அஸ்ஸலாமு அலைக்கும்..
இதற்கு முன்னர் சிறிய கட்டுரையாக என்னுடைய முதல் பதிப்பை பளிச்சிட வைத்து அதற்கு அருமையான கவி வரிகளால் அலகங்கரித்தது அதிரைநிருபர். அதுவே, தேனாக உங்களின் மனதில் இனித்தது தீனோடு. இந்த முறை என்னுடைய அடுத்த முயற்சியாக பதியும் பதிப்பில் ஏழு வகையான சத்துணவுகளை பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.
முதலாவதாக விட்டமின் C :
இந்த வகையான விட்டமின்கள் தோல் , எலும்பு , நரம்பு , எலும்பு பிடிப்புள்ள தசை ஆகியவைகளை வளர்க்கும். வலுவாக்கும். இந்த சத்து தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, மிளகு, இலை வகையில் உள்ள தாவர வகைகளில் அதிகமாக உள்ளது.
இரண்டாவதாக விட்டமின் B 12:
உடல் உறுதிக்கு தேவையான ஜீவ அணுக்கள் (செல்ஸ்) வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும். இந்த சத்து எல்லா வகையான இறைச்சிகளிலும் உண்டு. குறிப்பாக ஈரலில் அதிகம் உள்ளது.
மூன்றாவதாக பயோட்டின் :
இந்த சத்து உழைப்பில் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவுகின்ற புரதச் சத்து. இறைச்சி, காய்கறி, வேர்க்கடலை, பால், வாழைப்பழம், திராட்சை ஆகியவற்றில் நிறைய உள்ளது.
நான்காவதாக விட்டமின் D :
இது எலும்புகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது. இந்த சத்து மீன் கொழுப்பிலும், பால், முட்டை ஆகியவைகளில் இருக்கிறது..
ஐந்தாவதாக போலோசின்
இது இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளை சீர் செய்து, உடம்பைச் செம்மைப்படுத்தும். இந்த சத்து ஈரல், இலைவகை தாவர உணவு, பொதுவாக காய்கறிகள், முட்டை, வாழைப்பழம், ஆரஞ்சு ஆகியவைகளில் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இது மாதிரியான உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வது சிறந்தது .
ஆறாவதாக விட்டமின் K :
இது இரத்த ஓட்டத்தை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறது (Blood Stabilizer) இந்த சத்து கீரைகள், பழங்கள், முட்டை, சோளம், கம்பு, கேப்பை, காலிபிளவர் ஆகியவைகளில் உண்டு.
நிறைவாக நியாஸின்
இது உண்ணும் உணவை சக்தியாக மாற்றும். இது ஈரல், இறைச்சியில் மிருதுவான பகுதிகள், மீன், மற்றும் சிறு தானியங்களில் உள்ளது..
- M.Y. முஹம்மத்




