்தார்.
அதிகாலை பஜ்ரு தொழுகைக்கு வந்து பார்த்த பள்ளியின் இமாம் லஹ்முத்தீன், இந்த நிகழ்வு வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்த பள்ளியின் மூலம் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பல நல உதவிகளை பெற்று வந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் சிறித்துவ தேவாலயத்தின் போதகர் ஜில் மைக்கேல் "அதிகாலையில் வந்து பார்க்கும்போது எனது தேவாலயம் எரிந்து தரைமட்டமாகியிருப்பது போல் என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை . இது வருத்தம் தரக்கூடிய நிகழ்வாகும். இஸ்லாமியர்கள் கூடுவதற்கு இடம் தேவைப் பட்டால், எங்களது தேவலயாத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதே பள்ளிவாசல் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி அன்றும் கொடியவன் ஒருவனால் தீமூட்டப் பட்டது (பார்க்க வீடியோ).
இதுவரையிலும் அவன் பிடிபடவில்லை. பள்ளியின் பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருந்த அந்த ஆளின் முகம் வெளியிடப்பட்டு அவனைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
முந்தைய நாள், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவின் மற்றொரு பகுதியில், சீக்கியர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியிருக்கின்றது. சீக்கியர்களை முஸ்லிம்கள் என எண்ணி சுட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இறைவா.. எங்கிருந்த போதும் நீயே எங்களுக்கு பாதுகாவலன். எங்கள் சமுதாயத்தை எல்லா வகையான ஆபத்துகளை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக!! ஆமீன்.
தகவல்: அதிரை என்.ஷஃபாத்.




