அன்பர்களே விவாதமல்ல இதனை விதை(யாகத்தான்)க்க பதிகிறேன். இதன் வினைப்பயன் என்னையேச் சாறும். (தலைங்களா தலைப்பு என்னான்னு கேட்பீங்களே அது கோபம் இருக்கிற இடத்திலதானே குணம் இருக்குமாமே அதான் இப்படி)
அதிராம்பட்டினம், இது நான் மட்டுமல்ல என் முன்னோர்கள் ஏன் நீங்களும்தான் பிறந்த, வாழ்ந்த / வாழும் ஊர் இதிலென்ன அதிசயம் என்று உடம்பு முறிக்க வேண்டாமே Please!
தொலைந்ததா அல்லது தொலைக்கப்பட்டதா எங்களின் விருந்தோம்பல் தெரு விட்டு தெரு கொண்டாடிக் கொள்ளும் வாகை, என்னுடைய அனுபவமே இங்கே சாட்சியாகட்டும்.
எனக்கென்று நட்பு வட்டம் நீளமானது அது பரந்து விரிந்து தெருக்களைத் தாண்டியிருந்தது அவர்களை என் / என் சொந்தங்களின் வீட்டு விஷேசமானாலும் அவர்கள் / அவர்கள் சொந்தங்களின் விஷேசமானாலும் அன்போடு அழைப்போம் / கலந்து கொள்வோம் அங்கே கிடைக்குமே அந்த விருந்தோம்பலும், பாசப் பார்வைகளும் எந்த நாட்டிற்கு சென்று அள்ளி வந்தாலும் கிடைக்காதுங்க !
தெருக்களுக்கே தெரியாது எது எல்லைன்னு ஆனா நாம ஆட்களை வைச்சு எல்லை போட்டுக் கொண்டோம் நம் வீட்டுப் பக்கத்தில் வீடுகட்டி வந்தாலும் “அந்தத்தெருவான்னு” சொல்லியே வீழ்ந்தோம் !
· எங்கே விட்டோம் கோட்டை ?
· எங்கிருந்து நீண்டது இந்தப் பிரிவினைக் கோடு ?
· யார் வித்திட்டார்கள் இந்த சாபக்கேட்டிற்கு ?
· எவரிடம் உதித்தது தெரு வேற்றுமை ?
இப்படியெல்லாம் கேட்டுடுவேன் ஆனால் இங்கே யாரவது இவன் தான் / அவன் தான்னு கையை காட்டிடுவாங்களோன்னு தயங்கினேன் ஆனா, நம்மவங்க ரொம்பவே பக்குவப் பட்டவங்க (ICE வைக்கலை) அதே நேரத்தில் தஙகளோட தனித் தன்மையை இழக்காதவங்க நிறைந்த சபையிது.

மக்களே உங்களிடம் சொல்ல வந்தது என்னன்னா ரொம்ப சிம்பிள் "உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக" (அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]).
பின்னூட்டம்னு ஒன்னு இருக்கிறதே அங்கே நபிமொழிக்கு ஏற்ப அதாவது "உங்களுக்கிடைய அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது அன்பை வளர்க்கும்" அதனால நல்ல / அறிபூர்வமான / ஆக்கமான வார்த்தைகளை வரி வரியா போட்டீங்கன்னா நேசமெனும் கருவூலம் நிறையுமே ! (வரி(களுக்கு) விலக்கு உண்டு அதிரை நிருபரில்)
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி நல்லதையே நோக்கமாக மையப்படுத்தி மேலான கருத்துகளை நீட்டித் தாருங்கள் மக்களே !
குட்ட வேண்டியவைகள் குட்டிவிட்டு அடுத்து அட ரொம்ப நல்ல புள்ளையா இருக்கிற நீ குட்டு வாங்கிட்டியேன்னு ஒரு "டச்" வைங்க எல்லாம் தானா கரைஞ்சுடும்.
யாரையும் தாழ்த்தியோ / தாக்கியோ பின்னுட்டமிட்டால் கோபம் தலைக்கேறும், அதே நேரத்தில் முகஸ்துதி(யும்) செய்தால் (அதுவும்) தலையில கனம் ஏறிடும் ஆகவே இந்த இரண்டையும் கட்டிப் போட்டு வைப்போம்.
அதிரை நிருபர் சார்பாக என் குறிப்பு: பின்னூட்டங்கள் தடம் புரண்டால், தடுமாற்றம் கண்டால் அப்படியே இந்த விவாதத்திற்கான கதவு சாத்தப்படும் ஆனால் விதை விதைத்துதான் வளர்த்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.
-- அபு இபுறாஹிம்


