கொசுவைப்பற்றி உங்களுக்கு தெரிந்தது, படித்தது, மற்றவர்கள் சொல்லக்கேட்டது அனைத்தயும் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக்கி, [ இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வி புத்தகத்தில் கலஞர் எழுதிய கவிதை மாதிரி கருப்பு மையிட்டு அழிக்ககூடிய அளவுக்கு] எல்லாமே புதிதாக பாடம் எடுக்க கூடியது அதிராம்பட்டினத்து கொசுக்கள். கொசுவுக்கு மூலை சிறியது, சிந்திக்க தெரியாது என இன்னும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் காலில் உட்கார்ந்து கடித்து கொண்டிருக்கும் ஒரு குரூப் கொசுக்கள் "என்னப்பா இவன் பொறெக்கிறுக்கு வந்தவன் மாதிரி பொழம்புரான்னு மதுரைத்தமிழில் கிண்டல் அடிப்பது உங்கள் காதுக்கு எட்ட வாய்ப்பில்லை.
பொதுவாக கொசு கடித்தால் கவனம் கொசுவின் உடம்பில் கருப்பும் வெள்ளையுமாக கோடு இருந்தால் அது டிங்கி கொசு, இந்த கொசுவிடம்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லா மெடிக்கல் ஜர்னல்களும் சொல்கிறது, ஆனால் நம் ஊரில் இருக்கும் எல்லா கொசுவுக்கும் கருப்பு வெள்ளைக்கோடு உடம்பில் இருக்கிறது என்பது எந்த மெடிக்கல் கொம்பனுக்கும் தெரியாது என நினைக்கிறேன்.
கொசுவை குடும்பம் குடும்பமாக பழிவாங்க நான் எலக்ட்ரிக்ட் பேட் எல்லாம் கொண்டு போனேன்... பேட்டை தூக்கிய உடன் என் முகத்துக்கு பக்கத்தில் வந்து நிற்க்கும் அளவுக்கு சி பி எஸ் சிலபஸில் படித்த பிள்ளைகள் மாதிரி புத்திசாலி கொசுக்களை என்னதான் செய்வது.
இரவில் படுக்கும் முன் கொசுவலை கட்டிய கட்டிலில் படுத்தால் பிரச்சினை சால்வ்ட் என யாரும் எழுதுமுன் நிற்க:
நானும் முயற்சித்தேன். இதற்காக நல்ல கொசுவலை வாங்கி கட்டினேன். ஆனால் இந்த கொசுக்கள் நேராக உயரத்துக்கு போய் பிறகு கொசுவளையில் நுழைய ஏவுகனை மாதிரி நுழையும் அந்த திறமையை இப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் அறிய வாய்ப்பு இல்லை.
சின்ன வயதில் ஜக்கரியா தியேட்டரில் பார்த்த ஒரு பிளாக் & ஒயிட் படத்தில் “நாலு பக்கம் ஏரி நடுவுலெ தீவு தீவுக்கொரு ராஜா” னு ஒரு பாட்டு வரும்...எங்க வீடு இருக்கும் சூழ்நிலை இப்போது அப்படித்தான் ஆகி விட்டது . குடிபோன சமயத்தில் தனியாக அழகாக இருந்த வீடு இப்போது நாலு பக்கம் சாக்கடையுடன் தினமும் கொசுக்களுடன் போராடுவதுடனும் இருக்கிறது.
நம் ஊர் கொசுக்கள் ஏறக்குறைய போலீஸ் மாதிரி.. அதிலும் திட்டமிடல் , தாக்குதல் என்ற பிரிவு எல்லாம் உண்டு.
இரவில் கரண்ட் வேறு ஞாயமான நேரம் கட் ஆகிவிடுகிறதா...சரி விழித்துக் கொண்டிருக்கும் நேரம் கொசு அடிக்கலாம் என்று கொசு வலைக்குள் உள்ள கொசுவை அடிக்கும்போது பார்க்க வேண்டும்... கந்தூரியில் வான வேடிக்கை விடும்போது வெடித்து சிதறும் பட்டாசு மாதிரியே அந்த இருட்டில் தெரியும். [தெறிக்கும்]
கொசுக்கள் கடிப்பது மட்டுமில்லை அது எல்லாம் ஆளத்தோட்டம் ரவுடிகள் மாதிரி வாயில் பிளேடு வைத்துக் கொண்டு அழைக்கிறது என்றால் எதற்கும் நீங்கள் எழுமிச்சை தேய்த்து குளிப்பது நல்லது என யாராவது எனக்கு இ-மெயில் அனுப்பலாம்!! [ நம்புங்கப்பா]
படுக்கும் முன் ரூமை அடைத்து விட்டு கொசு வர்த்தி அல்லது கொசு மருந்து கொழுத்தி விட்டு [2 மணி நேரம்] பிறகு நீ தூங்கியிருக்களாம் என சபீர் துபாயிலிருந்து எனக்கு மெனக்கட்டு டெலிபோன் செய்யும்போது..' அது சரி அந்த 2 மணி நேரமும் நான் நிராயுதபானியாக நிற்கும்போது தாக்கும் கொசுவுக்கு என்ன செய்வது என்றவுடன். மறுமுனையில். "நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்"
Eagle Story
Eagle என்ற பறவைக்கு கருடனா, பருந்தா என பெயர் சரியாக தெரியாததால் என எழுதுகிறேன். விசயம் மொழியில் இல்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இதனிடத்தில் நிறைய இருக்கிறது.Eagle 70 வருடம் வாழக்கூடியது. அது மிக உயரமான இடத்தில் தான் கூடு கட்டும் தனது குஞ்சுகளை தன் கூட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வசதியாக வாழ விடாமல் ஏற்கனவே போட்டு வைத்திருந்த தனது சின்ன சின்ன இறகுகளை எடுத்து வெளியே போட்டு விடும். அப்போதுதான் கூட்டில் உள்ள முட்கள் அந்த குஞ்சுகளின் இறகு வராத சதைகளில் குத்தி வசதி இல்லாமல் வெளியேறப்பார்க்கும். பிறகு தனது குஞ்சுகளை மிக உயராமான அளவுக்கு வானத்தில் தூக்கிக்கொண்டு பறந்து திடீர் என்று கீழே போட்டு விடும் கீழே விழும் வேகத்தில் குஞ்சுகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனது சிறகை அடித்து பறக்க முயற்சிக்கும். கீழே பூமியில் விழும் தருணத்தில் அந்த தாய்பறவை அப்படியே வந்து தனது வாயால் தனது பிள்ளையை கவ்விக்கொண்டு மறுபடியும் அதே ப்ராக்டிஸ்.
35 வருடத்தில் தனது அலகும், கால் நகங்களும் வளர்ந்து [வலைந்து] உணவுகளை வேட்டையாட விடாமல் தடுக்கும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் மீதம் உள்ள தனது பாதி ஆயுள் காலத்தை எதிர் கொள்ள இந்த பறவை ஒரு சில நாட்களுக்கு உணவு உண்ணாமல் ஒரு உயரமான இடங்களில் இருக்கும் பாறைகளில் தன் அலகையும், கால் நகங்களையும் தேய்த்து, உடைத்து சரி செய்து கொள்ளும்.
மாற்றங்களை எதிர்கொள்வதையும், தனது சந்ததியினரை யாரிடமும் எதிர்பார்த்து இல்லாமல் தானாகவே வாழ்க்கையை எதிர்கொள்ள பயிற்சி அளிப்பதில் இந்த பறவை என் மனம் கவர்ந்த பறவை.
- ZAKIR HUSSAIN


