சோலை
பெருங்கடலுட் பேரலையின் உப்புக் காற்றைப்
பிறர்க்குதவும் விதமாகச் சுழற்சி யாக்கி
அருங்காற்றுப் பிள்ளைகளாய் ஈன்றெ டுத்தே
ஆவலுடன் கொஞ்சிமிக மகிழ்ந்து நிற்க
விரும்புவிதம் அணியணியாய்த் தழுவிக் கொண்டு
வீசுகின்ற குளிர்காற்றாம் மங்கை நல்லாள்
கரும்பினிலும் தேனுள்ளும் மறைந்த இன்பம்
கனிவுடனே தருவதுவே சோலை யாகும்.
அதிரை அஹ்மத்


