
தோழனோடு தோழனும்
தோழியோடு தோழியும்
தொன்றுதொட்டு நட்பு
தோழனோடு தோழியும்
தோழியோடு தோழனும்
தொடுப்பதென்றால் தப்பு
பஞ்சோடு பஞ்சு
பாந்தமான நட்பு
நெருப்போடு நெருப்பு
நேர்த்தியான நட்பு
பஞ்சோடு நெருப்போ
பற்றிக்கொள்ளும் நடப்பு
தோழனுக்கும் தோழிக்குமே
தூய்மையான நட்பானாலும்
தனியறையைத் தவிர்
மூன்றாவதா ஷைத்தானுமே
மறைந்திருப்பான் உணர்!
அறத்துப் பாலும்
பொருட் பாலும்
பால் கலக்காப்
பழக்கத்தில் சாத்தியம்
பால் கலந்த பழக்கத்தில்
காமத்து பால் மட்டும்
பெரும்பாலும் சத்தியம்!
ஒன்றிரண்டு நட்புகளும்
உண்மையோடு பழகும்
பாதிக்குமேல் நட்புகளில்
பால் கலந்தால் திரியும்
தாய்மைக்கும் நட்புக்கும்
தூரம் ரொம்பு குறைவு
தரம் கெட்ட நட்பில்
துரோகம் மட்டும் வரவு
தோழன் தோழியையும்
தோழி தோழனையும்
உடன்பிறப்பாய் கருது
சகோதரத்துவ மெனும்
ஒழுக்கமான வாழ்க்கைக்கே
காத்திருக்கும் விருது
- சபீர்

