உலகின் அருட்கொடை அன்னல் நபி(ஸல்) அவர்களைப் பற்றிய அவதூறான கட்டுக்கதைகளைக் கொண்டு திரைப்படமொன்றை எடுத்து உலக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈனப் பிறவிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக இன்ஷா அல்லாஹ்.
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது
அவர்களின் மீதும், முஹம்மது
அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத்
அவர்களுக்கும், முஹம்மத்
அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா (ரழி) இப்படி இப்படி என்று அவரை உயரமற்றவர் எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள் 'நீங்கள்இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும்.என்று சொன்னார்கள். (ஒரு தடவை) நபியவர்களிடம் ஒருவரின் செயலை செய்து காட்டினேன். ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்றுசொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
ஆதாரம்:அபூதாவூத்-4875
மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான இந்த ஹதீஸிலிருந்து நமக்கு இரண்டு விசயங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
1. ஒருவரை இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் (உயர்வானவர், குட்டையானவர்) என்று சொல்லிக் காட்டுவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.
2. ஒருவரின் செயலை, அது நற்செய்லாக இருந்தாலும் கூட அவரை போல் செய்து காட்டுவதையும் நபி (ஸல்) விரும்பவில்லை. மேலும் சொல்லப்போனால், எவ்வளவுதான் தனக்கு கிடைத்தாலும் அப்படி செய்துக் காட்டுவதை (நடித்துக் காட்டுவதை) விரும்பவில்லை என்று ஒரு படி மேல் சொல்லியுள்ளார்கள்.
ஒருவரின் நற்செயலை கூட நடித்துக் காட்டுவதை விரும்பாத நம் இறை தூதரை பற்றி இல்லாத கட்டுக்கதையை வைத்து சினிமா எடுத்து கேவலப்படுத்துவதை எந்தவொரு முஸ்லிமாலும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நபிகளாரை கேவலப்படுத்தியவனை அல்லாஹ் நிச்சயம் கேவலப்படுத்துவான்.
இறைவனின் பொருத்தத்தை நாடியவர்களாக என்றும்... இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள்.



