ஊர்வன
பார்வையிலே அழகழகாய்த் தோற்றம் பெற்றுப்
பலவாறு தன்மைகளில் உலகில் வாழும்
ஊர்வனவும் கண்களையே கொள்ளை கொள்ளும்
உயிர்வாழ்வுக் குதவுகின்ற புழுவும் நச்சுக்
கூர்வாயைக் கொண்டச்சம் கொள்ள வைத்துக்
கொட்டுகின்ற பாம்புகளும் தேளும் பூரான்
யார்வாழ்வும் தமக்கெதிரென் றெண்ணா மல்தம்
ஆர்வத்தில் அங்கிங்கும் திரிந்து வாழும்.
அதிரை அஹ்மத்


