அலுவலகங்களில் நிகழும் அன்றாட சூழலில் நிறைய பேருக்கு அதிகம் பரிச்சயமான அதே நேரத்தில் அனைவராலும் தேடப்படும் ஒரு நபர் தான் ஆஃபீஸ் பாய் !
ஆபீஸ் பாய்தானே, என்ன பெரிசா எடுபுடி வேலைதானே, கிளீனிங், டீ காஃபி போடுறதுதானே என்று அசாதாரணமாக நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த அலுவலகத்திலும் வேலை கிடைக்காது அவர் நினைத்தால் ! (அடக்கி வாசிங்க)!
அவருக்கென்ன மேலாளாருக்கெல்லாம் மேலாளர், சூப்பர்வைசருக்கெல்லாம் சூப்பர் வைசர், அலுவலக அரசாங்கத்தின் ராஜ தந்திரி, சானக்கியன் ! (புல்லரிக்குதா ?) இதுக்குமேலே சொல்லத் தேவையில்லை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் !
சாதாரணமாக வெளிநாட்டு அனுபவத்தில் நாமெல்லாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்? நம் அலுவலகத்தில். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப அலுவலகங்களின் முறைப்படி லீவு அப்ளிகேஷன் கொடுப்போம், நமக்கு மேலே இருப்பவர் (சூப்பர் வைசரோ, மேனேஜரோ) அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் (அதை வாங்குவதற்குள் படும் பாடு அப்பப்பா !) அதன் பின்னர் அனுப்ப வேண்டிய டிப்ப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்த பின்னர் தான் ஒரு ரவுண்டு போயிட்டு அப்ப்ரூவ் / ரிஜெக்ட் / தேதியை மாற்று இப்படின்னுதானே வரும்.
ஆனால், ஆஃபீஸ் கதாநாயகன் விடுமுறையில் செல்ல வேண்டுமென்றால் அவரின் அப்ளிகேஷன் மட்டும் ரிவர்ஸில் வரும், முதலாளியிடமிருந்து (ஹாட் லைன்) அப்ருவல் வாங்கிக் கொண்டு மேலிருந்து கீழாக அவரே அப்ளிகேஷனை தன் கைப்பட எடுத்துக் கொண்டு ஹெச்.ஆருக்கு எடுத்துச் சென்று டிக்கட் காப்பியையும் கையில் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.... அது என்ன மாயமோ தெரியலை... இதுதாங்க நடக்குது !
எது எப்படியோ ! தலைவரோட லீவு அப்ரூவ் ஆனதும்தான் ஆக்சனே துவங்கும்....
அவருடைய வேலைக்கு அவரே ஒருவரை தேர்ந்தெடுத்து (!!!??) டிரைனிங் (சில அலுவலங்களில் இவ்வாறான நடைமுறை விலக்காக இருக்கலாம்) ஓரிரு நாளோ அல்லது ஒருவாரமோ என்று தொடரும்...
அந்த டிரைனிங்க் பீரியட் தாங்க அசத்தலா இருக்கும் !
புதிதாக பணிமாற்றம் பெற இருப்பவர் அப்பாவியாக இருக்க வேண்டும், எதிர்த்து ஏதும் கேள்விகள் கேட்கக் கூடாது,"ம்ம்ம்"முதான் போடனும். இதற்கு மாறாக இருந்தால் கதாநாயகன் இவரை மறுத்து விடுவார் அவ்வளவுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று மீண்டும் பழைய வேலைக்கு அவர் செல்ல வேண்டும்.
இதுவரை அவர் அப்படியெல்லாம் நடந்ததை ஒருநாள் கூட பார்த்திருக்க மாட்டோம் ஒருவேளை மறந்திருப்போம். நம்ம கதாநாயகனின் அட்வைஸ், முதலாளியிடம் எப்படி பவ்யம் காட்டனும், டீயை எப்படி மிக்ஸ் செய்யனும், எப்படி ட்ரேயில் வைத்து எடுத்துச் செல்லனும்... இப்படியாக தொடரும்.
அலுவலகத்திலிருக்கும் டஸ்ட்பின்னில் இருப்பதை அகற்றுவதிலும் டேபிள் கிளீன் செய்வதில் கதாநாயகன் அனாயசமாக இருப்பார், பட்டும் படாமலும் வழக்கமான ப்ராட்காஸ்டிங்க் வேலையையும் செய்வார். ஆனால் புதியவர் பொருப்பேற்க இவர் சொல்லிக் கொடுக்கும் வேலைகளைக் கவணித்தால் இதெல்லாம நம கதாநாயகன் எப்போது செய்தார் என்று மூக்கில் விரலை வைப்போம்.
கதவு இடுக்கில் இருக்கும் தூசியைக் கூட துடைக்க கற்றுக் கொடுப்பார், யாரிடமும் லூஸ் டாக்கிங்க் வைத்துக் கொள்ளக்கூடாதுன்னு அவர் சொல்லும்போதும் ஒவ்வொருவரின் டேபிளுக்கு அருகில் வரும்போது புதியவருக்கு அவர் சொல்லிக் கொடுக்கும்போது இருக்கும் பவ்யம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் !
இவரா அவருன்னு ஆச்சர்யமாகக் கூட இருக்கும் !
உங்க ஆஃபீஸில் எப்படிங்க !?
அபூஇப்ராஹீம்

