விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.
இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!!
இதோ... !
உணவுப்பொருட்களும் அதனுள் கலக்கபடும் பொருட்களும்
பால் - தண்ணீர், ஸ்டார்ச்
அரிசி - கல்
பருப்பு - கேசரி பருப்பு
மஞ்சள் பொடி - lead chromate
தானியா பொடி - சானி பொடி, ஸ்டார்ச்
நல்ல மிளகு - காய்ந்த பப்பாளி விதைகள்
வத்தல் பொடி - செங்கல் பொடி, மரப்பொடி
தேயிலை - மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை
பெருங்காயம் - மண், பிசின்
கடுகு - ஆர்ஜிமோன் விதைகள்
சமையல் எண்ணை - மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
வெண்ணை பிற கொழுப்புகள்
பச்சை பட்டானி - பச்சை சாயம்
நெய் - வனஸ்பதி
ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி
மிளகு - பப்பாளி விதை
புதியதாக தயாரித்த புரோட்டவுடன் - பழைய புராட்டாவை
சர்பத் – ஜூஸ்களில் - சாக்கிரீன்
ஹோட்டல்களில் சோறு விறைப்பாக வர - சுண்ணாம்பு
இப்படி இன்னும் பல…நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள்.
அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.
உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :
Food Safety Commissioner : Sh. Girija Vaidyanathan ( IAS )
Contact Details : Chennai - 600 003
TEL : 044 24320802, 24335075, FAX : 044 24323942
E-mail : dphpm@rediffmail.com
Status of Laboratories: Food Analysis Laboratory, Medical College Road,
Near Membalam, Thanjavur - 673001
Food Safety Officer for Thanjavur District : Mr. S. Raj Kumar , Mr. N. Chandra Mohan
இறைவன் நாடினால், தொடரும்... !
- சேக்கனா M.நிஜாம்.

